(27) வெட்கம் வரக் கேட்டாரே ஒரு கேள்வி!

ண்மையில் திருமயம் லேனாவிளக்கு வரை பாரதிய சனதா கட்சியின் தலைவர் அமித்சா சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தங்க ளுடைய ஆட்சி தமிழ்நாட்டுக்கு நன்மை செய்த அளவுக்கு எந்தக் கட்சியும் செய்ததில்லை என்று புள்ளிவிவரங்களை அள்ளி வீசியுள்ளார்.

மதுரையில் எய்ம்சு மருத் துவமனைக்கு பன்னிரண்டாயிரம் கோடி; நெடுஞ்சாலைத் திட்டங் களுக்கு இருபத்தி மூன்றாயிரம் கோடி; இணையம் துறை முகத்திற்கு இருபதாயிரம் கோடி என தமிழ்நாட்டுக்கு மோடி அரசு அள்ளி வீசியுள்ளதாக அள்ளிவிட்டிருக்கிறார்.

கேட்பதற்கே திகைப்பான புள்ளிவிபரங்கள். தமிழ்நாட்டின் மீது அவ்வளவு பற்றா மோடிக்கு?

Advertisment

மேகதாது அணையைக் கருநாடகா கட்ட இசைவு தெரிவித்து அனுமதி வழங்கியது மோடி அரசுதானே? மேகதாது அணையைக் கருநாடகா கட்டுவது தமிழ்நாட்டை வளப் படுத்துவதற்கா? பாலைவனமாக்கவா?

p

எந்தப் புதிய அணையும் கட்டக்கூடாது என்னும் நீதிமன்ற உத்தரவு உயிர்ப்புடன் இருக்கும்போது, அது ஏற்கனவே மாநிலங்களிடையே உள்ள ஒப்பந்தத்திற்கு மாறுபாடான நிலையாகும் என்பது எல்லோராலும் அறியப்பட்டிருக்கும்போது, மேகதாது அணைக்கு இசைவு தெரிவிக்கிறது மோடி அரசு என்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயலா? வாழ்விக்கும் செயலா? அமித்சா அதைப்பற்றி எல்லாம் பேசுவதில்லை.

Advertisment

நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என மோடி பிடிவாதமாக மறுத்துவிட்ட நிலையில், "தமிழ்நாடு விரும்புகின்ற வண்ணம் அதற்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படும்' என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை உறுதி கூறுகின்றதே! தமிழ்நாட்டுக்கு உகந்த ஆட்சி எது?

அது மட்டுமன்று; ஒரு மாநில உரிமையாக இருந்த கல்வியை, மைய அரசின் பிடிக்குள் கொண்டு வந்ததை மாற்றி, மீண்டும் அதை மாநிலத்தின் வரையறைக்குள்ளேயே வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மாநிலம் தழுவிய மைய ஆட்சி எது.

அது மட்டுமல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி நாராயணசாமி அரசு, தில்லியிலுள்ள கெசரிவால் அரசைப்போல் பா.ச.க.வை உறுத்துகின்ற அரசாக இருக்கும் காரணத்தால், கிரண்பேடி என்னும் சண்டியரை அங்கே லெப்டினன்ட் கவர்னராக நியமித்து, மக்களரசை செயல்பட விடாமல், "முன்னே போனால் முட்டியிலடித்தும், பின்னே போனால் பிடரியில் அடித்தும், மோடியின் அரசு செய்த கொடுமைகள் கொஞ்சமா?

புதுச்சேரி அரசுக்கு தமிழ்நாட்டைப்போல், ஒரிசாவைப் போல், மாநில அரசுக்குரிய முழு மதிப்பு வழங்கப்பட்டு அதன் நிலை உயர்த்தப்படும் என்றும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இதேபோல் டில்லியிலுள்ள லெப்டினென்ட் கவர்னர் தன்னை "மானிட்டராக' ஆக்கிக்கொண்டு கொட்டம் அடித்த நிலைக்கு மாறாக, அவருடைய அதிகாரம் பிடுங்கப்பட்டு, செயலற்று இருப்பார்கள் என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை கூறுவதோடு, அந்த லெப்டினன்ட் கவர்னர்கள் அந்த மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் முடிவுகளுக்குத் தகவே நடந்துகொள்ளுமாறு அவர்களின் வால்கள் ஒட்ட நறுக்கப்படும் என்றும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

நாளைக்கு பா.ச.க. அரசுகள் இந்த மாநிலங் களில் ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் சுதந்திரக் காற்றை அவர்களும் சுவாசிக்க முடியும் என்பதுதான் காங் கிரசின் பரந்த மனப்பான்மையின் அடையாளம்.

