ஜெயலலிதா மறைந்தபோது ஒடுக்கமான பள்ளிச் சிறுவனைப் போல சசிகலா தலைமையில் செயல் பட தயாரான அ.தி.மு.க.வில், ஓ.பி.எஸ். தலைமையில் பா.ஜ.க. ஏற்படுத்திய குழப்பம் இன்றுவரை ஆட்டிப் படைக்கிறது.

ஓ.பி.எஸ்.ஐ. ஜெ. பாணியில் சசிகலா தூக்கியெறிந்தார். அவர் பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கினார்.

எடப்பாடி தலைமையில் ஆட்சியமைத்த சசிகலாவால் இரட்டை இலையை மீட்க முடியவில்லை. சசிகலாவை தூக்கியெறிந்துவிட்டு, ஓ.பி.எஸ். டீமுடன் அ.தி.மு.க.வை பா.ஜ.க. இணைத்தது. இரட்டை இலை கிடைத்தது. சின்னம் பெற காரணமான இணைப்பில் இருந்த இ.பி.எஸ் -ஓ.பி.எஸ் -மதுசூதனன் இவர்களில் மதுசூதனன் மறைந்துவிட்டார். அந்த இடத்தில் சசிகலாவை அமர வைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

sasi

Advertisment

ஜெ. மறைந்தபோது பா.ஜ.க. சொன்னதைக் கேட்ட அ.தி.மு.க., இன்று அப்படியே கேட்கத் தயாராக இல்லை. சசிகலாவும், "என் உறவினர்களை நான் வியா பாரம் பார்க்கச் சொல்லிவிட்டேன். அவர்கள் இனி அரசியலில் தலையிட மாட்டார்கள்'' என தனது நிலையை விளக்கிச் சொல்லிவிட்டார். அதை நம்ப அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை. மறுபடியும் அ.தி.மு.க.வில் சசிகலா வந்துவிட்டால் அவரது உறவினர்களும் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்வார்கள் என ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் ஒன்றாகப் பேசி முடி வெடுத்துவிட்டார்கள். ஆனாலும் எடப்பாடிக்கு ஆசை விடவில்லை. ஜெ. பாணியில் அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத பொதுச்செயலாளராக வரவேண்டும் என்கிற ஆசை உள்ளது. ஓ.பி.எஸ். ஸை எப்படியாவது ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து இறக்கி விட்டு அவரை அவைத் தலைவர் ஆக்கவேண்டும் என எடப்பாடி திட்ட மிடுகிறார்.

அவைத்தலைவர் பதவி என்பது இன்றைய சூழலில் இரட்டை இலையைத் தீர்மானிக்கும் அளவிற்கு முக்கியமான பதவி என்றாலும் அவைத் தலைவரால் கட்சிப் பதவி, எம்.எல்.ஏ. பதவி ஆகியவற்றை தீர்மானிக்கும் விண்ணப் பங்களில் கையொப்பமிட முடியாது. அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என ஓ.பி.எஸ்.ஸிடம் நீண்டநாட்களாக பேசிவருகிறார் எடப்பாடி. அதை ஓ.பி.எஸ். ஏற்கவில்லை.

மதுசூதனன் இறந்த வீட்டில் இந்த பேச்சு தலைதூக்கியது. அதற்கு கோபமாக முறைத்தார் எடப்பாடி. இந்த பேச்சு முடி கின்ற நிலையில் கட்சியில் மற்ற தலைவர் களும் ஓ.பி.எஸ்.ஸை "அவைத்தலைவராகுங் கள். கட்சி ஒற்றைத் தலைமையின் கீழ் வரட்டும். காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரமே அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை யின் கீழ் வரவேண்டும்'' என பேசுகிறார் என்று ஓ.பி.எஸ்.ஸுக்கு வகுப்பு எடுத்தனர்.

Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, இ.பி.எஸ். -ஓ.பி.எஸ். இருவரிடமும் துக்கம் விசாரித்து சென்ற நிலையில்... "மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா, அ.தி.மு.க. கட்சிக் கொடி போட்ட காரில் வருகிறார்' என தகவல் வர... எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் அங்கிருந்து பறந்துவிட்டார்கள்.

sasi

ஓ.பி.எஸ். அவைத்தலைவராக விரும்பவில்லை என்றதும், வேறு யார் என்கிற விவாதம் அ.தி.மு.க.வில் கிளம்பியது. ஓ.பி.எஸ். சார்பில் முன்னாள் சபாநாயக ரான தனபால், அன்வர்ராஜா, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரின் பெயர்கள் முன் வைக்கப்பட்டன. அதில் பண்ருட்டியார் எடுத்த எடுப்பிலேயே, "என்னால் முடியாது'' என்று சொல்லிவிட்டார். தனபால், அன்வர்ராஜா ஆகியோரைப் பற்றி எடப்பாடி தரப்பு எதுவும் சொல்லவில்லை. எடப்பாடி தரப்பில் பொன்னையன் பெயரைச் சொன்னார்கள். மீண்டும் கட்சி, கவுண்டர் சமுதாயமயமாகிவிடும். ஏற் கனவே அ.தி.மு.க.வை சாதிக்கட்சியாக்கி விட்டார்கள் என சசிகலா தரப்பு விமர்சிக்கிறது, இந்தமுறை அவைத்தலைவர் என்றால் முக்குலத்தோர் வந்தால் நன்றாக இருக்கும் என வாதங்கள் எழுந்தது. முக்குலத்தோரை அவைத்தலைவராகப் போட்டால் அது முக்குலத்தோர் கட்சி ஆகாதா? வன்னியரைப் போடலாம் என்று விவாதம் எழுந்துள்ளது.

அவைத்தலைவர் பதவி முக்குலத்தோருக்கு என்றால் நான் ரெடி என்றார் நத்தம் விசுவநாதன். சசி கலாவை எதிர்த்து அவர் சமீபத்தில் விட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் விண்ணப்பம் வைத்தார். வன்னியர் என்றால் நான் ரெடி என சி.வி.சண்முகம் முன்வந்தார். யாராக இருந்தாலும் அவர் சசிகலாவுக்கு எதிரியாக நிற்கவேண்டும் என்பது எடப்பாடியின் கண்டிஷன். ஏற்கனவே அவைத்தலைவராக இருந்த மதுசூதனனிடம், சசிகலா தனக்கு ஆதரவாக பைல்களில் ரகசியமாக கையெழுத்து வாங்கியிருக்கிறார். புதிதாக வருபவரை சசிகலா பணம் கொடுத்து மடக்கிவிட்டால் கட்சி சசிகலாவின் கைக்குச் சென்றுவிடும் என்பது எடப்பாடியை வாட்டும் கவலை.

சசிகலா விரிவான தமிழக சுற்றுப்பயணத்திற்கு ஜெ.வின் வீடியோ கேசட்டுடன் தயாராகிவருகிறார். அவரை பா.ஜ.க. மறைமுகமாக ஆதரிக்கிறது. இந்நிலையில்... கட்சியை ஒரு உறுதியான தலைமையுடன் காப்பாற்றாவிட்டால் அ.தி.மு.க. சிதறுதேங்காய் ஆகிவிடும். பா.ஜ.க. அதை விழுங்கி, தமிழக அரசியலில் பா.ஜ.க.-தி.மு.க. என்கிற நிலையை உருவாக்கிவிடும். இந்த குழப்பங்களைப் பயன்படுத்தி சசிகலா இரட்டை இலையை முடக்கிவிடுவார் என ஏகப்பட்ட குழப்பம் அ.தி.மு.க. தலைவர்களின் சிந்தனையில் ஓடுகின்றன.

"உள்ளாட்சித் தேர்தல் சீட்டுக்காக பா.ஜ.க., அ.தி.மு.க. காலில் விழும் என எதிர்பார்க்கும் எடப்பாடி, அதை வைத்து காய் நகர்த்தலாம் என காத்திருக்கிறார்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.