மிழகத்தில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவருகிறது அமலாக்கத்துறை. கடந்த இரண்டு மாதங்களில் இத்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளின் அடிப்படையில் இந்தப் பாய்ச்சலுக்குத் திட்டமிடப்படுகிறது என்கிறார்கள்.

குறிப்பாக, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் அர்ஜுன் ரெட்டி ஆகியோருக்கு எதிராக நடந்த அதிரடி சோதனைகள் தான் இதன் மையப்புள்ளி. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, சி.எம்.டி.ஏ.வுக்குள் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை உட்பட வெளிவராத பல தகவல்கள் கிடைத்தன. ஜெயலலிதா தலைமையிலான 2011-2016 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர், எடப்பாடியால் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு ஓ.பி.எஸ். அணியில் இருந்துவருகிறார்.

vv

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டி லுள்ள சென்னை பெருநகர வளர்ச் சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.)தான், சென்னையில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கான அனுமதியை கொடுக்கும் அதிகாரம் பெற்ற நிறுவனம்.

இத்துறைக்கு வைத்திலிங் கம் அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில், ஸ்ரீராம் ப்ராப்பர்ட் டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் சுமார் 57 ஏக்கர் பரப்பளவில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டும் திட்டத்துக்கு 2013-ல் சி.எம்.டி.ஏ. வுக்கு விண்ணப்பித்தது. ஆனால், இந்த விண்ணப்பம் 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் வைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2016-ல் திடீரென்று இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கியது சி.எம்.டி.ஏ.! இதற்கான அனுமதியை வழங்க வைத்திலிங்கத்திற்கு 27.90 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப் பட்டது என்கிற ஊழல் குற்றச்சாட்டுகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தது அறப்போர் இயக்கம். இதனை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புகாரை உறுதி செய்திருந்தனர்.

Advertisment

இதன்பேரில் வைத்திலிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில், இந்த ஊழல் முறைகேட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருப்ப தாகக்கூறி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வைத்திலிங்கம் உள்ளிட்டவர் கள் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில்தான் கடந்த அக்டோபரில் வைத்திலிங்கம் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், சென்னையிலுள்ள சி.எம்.டி.ஏ. தலைமையகத்திலும் நுழைந்தனர். அமலாக்கத்துறையின் உதவி மற்றும் துணை இயக்குநர்கள் தலைமையில் சி.எம்.டி.ஏ.வில் 6 மணிநேரம் சோதனை நடந்தது. சி.எம்.டி.ஏ.வுக் குள் நுழைந்ததும் துறையின் உறுப்பினர் செய லாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சூல்மிஸ்ரா வின் அறைக்குள் அதிகாரிகள் சென்றனர். அவர் அங்கில்லை. அன்சூல் மிஸ்ராவின் உதவியாளர் களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, இன்று அவர் அலுவலகம் வரமாட்டார்; தலைமைச் செயலகத்தில் முக்கிய மீட்டிங் நடக்கிறது. அதில் கலந்துகொள்ள சென்றுள்ளார் என்றனர். உடனே அவரை தொடர்புகொண்டு இங்கு வரச்சொல்லுங்கள் என உதவியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர். உடனே அன்சூல் மிஸ்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

vv

Advertisment

இதனையடுத்து சி.எம்.டி.ஏ.வின் துணைத் தலைவர் காகர்லா உஷா ஐ.ஏ.எஸ். மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முயற்சித்தபோது அவர்களும் அலுவலகத்தில் இல்லை. இதனைத் தொடர்ந்து, சி.எம்.டி.ஏ.வின் அடுத்த நிலை அதிகாரிகள் பலரையும் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, 2013 முதல் 2016 வரை சி.எம்.டி.ஏ.விடம் அப்ரூவல் கேட்டு விண்ணப் பித்த அனைத்து நிறுவனங் களின் கோப்புகளையும் எடுத்துவர உத்தரவிடப்பட் டது. குறிப்பாக, வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கிய குறிப்பிட்டத் திட்டத்தின் கோப்புகள் மிஸ்ஸாகக்கூடாது என கேட்டுக்கொண்டனர் அதிகாரிகள்.

அதன்படி கோப்புகள் கொண்டுவரப்பட் டன. அதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர். அதனடிப்படையில் பல்வேறு கேள்விகளை சி.எம்.டி.ஏ. அதிகாரிகளிடம் அம லாக்கத்துறையினர் எழுப்பியபோது, "கிட்டத் தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ள விவகாரம் இது. கோப்புகளை படித்துப் பார்க் காமல் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது கஷ்டம் என சி.எம்.டி.ஏ.வினர் சொன்னபோது, "சுமார் 35 ஆண்டுகால அனுபவம் உள்ள நீங்கள் பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது; உங்களுக்கு விபரங்கள் தெரியும். என்ன நடந்தது எனச் சொன்னால் நல்லது' என்று அழுத்தமாக அமலாக்கத்துறையினர் பேசினர்.

