வந்த செய்தி: 1. டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற பெண் அதிகாரி கொடுத்த அமர்க்கள விருந்து. 2. வைகுண்டராஜனின் டி.வி.சேனலுக்கு மத்திய அரசு நெருக்கடி.
விசாரித்த உண்மை: 1. எஸ்.பி.யாக இருந்த ராதிகா, இருவாரங்களுக்கு முன்பு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். போஸ்டிங் புரமோஷனை செமஹேப்பியாக கொண்டாட முடிவெடுத்த ராதிகா, தனது துறை சார்ந்த அதிகாரிகள், நண்பர்கள் பலருக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் சூப்பர் விருந்து கொடுத்திருக்கிறார். கிக் அயிட்டங்களுடன், அமர்க்களமாக நடந்து முடிந்ததாம் விருந்து.
2. சமீபத்தில் வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனைத் தொடர்புகொண்ட மத்திய அமைச்சர் ஒருவர், “"உங்களது நியூஸ் சேனலில் பி.ஜே.பி.க்கு எதிரான செய்திகள் அதிகம் வருகின்றன. உங்களது கார்னெட் தொழிலுக்கு பல வழிகளிலும் நாங்கள் உதவி செய்கிறோம். அதனால் உங்களுக்கு எதற்கு சேனல் தொழில்'’என அன்பாக கேட்டாராம். வெகுண்ட வைகுண்டராஜனின் சகோதரர்களோ, ""மணல் பிஸினசுக்குத்தான் அவங்களுக்கு "சி... சி'யாக கொட்டுகிறோமே... என்ன ஆனாலும் சரி, சேனலை தொடர்ந்து நடத்துவ
வந்த செய்தி: 1. டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற பெண் அதிகாரி கொடுத்த அமர்க்கள விருந்து. 2. வைகுண்டராஜனின் டி.வி.சேனலுக்கு மத்திய அரசு நெருக்கடி.
விசாரித்த உண்மை: 1. எஸ்.பி.யாக இருந்த ராதிகா, இருவாரங்களுக்கு முன்பு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். போஸ்டிங் புரமோஷனை செமஹேப்பியாக கொண்டாட முடிவெடுத்த ராதிகா, தனது துறை சார்ந்த அதிகாரிகள், நண்பர்கள் பலருக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் சூப்பர் விருந்து கொடுத்திருக்கிறார். கிக் அயிட்டங்களுடன், அமர்க்களமாக நடந்து முடிந்ததாம் விருந்து.
2. சமீபத்தில் வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனைத் தொடர்புகொண்ட மத்திய அமைச்சர் ஒருவர், “"உங்களது நியூஸ் சேனலில் பி.ஜே.பி.க்கு எதிரான செய்திகள் அதிகம் வருகின்றன. உங்களது கார்னெட் தொழிலுக்கு பல வழிகளிலும் நாங்கள் உதவி செய்கிறோம். அதனால் உங்களுக்கு எதற்கு சேனல் தொழில்'’என அன்பாக கேட்டாராம். வெகுண்ட வைகுண்டராஜனின் சகோதரர்களோ, ""மணல் பிஸினசுக்குத்தான் அவங்களுக்கு "சி... சி'யாக கொட்டுகிறோமே... என்ன ஆனாலும் சரி, சேனலை தொடர்ந்து நடத்துவோம்''’என்றிருக்கிறார்கள்.
-ஆகாஷ்
வந்த செய்தி: எடப்பாடி உறவினருக்கு தமிழ் வளர்ச்சித்துறை விருது. கொந்தளிக்கும் தமிழ் அறிஞர்கள்.
விசாரித்த உண்மை: பாவேந்தர் பாரதிதாசனின் 127-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், கடந்த 29-ஆம் தேதி "தமிழ்க் கவிஞர் நாள்'’விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல்களைத் தேர்ந்தெடுத்து, தமிழறிஞர்களுக்கு விருதும் வழங்கிவந்த தமிழ் வளர்ச்சித்துறை, கடந்த மூன்று ஆண்டுகளாக விருது வழங்கவில்லை. ஆனால் இப்போது நடந்த விழாவில் 2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ‘"தடம் பதித்த தலைவர்கள்' என்ற நூலை எழுதிய செய்தித்துறை கூடுதல் இயக்குனர் எழிலகனுக்கு பரிசு அறிவிக்கப்பட்டு, எழிலகன் சார்பில் அவரது மனைவி கோமதியிடம் பரிசை வழங்கினார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். “"பரிசுபெறத் தகுதியுள்ள 800 நூல்கள் இருந்தும், முதல்வர் எடப்பாடியின் நெருங்கிய உறவினர் என்பதாலேயே எழிலகனுக்கு வழங்கியிருக்கிறார்கள்'’எனக் கொந்தளிக்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
-இளையர்
வந்த செய்தி: குட்கா வழக்கு பதியாமல் டிமிக்கி கொடுத்த ரயில்வே போலீஸ். டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அதிரடி ஆக்ஷன்.
