முதுமலை வனப்பகுதியில் இயற்கை ஆர்வலர்களால் முதன்முறையாக வண்ணத்துப்பூச்சி வகைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. புலிகளையோ, சிங்கங்களையோ கணக்கெடுப்பதுபோல, பட்டாம்பூச்சியின் மொத்த எண்ணிக்கை இந்தக் கணக்கெடுப்பில் தெரியாது. அவற்றின் வகைப்பாடுகளை மட்டுமே இதில் கணக்கிடமுடியும். இதுகுறித்துத் தெரிவித்த முதுமலை வனப்பகுதியின் இணை இயக்குநரான சி வித்யா, “"688.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நடந்த இந்தக் கணக்கெடுப்பில், மூன்று நாட்கள் பட்டாம்பூச்சிகள் தேடித் தேடி வகைப்படுத்தப்பட்டது.

Advertisment

ff

ரெட் ஹெலன், யெல்லோஜாக் செயிலர், சாக்லேட் ஆல்பட்ராஸ் உள்ளிட்ட 175 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. பதினாறு குழுக்களாக 41 இயற்கை ஆர்வலர்கள், வனத்துறையைச் சேர்ந்த 100 பேர் பங்கேற்றனர். “இந்தக் கணக்கெடுப்பால், இப்பகுதியிலுள்ள பட்டாம்பூச்சிகளை எப்படி பாதுகாப்பது, எத்தனை வகைகள் காணப்படுகிறது போன்றவற்றைத் திட்டமிட முடியும். எதிர்காலத்தில் பட்டாம்பூச்சி சுற்றுச்சூழல் சுற்றுலா போன்றவற்றை திட்டமிடவும் பயன்படும்''’என்றார்.ஓ! பட்டர்ப்ளை! பட்டர்ப்ளை!

ந்தியாவுக்கான பொதுத் தணிக்கையாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர் (சி.ஏ.ஜி.), அஸ்ஸாம் மாநி லத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட் டின் திருத்தங்களில் பெரிய அளவிலான முரண்பாடுகள் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாநில சட்டசபையில் 2020-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்த சி.ஏ.ஜி., இந்த ஆவணத்தை அப்டேட் செய்வதற்கான மைய மென்பொருளுடன், 215 மென்பொருள் பயன்பாடுகள் கையாளப்பட்டுள்ளன. இந்த அப்டேட்டுக்காக நம்பக மான வணிகர்களிடம் கொள் முதல் செய்த பாதுகாப்பான மென்பொருள் பயன்படுத்தப் படவில்லை. முறையற்ற மென்பொருளால், தரவு திருடவும் திருத்தவும்கூட வாய்ப்பிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முதலில் மதிப்பிடப்பட்ட தொகை ரூ. 288.18 கோடி. தற்போது இதற்கு ஆகியிருக்கும் தொகை ரூ.1602.66 கோடி. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அதிகாரியான ஹிதேஷ் தேவ் சர்மா, இதற்கு முந்தைய ஒருங்கிணைப்பாளரான பிரதீக் ஹஜேலாவால் இத்திட்டத்தில் ஊழலும், பணமோசடியும் நடைபெற்றுள்ளன என புகாரளித்துள்ளார். இருந்தும் இதுவரை அவர்மேல் குற்றச்சாட்டுகள் பதிவே செய்யப்படவில்லை. குடியுரிமை இருக்கும்போது ஊழலுக்கு உரிமை இருக்கப்படாதா?

Advertisment

மிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமென மத்திய அரசு அறிவித்து 7 வருடங்கள் ஓடிவிட்டது. இதுவரை அறிவிப்புகள் அடுக்கடுக்காய் எழுந்துவருகிறதே தவிர, அதற்கான அடித்தள வேலைகள்கூட தொடங்கவில்லை. அடுத்தடுத்து எய்ம்ஸ் விவாதப் பொருளானதால் எய்ம்ஸுக்கு தோப்பூரில் இடம் தேர்வுசெய்யப் பட்டது. 2019-ல் மோடி அடிக்கல் நாட்டினார். சட்டமன்றத் தேர்தலின் போது ஒற்றைச் செங்கலை எய்ம்ஸ் என அறிவித்து, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது பரபரப்பைக் கிளப்பியது. இத்தனை விமர்சனங் களுக்கும் அமைதியாக இருந்த மத்திய அரசு தற்போது, வரும் மத்திய பட்ஜெட்டில் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1900 கோடி ஒதுக்கவிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் மூலம் அறிவித்துள்ளது. இதுவும் வெறும் அறிவிப்பா,… நிஜமா? என மத்திய பட்ஜெட் அறிக்கை வெளியாகும்போதுதான் நிச்சயமாகும். எய்ம்ஸ் லட்சியம், கட்டி முடிக்கும்போதே நிச்சயம்!

ff

ழைப் புயலுக்கே நமக்கு நடுக்கமெடுக்கும். அமெரிக்காவிலோ, வரலாறு காணாத பனிப்புயல் வீசிவருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்றழைக்கப்படும் இந்தப் பனிப்புயல், நியூயார்க் மாகாணத்தையும், குறிப்பாக பப்பலோ நகரையும் சூறையாடியுள்ளது. இதையடுத்து நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் 11 மாகாணங்களும் பனியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையிலான உயிர்ப்பலி 56 ஆக பதிவாகியுள்ளது. காரில் சிக்கியவர்கள், காரோடு பனியில் உறைந்து உயிரிழந்த அவலமும் நிகழ்ந்துள்ளது. 5,500 விமானங்கள் ரத்து. உறைந்த பனியை மீட்கக்கூட முடியாத நிலைமை, மின்தடை, போக்குவரத்து பாதிப்பு என பனிப்புயலிடம் அமெரிக்கா சரணடையும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடரும்போது பலி எண்ணிக்கை அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது. கேட்கும்போதே வெடவெடக்குதே!

-நாடோடி