அப்போதும் அசராத சி.எம்.டி.ஏ. அலுவலர்கள், "உங்களுக்கு உதவ நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோப்புகளை படித்துப் பார்க்காமல் பதில் சொன்னால் தப்பாகிவிடும். தவறான தகவல்கள் தந்துவிடக்கூடாது... அத னால், கோப்புகளை படித்துப் பார்த்துவிட்டுச் சொல்கிறோம். முழுமையாக படித்துப் பார்க்க குறைந்தபட்சம் 2 நாட்களாவது தேவை' என்றிருக்கிறார்கள்.

அந்த சமயத்தில், அன்சூல் மிஸ்ரா சி.எம்.டி.ஏ.வுக்கு வந்துவிட்டார். அவரிடம் அமலாக்கத்துறை விசாரித்தபோதும், அவரும் இதே மாதிரியான பதிலையே தந்துள்ளார். மேலும், சில புள்ளிவிபர கணக்குகளை அன்சூல்மிஸ்ராவிடம் அமலாக்கத்துறையினர் கேட்க, அவருக்குத் தெரியாததால், அலுவலர்கள் தான் அதற்குரிய பதிலை விளக்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த விசா ரணையில், வைத்திலிங்கத்தைச் சுற்றியே கேள்விகள் அதிகம் இருந்துள்ளது.

இதனையடுத்து, 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை தங்கள் கஸ்டடியில் எடுத்துக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், "கோப்புகளை ஆராய்ந்த பிறகு உங்களிடம் மீண்டும் விசாரிக்க வேண்டியதிருக்கும். அப்போதும் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்' எனச் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள்.

அதேபோல, சமீபத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் அர்ஜுன் ரெட்டி தொடர் புடைய பங்களாக்கள், அலு வலகங்களிலும் அமலாக்கத் துறை யினர் சோதனை நடத்தினர். அப் போது கைப்பற்றப்பட்ட ஆவணங் களும் அமலாக்கத்துறையின் கஸ் டடிக்கு கொண்டுபோகப்பட்டன.

இதற்கிடையே, மார்ட்டின் மற்றும் அர்ஜுன் ரெட்டிக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனைக்கு மறுநாள் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகர மான அ.தி.மு.க.வின் சேலம் இளங் கோவன் சம்மந்தப்பட்ட வீடுகள், கல்லூரிகள், அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். மூன்றுநாட்களாக நடந்த அந்த ரெய்டிலும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களை அலசி ஆராய்ந்த வருமானவரித்துறை, அமலாக்கத் துறைக்கு சில ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளதாம்.

அந்த வகையில், சி.எம்.டி.ஏ.வில் எடுத்துக்கொள்ளப்பட்ட கோப்புகள், வைத்திலிங்கம், மார்ட்டின், அர்ஜுன் ரெட்டி, சேலம் இளங்கோவன் ஆகியோர் தொடபுடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என அனைத்தையும் ஆராய்ந்து முடித்திருக்கிறது அமலாக்கத்துறை. இந்த நிலையில்தான் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிறது.

இது குறித்து அமலாக்கத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "கோப்புகள் மற்றும் ஆவணங்களை உயரதிகாரிகள் ஆராய்ந்ததில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான பல விபரங்கள் கிடைத்திருக்கிறது. அதனை தொகுத்துள்ளனர். அதனடிப்படையில் வைத்தியலிங்கம், சேலம் இளங்கோவன், மார்ட்டின், அர்ஜுன் ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிக்க அதி காரிகள் ஆலோசித்துள்ளனர். அவர்களின் பதில்களைப் பொறுத்து இவர்களுக்கு எதிரான விசயங்கள் சூடு பிடிக்கும். இதில் வைத்திலிங்கத்தின் மீது வழக்கின் பிடி இறுகும்.

சேலம் இளங்கோவனுக்குச் சொந்தமான கல்லூரியில் வரி ஏய்ப்புக் கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணம் பதுக்கலும் நடந்திருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில்தான் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான பல விபரங்களும் கிடைத்திருப்பதால் அதனை அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது வருமானவரித்துறை. அதனடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பத் தயாராகிவருகிறது.

இது மட்டுமல்லாமல், சேலம் இளங்கோவன் மற்றும் மார்ட்டினுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த சில குறிப்புகள் வேறு ரகம். அதாவது, அண்மைக்காலத்தில் இரண்டு பெரிய மாநாடுகள் நடந்தன. அந்த மாநாடுகள் தொடர்பாக அர சியல் சர்ச்சைகளும் உருவானது. அந்த மாநாடுகளுக்கு இவர் கள் கோடிகளில் பண உதவி (நன்கொடை) செய்திருக் கும் குறிப்புகளும் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளன. சம்மன் மூலம் இவர்களை வரவழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தும்போது, இந்த நன்கொடை விவகாரங்கள் பூதாகரமாகும். அந்த வகையில், அமலாக்கத் துறையின் அடுத்தகட்டப் பாய்ச்சல் தமிழகத்தில் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தும்'' என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.