வந்த செய்தி: பாழடைந்த அறையில் டயாலிசிஸ் இயந் திரம். நெல்லை கலெக்டரின் அலட்சியம்.

விசாரித்த உண்மை: நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் புதிதாக டயாலிசிஸ் இயந்திரம் ஒன்றை அமைத்து, அமைச்சர்கள் மூலம் அதை திறந்து வைக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறது மாவட்ட நிர்வாகம். முற்றிலும் குளிரூட்டப்பட்ட, பாதுகாப் பான அறையில்தான் அந்த இயந்திரத்தை வைத்து செயல் படுத்த வேண்டும். ஆனால் திறப்பு விழாவுக்கான அவசர கதியில் பாழடைந்த இருட்டு அறையை ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த அறையில் சிகிச்சை பெறும் சிறுநீரக நோயாளிகளுக்கு கண் டிப்பாக ஆபத்தை விளைவிக்கும் என்கிறார்கள் மருத்துவமனை டாக்டர்கள். ஆனால் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷோ, "இந்த ஏற்பாடு தற் காலிகமானதுதான். சென்னை யிலிருந்து டாக்டர்கள் டீம் வந்து பார்வையிட்ட பிறகு வேறு அறைக்கு மாற்றுவோம்' என்கிறார்.

-பரமசிவன்

Advertisment

news

வந்த செய்தி: அமைச்ச ருக்கு எதிராகப் போராடிய தி.மு.க. ந.செ.மீது அடிதடி வழக்கு.

விசாரித்த உண்மை: வாணியம்பாடி நகர தி.மு.க. செயலாளராக இருப்பவர் சாரதிகுமார். அமைச்சர் நிலோபர் கபிலுக்கு டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டி ருப்பவர். சாரதிகுமாரை ஏதாவது ஒரு கேஸில் சிக்க வைத்து உள்ளே தள்ளிவிட வேண்டும் என காத்திருந்தார் அமைச்சர் நிலோபர் கபில். இந்த நிலையில் தான் கடந்த வாரம் இரவு வேலூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி காரில் போய்க் கொண்டி ருந்தார் சாரதிகுமார். இவரது காருக்கு முன்பாக கர்நாடகா வைச் சேர்ந்த பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சாரதிகுமாரின் கார் டிரைவர் நீண்ட நேரமாக ஹார்ன் அடித் தும் வழிவிடாமல் சென்றது பேருந்து. ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அந்த பஸ் நின்றதும், காரைவிட்டு இறங்கி வந்து பஸ் டிரைவரிடம் கோபமாக சாரதி குமார் பேச... பதிலுக்கு கன்னடத் தில் பஸ் டிரைவர் பேச... சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பின், அந்த பஸ் புறப்பட்டுச் சென்றது. விஷயத்தைக் newsகேள்விப்பட்ட சாரதிகுமாரின் நண்பர்கள், அந்த பஸ்ஸை வாணியம்பாடியில் வழி மறித்து, டிரைவரையும் கண்டக் டரையும் வெளுத்துக் கட்டி விட்டு கிளம்பிவிட்டனர். இது போதாதா அமைச்சருக்கு, சாரதிகுமார் மீது அடிதடி வழக்குப் பதிவாக... கோர்ட்டில் சரண்டராகி, ஜாமீன் பெற்றி ருக்கிறார் சாரதிகுமார்.

Advertisment

-து.ராஜா

வந்த செய்தி: தொகுதிக் காக பா.ஜ.க.வுக்கு பா.ம.க. நெருக்கடி. மாஜி அமைச்சரின் நண்பர் வீட்டில் ரெய்டு.

