(8) பிறகு பார்ப்போம்!
கலைஞர் சிலை திறப்புக்காகச் சென்னையில் நடந்த மாபெரும் விழாவும், கல்கத்தாவில் மம்தா தலைமையில் நடந்த மாபெரும் விழாவும் ஒரே நோக்கமுடையவைதான்.
மோடிக்கு எதிரான அணியாக எதிர்க்கட்சியினர் அனைவரையும் திரட்டுவதுதான் இரண்டு விழாக்களின் நோக்கமுமே.
ராகுல் தலைமையமைச்சராக ஆவது ஏற்றதாக இருக்கும் என தி.மு.க. தலைவர் இசுடாலின் தன் கட்சியின் சார்பில் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். அது ஒன்றும் குற்றமானதில்லை. அதற்குப் பிறகு கல்கத்தாவில் நடந்த எதிரணியினர் மாநாட்டுக்கும் இசுடாலின் சென்று எல்லாத் தலைவர்களோடும் கைகோர்த்து நின்றார். அதுவும் முரணான செயலில்லை.
காங்கிரசுக் கட்சியே தன்னுடைய சார்பாளர்கள் இருவரை மம்தா தலைமையிலான அந்த மாநாட்டுக்கு அனுப்பியிருந்ததே.
யார் தலைமையமைச்சர் என்பது முதன்மையானதில்லை. நாட்டின் கேடு அகற்றப்பட வேண்டும் என்பதே முதன்மையானது என்பதை வெளிப்படையாக ராகுல் உடன்பட்ட பெரும்போக்கான செயலாகும் அது.
பொதுவாக எந்த ஒன்றிலும், எந்தக் காலத்திலும், நீக்குப் போக்கோடு, நிலைக்கேற்றவாறு செயல்படும் தாராள மனப்பான்மை உடைய கட்சி காங்கிரசு. அவ்வாறு காந்தி, நேரு போன்ற தலைவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட கட்சி அது.
அண்மையில் கருநாடகத் தேர்தல் நடந்து முடிந்தது. காங்கிரசின் தலைவர் சித்தராமையா உறுதியாக காங்கிரசு ஆட்சியை அமைப்பார் எனக் கருதப்பட்டது. சித்தராமையா அடுத்த மாநிலத்தின் நியாய
(8) பிறகு பார்ப்போம்!
கலைஞர் சிலை திறப்புக்காகச் சென்னையில் நடந்த மாபெரும் விழாவும், கல்கத்தாவில் மம்தா தலைமையில் நடந்த மாபெரும் விழாவும் ஒரே நோக்கமுடையவைதான்.
மோடிக்கு எதிரான அணியாக எதிர்க்கட்சியினர் அனைவரையும் திரட்டுவதுதான் இரண்டு விழாக்களின் நோக்கமுமே.
ராகுல் தலைமையமைச்சராக ஆவது ஏற்றதாக இருக்கும் என தி.மு.க. தலைவர் இசுடாலின் தன் கட்சியின் சார்பில் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். அது ஒன்றும் குற்றமானதில்லை. அதற்குப் பிறகு கல்கத்தாவில் நடந்த எதிரணியினர் மாநாட்டுக்கும் இசுடாலின் சென்று எல்லாத் தலைவர்களோடும் கைகோர்த்து நின்றார். அதுவும் முரணான செயலில்லை.
காங்கிரசுக் கட்சியே தன்னுடைய சார்பாளர்கள் இருவரை மம்தா தலைமையிலான அந்த மாநாட்டுக்கு அனுப்பியிருந்ததே.
யார் தலைமையமைச்சர் என்பது முதன்மையானதில்லை. நாட்டின் கேடு அகற்றப்பட வேண்டும் என்பதே முதன்மையானது என்பதை வெளிப்படையாக ராகுல் உடன்பட்ட பெரும்போக்கான செயலாகும் அது.
பொதுவாக எந்த ஒன்றிலும், எந்தக் காலத்திலும், நீக்குப் போக்கோடு, நிலைக்கேற்றவாறு செயல்படும் தாராள மனப்பான்மை உடைய கட்சி காங்கிரசு. அவ்வாறு காந்தி, நேரு போன்ற தலைவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட கட்சி அது.
அண்மையில் கருநாடகத் தேர்தல் நடந்து முடிந்தது. காங்கிரசின் தலைவர் சித்தராமையா உறுதியாக காங்கிரசு ஆட்சியை அமைப்பார் எனக் கருதப்பட்டது. சித்தராமையா அடுத்த மாநிலத்தின் நியாயத்தை மட்டும்தான் உணரத் தெரியாதவரே ஒழிய, தன் மாநிலப் போக்குகளை நன்கறிந்தவர், அதற்கேற்றவாறு செயல்படத் தெரிந்தவர்.
