Advertisment

சங் பரிவார் எடுக்கும் அடுத்த கொள்ளி -முனைவ ஜெ.ஹாஜாகனி பொதுச் செயலாளர் - த.மு.மு.க

nn

மைதியைச் சிதைத்து, அமளியை விதைத்து, தனக்கான அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்து அதிகாரங்களைத் தனதாக்கிக் கொள்ளுவது மத வெறி பாசிஸ்டுகளின் வரலாற்று வழிமுறையாகும்.

Advertisment

1949 டிசம்பர் 22 அன்று அயோத்தி பாபரி மஸ்ஜித்தில் இரவுத் தொழுகை (இஷா) வரை நானூறு ஆண்டுகளாய் நடந்துவந்தது. அன்று நள்ளிரவில் கள்ளத்தனமாக நுழைந்து சிலைகளை வைத்த சங் பரிவாரத்தின் சதித்திட்டம், நீதிமன்ற தீர்ப்புகளோடு பிற்காலத்தில் நிறைவேற்றப்பட்டதைப் பார்த்து உலகம் வியந்தது. அப்போது மதச்சார்பற்ற நீதிமிகு தேசம் என்ற இந்தியாவின் செம்மாந்தப் பெருமிதமோ, பாபரி மஸ்ஜித் இடிபாடுகளுக்கு அடியில் கிடந்தது.

s

1949 டிசம்பர் 22 முதல், 1992 டிசம்பர் 6 வரை நடந்த அரசியல் நகர்வுகளும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6, 1992-க்குப் பிறகு இப்போதுவரை மதவாத பாசிச சக்திகள் நடத்திவரும் அரசியல் நாடகங்களும், சட்டத்தை மதிப்போருக்கு அச்சத்தையும், சட்டத்தை ஏறி மிதிப்போருக்கு அதிகாரத்தின் உச்சத்தையும் வழங்கியுள்ளது. இதை சங்கிகள் ஒரு சமிக்ஞையாகவே எடுத்துக் கொண்டனர்.

Advertisment

அதன் ஓர் அடை யாளமாகவே ஏப்ரல் 8, 2021 அன்று, காசி

மைதியைச் சிதைத்து, அமளியை விதைத்து, தனக்கான அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்து அதிகாரங்களைத் தனதாக்கிக் கொள்ளுவது மத வெறி பாசிஸ்டுகளின் வரலாற்று வழிமுறையாகும்.

Advertisment

1949 டிசம்பர் 22 அன்று அயோத்தி பாபரி மஸ்ஜித்தில் இரவுத் தொழுகை (இஷா) வரை நானூறு ஆண்டுகளாய் நடந்துவந்தது. அன்று நள்ளிரவில் கள்ளத்தனமாக நுழைந்து சிலைகளை வைத்த சங் பரிவாரத்தின் சதித்திட்டம், நீதிமன்ற தீர்ப்புகளோடு பிற்காலத்தில் நிறைவேற்றப்பட்டதைப் பார்த்து உலகம் வியந்தது. அப்போது மதச்சார்பற்ற நீதிமிகு தேசம் என்ற இந்தியாவின் செம்மாந்தப் பெருமிதமோ, பாபரி மஸ்ஜித் இடிபாடுகளுக்கு அடியில் கிடந்தது.

s

1949 டிசம்பர் 22 முதல், 1992 டிசம்பர் 6 வரை நடந்த அரசியல் நகர்வுகளும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6, 1992-க்குப் பிறகு இப்போதுவரை மதவாத பாசிச சக்திகள் நடத்திவரும் அரசியல் நாடகங்களும், சட்டத்தை மதிப்போருக்கு அச்சத்தையும், சட்டத்தை ஏறி மிதிப்போருக்கு அதிகாரத்தின் உச்சத்தையும் வழங்கியுள்ளது. இதை சங்கிகள் ஒரு சமிக்ஞையாகவே எடுத்துக் கொண்டனர்.

Advertisment

அதன் ஓர் அடை யாளமாகவே ஏப்ரல் 8, 2021 அன்று, காசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாசலை இந்தியத் தொல்லியல் துறை ஆய்வுசெய்து, பள்ளிவாசல் கட்டப்படும் முன்பு அங்கே கோவில் இருந்ததா என்று அறிக்கை தரப் பணித்திருக்கும், உள்ளூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைகிறது.

பாபரி மஸ்ஜித்தைப் பட்டப்பகலில் சட்டவிரோத மாக இடித்துத் தள்ளிய சங் பரிவாரக் கும்பல், "காசி மதுரா பாக்கிஹை' என்று முழங்கியது. "பாபர் மஸ்ஜித்தை இடித்து விட்டோம், இனி காசி மதுரா பள்ளிவாசல்கள் மீதியுள்ளன' என்பதுதான் அந்தக் கொடிய கூச்சலின் பொருள்.

பாபரி மஸ்ஜித்தை படிப்படியாக அபகரித்த அதே பாணியில், கியான்வாபி பள்ளிவாசலையும் அபகரிக்கத் திட்டமிட்டுள்ளது அராஜகக் கும்பல். பாபரி மஸ்ஜிதைப் பறித்த பயங்கர வரலாற்றில், மூர்க்கர்களுக்கு முதன்மையான ஊக்குவித்தல், நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்பு களிலிருந்தே கிடைத்தது என்பதை இங்கே நினைவுகூர வேண்டும்.

