வந்த செய்தி: கிறிஸ்தவர்களின் விழா. நெல்லை பிஷப்பை சங்கடப்படுத்திய அ.தி.மு.க. எம்.பி.
விசாரித்த உண்மை: ஆண்டுதோறும் குற்றாலத்தில் கிறிஸ்தவ மக்களின் ஸ்தோத்திர பண்டிகை விழா, நெல்லை பிஷப் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, நெல்லை திருமண்டலத்தில் வலுவாக இருக்கும் "லே'’அமைப்பில் தனது பலத்தை நிரூபிக்கும் காரியங்களில் இறங்கினார் ராஜ்யசபா அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த். குற்றாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் அழைப்பிதழில் அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி. பிரபாகரன், எம்.எல்.ஏ. இன்பதுரை பெயர்கள் இருந்ததைப் பார்த்து அனுமதி வழங்கிவிட்டது போலீஸ். சபை மக்கள் அழைப்பின் பேரில் செப். 28-ஆம் தேதி விழா நடைபெறும் நாளில் குற்றாலத்திற்குப் போயிருக்கிறார் நெல்லை பிஷப் கிறிஸ்துதாஸ். பிஷப் தங்கியிருந்த இடத்துக்குப் போன போலீஸ், "நீங்க இங்கே இருந்தா தேவையில்லாத பிரச்சினைகள் வரும்' எனச் சொல்லி நெல்லைக்கே அனுப்பிவிட்டதாம். நடந்த விவரங்களையெல்லாம் தென்னிந்திய திருச்சபைகளின் மாடரேட்டருக்குத் தெரியப் படுத்தியிருக்கிற
வந்த செய்தி: கிறிஸ்தவர்களின் விழா. நெல்லை பிஷப்பை சங்கடப்படுத்திய அ.தி.மு.க. எம்.பி.
விசாரித்த உண்மை: ஆண்டுதோறும் குற்றாலத்தில் கிறிஸ்தவ மக்களின் ஸ்தோத்திர பண்டிகை விழா, நெல்லை பிஷப் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, நெல்லை திருமண்டலத்தில் வலுவாக இருக்கும் "லே'’அமைப்பில் தனது பலத்தை நிரூபிக்கும் காரியங்களில் இறங்கினார் ராஜ்யசபா அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த். குற்றாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் அழைப்பிதழில் அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி. பிரபாகரன், எம்.எல்.ஏ. இன்பதுரை பெயர்கள் இருந்ததைப் பார்த்து அனுமதி வழங்கிவிட்டது போலீஸ். சபை மக்கள் அழைப்பின் பேரில் செப். 28-ஆம் தேதி விழா நடைபெறும் நாளில் குற்றாலத்திற்குப் போயிருக்கிறார் நெல்லை பிஷப் கிறிஸ்துதாஸ். பிஷப் தங்கியிருந்த இடத்துக்குப் போன போலீஸ், "நீங்க இங்கே இருந்தா தேவையில்லாத பிரச்சினைகள் வரும்' எனச் சொல்லி நெல்லைக்கே அனுப்பிவிட்டதாம். நடந்த விவரங்களையெல்லாம் தென்னிந்திய திருச்சபைகளின் மாடரேட்டருக்குத் தெரியப் படுத்தியிருக்கிறார் பிஷப்.
-பரமசிவன்
வந்த செய்தி: அ.தி.மு.க. மீது அதீத பாசம் காட்டும் தி.மு.க. மா.செ. அதிருப்தியில் உ.பி.க்கள்.
விசாரித்த உண்மை: ஈரோடு தெற்கு மா.செ. சு.முத்துசாமியும் முதல்வர் எடப்பாடியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள். தி.மு.க. மா.செ.வாக இருந்தாலும் அ.தி.மு.க.வினரோடு சகஜமாக பழகக்கூடியவர் முத்துசாமி. அதனால் ஈரோடு மக்களின் பிரச்சனைகளுக்கான எந்தப் போராட்டத்திலும் இதுவரை முத்துசாமி ஆர்வம் காட்டியதில்லை. இது உ.பி.க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த... மா.து.செ. செந்தில்குமார், அவைத் தலைவர் குமார் முருகேஷ் ஆகியோர் அறிவாலயத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். முத்துசாமியை நேரில் அழைத்த ஸ்டாலின், "கட்சிக்காரர்கள் அதிருப்திப்படாம நடந்துக்கங்க'’எனக் கூறி அனுப்பியுள்ளாராம்.
-அறிவு
வந்த செய்தி: மு.க.அழகிரியுடன் நட்பு பாராட்டும் காங்கிரஸ் மாஜி எம்.பி.
விசாரித்த உண்மை: சென்னையை ஒட்டியுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரசின் முன்னாள் எம்.பி.யான அவர், சமீபத்தில் மதுரை சென்று மு.க.அழகிரியைச் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரின் அனுமதி பெற்றுத் தான் அழகிரியைச் சந்தித்ததாக தகவலையும் கசியவிட்டிருக்கிறார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி டெல்லி நிலைப்பாட்டை ப.சி. பேசியுள்ள நேரத்தில் திருநாவுக்கரசரின் பெயரைச் சொல்லி அந்த மாஜி எம்.பி.க்கு ஏன் இந்த வேலை’’ என்கிறார்கள் கதர்ச்சட்டையினர்.
