(7) இல்லாத தாய்க்கு ஏன் வாழ்த்து முழக்கம்?
"பாரத் மாதா கீ ஜே!' என்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய சனதா கட்சியின் மூல முழக்கம்.
இந்தியாவில் விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு நடந்த காலத்தில்கூட "வந்தே மாதரம்' என்னும் வங்கமொழி முழக்கமே நடைமுறையில் இருந்தது. அதன் பொருள் "தாயை வணங்குவோம்' என்பதுதான். தாய் யார் என்பது விளக்கப்படவில்லை.
வங்காளிகள் மொழிஉணர்வு மிக்கவர்கள். அவர்கள் வங்கத் தாயைப் போற்றும்விதமாக அந்த முழக்கத்தை எழுப்பியிருக்கலாம். தங்கள் தாய்க்கும் அது பொருந்தும் என்பதால் பிற மாநிலத்தவரும் அந்த முழக்கத்தை ஏற்றிருக்கலாம்.
இந்தியாவின் நாட்டுப்பண் இரவீந்திரநாத் தாகூரின் பாடலின் மீது அமைந்ததுதான். அவரும் ஒரு வங்காளியே! நம்முடைய நாட்டுப்பண் வங்கமொழியில் அமைந்ததுதான்.
அந்தப் பாடலில் பாரத நாடு பற்றிய போற்றுதல் இருக்கிறதே ஒழிய, பாரத மாதா என்னும் சொல்லோட்டமில்லை.
பாரத நாட்டைக்கூட நம்முடைய தேசியகீதம் தொன்றுதொட்டு இருந்து வந்த நாடாகக் காட்டவில்லை. பல மாநிலங்களின் தொகுப்பாகத்தான் சொல்லிப் போற்றுகிறது.
பஞ்சாப, சிந்து, குசராத்த, மராத்தா
திராவிட, உத்கல, வங்கா
பஞ்சாபையும், சிந்துவையும், குசராத்தையும், மராத்தியத்தையும், வங்காளத்தையும் உத்கல் என்னும் ஒரி
(7) இல்லாத தாய்க்கு ஏன் வாழ்த்து முழக்கம்?
"பாரத் மாதா கீ ஜே!' என்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய சனதா கட்சியின் மூல முழக்கம்.
இந்தியாவில் விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு நடந்த காலத்தில்கூட "வந்தே மாதரம்' என்னும் வங்கமொழி முழக்கமே நடைமுறையில் இருந்தது. அதன் பொருள் "தாயை வணங்குவோம்' என்பதுதான். தாய் யார் என்பது விளக்கப்படவில்லை.
வங்காளிகள் மொழிஉணர்வு மிக்கவர்கள். அவர்கள் வங்கத் தாயைப் போற்றும்விதமாக அந்த முழக்கத்தை எழுப்பியிருக்கலாம். தங்கள் தாய்க்கும் அது பொருந்தும் என்பதால் பிற மாநிலத்தவரும் அந்த முழக்கத்தை ஏற்றிருக்கலாம்.
இந்தியாவின் நாட்டுப்பண் இரவீந்திரநாத் தாகூரின் பாடலின் மீது அமைந்ததுதான். அவரும் ஒரு வங்காளியே! நம்முடைய நாட்டுப்பண் வங்கமொழியில் அமைந்ததுதான்.
அந்தப் பாடலில் பாரத நாடு பற்றிய போற்றுதல் இருக்கிறதே ஒழிய, பாரத மாதா என்னும் சொல்லோட்டமில்லை.
பாரத நாட்டைக்கூட நம்முடைய தேசியகீதம் தொன்றுதொட்டு இருந்து வந்த நாடாகக் காட்டவில்லை. பல மாநிலங்களின் தொகுப்பாகத்தான் சொல்லிப் போற்றுகிறது.
பஞ்சாப, சிந்து, குசராத்த, மராத்தா
திராவிட, உத்கல, வங்கா
பஞ்சாபையும், சிந்துவையும், குசராத்தையும், மராத்தியத்தையும், வங்காளத்தையும் உத்கல் என்னும் ஒரியாவையும், தனித்தனி இன மக்களாகக் குறிப்பிடும் தேசியகீதம், தென்னாட்டு மக்கள் ஒரு மொழியின் கிளை மக்கள் என்பதால், அவர்கள் அனைவரையும் ஒரே இன மக்களாகக் கொண்டு, "திராவிட' என்னும் ஒற்றைச் சொல்லால் குறிக்கிறது தேசியகீதம்.