விசாரித்த உண்மை: திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசியைச் சேர்ந்தவர் பாஸ் கர ரெட்டியார். நெடுஞ்சாலைத் துறையின் ஒப்பந்ததாரரான இவர், அ.தி.மு.க.வின் தெள்ளார் ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளராக வும் இருப் பவர். ஜெ. ஆட்சியில் தக வல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த முக்கூர் சுப்பிரமணிக்கு எல்லாமுமாக இருந்தவர். இந்த பாஸ்கர ரெட்டியார் வீட்டில் தான் கடந்த வாரம் சென்னை யில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் டீம் ரெய்டு அடித்துள்ளது. அவர் கள் எதிர்பார்த்தபடி எதுவும் சிக்கவில்லை. முக்கூர் சுப்பிரமணி ஏரியாவில் நாம் விசாரித்தபோது,’’ ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் முக்கூரார், கே.பி.முனுசாமி மூலமாக, ஆரணி எம்.பி. தொகுதி சீட்டை கன்ஃபார்ம் பண்ணிட் டாரு. அதே நேரம் "அ.தி.மு.க. கூட் டணிக்கு வரவேண்டும் என்றால், ஆரணி தொகுதியை தங்களுக்குத் தரவேண்டும்' என பா.ஜ.க.வுக்கு பா.ம.க. நெருக்கடி கொடுத்தது. "முக்கூராருக்கு தொகுதி போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் பாஸ்கர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி யிருக்கிறார்கள்'’என்கிறார்கள்.

-கிங்

keerthisuresh

வந்த செய்தி: 1. பாட்டிக்கு சான்ஸ் கேட்டு கண்டிஷன் போடும் கீர்த்தி சுரேஷ். 2. போஸ்டர்களில் சின்ன சைசில் சிவகார்த்திகேயன்.

விசாரித்த உண்மை: 1) தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், தனது பாட்டிக்கும் ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுக்கும்படி, கண்டிஷன் போடுகிறார் கீர்த்தி சுரேஷ். இப்பத் தான் இவருக்கே மார்க்கெட் சூடு பிடிச்சிருக்கு, இதுல பாட்டிக்கு கேரக்டரா என முழிக்கிறார்கள் டைரக்டர்கள். ஆனால் கீர்த்தி சுரேஷோ, “""ஐய் யய்யோ யாரோ கிளப்பிவிட்ட புரளிங்க அது. இந்த மேட்ட ரைப் படிச்சிட்டு, எங்க வீட்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்''’என்கிறார். 2) சிவ கார்த்திகேயன் -சமந்தா காம்பி னேஷனில் ரிலீசான ’சீமராஜா’ தமிழில் சரியாகப் போகவில்லை. கடந்த வாரம் ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களில் சீமராஜா’ என்ற பெயரிலேயே தெலுங்கில் டப்பாகி ரிலீசாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் சமந்தா விற்கு நல்ல மார்க்கெட் இருப்ப தால், போஸ்டர்களில் சமந்தா படத்தை பெரியதாகவும் ஹீரோ சிவகார்த்திகேயன் படத்தை சின்ன சைசிலும் போட்டார் களாம்.

-பரமேஷ்

வந்த செய்தி: போலீ சாரை புத்தகம் விற்கச் சொல்கிறார் திருச்சி கமிஷனர்.

விசாரித்த உண்மை: திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக இருக்கும் முனைவர் அமல்ராஜ், நல்ல எழுத்தாளரும் கூட. தன்னுடைய வேலைப் பளுவுக்கிடையே புத்தகங்கள் எழுதுவதிலும் ஆர்வமுள்ளவர். கடந்த ஆண்டு ‘வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த ஆண்டு "வெற்றியாளரின் வெற் றிப் படிகள்'’என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். திருச்சி கமிஷனர் ஆபீசுக்கு வரும் எல்லோரின் கையிலும் இந்தப் புத்தகங்களைக் கொடுத்து, பில் போட்டுவிடுகிறார்கள். அதுமட்டு மல்லாமல், திருச்சி மாநகரில் இருக்கும் ஓட்டல்கள், சூப்பர் மார்க் கெட்டுகளில் கமிஷனரின் புத்தகங் களை மொத்தமாக இறக்கி விற்றுத் தரும்படி சொல்கிறார்களாம் அமல் ராஜுக்கு கீழ் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள்.

-ஜெ.டி.ஆர்.