"ஹலோ தலைவரே, நெய்வேலி விவசாயிகளின் போராட்டம், அரசே எதிர்பார்க்காத அளவுக்கு டேஞ்சரஸ் நிறத்துக்கு மாற்றப்பட்டிருக்கு.''”
"ஆமாம்பா, பா.ம.க. இந்தப் போராட்டத்தின் நிறத்தை டேஞ்சரசாக மாற்றினாலும், தமிழக அரசு அதன் நோக்கத்துக்கு சிறப்பாக கடிவாளம் போட்டிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, நெய்வேலியில் என்.எல்.சி. நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம், பா.ம.க. அன்புமணியால் வன்முறை வடிவம் எடுத்ததை அரசு எதிர்பார்க்கவில்லை. இதற்காக சென்னையில் இருந்து மதுரை வரை உள்ள பா.ம.க.வினரும், விவசாயிகளும் ஒன்றுதிரட்டப்பட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது என்.எல்.சி.க்குள் அத்துமீறி நுழைந்து, பெரும் கலவரத்தை நடத்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இதை எல்லாம் ஏ.டி.ஜி.பி., அருண், ஐ.ஜி. கண்ணன் ஆகியோர் டீம் அங்கேயே முற்றுகையிட்டு, நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.''”
"அமித்ஷா தமிழகம் வந்துசென்ற நேரத்தில் பா.ம.க இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தியதை பா.ஜ.க.வே வெறுக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அண்ணாமலையின் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க தமிழகம் வந்த அமித்ஷா, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் டெல்லி திரும்ப வேண்டுமே என்று பா.ஜ.க. தலைமை, கவனத்தோடும் கவலையோடும் இருந்த நேரத்தில், பா.ம.க. இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றி, பேருந்துகளைத் தாக்கியதையும், காவல்துறையினரைத் தாக்கி ரத்தக் களறியாக்கியதையும் கண்டு அது டென்ஷனானது. அதைவிட, தாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், கூட் டணி தர்மத்தை மறந்து ’எங்களுக்கு தி.மு.க.வும், பா.ஜ.க.வும் எதிரிதான்’ என்று அன்புமணி பேசியதும், பா.ஜ.க. தரப்பைக் கடுப் பாக்கி இருக்கிறது. இந்தநிலையில்... நெய்வேலி கலவரத்தன்று கைது செய்யப்பட்ட அன்புமணியை, 15 நாள் ரிமாண்டுக்கு அனுப்ப லாமா என்று காவல்துறை, முதல்வர் அலுவல கத்தைத் தொடர்புகொண்டு கேட்டது. இதற்கிடையே, கைதான அன்புமணி, சிறைக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற பதட்டத்தோடு, ’"என்னை எப்போது விடுவிப்பீர்கள்?''’என்று காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். இதைத் தொடர்ந்து அவரை அன்று மாலையே விடுவிக்கச் சொல்லிவிட்டது கோட்டை. இந்த நிலையில் தங்கள் போராட்டத்தை பா.ம.க. டேஞ்சரஸாக நிறம் மாற்றியதை உணர்ந்த சம்பந்தப்பட்ட விவசாயிகளே, கவலையில் இருக்கிறார்களாம். மேலும் தாங்கள் பயிரிட்ட விளைநிலத்தில் பொக்லைனை வைத்து அழித்ததை விவசாயிகள் பொறுத் துக்கொள்ள முடியாமல் கதறுகிறார்கள்...''”
"ஆகஸ்ட் முதல் வாரம் சென்னை வரும் ஸ்டெர்லைட் அதிபர் அனில் அகர் வாலுக்கு எதிர்ப்பு வலுத்திருக்கிறதே?''”
"தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பான வேலைகளுக் காக, வேதாந்தா நிறுவனரான அனில் அகர்வால், 6 ஆம் தேதி சென்னை வருகிறார். அவரை எதிர்த்து மே 17 இயக்கம் உட்பட பல்வேறு இயக் கங்கள் போராட்டத்தில் குதிக்கத் தயாராகி வருகின்றன. அதேபோல் இவர்களுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்த, இந்து முன்னணி அர்ஜுன் சம்பத், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது அனில் அகர்வால், நிதி நெருக்கடி காரணமாக தனது வேதாந்தா நிறு வனத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் அடகு வைத்திருக்கிறாராம். அந்த நிறுவனம்தான் இப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட்டைத் திறக்க வேண்டும் என்று, அகர்வாலுக்கு நெருக்கடி தரு கிறதாம். தங்கள் கரன்சிக்கு வாலாட்டுகிறவர்களை வைத்து, தூத்துக்குடி பகுதி களில் ஸ்டெர்லைட் ஆத ரவு கமிட்டிகளை அனில் அகர்வால் உருவாக்கி வருகிறாராம். ஸ்டெர் லைட்டை, கிறிஸ்தவர் களான மீனவர்கள் எதிர்ப்பதால், இது ஒரு இந்து ஆலை என்ற பிரச்சாரத்தை பா.ஜ.க. மூலம் முன்னெடுக்கவும் அகர்வால் தரப்பு திட்டமிட்டிருக்கிறதாம்.''”
"சரிப்பா, தி.மு.க. இளைஞரணி அமைப் பாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. இளைஞ ரணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமைப் பாளர்களின் அறிமுகக் கூட்டம், கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "பா.ஜ.க. நடத்துவது பாத யாத்திரை அல்ல; குஜராத் மற்றும் மணிப்பூர் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை'ன்னு ரைமிங்கா தாக்குதல் தொடுத்தார். அவரது, பாவ யாத்திரைங்கிற சொற்பதம், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். முகாம்களை அதிரவச்சிடுச்சி. முதல்வரின் இந்த டைமிங்கான ரைமிங் அட்டாக், எதிர்பாராத வகையில் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆக, இது பா.ஜ.க. தரப்புக்கு கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு.''”