எனவே வங்கத்தாய் உண்டு; ஒரியத் தாய், தமிழ்த் தாய், கன்னடத் தாய் என ஒவ்வோர் இனத்தையும் பெற்றெடுத்த பல தாய்கள் உண்டு.
ஆகவே எல்லா இனங்களையும் உள்ளடக்கிய பாரத நாடு உண்டு என்பது சரி. ஆனால் இவர்கள் எல்லாரையும் பெற்ற மாதாக்கள் வேறு வேறாக இருக்கும்போது, பாரத மாதா யார்?
காந்தியைக் குசராத்தித் தாய் பெற்றெடுத்தாள். நேதாசியை வங்கத் தாய் பெற்றெடுத்தாள். காமராசரையும், முத்துராமலிங்கத் தேவரையும், அண்ணாவையும் தமிழ்த் தாய் பெற்றெடுத்தாள். பகத்சிங்கைப் பஞ்சாபித் தாய் பெற்றெடுத்தாள், நேருவை இந்தித் தாய் பெற்றெடுத்தாள்.
அப்படியானால் பாரதத் தாய் பெற்றெடுத்த மகன் யார்? ஒருவன்... ஒரேயொருவனாவது உண்டா?
ஒருவனையும் பெறாத ஒரு பெண் எப்படித் தாய் ஆவாள்?
சின்னஞ் சிறிய வாசல் வழியாகச் சொல்லொணா வேதனைகளுக்கிடையே ஒரு பிள்ளையை உயிர்க் கின்றவள்தான் தாய். பெறாமலேயே எப்படித் தாயாவது? இது மோசடி அல்லவா?
என்னுடைய பாட்டனுக்குப் பாரதநாடும் தெரியாது, பாரதத் தாயும் தெரியாது.
நமக்குப் பாரத நாடு காலத்தேவை. ஆகவே பல தாய் பெற்ற பிள்ளைகளெல்லாம் ஒன்றிணைந்து பாரத நாட்டை உருவாக்கும் நிலை ஏற்பட்டது. இல்லாவிடில் சீனா போன்ற ஒரு வலிய நாட்டை எதிர்கொள்ள முடியாதே.
அதற்காக "இல்லாத தாய்க்கு' நாம் பிறந்திருப்பதாகச் சொல்வது அறிவான பேச்சா?
பொய்யான பாரதத் தாயை நிலைநிறுத்தாமல், பாரத நாட்டை நிலைநிறுத்த முடியாதா?
என்னுடைய பாட்டன் தமிழ்த்தாய்க்குப் பிறந்தவன், நான் பிறந்தது வேறொரு தாய்க்கு என்றால் நாங்களிருவரும் ஒரு கொடி வழியினர் ஆவோமா?
நம்முடைய தமிழ்த்தாய் மட்டுமல்ல; எந்தத் தாயும் நில வழியாக வரையறைப் படுத்தப்பட்டவள் அல்லள். நிலம் பெருகும்; சுருங்கும். நிலம் நிலையான வரையறை ஆகாது.
ஈழத் தமிழர்களும், மலேசியத் தமிழர்களும் உலகின் எந்த மூலையில் வாழும் எந்தத் தமிழர்களும் தமிழ்த்தாய் பெற்ற மக்கள் என்பதாலேயே தமிழர்கள் என இனமாகவே அறியப்படுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்கூட தங்களைப் "பாரதர்கள்' என்று கூறிக்கொள்வதாகத் தெரியவில்லை.
தாய்வழி அடையாளம் மாறாது; நிலவழி அடையாளம் மாறும். தேசியகீதம் போற்றுகின்ற, நாம் எழுந்து நின்று மரியாதை செய்கின்ற "சிந்து' (பஞ்சாப, சிந்து, குசராத்த) இப்போது எங்கே? பாகித்தானில் அன்றோ இருக்கிறது.