* பாபரி மஸ்ஜித்தில் தொழுகையை நிறுத்தியது

* அதை இழுத்துப் பூட்டியது

* ராமர் சிலை வழிபாட்டுக்காக மட்டும் திறந்து விட்டது

* முஸ்லிம்களின் வேண்டு கோளை முற்றிலுமாக மறுத்தது

* 2010ல் மூன்றாகப் பங்கு வைத்துத் தீர்ப்பளித்தது

* பிறகு பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடமிருந்து முற்றிலுமாகப் பறித்துக்கொண்டு மாற்று இடம் என 5 ஏக்கர் வழங்கியது

-என நடந்த நிகழ்வுகளை உற்றுநோக்கினால், காவிகளின் கடப்பாரைகளுக்கும், சூலங்களுக்கும் சார்பாக சட்டம் எனும் இருட்டறை அமைந்திருப்பதை அறியலாம்.

பாபரி மஸ்ஜித் இடத்தில் ஏற்கனவே ராமர் கோவில் இருந்தது, பாபர் அதை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டினார் என்று சங் பரிவாரம் முன்வைத்த கூற்றுக்கு அணுவளவும் ஆதாரமில்லை. அது அடிப்படை ஆதாரமற்ற அவதூறு என்பதை உச்சநீதிமன்றம்கூட தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறது. ஆனாலும் பாபரி பள்ளிவாசலின் உரிமை முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை.

1991-ஆம் ஆண்டு, காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி யை முகலாய மன்னர் ஔரங்கசீப் இடித்துவிட்டு அவ்விடத்தில் கியான்வாபி பள்ளிவாசலைக் கட்டினார், எனவே பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

இதைப் பள்ளிவாசல் நிர்வாகம் மறுத்து மனுத்தாக்கல் செய்தது. 2050 ஆண்டுகளுக்கு முன் விக்ரமாதித்ய மன்னன் கட்டிய ஆலயம் அங்கு இருந்ததற்கோ, 1664-ல் ஔரங்கசீப் அதனை இடித்துப் பள்ளிவாசல் கட்டி யதற்கோ எந்த ஆதாரத்தையும் சங்கிகள் தரப்பால் தர முடியவில்லை.

ns

1991-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம், 1947 ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை பெற்றபோது எந்தெந்த வழி பாட்டுத்தலங்கள் என்ன நிலை யில் யார் வசம் இருந்தனவோ அதேநிலையில் அவர் வசமே தொடர வேண்டும் என்கிறது. (பாபரி மஸ்ஜிதுக்கு மட்டும் இச்சட்டம் ஏனோ விலக்களித்தது.)

ஏப்ரல் 8, 2021 வாரணாசியின் உள்ளூர் நீதிமன்றம், கியான்வாபி பள்ளிவாசலுக்கு அடியில் கோயில் இருந்ததா? எனத் தொல்லியல் துறை ஆய்வு செய்யவும், அதற்காக 5 பேர் கொண்ட குழுவை நியமிக்கவும், அதற்கான செலவை உ.பி. அரசே ஏற்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

ஏப்ரல் 10, 2021 நாளிட்ட தி ஹிண்டு ஆங்கில ஏடு இது குறித்து ஆ க்ண்ள்ற்ன்ழ்க்ஷண்ய்ஞ் ஞழ்க்ங்ழ் என்ற தலைப்பில் கவலை தோய்ந்த கண்டனத் தலையங்கம் தீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாபரி மஸ்ஜித் இடிப்பை துக்ளக் உட்பட பெரும்பாலான ஏடுகள் கண்டித்தன. ஆனால், பாதிக்கப்பட்ட தரப்புக்குப் பரிகாரம் கிடைக்கவில்லை.

மோடியின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொல்லியல் துறை, யோகி ஆதித்யநாத்தின் உ.பி. மாநில அரசின் ஆளுகையின் கீழ் நடத்தும் தொல்லியல் ஆய்வு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மக்கள் நலனில் அக்கறையுள்ள மதவாத அரசியலுக்கு இதுநாள்வரை பாபரி மஸ்ஜித் ஓர் எரிபொருளாக இருந்து வந்தது. அது தீர்ந்துவிட்டதும் காசியின் கியான்வாபி பள்ளிவாசல் புதிய எரிபொருளாகியுள்ளது.

காசி, அடுத்து மதுரா, அதைத் தொடர்ந்து தாஜ் மஹால் என வெறுப்பு அரசியலின் இடிப்புப் பட்டியல் எல்லையில்லாமல் நீண்டுகொண்டே போகிறது.

நீதிமன்ற உத்தரவுகள் பலவும் இதற்கு சாதகமாக அமைவதால், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் எதிர்காலம் குறித்தும், வருங்காலத் தலைமுறையின் அமைதியான வாழ்வு குறித்தும் பெருங்கவலையை விதைக்கின்றன. பல ஆண்டுகளுக்குமுன் சென்னை தியாகராய நகரில் தோன்றிய திடீர்ப் பிள்ளையாரை அன்றைய கலைஞர் அரசு அணுகியவிதம் இன்றைய அமைதித் தமிழகத்திற்கு அடிகோலியிருக்கிறது என்றால் மிகையில்லை.

கலைஞரைப் போல, உ.பி. முதல்வர் கோவிந்த் வல்லப பந்துவும் நடவடிக்கை எடுத்திருந்தால், பாபர் மஸ்ஜித் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

திராவிடக் கருத்தியலின் அவசியத்தை வட மாநிலங்களை வளைத்துக் குலைக்கும் மதவாதமும், தமிழகத்தைத் தலைநிமிர வைக்கும் மனிதநேயமும் பறைசாற்றுகின்றன.

nkn170421
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe