"செங்கோட்டையன் வழியில் நாமும் கல்வீசிப் பார்ப்போமா?' என்கின்ற ரீதியில்,  "கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபொழுது சசிகலா சிறையில் இருந்தார். அதேபொழுதில் நான் டெல்லியில் விசாரணையில் இருந்தேன். அ.தி.மு.க. அமைச்சர்கள் குறித்த பைல்கள் போயஸ் கார்டனில் இருந்தன. அந்த பைல்களைக் கைப்பற்றும் நோக்கில் எடப்பாடி பழனிச்சாமி பைல்களை தேடியலைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கோப்புகளைப் படித்துப் பார்த்து நானும், மருத்துவர் வெங்கடேசும் கிழித்து எரித்தோம். கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது யார் ஆட்சி நடந்துகொண்டிருந்தது? அ.தி.மு.க. அமைச்சர்கள் பலரின் லீலாவினோ தங்கள் அந்த பச்சைக் கவரில் இருந்தன'' என கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச் சாமியை சமீபத்தில் இழுத்துவிட்டிருந்தார் அ.ம.மு.க. டி.டி.வி. தினகரன். 

Advertisment

பதிலுக்கு, சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிமுக 54-ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச் சாமியோ, "துரோகம் செய்தவர்கள் திட்டமிட்டுப் பரப்பும் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்''’என்றார். 

Advertisment

தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை யின்படி, எடப்பாடி பழனிச்சாமி மீது எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், செங்கோட்டையன் முதற்கொண்டு டி.டி.வி.தினகரன் வரை எடப்பாடி பழனிச்சாமியை கார்னர் செய்ய என்ன அவசியம்? குற்றப் பத்திரிகையின்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆவணங்கள் இல்லை யென்றாலும், தற்பொழுதைய சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைப்பற்றிய லட்சத்திற்கும் மேற்பட்ட ஈஹப்ப் யர்ண்ஸ்ரீங் தங்ஸ்ரீர்ழ்க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நிற்கின்றன. அதுபோல நடந்துமுடிந்த பல சம்பவங்களை மீண்டும் விசாரிக்கையில் பல சாட்சிகளும் ஆவணங் களுமாக கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் டி.டி.வி. தினகரனின் பேச்சைக் கூர்ந்துகவனித்த எதிரிதரப்பு, "டி.டி.வி. தினகரனையும் விசாரிக்கவேண்டுமென' சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

"வெறும் கரடி பொம்மைக்காகவும், கைக்கடிகாரத்திற்காகவும் கொள்ளை நடந்தது என வாதிடுபவர்களுக்கு, சித்தாந்தரீதியாக, எதார்த்தரீதியாக என்ன நடந்தது? என்பது தெரியாது. அங்குள்ள ஆவணங்களைக் கொள்ளை யடித்து தன்பக்கம் வைத்துக்கொள்ளவே இந்த வேலையைச் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்காக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை செய்துமுடித்த அந்த சி.ஐ.டி. காலனி பொறியாளரும், ஜூவல்லரி அதிபரும் தி.மு.க.வினருடன் நெருங்கிப் பழகுவதால் சி.பி.சி.ஐ.டி. திணறுகின்றது. இவர்களைத் கையிலெடுத்தால், சம்பவத்திற்குப் பிறகு கனகராஜும், சயானும் கோத்தகிரியிலிருந்து கீழே இறங்கி கோவையிலுள்ள கெஸ்ட் ஹவுஸில் தங்கி ஒப்படைத்த ஆவணங்கள் குறித்தான தகவல் கிடைக்கும். பழனிச்சாமி ஓர் ஆளுமையாளர் இல்லை. கொடநாட்டில் கொள்ளையடித்த ஆவணங்களைக்கொண்டே ஆட்சி நடத்தினார். இதுவரை அடக்கி வாசித்தவர்கள் இப்பொழுது வெகுண்டு எழுகின்றார்கள் என்பதுதான் உண்மை. இதில் செங்கோட்டையனும், டி.டி.வி. தினகரனும் அடக்கமே'' என்றார் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.

Advertisment

நிலாம்பூரில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. ஆவணமோ, "கொடநாடு சம்பவம் வெளியில் தெரிவதற்கு முன்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் ஒரு பகுதியினர் திருச்சூர் நோக்கி தப்பிக்க முயற்சித்தனர். அத்தகைய சூழலில் நிலாம்பூர் சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக காவல்துறையிடம் சிக்கிக்கொள்ள, முன்னாள் அமைச்சர் மில்லர், சம்பந்தப்பட்ட போலீஸிற்கு போன்செய்து அவர்களை விடுவித்ததும் அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையும் பழனிச்சாமிக்கு எதிராகவே உள்ளது'' என்கின்றது.

"பொதுவாக ஹிட்&ரன் மற்றும் எதிர்பாராத விபத்துக்களால் உயிரிழப்பு போன்ற சம்பவங்களில் வருவாய்த்துறை ஆஜராகி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ1 லட்சம் இழப்பீட்டை வழங்குவது வாடிக்கை. அந்த இழப்பீட்டுத் தொகை பயனாளியைச்   சென்றடைய குறைந்தபட்சம் சுமார் ஓராண்டாவது ஆகும். அதாவது காவல்துறையிடமிருந்து  அறிக்கை பெற்று கோட்டாட்சியருக்கு அனுப்பிவைக்க காலதாமதம் தவிர்க்க இயலாதது. 

kodanadu1

ஆனால், கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நேரத்தில் பயனாளிக்கு அன்றே ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்.? பயனாளி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் குடும்பம் என்பதாலா..? பயனாளியை யாருக்கும் தெரியாமல் தனித்துவைக்க செய்யும் முயற்சிதானே இது..? பாலியல் வழக்கில் சிக்கிய ஒருவர் விபத்தின்போது அந்த மாவட்டத்தில் காவல்துறையின் உயரதிகாரியாகப் பணியாற்றி இருக்கின்றார். அவருக்கு சேலத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி இன்ஸ்ட்ரக்ஷன்' கொடுத்துள்ளதையும் கவனமாகக் குறித்துவைத்து அதனை நோக்கியும் விசா ரணையை நடத்தியுள்ளது சி.பி.சி.ஐ.டி.

 கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, "எங்களிடம் கிடைக்கப்பெற்றிருக்கும் ஆவணங்கள், சாட்சிகள்படி இதற்கு தீர்ப்புவழங்கலாமா..?'' அரசுத் தரப்பினைக் கேட்டுள்ளது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை நடத்தும் ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம். ஆனால் அரசு தரப்பு தற்பொழுதுவரை பதிலளிக்கவில்லை. 

 குற்றவாளிகளாகக் கருதப்படுவர்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞர் விஜயனோ, "ஆட்சிக்கு வந்ததிலிருந்து தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருவதில் கவனம்செலுத்தி வருகின்றது ஆள்கின்ற தி.மு.க. அரசு. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்பதும் அடங்கும். ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்? இந்த வழக்கினை விசாரிப்பது எடப்பாடி பழனிச்சாமியின் போலீஸா என சந்தேகம் வருகிறது என்கிறார்கள் நடுநிலையாளர்கள். இந்த வழக்கினை முடித்து வாக்குறுதியை நிறை வேற்றுமா தி.மு.க. அரசு..?'' என கேள்வியெழுப்புகின்றார் அவர்.

-வேகா