"பாரத மாதா' என்னும் குழப்பம் தமிழில் என்றும் இருந்ததில்லை. தமிழ்த் தாய் தன் இடத்தைப் பிடுங்கிக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை. ஆனால் அந்த இடத்தைப் பாரத மாதாவுக்குப் பிடுங்கிக்கொடுக்க முயல்கிறான் பாரதி. "பாரத மாதா' என்னும் சொல் தமிழில் அரங்கேறியதே பாரதியால்தான். பாரதி குறைவான புலவனில்லை; அதெல்லாம் வேறு.
பாரத மாதாவின் கண்டுபிடிப்புக்கான கட்டாயம் என்ன?
பாரத மாதாவை எழுப்புவதற்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறான் பாரதி.
"பார்ப்பனர் வேதம் ஓதுகின்றனர்; இன்னுமென்ன தூக்கம்? தாயே பள்ளி எழு' என்று பாரத மாதாவை எழுப்புகின்றான் பாரதி.
தெள்ளிய அந்தணர் வேதமும்
நின்றன் சீர்த்திரு நாமமும்
ஓதி நிற்கின்றார், அள்ளிய தெள்ளமுது
அன்னை எம் அன்னை
ஆருயிரே பள்ளி எழுந்தரு ளாயே!
திருக்குறள் கேட்டுக் கண் விழிக்க அவளென்ன தமிழ்த்தாயா? அகண்ட பாரதத்திற்கு உரியவளுக்குக் குறளெல்லாம் ஒரு பொருட்டா? வேதம் முழங்க வேண்டும்; அதையும் தெள்ளிய அந்தணர் முழங்க வேண்டும்.
சமக்கிருதத் தாயைப் பாரதத் தாயாக உருமாற்றம் செய்துகொள்ள பாரதி விரும்பினால், நமக்கு மறுப்பில்லை. ஆனால் அவளைத் தமிழர்கள் தலையில் வைத்து ஏன் கட்டவேண்டும்? தமிழர்கள் பின்பாட்டுப் பாடவேண்டும் என ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
பாரதியின் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணிய சிவா தருமபுரிப் பாப்பாரப்பட்டியில் ஒரு பாரத மாதா கோயிலைக் கட்ட நிலம் வாங்கிப் போட்டிருந்தார். "தேசபக்தரான' அவர் அந்த வேலையைத் தொடங்குவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். ஆகவே தேவையில்லாத ஒரு காரியம் நிறைவுறாமலே நின்று போய்விட்டது.
பாரத மாதா கோயிலைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடையாய் நடக்கிறார் நம் குமரி அனந்தன்.
ஒருவேளை, கட்டியே முடித்துவிட்டாலும், பாரத மாதா வேதம் பாடினால்தான் எழுவாள்; அதுவும் தெள்ளிய அந்தணர் பாடவேண்டும் என்று பாரதியே வாக்குமூலம் வழங்கி யிருக்கிறானே.
இல்லாவிட்டால் தீட்டு என்று சொல்லமாட்டார்களா? கோயிலையும் கட்டிவிட்டு நாம் தீட்டாகவும் ஏன் ஆக வேண்டும்?
வேதம் பாடுகின்ற கோயிலுக்கு முசுலிம்களும், கிறித்துவர்களும் வரமாட்டார்களே. அவர்களுக்கும் தாயாக முடியாத நிலையில், அவள் தேசத்தின் தாயாக எப்படி இருப்பாள்? இந்துக்களின் தாயாக இருப்பது வேறு; இந்தியாவுக்குத் தாயாக இருப்பது வேறல்லவா.
தேச பக்தர்கள் தேசியத்திற்கு எதிரானது திராவிடம் என்று மலைக்கிறார்கள்.
திராவிடத்தை உள்ளடக்கியதுதான் தேசம்.
பல இன மக்களை, பல நாகரிகங்களை உள்ளடக்கிய பாரதம் ஏற்கனவே பெருநாட்டுத் தேவை காரணமாக நிலை நின்றுவிட்டது. அதை நிலைநிறுத்த புதிய தாய் ஒருத்தியைப் பொய்யாகப் படைக்கத் தேவையில்லை.
இல்லாத தாய்க்கு ஏன் வாழ்த்து முழக்கம்?
(தொடரும்)