கீழடிக்கும் முந்தைய நாகரிக சமூகம் வாழ்ந்துள்ள இடம் ’அம்பலத்திடல்’ என்பது அங்கே கண்டெடுக்கப் பட்டுள்ள கற்கோடாரி மூலம் தெரியவருகிறது. 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ள அச்சமூகம் குறித்து அகழாய்வு செய்ய அரசு இப்போதுதான் முனைந்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் ஓடும் வில்லுனி ஆற்றங்கரையில் சுமார் 173 ஏக்கர் பரப் பளவில் உள்ள இடம் அம்பலத்திடல். வன்னி மரங்கள் அடர்ந்த அப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் புதைக்கப் பட்ட புதைவிடங்கள் உள்ளன. முதுமக்கள் தாழிகள் சுண்ணாம்புக் கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சுடுசெங்கல் கட்டுமானங்களும் காணப் படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே இதை அறிந்து, ’"தொல்லியல் துறை இங்கே ஆய்வு செய்யவேண்டும்' என்ற கோரிக்கையுடன் செய்தி வெளியிட்டது நக்கீரன். அதிகாரிகள் இதை அலட்சியப்படுத்திவிட்டார்கள்.
பின்னர், 2016-ஆம் ஆண்டில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆசிரியர் மங்கனூர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், ""இது எழுத்து காலத்திற்கு முந்தைய குறியீடு காலம். இங்கு போர் வீரர் கள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு சான்றாக வன்னி மரங்களும் உள்ளது''’என்றனர். மேலும், ""இங்கு கிடைத்துள்ள பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள் இலங்கை, கிரேக்கம் போன்ற நாடுகளிலும் கிடைத்திருப்ப தால் இந்த சமூகம் பல நாடுகளில் வாழ்ந்த நாகரிக சமூகமாக இருந்திருக்கிறது. வணிகத்திலும் சிறந்து விளங்கி இருக்க வேண்டும்''’என்றனர். அந்த நேரத்திலும் நக்கீரன் செய்திகள் வெளியிட்டு கோரிக்கை வைத்தது. அப்போ தும் அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் மீண்டும் நமது செய்திப்பிரிவினர் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினரிடம் வலியுறுத்தியதின்பேரில் கடந்த 8-ந் தேதி அம்பலத்திடல் வந்தார்கள் ஆய் வாளர்கள். அப்போது, கற்கோடாரியும் கண்டெடுக்கப்பட்டது. ""அக்கற்கோடாரி இரும்பு காலத்திற்கு முந்தையது என்றும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாகரிக சமூகம் இங்கே வாழ்ந்துள்ளது என்றும் தொடர்ந்து அரசு அகழாய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுச் சான்றுகளைக் காணலாம்'' என்றும் கூறினார்கள்.
அதன் பிறகே... மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அனுமதி யுடன் அம்பலத்திடலுக்கு வந்த அறந் தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு, ""தொல்லியல் துறை அனுமதியுடன் ஒரு வாரத்தில் அகழாய்வு செய்ய நட வடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.
""இதுவரையிலும் அதிகாரிகள் தாமதம் செய்த காலங்களில் ஆக்கிர மிப்புகள்தான் அதிகமாக உள்ளன. பொக்கிஷங்கள் சிதிலமடையாமல் இருக்க, ஆய்வாளர்கள் உடனே களத்தில் இறங்கவேண்டும்'' என்கின்ற னர் சமூக ஆர்வலர்கள்.
-இரா.பகத்சிங்