நம்முடைய நீதியமைப்பு, சட்ட நிருவாக முறை மிகச்சிறந்தது என்று கூறமுடியாத நிலை யிலே இருந்துவருகிறது.

உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல் சாசனம் (ஈர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்) நம்முடையதுதான்.

அதனுடைய குற்றவியல் பிரிவு (ஈழ்ண்ம்ண்ய்ஹப் டழ்ர்ஸ்ரீங்க்ன்ழ்ங்) மிகக்கடுமையானது.

p

ஏதாவது பிரிவுகளைக் குறிப்பிட்டு யார் மீதா வது காவல்துறை குற்ற வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றங்களின் முன்னால் நிறுத்தினால், அந்தக் கீழமை நீதிமன்றங்களில், "பதினைந்து நாள் ரிமாண்ட்' என்று எழுதி அந்தத் தாளை எழுத்த ரிடம் நகர்த்திவிடுவார் அந்த நீதிபதி. வழிதுறை உள்ளவன் சொத்து வைத்திருப்பவனைப் பிடித்து சாமீன் கொடுக்குமாறு செய்து, வெளியே வந்துவிடுவான். பிழைப்புத் தழைப்புகளை விட்டுவிட்டு ஓரிரு ஆண்டுகளுக்கு நீதிமன்றத்திற்கு அலைந்துகொண்டிருப்பது என்பது வேறு.

வழிதுறை இல்லாதவன் சிறையில் அடைக் கப்பட்டால் அடைக்கப்பட்டதுதான்.

அவனுக்குச் சொத்தும் இருக்காது. சொத்துள்ள உறவுகளும் இருக்காது. யார் சாமீன் அவனுக்குக் கொடுப்பார்கள்? வழக்குகளும் விரைந்து நடக்காது.

அப்படி விசாரணைக் கைதிகள் என்னும் நிலையில் சிறையில் இருப்பவர்கள்தாம் அங்கிருக்கும் பத்தில் எட்டுபேர்.

நீண்ட பெரிய சிறைக்கூடங் களெல்லாம் குற்றம் மெய்ப்பிக்கப் படாமலும், விசாரணை நடத்தப் படாமலும் உள்ள, எண்ணிக்கையில் அடங்காத இவர்களை அடைத்து வைக்கத்தான். இதுதான் நமது நாட்டு நீதி.

இதைக் குறித்து காங்கிரசு தேர்தல் அறிக்கை சிந்திப்பது ஆறுதலாக இருக்கிறது.

மூன்று ஆண்டு வரை தண்டிக் கப்படக்கூடிய குற்றம் இழைத்ததாகக் கருதப்படக்கூடியவர்கள், வெளியே வர முடியாமல் சிறையிலேயே வாடுவார்களேயானால், வழக்கு மூன்று மாதத்திற்குள் விரைந்து முடிக்கப்பட வேண்டும், இல்லாவிடில் அவனைச் சிறைக்குள் விசாரணைக் கைதி என்ற பெயரில் ஆயுள்கைதியாக வைத் திருக்காமல் மூன்று மாதத்தில் அவனை வெளியே விட்டுவிட்டு வழக்கை நடத்திக்கொள்ளட்டும் என்று காங்கிரசு சிந்திப்பது, அதனுடைய குறை பாடுகளுக்கிடையேயும் உள்ள பாரம்பரிய சிறப்பையும், பரந்துபட்ட சிந்தனைப் பரப்பையும் காட்டுகிறது.

அரசை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களெல் லாம் தேசத்துரோகச் சட்டத்தின் (நங்க்ண்ற்ண்ர்ய் ஆஸ்ரீற்) கீழ் காலவரம்பின்றி, கேள்வி கேட்பாரின்றி அடைக்கப்படும் அருவருப்பான சட்டம் வெள்ளை யனிடமிருந்து பெறப்பட்டு நம்முடைய அரசுகளால் இதுநாள்வரை பயன்படுத்தப்பட்டு வந்தது.

வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் காவிரிச் சிக்கலில் கருநாடகத்தைக் கடுமையாக விமர்சித்தார் என்பதற்காக எடப்பாடி அரசில் தேசத்துரோக வழக்கில் உள்ளே வைக்கப்பட்டார்.

தமிழனாகப் பிறந்த ஒருவன் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாகச் சார்ந்திருக்கும் காவிரியைப் பற்றிப் பேசுவது தேசத்துரோகமா? நம்முடைய உரிமையை மறுதலிக்கும் கருநாடக அரசின் செயல், தேசக்கடமையா? அதற்குத் துணைபோன எடப்பாடியின் செயல் மடமையில்லையா?

p

அந்தக் கேவலமான சட்டப்பகுதி கிழித்தெறியப்படும் என்னும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை கால உணர்வும், நீதி உணர்வும் மிக்கது. உச்சநீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் தேர்வு செய்யப்படும் நீதிபதிகளின் பெயர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என காங்கிரசு தேர்தல் அறிக்கை கூறுவது, ரகசியமான செயல்கள் சலுகைகளுக்கு வழிவகுத்து விடும் எனும் அடிப்படையில்தான். "ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மதிப்பு நிலை அளிக்கப்படும்' என்னும் வாக்குறுதி மாநிலங்களை நோக்கி மைய அரசியல் செயல்பட்டாக வேண்டிய கட்டாயநிலை உருவாகி வருவதையே காட்டுகிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவனுக்கு மாதம் ஆறாயிரம் வழங்குவது, நாட்டின் அயல்விவகாரக் கொள்கை, காசுமீரை பா.ச.க. செய்து வைத்திருக்கும் குளறுபடிகளிலிருந்து அதை மீட்பது ஆகியன குறித்து காங்கிரசின் நிலைப்பாடுகள் தனித்தனி ஆய்வுக்குரியன. தேர்தல் அறிக்கை மொத்தத்தில் மாநிலங்களைத் தழுவிய மைய அரசு என்னும் நோக்கு மாற்றத்தைக் காட்டுகிறது.

இதற்கிடையே நாங்கள் தமிழ்நாட்டுக்கு அதற்குக் கொடுத்தோம், இதற்குக் கொடுத் தோம் என்று இங்கு வந்த அமித்சா சொல்லியபோது, நாம் எந்தச் சொரணையும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். இதேபோல் தெலுங்கானாவில் போய் அமித்சா சொன்ன போது, அதனுடைய முதல்வர் சந்திரசேகர ராவ் அமித்சாவுக்கு திருப்பிக் கொடுத்து, அவர்களை மூச்சுத்திணறச் செய்திருக்கிறார்.

அடங்கிப்போனார் அமித்சா.

மோடியும், அமித்சாவும் தெலுங்கானாவுக்கு முப்பந்தைந் தாயிரம் கோடி நிதி உதவி அளித்திருப்பதாகத் தம்பட்டம் அடித்தபோது, சந்திரசேகர ராவ் சொன்னார்...

"ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கானா வருமானத்திலிருந்தும் பிற வரிகள் மூலமும் மைய அரசுக்கு ஒரு லட்சம் கோடி வரியாகத் தருகிறது. அதில் இருபத்தி நான்காயிரம் கோடியை தெலுங்கானாவுக்கு மைய அரசு திருப்பித் தந்திருக்கிறது.

மீதியுள்ள தெலுங்கானாவின் எழுபத்தாறாயிரம் கோடியில்தான் மோடியின் கார் ஓடுகிறது. வருடத்தில் பாதி நாள் உலகம் பூராவும் மோடி விமானத்தில் பறக்க முடிகிறது. இராணுவத்திற்கு சம்பளம் கொடுக்க முடிகிறது.

மோடிக்கு வரி தருவதற்குத் தனியாக எந்த மக்கள் இருக்கிறார்கள்? நாங்கள் தருகிற பணத்தில் கால் பகுதியை எங்களுக்குத் திருப்பித் தருகிறாய், முக்கால் பகுதியை நீ வைத்து வேட்டடிக்கிறாய்.

எங்கள் தயவில் நீ வாழ்கிறாயா?

உன் தயவில் நாங்கள் வாழ்கிறோமா?

வெட்கம் வரக் கேட்டாரே ஒரு கேள்வி!

(தொடரும்)