மும்முனைப் போட்டி, லிங்காயத்துகள் பா.ச.க. பக்கமும், ஒக்கலிகர்கள் தேவகவுடாவின் பக்கமும் சாய்ந்துவிட்ட காரணத்தால், காங்கிரசு கணிசமாக வென்ற போதிலும் ஆட்சியமைக்கப் போதிய வலிமை இல்லை. உள்ளூர் மனநிலை எதையும் கருத்தில் கொள்ளாமல், மின்னல் வேகத்தில் செயல்பட்டது டெல்லித் தலைமை.
தேவகவுடாவும் அவருடைய மகனும் ஊசலாடக் கூடும், அது ஒரு பெரிய கட்சி இல்லை, நெருக்கடியில் மட்டுமே அதனுடைய பேர ஆற்றல் உயிர் பெற முடியும், கவுடாக்கள் அந்த இடத்தை அடைவது வாழ்க்கைக் கனவு, அதற்கு எதையும் விலையாக்கத் துணிவர்.
இந்தியா பெருநாடு பொதுத்தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கும் தறுவாயில், பாரதிய சனதா கட்சி கவுடாவை உட்படுத்திக்கொண்டு ஆட்சியமைப்பதோ, அல்லது கவுடாவைப் பொம்மையாக்கிக்கொண்டு அரசு நடத்துவதோ, எதிர்கால அரசியல் போக்குக்கு உகந்ததில்லை. எனவே எந்தப் பேரமும் பேசாமல், மிகப் பெருந்தன்மையோடு, கவுடாவின் கட்சிக்கு முதல்வர் பதவியை வழங்கி, அதனை அரசமைக்கச் செய்து, அதன் உறுப்பாகக் கூடுதல் எண்ணிக்கையுடைய காங்கிரசு உள்ளிருந்து செயல்பட முடிவெடுத்தது.
இந்த முடிவை ராகுல் தலைமையிலான மேல்மட்டம் எடுக்கிறது. இந்த முடிவின்படி செயல்படுமாறு கருநாடகக் காங்கிரசுக்கு மின்னல் வேகத்தில் அறிவிக்கப்படுகிறது. இந்த அரசு நம் தலைமையிலான அரசு இல்லையெனினும், அந்த அரசு குலைந்து போகாமல் கட்டிக் காப்பது கருநாடகக் காங்கிரசின் கடமை என்பதும் அழுந்த மொழியப்படுகிறது.
நாட்டின் எதிர்கால அரசியலைக் கருதி, மாநிலக் கட்சி "டம்மியாக்கப்பட்டு' கோடிட்ட இடத்தில் கையெழுத்திடுமாறு செய்யப்படுகிறது.
இது மிகக் கூரிய அரசியல். இத்தகைய முடிவினை எடுத்து நாட்டுக்குச் "சமிக்ஞை காட்டுவதற்குக்' கூர்ந்த அறிவும், எதிர்கால அரசியலை வென்றெடுக்க இப்போது சில பலிகளைக் கொடுத்தாக வேண்டும் என்னும் நிலையில், அதற்குத் தயக்கமின்றி முடிவெடுக்கும் திறமும், அதைச் செயல்படுத்தவுமான வேகமும் உறுதியும் வேண்டும்.
அத்தகையதொரு தலைவன்தான் என்பதை ராகுல் மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்.
பத்தாண்டுகளுக்கு முன்னரே மணிமுடியை எடுத்துத் தலையில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான் என்னும் தயார் நிலையிலும் தயங்கினார் ராகுல். "வயது போதாது, முதிர்ச்சி போதாது' என்று அவராகவே விலகி நின்றார்.
மீண்டும் அடுத்த ஐந்தாண்டில் மணிமுடி ராகுலின் மீது அளப்பரிய காதல்கொண்டு, பித்தேறி இருந்த நிலையில், "தனக்கு இன்னும் பயிற்சி வேண்டும்' என்று அதை உதறிவிட்டார்.
தாயின் உடல்நலக் குறைவு சென்ற ஐந்தாண்டிலேயே மகன் ராகுலைத் தலைமை நாற்காலியில் அமர வைக்க விரும்பியும், ராகுல் அதை முற்றாகத் தவிர்த்துத் துணைத்தலைவராகவே நீடித்தார்.
சென்ற ஆண்டு "இனிப் பொறுப்பதில்லை' என்று காங்கிரசு கண்ணைக் கசக்கிய நிலையில்தான் தலைவர் நாற்காலியில் அமர இசைந்தார்.
