.ம.மு.க.விலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.விற்கு ஜம்பாகி சலசலப்பை ஏற்படுத்தினார். இதற்கடுத்ததாக அ.ம. மு.க.வின் புதுக்கோட்டை மா.செ.வும் அறந்தாங்கி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ரத்னசபாபதியின் தம்பியுமான பரணி கார்த்திகேயன், கடந்த 03-ஆம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் ஐக்கிய மானார். இப்போது அக்கட்சியின் கொ.ப.செ.வான பெங்களூரு புகழேந்தி கட்சிக்குள் இருந்து கொண்டே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ttvதினகரனால் திடீர் திடீர் என கட்சியிலிருந்து நீக்கப்படுவோர் பட்டியலில் சமீபத்தில் இடம் பெற்றவர்கள் கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர். ஏன் நீக்கம்? எதற்கு நீக்கம்? என தெரிந்து கொள்வதற்காக தினகரனை சந்திக்க சென்னை வந்து, ஏமாற்றத்துடன் கோவை திரும்பியுள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட, தினகரனின் அதிக நம்பிக்கைக்குரிய புகழேந்தி கோவைக்கே சென்று, நீக்கப்பட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியுள் ளார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக சில வார்த்தைகளை புகழேந்தி பேச, அ.ம.மு.க.விற்கே உரித்தான ஸ்டைலில், புகழேந்தி பேசியதை வீடியோவாக எடுத்து, அதை கட்சியின் ஐ.டி.விங் ஃபேஸ்புக்கிலும் போட்டுவிட்டனர். இதனால் புகழேந்தி மீது ஏக கடுப்பில் இருக்கும் தினகரன், “""கட்சியிலிருந்து வில கிச் செல்பவர்கள், சொந்த லாபத்திற்காக வும் சுயநலத்திற்காகவும் செல்கிறார்கள். புகழேந்தி பேசியது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.

இதைப் பார்த்து டென்ஷனான புகழேந்தியோ, ""தினகரன் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. கட்சிக்காக உழைத்தவர்களை சந்தித்துப் பேசுனது குத்தமா? இந்த மாதிரி ஆடியோ, வீடியோ ரிலீஸ் பண்ற பழக்கம் என்னைக்குத்தான் ஒழியுமோ? நான் சசிகலா வின் தீவிர விசுவாசி என்பதால்தான் ஓரங் கட்டப் படுகிறேன். சீக்கிரமே பெங்களூரு சிறையில் ttbbசசிகலாவைச் சந்தித்தபின் அடுத்த கட்ட முடிவைச் சொல்வேன்''’என பொங்கித் தீர்த்து விட்டார்.

Advertisment

இது குறித்து தென்மாவட்ட மா.செ. ஒருவர் நம்மிடம் பேசும்போது, ""சசிகலாவின் தீவிர விசுவாசி என்பதால்தான் புறக்கணிக்கப் படுவதாக புகழேந்தி சொல்லியிருப்பதைப் பார்த்தாலே தெரிஞ்சு போச்சு, தினகரனுக்கும் சசிகலாவிற்குமிடையே விரிசல் அதிகமாகிருச்சுன்னு. இப்பக்கூட சிவகங்கை மா.செ.வாக தேர்போகி பாண்டியை நியமிச்சிருக்காரு தினகரன். தேர்போகி பாண்டி வெயிட்டான பார்ட்டிதான். ஆனா ஒரு கட்டத்துக்குமேல தினகரனோட டிமாண்டை சமாளிக்க முடியாம, ஏ.டி.எம்.கே.வுக்கு போனாலும் போயிருவாரு.

இதேபோல் காஞ்சி மா.செ.வான கரிகாலனும் மாஜி அமைச்சரான செந்தமிழனும் மன வருத்தத்தில் இருக்கிறார்கள். "சசிகலா ரிலீஸாகி வருவதற்குள் கட்சி எப்படியும் கலகலத்துப் போயிரும்'’என்கிற நிதர்சனத்தைச் சொன் னார்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

Advertisment