(71) மனம் போன படியெல்லாம் ஆள வேண்டாம்!’
இந்தியப் பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தொழிற்சாலைகள் எல்லாம் பகுதிநேர மூடலில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்கள் வாரத்தில் பாதிநாள் வேலை இழந்துள்ளனர். இருக்கும் வேலையே போய்க் கொண்டிருக்கும் போது, அரசு புதிய வேலையை உருவாக்கும் பேச்சுக்கே இடமில்லை.
மூலதனச் சந்தை தலைகுப்புறக் கிடக்கிறது. தாறுமாறான ஏநப வரிகள் பல தொழில்களை முடக்கி விட்டன. அயல்நாட்டு மூலதனம் தலைதெறிக்க வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு மோசமான நிலையில் நாடு தவிக்கும் போது, "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனையில் வை' என்பது போல், காசுமீரின் சிறப்புரிமைகளைப் பறித்து (Act 370), அதைப் பறிப்பதற்கு அரசியல் சாசனம் விதித்ததற்கு மாறாக, பிடி ஆளான (Not elected, but appointed) காசுமீர் ஆளுநரின் கையெழுத்தைப் பயன்படுத்தி, இவ் வளவுக்கும் மேல் அந்த மாநிலத்தை இரு கூறாகப் பிளவுபடுத்தி, கேவலம் அவற்றை நகராட்சிகளுக்கு இணையான யூனியன் பிரதேசங்களாக்கி, அந்த மாநிலத்தின் மாட்சிமைமிக்க தலைவர்களைச் சிறையிலடைத்து, தகவல் தொடர்புகள் அனுமதிக்கப் பட்டால் பெருங்கொந்தளிப்புகள் ஏற்படும் என்று அஞ்சி, அவற்றை முற்றாக முடக்கி, காசுமீர் மாநிலத் தையே பெருஞ்சிறைக் கூடமாக்கி, தேவையற்ற வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு, உள்ளே வைத்த காலைச் சேதமில்லாமல் எப்படி வெளியே எடுப் பது என்று திகைத்துக் கொண்டிருக்கிறது மோடியின் மைய அரசு!
காசுமீர் விவகாரம் என்பது உள்நாட்டு விவ காரம் (internal matter) என்னும் இந்தியாவின் நிலைப்பாடு சரியே! இதில் காசுமீரிகளுக்கே ஐயமில்லை என்பதால்தானே, அவர்கள் மைய அர
(71) மனம் போன படியெல்லாம் ஆள வேண்டாம்!’
இந்தியப் பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தொழிற்சாலைகள் எல்லாம் பகுதிநேர மூடலில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்கள் வாரத்தில் பாதிநாள் வேலை இழந்துள்ளனர். இருக்கும் வேலையே போய்க் கொண்டிருக்கும் போது, அரசு புதிய வேலையை உருவாக்கும் பேச்சுக்கே இடமில்லை.
மூலதனச் சந்தை தலைகுப்புறக் கிடக்கிறது. தாறுமாறான ஏநப வரிகள் பல தொழில்களை முடக்கி விட்டன. அயல்நாட்டு மூலதனம் தலைதெறிக்க வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு மோசமான நிலையில் நாடு தவிக்கும் போது, "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனையில் வை' என்பது போல், காசுமீரின் சிறப்புரிமைகளைப் பறித்து (Act 370), அதைப் பறிப்பதற்கு அரசியல் சாசனம் விதித்ததற்கு மாறாக, பிடி ஆளான (Not elected, but appointed) காசுமீர் ஆளுநரின் கையெழுத்தைப் பயன்படுத்தி, இவ் வளவுக்கும் மேல் அந்த மாநிலத்தை இரு கூறாகப் பிளவுபடுத்தி, கேவலம் அவற்றை நகராட்சிகளுக்கு இணையான யூனியன் பிரதேசங்களாக்கி, அந்த மாநிலத்தின் மாட்சிமைமிக்க தலைவர்களைச் சிறையிலடைத்து, தகவல் தொடர்புகள் அனுமதிக்கப் பட்டால் பெருங்கொந்தளிப்புகள் ஏற்படும் என்று அஞ்சி, அவற்றை முற்றாக முடக்கி, காசுமீர் மாநிலத் தையே பெருஞ்சிறைக் கூடமாக்கி, தேவையற்ற வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு, உள்ளே வைத்த காலைச் சேதமில்லாமல் எப்படி வெளியே எடுப் பது என்று திகைத்துக் கொண்டிருக்கிறது மோடியின் மைய அரசு!
காசுமீர் விவகாரம் என்பது உள்நாட்டு விவ காரம் (internal matter) என்னும் இந்தியாவின் நிலைப்பாடு சரியே! இதில் காசுமீரிகளுக்கே ஐயமில்லை என்பதால்தானே, அவர்கள் மைய அரசில் அங்கம் வகித்தார்கள்; மாநில அரசை ஆண்டார்கள். இப்போது அவர்கள் எதிர்நிலைக்குப் போய்விட்டார் களோ என்று மைய அரசு ஐயுறுகிறதென்றால், இந்த நிலைக்கு யார் காரணம்?