"அதேபோல், தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாட்டை நடத்த உதயநிதி தயாராகிறாரே?''”
"வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி, டிசம்பர் மாதம் இளைஞரணி மாநாட்டை நடத்த இருக்கிறார் உதயநிதி. டெல்லிக்கு அதிர்ச்சி வைத்தியம் தருகிற அளவுக்கு இதை பிரமாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டிருக் கிறார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முழுப்பொறுப்பையும் உதய நிதியிடம் ஸ்டாலின் ஒப்படைக்க இருக்கிறார்னு அறிவாலயத் தரப்பில் பேச்சு அடிபடத் துவங்கியுள்ளது. மாநாடு முடிந்ததும் அல்லது தேர்தலில் வெற்றி கிடைத்ததும் ஆட்சி அதிகாரத்திலும் உதயநிதிக்கு பதவி உயர்வு கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறாராம். அதாவது, துணை முதல்வராக உதயநிதியை நியமித்து, அவரிடம் பொறுப்புகளை பகிர்ந் தளிக்கவும் முதல்வர் திட்டமிட்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். உதயநிதியை நோக்கி அதிஷ்டம் அணிவகுத்து வருகிறது.''”
"கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் தட்பவெப்ப நிலையை எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் குழு நேரில் கண்டறிந்துவிட்டு வந்திருக்கிறதே?''”
"மணிப்பூரில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் தற்போதைய நிலையைக் கண்டறிய, தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ’"இந்தியா'வின் சார்பில் 21 எம்.பி.க்கள் அடங்கிய குழு, அங்கே 29ஆம் தேதி சென்றது. இந்த குழுவில் தமிழகத்திலிருந்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் எம்.பி.க்கள் திருமா வளவன், ரவிக் குமார் ஆகியோ ரும் இடம்பெற்ற னர். அங்கே மக்கள் தங்கியுள்ள முகாம் களில் ஆய்வு நடத் திய இக்குழுவினர், மக்களின் வேதனைகளையும் பாதிப்புகளையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள்.''”
"பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு இன்னும் முழுமையாக உதவிகள் கிடைக்கலை யாமே?''”
"உண்மைதாங்க தலைவரே, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இன்னும் செய்து தரப்படாததால், அவர்கள் படாதபாடு படுகிறார் களாம். ஒரு குறுகிய அறையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டி ருப்பதையும், அவர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்தித் தராமல், அங்குள்ள மாநில பா.ஜ.க. அரசு மனிதநேயமற்ற முறையில் நடந்து வருவதையும், பாதிக்கப்பட்ட மக்கள், எம்.பி.க்கள் குழுவிடம் சொல்லிக் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். இதனையடுத்து, மணிப்பூர் மாநில கவர்னர் அனுசூயாவிடம் மக்களின் சார்பில் எம்.பி.க்கள் குழு மனு கொடுத்திருக்கிறது. இந்தக் கொடுமைகளை எல்லாம் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியான "இந்தியா'’ திட்டமிட்டிருக்கிறதாம்.''”
"மணிப்பூர் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கே?”
"ஆமாங்க தலைவரே, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணி பொறுப்பாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். இதேபோல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க.வின் தலைமைக் கழகம் அறிவித்திருந்த நிலையில், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில், மாவட்ட தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டத்தை நடத்த வில்லை. அதேசமயம், தாம்பரம் நகர தி.மு.க. சார்பில், எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சார்பில், சிட்லபாக்கத்தில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.''”
"பின் பிரச்சினை உருவாவதைக் கண்ட அமைச்சர் அன்பரசன், கடந்த 29 ஆம் தேதி, தனது காஞ்சி வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள திருப்போருர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தச் செய்தார். அதில் 30,000 பேருக்கு மேல் கலந்துகொண்டார்களாம்.''”
“"அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் இன்னும் அமலாக்கத்துறை ஓயவில்லையே?''”
”"அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணிக்கு எதிராக ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் வெளிநாடுகளில் கௌதம சிகாமணி செய்த முதலீடுகள் குறித்த ஆதாரங் களைக் கைப்பற்றி இருந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்த பொன்முடியும், சிகாமணியும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்த அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு மட்டும் முறையாக பதில் சொல்ல முடியாமல் திணறினார்களாம். பெரும்பாலான கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், ஆடிட்ட ருக்குத் தான் எல்லாம் தெரியும் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்களாம். எனவே அமலாக் கத்துறை, இந்தவாரம் பொன்முடியின் ஆடிட்டரிடம் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளதாம். விசாரணையின்போது, ஆடிட் டரின் பதில்கள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்குமாம்.''”
”"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் சென்னைக்கு வர இருக்கிறார் என்றும், வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்படுவார் என்றும், இன்னும் சில முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடம் மாற்றப்படுவ தோடு, ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் இருக்கும் 29 எஸ்.பி.க்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட இருக்கிறார்கள் என்றும் காவல் துறைத் தரப்பில் இருந்து கடந்த வாரம் தகவல்கள் கசிந்தன. இதற்கான உத்தரவுகள் முதல்வரின் ஒப்புதலையும் பெற்று, தயார் நிலையில் இருக்கும் நிலையில், நெய்வேலி போராட்ட வன்முறை, பா.ஜ,க. அண்ணா மலையின் பரபரப்பான பாத யாத்திரை என சில நிகழ்வுகள் அரங்கேறியிருப்பதால், இந்த டிரான்ஸ்பர் உத்தரவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவாம்.''