மிழக அரசின் அருங்காட்சியகத்துறையும் காந்தி உலக மையமும் இணைந்து தமிழகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் காந்தியின் 153-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சி எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடந்தது. இதனையொட்டி தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் 153 பேர் தலையை மொட்டையடித்து கண்ணாடி அணிந்து, அரையாடையுடன் காந்தி வேஷத்தில் அருங்காட்சியக வளாகத்தில் பேரணியாகச் சென்றனர்.

Advertisment

ff

இது அவ்வழியாகச் சென்ற வர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. மேலும் கண்காட்சிக் கூடத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள், அவரது தந்தி, அரிய புகைப்படங்கள், காந்தி நினைவாக இந்திய அரசு வெளியிட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வாழ்க நீ எம்மான்!

ff

Advertisment

பெண்குழந்தைகளின் மதிப்பை உயர்த்தும் நோக்கில் பயிற்சிப் பட்டறை ஒன்றை பீகார் மாநில அரசு நடத்தியது. அதில் பெண்கள் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநரும் ஐ.ஏ.எஸ்.ஸுமான ஹர்ஜோத் கௌர் கலந்துகொண்டார். விழாவில் கலந்துரையாடலின் போது அவரிடம் பள்ளி மாணவி ஒருவர், "அரசாங்கம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி பேடு கொடுக்குமா?''’எனக் கேட்க, எரிச்சலான ஹர்ஜோத், "இதுக்கு ஒரு முடிவே யில்லையா… சானிட்டரி பேடு கொடுக்கலாம். நாளை ஜூன்ஸ் பேண்ட் கேட்பீர்கள், நல்ல செருப்பு கேட்பீர்கள், கடைசியில் குடும்பக் கட்டுப்பாடு என வரும்போது ஆணுறையும் கொடுக்கவேண்டுமா?''” எனக் கேட்டுவிட் டார். இந்த விஷயம் வைரலாகி, நாடெங்கும் ஹர்ஜோத் கௌருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இந்தியாவில் மாதாந் திரச் சுழற்சியின்போது, சானிட்டரி பேடு பயன்படுத்தாத கோடிக்கணக்கான பெண்கள் இருக்கின்றனர். எத்தனையோ சேவை அமைப்புகள் பெண்களுக்கு இதனை இலவசமாக வழங்கிவருகின்றனர். இதனையடுத்து, ஹர்ஜோத் கௌர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், மூன்று பக்க கடிதத்தில் விளக்கமும் அளித்துள்ளார். வாயால கெடுறதுங்கிறது இதுதானா!

dd

ர்நாடகப் பள்ளிகளில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடைவிதித்தது குறித்தான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக 23 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் முஸ்லிம் களைத் தவிர்த்து, ஹிஜாப்புக்கு ஆதரவாக மனுத் தாக்கல் செய்துள்ள ஒரே நபர் இந்த சீக்கியப் பெண்ணான சரண்ஜீத் கௌர் தான். இவர், தனது வக்கீல்களான முஜீப் ரஹ்மான், அப்தாப் அலி ரஹ்மான் மூலம், "நான் என் தலையை மறைத்துக்கொள்ளலாமென்றால், இஸ்லாமியப் பெண்கள் ஏன் மறைக்கக்கூடாது'’ என உச்சநீதிமன்றத்தில் வாதிடத் திட்டமிட்டுள்ளார். “இன்று அவர்கள் ஹிஜாப் அணியும் பெண்களைத் தாக்கினார்கள் என்றால், நாளை டர்பன் அணியும் பெண்களைத் தடுக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்” என்கிறார். சிங் இஸ் கிங்னு சொல்றது இதனாலதான்!

ராகுல்காந்தி ஒரு பக்கம், ஒற்றுமை யாத்திரை போகிறார். இன்னொரு பக்கம் பிரசாந்த் கிஷோர் காந்தி ஜெயந்தியன்று பீகாரின் சம்பாரண் மாவட்டத்திலுள்ள பித்திவாரா காந்தி ஆசிரமத்திலிருந்து நடைபயணத்தைத் தொடங்கியிருக்கிறார். பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி களுக்கான தேர்தல் வியூக வகுப்பாளராகப் பெயர்பெற்றவர். பல்வேறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு வியூகம் வகுத் தளித்த இவர், அரசியல் கட்சி தொடங்குவாரென்ற எதிர்ப்பு சமீபகாலமாகவே நிலவிவந்தது. அதன் தொடக்கமாகவே இந்த நடைபயணம் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 3500 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள் ளும் இவர், அதற்கு 12--ருந்து 18 மாதங்களை ஒதுக்கியுள்ளார். மற்றவர்களுக்கு தெளிவாக வியூகம் வகுத்தளித்த பிரசாந்தால், தன் சொந்தத் தேவைக்கு தெளிவாக வியூகம் வகுத்துவிடமுடியுமா என அனைவரது பார்வையும் அவர்மேல் குவிந்துள்ளது. நடக்கட்டும் நடக்கட்டும்!

திருச்சி மாவட்டம் கொட்டப் பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த நளினி, தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். நளினி சார்பாக அட்வகேட் ரோமியோ வாதாடினார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை கடந்த 12-08-2022 அன்று அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது (ரட(ஙஉ) 3512/2022). அதன் தொடர்ச்சியாக தற்போது பாஸ்போர்ட் அதிகாரிகள் அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கியுள்ளார்கள். மறுவாழ்வு முகாமில் பிறந்த இலங்கைத் தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல் முறை. எனவே நளினிக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு "இந்திய அரசியலமைப்பு- ஓர் அறிமுகம்' எனும் புத்தகத்தை நக்கீரன் பொறுப் பாசிரியர் கோவி.லெனின் பரிசளித்தார். முன்னோடித் தீர்ப்பாக விளங்கட்டும்!

-நாடோடி