பாரதிய சனதா கட்சிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் காசுமீரில் நிலம் வாங்க வேண்டும் என் றும்; காசுமீர்ப் பெண்களை மணக்க வேண்டும் என்றும் கூத்தாடவில் லையே. காசுமீரிகளுக்கென்ன தனியுரிமை என்னும் "வெறுப்புத் தானே' பாரதிய சனதா கட்சி யின் அரசியல் மூலதனம்.
ஒரே நாட்டுக்கு என்ன இரண்டு சாச னங்கள்? ஒரே நாட் டுக்குள் என்ன தனிச் சிறப்புரிமைகள்? கன்னியாகுமரிக் காரனுக்கு இல்லாத கூடுதல் உரிமை, காசுமீர்க்கார னுக்கு ஏன் இருக்க வேண்டும்?
இவை எல்லாம் நல்ல நியாயமான கேள்விகள்தாம். நாம் சுதந்திரக் கொடியை ஏற்றிய போது காசுமீர் நம் கைக்குளா இருந்தது? அப்போது யாரிடம் கேட்பது?
அப்போது நாம் இந்த நியாயங்களை எல்லாம் பேசி இருந்தால், காசுமீர் நம்மோடு இணைந் திருக்காது! நாம் ஐதராபாத்தை வன்கண்மையாக இணைத்துக் கொண்டதுபோல, பாக்கித்தான் காசுமீரை விழுங்கி இருக்கும்.
முசுலிம்கள் வாழும் பகுதிகளால் உருவானதுதானே பாக்கித்தான்! முசுலிம் மாநிலமான காசுமீர் நம்பி, நம்மோடு வந்ததுதானே பெருமை. அது தானாக வந்து இணைய இசைந்தது அந்தச் சிறப்புரிமைகளின் அடிப்படையில்தானே.
வாக்குக் கொடுத்து விட்டு, அரசியல் சாசனத்திலும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, நாம் பிறழ்வதை நம்பிக்கை மோசம் என்று அந்த மக்கள் நினைக்க மாட்டார்களா?
அவர்கள் வாயைத் தைத்து வைத்திருக் கிறோம் என்பதால் அவர்களின் எதிர் உணர்வுகள் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் எதிர் விளைவுகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெளிப்படத் தொடங்கிவிட்டதே! இது நல்லதா?
ஒரு நாட்டுக்கு இருவேறு சாசனங்களா என்னும் கேள்வி காசுமீருக்கு மட்டும்தானா? வடகிழக்கு மாநிலங்களுக்கு இல்லையா?
ஒரு நாட்டுக்குள் இரு வேறு உரிமை நிலை ஏன் என்று மாற்றார் நெஞ்சைத் தூக்கிக் கேட் கிறார்களே! அவர்கள் சொல்வதைக் கேட்டு, "இது நியாயம்தானே?' என்று மோடியைப் பாராட்டு கின்ற கூட்டம் வளருவது நம்முடைய மாநில உரிமைகளுக்கு உகந்ததுதானா?
காசுமீர் இருக்கட்டும்; தமிழ்நாடும் யூனியன் பிரதேசங்களாக எவ்வளவு நேரம் ஆகும்?
எடப்பாடி கதை தெரிந்ததுதானே! இந்தியப் பொருளாதாரம் சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறபோது, வெளிநாட்டு மூலதனம் இந்தியாவிலிருந்து தெறிபட்டு ஓடிக் கொண்டிருக்கிற போது, அயல் மூலதனத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரக் காலமல்லாத காலத்தில் எடப்பாடி போகிறார்.
எடப்பாடி போய் அமெரிக்காவில் எப்படிப் பால் கறக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டதில், நமக்கு என்ன மோசம் போய்விட்டது?
அவர் இறங்கிய பிறகு அவருடைய சுவடுகள் தேய்ந்து மெலிந்து விடும். "காசு வாங்குவது; காரியம் செய்வது' என்பதுதான் தமிழ்நாட்டின் ஐம்பதாண்டு கால அரசியல்.
தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக நமக்குத்தானே வாக்களித்து மூன்றாவது பெரிய கட்சி ஆக்கினார்கள்! காசுமீருக்கு வந்த கேடு அதற்கு மட்டும் வந்த கேடில்லையே; எல்லா மாநிலங்களுக்கும் வந்த கேடல்லவா?
நாம் ஒரு மாநிலக் கட்சியாக இருந்த காலம் போய்ப் பல முறை அரசில் அங்கம் வகித்ததோடு தற்போது பொறுப்பு மிக்க பாராளுமன்ற எதிர்க்கட்சியாகவும் ஆகிவிட்ட நிலையில், நம்முடைய பொறுப்பு பெரியதல்லவா?