மணமகள் கடந்த பத்தாண்டுகளில் இருமுறை, ஒவ்வொரு ஐந்தாண்டிலும் மாலைசூடக் காத்திருந்தபோதும், "என்ன அவசரம்?' என ராகுல் நிராகரித்துவிட்ட நிலையில், மூன்றாவது ஐந்தாண்டின் மாலை எதிரி கழுத்துக்குப் போய்விட்டது.
இத்தகைய அனுபவம் காரணமாக நான்காவது ஐந்தாண்டில், "என்ன செய்தாவது இந்தக் குதிரை மீது ஏறிவிட வேண்டும்' என்னும் தவிப்பு ராகுலுக்கு இருந்தால், அதை யாரும் குறை சொல்லப் போவதில்லை.
ஆனால் எந்தத் தவிப்புக்கும் இடம் கொடுக்காமல், "தன் பெயரை முன்மொழியப் போவதில்லை' என்று அறிந்தே கல்கத்தா மாநாட்டுக்குத் தன்னுடைய சார்பாளர்கள் இருவரை அனுப்ப ராகுலால் முடிகிறது என்றால், இந்தப் பெருந்தன்மை நடைமுறை இந்திய அரசியலில் யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய ஒன்றா?
காந்தியும், முகம்மதுஅலி சின்னாவும், வல்லபாய் படேலும், நேருவும் நாட்டுப் பிரிவினை வலியுறுத்தப்பட்ட கடைசித் தறுவாயில் கலந்துரையாடுகின்றனர்.
"பாக்கித்தான் பிரியக்கூடாது, அகண்ட இந்தியாவின் தலைமையமைச்சராக சின்னா பொறுப்பேற்கட்டும், நேரு சின்னாவின் கீழிருந்து பணியாற்றுவார்' என்று நேருவின் முன்னால் சின்னாவிடம் சொல்கிறார் காந்தி.
சின்னா, நேரு முகத்தைப் பார்க்கிறார். முறுவலிக்கிறார் நேரு. நாடு துண்டாடப்படாமலிருக்க அதுதான் வழி என்றால், தன்னுடைய பதவி ஒன்றும் பெரிதில்லை என்று ஏற்கும் மனநிலையில் இருக்கிறார். சின்னா அந்த யோசனையை உடன்படவில்லை என்பது வேறு.
ஒரு பெரிய நோக்கத்திற்காகத் தங்களைப் பின்னிறுத்திக் கொள்ளும் பெருந்தகைமை அந்தக் குடும்பத்தின் குருதியில் கலந்ததுதான்.
""தன் வாழ்நாளுக்குள் ஒருநாள் நாடு விடுதலை அடைந்துவிடும், தான் தலைமையமைச்சராகிவிடலாம்'' என்பதைக் கற்பனையிலாவது கருதியிருப்பாரா நேரு?
அதற்கு ஒரு நாளா? இரு நாளா? ஓராண்டா? ஈராண்டா? பத்தாண்டுகள் சிறையில் தவமிருந்த பெருந்தகை நேரு. கமலாவின் அருகே கழிந்திருக்க வேண்டிய இளமை காராக்கிருக வெம்மையில் கனன்று கழிந்தது.
அத்தகைய நேருவின் பேரனின் மகன் கல்கத்தா மாநாட்டுக்குச் சார்பாளர்களை அனுப்பியது வியப்பில்லை.
ஒரு காலத்தில் இந்தியப் பேரரசைக் காங்கிரசு ஆண்டது. இப்போது அது இரங்கத்தக்க நிலையை அடைந்துவிட்டது.
அது செய்த தவறுகள் நூறு, பல நூறு. ஆயினும் தவறுகளுக்கு இடையேயும் தகுதி வாய்ந்த கட்சி அது.
யானை படுத்தாலும் குதிரை மட்டமல்லவா.
நெருக்கடி ஏற்பட்டால், கருநாடகத்துக் கவுடாவின் மகன்போல நாம் ஏன் தலைமையமைச்சராகக் கூடாது என எல்லா மாநிலத் தலைவர்களும் நினைக்கிறார்கள்.
அதுதானே அரசியல். இதிலென்ன வியப்பு.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதைக் கருநாடகாவைப் போல், டில்லிச் செங்கோட்டையிலும், காங்கிரசு அரங்கேற்றும் என்பதைக் காட்டத்தான் கல்கத்தா மாநாட்டில் உடன்நின்றார் பெருந்தகைமைமிக்க ராகுல்.
முதலில் சீமைக்கருவையை அழிப்போம்.
அதில் தென்னையா? வாழையா? பிறகு பார்ப்போம்.
(தொடரும்)