-இளையர்
வந்த செய்தி: கூட்டுறவு வங்கித் தலைவர் பதவி. மா.செ.வை ஓவர்டேக் பண்ணிய அமைச்சர்.
விசாரித்த உண்மை: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பதவி. இப்பதவியில் முசிறி -மேட்டுப்பாளையம் பேரூராட்சியின் தலைவராக இருமுறை பதவி வகித்த, அமைச்சர் வளர்மதி தனது முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த யோகநாதனை உட்கார வைக்கும் முடிவுக்கு வந்தார். யோகநாதனை அழைத்துக் கொண்டு சென்னையில் முதல்வர் அலுவலகத்தில் எடப்பாடியைச் சந்தித்து விபரத்தைக் கூறியதும் சரி, பார்க்கலாம் என்றிருக்கிறார் எடப்பாடி. அலுவலகத்தைவிட்டு அமைச்சரும் யோகநாதனும் வெளியே வந்த போது, எதிரே வந்திருக்கிறார் திருச்சி புறநகர் அ.தி.மு.க.மா.செ.வான ரத்னவேலு. அமைச்சர் வளர்மதி ஏதோ சொல்ல முயற்சித்த போது, "யோகநாதனை சேர்மனாக்குவதற்கு மா.செ.வான என்கிட்டக்கூட சொல்லாம சி.எம்.மைப் பார்த்தா என்ன அர்த்தம்'’என சிடுசிடுத்தவாறே போய்விட்டார் ரத்னவேலு.
-ஜெ.டி.ஆர்.
வந்த செய்தி; 1. ""எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண வேண்டாம்''’’ சமந்தா கடுப்பு. 2. யூனியனுக்கு பட்டை நாமம் போட்ட தயாரிப்பாளர்.
விசாரித்த உண்மை: நாகசைதன்யாவுடன் திருமணம் ஆன பிறகு கொஞ்சம் ரிலாக்ஸுக்காக ஜோடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஜாலி டூர் போயுள்ளார் சமந்தா. போன இடத்தில் எடுத்த கவர்ச்சி ஸ்டில்களை தனது ட்விட்டரில் போட்டதும் ஏகப்பட்ட லைக்குகளும் நாகார்ஜுனா குடும்ப அபிமானிகளிடமிருந்து வசவுகளும் சகட்டுமேனிக்கு வந்தன. கடுப்பான சமந்தா, “எனக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்’’ என சீறிவிட்டார். 2. விதார்த்-சாந்தினி தமிழரசன் ஜோடியில் இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘"வண்டி'’. படத்தில் வேலை செய்த வகையில் ஆர்ட் டைரக்டர் யூனியன், காஸ்ட்யூமர் யூனியன், ஆர்ட் அசிஸ்டெண்ட் யூனியன் ஆகிய 3 யூனியன்களுக்கு 10 லட்ச ரூபாய் சம்பளப் பாக்கி வைத்துவிட்டார் தயாரிப்பாளர் முகமது நசீர். யூனியனிலிருந்து பலமுறை கேட்டும் பலனில்லாததால் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பஞ்சாயத்து போயுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவரா இருந்த பி.எல்.தேனப்பனின் ஐடியாப்படிதான் சம்பளத்துக்கு டிமிக்கி கொடுக்கிறார் நசீர்’’ என்கிற குரல் மூன்று யூனியனிலிருந்தும் கேட்கிறது.
-பரமேஷ்
வந்த செய்தி: "அட நாராயணா' என்கிறார்கள் தி.மு.க. புள்ளிகள்.
விசாரித்த உண்மை: மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.அலுவலக பொறுப்பாளராக இருந்தவர் நாராயணன். அன்பில் மகேஷ் திருவெறும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.ஆனவுடன் அவரது பி.ஏ.வாக திருச்சிக்கு அனுப்பப்பட்டார். பழைய பால்பண்ணை பகுதி அபார்ட்மெண்ட்டில் வீடெடுத்து தங்கியிருந்த நாராயணன் கடந்த ஒரு வாரமாக ஆக்டிவ்வாக இல்லை. ஸ்டாலின் மருமகன் சபரீசன் முன்புபோல கட்சி நிர்வாகத்தில் தீவிரம் காட்டாததால் அவரால் பணிக்கு வந்த நாராயணனும் ஒதுங்கிவிட்டார் என்றும், வேலைக்கு அனுப்பப்பட்ட இடத்தில் அனுமதியின்றி சொந்தமாக சில வேலைகள் செய்தார் என்றும், இதில் தனிப்பட்ட காரணங்களும் உண்டு என்றும் வெளியாவதால் "அட நாராயணா' என்கிறார்கள் உ.பிக்கள்.
-ஜெ.டி.ஆர்.