வட்டம் வாரியாகக் கூட்டம் போட்டு முத லில் தமிழ்நாட்டுக்கும், பாராளுமன்றம் வழியே இந்தியாவுக்கும், மோடி அரசின் முரண்பாட்டை வெளிப்படுத்துவது நம்முடைய கடமை இல்லையா? காசுமீருக்கு மட்டும்தான் இரட்டைச் சாசனம் (Special Privilege) இருக்கிறதா?
நாகாலாந்தின் சமய, சமூகப் பழக்கங்களில் இந்தியப் பாராளுமன்றம் கை வைக்க முடியுமா?
உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி, நாகர்களின் மண்ணின் மாட்சி சார்ந்ததுதானே (Customary law). இது தனி நிலை இல்லையா?
அவர்களுடைய மாநிலத்தில் அவர்கள் ஈட்டுகின்ற பணத்திற்கு மைய அரசுக்கு வருமான வரி கூட கட்டத் தேவையில்லையே! நாடு முழுவதற்கும் ஒரே சட்டம்தானா?
நாகர்கள் இந்தியாவோடு இருக்க (with India) விரும்புகிறார்கள்; இந்தியாவுக்குள் இருக்க விரும்பவில்லை. (They don't want to be within India) பூட்டான் இந்தியாவுக்குள் இல்லையே; அது போல. இதுதான் அவர்களின் முழக்கம்.
தங்களின் தனி உரிமைகளுக்கு ஆயுதம் தாங்கிப் போரிட்டவர்கள் நாகர்கள். காசுமீரில் அதே தனி உரிமைகளைப் பேனா முனையிலேயே முடித்துக் கொண்டார்கள்.
காசுமீரிகளின் நிலத்தைப் போல, நாகர்களின் நிலத்திலும் கை வைக்க முடியாது. (Unless the assembly of Nagaland so decides)
அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலந்து, காசுமீர் எல்லாமே எல்லைப்புற மாநி லங்கள். இராணுவ முக்கி யத்துவம் வாய்ந்தவை.
சீனா, பாக்கித்தான், பர்மிய எல்லைகளில் இருப்பவை. நம்மோடு கலகம் செய்து, போரிட்டுத் தோற்று சில தனி உரிமைகளுக் குப் பிறகு நம்மோடு இருப்பவை. அவற்றுக்குத் தனி உரிமைகள் (Special privilege) கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடும்!
காசுமீருக்கு என்ன தனி உரிமை என்று கேட்டாயே. 370ஐ நீக்கினாயே. நாகாலாந்துக்கும் மற்றவற்றிற்கும் ஏன் அதே கேள்வியைக் கேட்க வில்லை. 371ஆவது பிரிவை ஏன் நீக்கவில்லை?
கன்னியாகுமரியில் செல்லுபடியாகிற சட்டம் நாகாலாந்தில் செல்லுபடியாகவில்லையே ஏன்?
இந்த நாடு பெரியது. மௌரியப் பேரரசு அடைய முடியாத விரிவை அடையச் செய்து அது தொடமுடியாத எல்லைகளைத் தொட்டு, இந்தியா என்னும் நாட்டை உருவாக்கி, ஒரு குடையின் கீழ் அதனை ஆண்டு, எல்லா மக்களையும் ஒன்றிணைத்து ஒரு நாட்டினர் என்று உணரச் செய்து, கடைசியில் வெறுங்கையோடும், வெறும் மேனியோடும் போராடிய எம்மான் காந்தியிடம் தோற்று, இதைக் கொடுத்து விட்டுப் போய் விட்டான் வெள்ளைக்காரன்.
அதை நாம் "வெறுப்பு (Haterd) அடிப்படை யில்' சிதற விட்டு விடக் கூடாது! ஏற்கனவே ஆப்கானித்தானம் வரை நீண்டிருந்த இந்தியா சுருங்கியதற்கு இந்த வெறுப்புத்தான் காரணம் என்பதை மறக்கலாமா?
ஆனால் மோடி அரசுக்குத் தனிச் சலுகையின் மீது வெறுப்பா? இசுலாமியர்களின் மீது வெறுப்பா?
நாகர்களின் தனிச் சலுகையை மறுக்கவில் லையே ஏன்? அவர்களின் 371ஆவது பிரிவை நீக்கவில்லையே ஏன்? அவர்களுக்குள்ள சிறப்பு நிலையை (நல்ங்ஸ்ரீண்ஹப் நற்ஹற்ன்ள்) நீக்க மாட்டோம் என்று வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று, அங்கே "நம் கதியும் இதுதான்' என்று ஐயுற்ற மக்களிடம் சத்தியம் செய்யாத குறையாய் பேசி விட்டு வர வேண்டிய கட்டாயம் என்ன உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு.
'Home minister Amit shaw repeated that article 371, which bestows special status on NorthEastern states, would not be touched by Modi government'
ஏன் இந்த முரண்பட்ட நிலை?
சொல்வதற்கு என்ன இருக்கிறது?
மனம் போனபடியெல்லாம் ஆளவேண்டாம்!’
(தொடரும்)