விசாரித்த உண்மை: அறப்போர் இயக்கம் கொடுத்த தகவலின் பேரில், கடந்த பிப். 04-ஆம் தேதி, டெல்லி நிஜாமுதீன்-கன்னியாகுமரி திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது 200 பெட்டிகளில் கடத்திவரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து மதுரையில் இப்போது ரயில்வே போலீசாக இருக்கும் மன்னர்மன்னனிடம் ஒப்படைத்தனர். இந்த மன்னர்மன்னன் இதற்கு முன்பு, குட்கா குடோன்கள் இருக்கும் சென்னை -செங்குன்றத்தில் துணை ஆணையராக இருந்ததால், தொழில் சூட்சுமம் தெரிந்த மன்னாதிமன்னன் என்பதால், மதுரையில் குட்காவை கைப்பற்றியதோடு சரி, வழக்கு எதுவும் பதியவில்லை. அதே திருவள்ளுவர் எக்ஸ்பிரசில், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்திய சோதனையில் 15 பெட்டி குட்காவைக் கைப்பற்றியது ரயில்வே போலீஸ். "இப்போதாவது வழக்குப் பதிவு செய்யப்படுமா?' என ரயில்வே ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் மீடியாக்கள் கேட்டதும், விசாரணை அதிகாரியான ராஜேஷ்குமாருக்கு ஆன் தி ஸ்பாட்டில் ஆர்டர் போட்டதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-அரவிந்த்
வந்த செய்தி: வரலட்சுமி-விஷால் லவ் பிரேக்-அப் டிராமா?
விசாரித்த உண்மை: நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராவதற்கு முன்புவரை வரலட்சுமிய ரொம்ப டீப்பாகத்தான் லவ் பண்ணினார் விஷால். "நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டிய பிறகுதான் கல்யாணம்' என சபதமெடுத்தார். "சங்கமே அபராதத்துல ஓடிக்கிட்டிருக்கும்போது, எங்கிட்டு சொந்தக் கட்டிடம் கட்டுவாரு?'’என நக்கல் பண்ணியது விஷாலின் எதிர் கோஷ்டி. இந்த நிலையில்தான் விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் இடையிலான லவ் புட்டுக்கிச்சு. "ஆந்திர ஹீரோயின் ஒருவரின் காதல் வலையில் விஷால் விழுந்துட்டாரு'’என நியூஸ் கிளம்பியது. ஆனால் அதெல்லாமே பொய்யாம். விஷாலுடனான லவ்வை மெயின்டெய்ன் பண்ணியே வந்திருக்கிறார் வரலட்சுமி. இப்போது "சினிமா ஸ்டிரைக் விவகாரத்தில் சாதுர்யமாக நடந்து, ஸ்டிரக்கை வாபஸ் வாங்கியதோடு, தியேட்டர் ஓனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்குமிடையே ஜென்டில்மேன் அக்ரிமென்ட்டை உருவாக்கியது, நடிகர் சங்க கட்டிடப் பணியை துரிதப்படுத்தியது' என விஷாலின் ஆக்டிவிட்டீசைப் பார்த்து, லவ் கனெக்ஷனை ஸ்ட்ராங்க் பண்ணிவிட்டார் வரலட்சுமி. "சமீபத்தில் நடந்த சினிமா ஃபங்ஷன் ஒன்றில் விஷாலும் வருவும் செமநெருக்கமாக அமர்ந்து பேசியதுதான் இதற்குச் சாட்சி'’என்கிறது கோடம்பாக்கம் பட்சி.
-பரமு
வந்த செய்தி: "ஆர்டர்லி முறைதான் வேண்டும்'’போலீசிடம் பெருகும் ஆதரவுக்குரல்.
விசாரித்த உண்மை: "உயர்போலீஸ் அதிகாரிகளின் இல்லங்களில் பணிபுரியும் ஆர்டர்லிகளின் எண்ணிக்கை விவரம் வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் கேட்டுள்ளது. ஆர்டர்லிகள் படும் அவஸ்தையை நக்கீரனிலும் எழுதியிருந்தோம். இந்த நிலையில் கீழ்நிலைக் காவலர்களில் 80% பேர் ஆர்டர்லியாக பணிபுரிவதையே விரும்புவதாக கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது. சட்டம்-ஒழுங்கு டூட்டி என்றால் 24 மணி நேர வேலை, இயற்கை உபாதை அவஸ்தை, மன உளைச்சல் எல்லாமே சேர்ந்து வேதனைப்படுத்தும். ஆர்டர்லி என்றால், 8 மணி நேர டூட்டி, ஒருநாள்விட்டு ஒரு நாள் லீவு. இதெல்லாம் மனசுக்கு நிம்மதியா இருக்கு’’ என்கிறார்கள் ஆர்டர்லி டூட்டி ஆதரவாளர்கள்.
-பரமசிவன்