மிழ்நாட்டு மக்களுக்கு ஆவின் பாலுக்கு அடுத்து நினைவுக்கு வருபவர் கேரளாவைச் சேர்ந்தவரான நடிகை அமலாபால். பொதுமக்களும் சினிமா உலகமும் தன்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைத்து எதையாவது ட்ரெண்ட் செய்பவர் அமலாபால்.

கேரள ஆற்றங்கரை ஓரம், தென்னைமரத்தடியில் நின்றுகொண்டு "கள்' குடித்தபடி "கிக்'’காக போஸ் கொடுத்த அமலாபால், "கள் உடம்புக்கு நல்லது'’என சர்ட்டிபிகேட் கொடுத்தார். ஹிந்தி சினிமாவின் ஜாம்பவானான மகேஷ்பட்டின் படத்தில் கமிட்டானதும் வடநாட்டுப் பக்கம் வலம் வந்தார். பிரபல பின்னணிப் பாடகர் பவ்னீந்தர் சிங்குடன் லவ்வாகினார். பவ்னீந்தரும் அமலாபாலும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் ரிலீஸாயின. ஆனால் என்ன நினைத்தாரோ, "எனக்கும் பவ்னீந்தர் சிங்குக்கும் கல்யாணமே நடக்கல'’என அதிரடி கிளப்பினார் அமலாபால். கொரோனா லாக்டவுன் ஒருமாதத்திற்கு முன்பு ரிலீஸான "ஆடை'’ படத்தின் ஒரு காட்சியில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சையைக் கிளப்பினார். .இப்போது அமலாபால் நம்பியிருப்பது‘"அதோ அந்த பறவைபோல'’ படத்தை மட்டும்தான். தமிழில் கைவசம் வேறு ஏதும் படங்கள் இல்லாததால், சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ஹாட்டாக போஸ் கொடுத்து ஃபோட்டோ ஷூட் நடத்தி ரிலீஸ் பண்ணியிருக்கிறார். இனிமேல் வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் அமலாபால்.

cc

ந்திர தேசத்து ஸ்ரீதிவ்யா ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். ‘காக்கிச்சட்டை’ "ரெமோ'’ படத்திலும் சி.கா.வுக்கு ஜோடி போட்டு ஹிட் செண்ட்டிமென்ட் ஹீரோயினானார். விக்ரம் பிரபு, விஷால், அதர்வா போன்றவர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் என்னவோ சூடு பிடிக்கவில்லை. காரணம் ‘திவ்யாவின் முகத்தில் ஃபேமிலிலுக்தான் இருக்கு. கிளாமருக்கு சரிப்பட்டுவராது’ என பல டைரக்டர்கள் ஃபீல் பண்ணி யதுதான்.இந்த லாக்டவுன் பீரியடில் ஹைதரபாத் புறநகரிலுள்ள தனது பண்ணை வீட்டில் முழுவீச்சில் விவசாய வேலைகளை மனதார செய்தாராம்.

Advertisment

""நானும் கிளாமருக்கு ஓ.கே.தான். ஆனா அது லிமிட் தாண்டிரக்கூடாது’’என்பதில் உறுதியாக இருக்காராம் ஸ்ரீதிவ்யா. சில டைரக்டர்களிடம் பேசிவரும் ஸ்ரீதிவ்யா, சிவகார்த்திகேயன் நாலாவதாக ஒரு சான்ஸ் கொடுத் தால் தமிழில் மீண்டும் ரவுண்ட் வரலாம் என்ற நம்பிக்கையுள்ளது'' என்கிற ஸ்ரீதிவ்யா, தனது தங்கை ஸ்ரீரம்யாவை கவர்ச்சிக்களத்தில் இறக்கவும் தயாராகிவிட்டாராம்.

"அம்புலி',’"சென்னை 28 -2',’"ஆர்.கே. நகர்'’போன்ற படங் களில் கவனிக்கத்தக்க கேரக்டர் களில் நடித்தவர் அஞ்சனா கீர்த்தி. சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தனியார் விமானப் பணிப்பெண் வேலையை விட்டவருக்கு, இப்போது சிம்புவின் "மாநாடு' படத்தில் முக்கிய கேரக்டர் கிடைத்துள்ளதாம்.

""இளைஞர்கள் அதிகம் விரும்பும் படத்தில் வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க வேண்டும்’ என்பதுதான் எனது ஆசை. மாநாடு ரிலீசுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நல்ல பொஸிஷனுக்கு வருவேன்''’ என்ற நம்பிக்கையிருக்கு என்கிறார் அஞ்சனா கீர்த்தி.

Advertisment

"அதோ அந்தப் பறவை போல'’ படத்தை மட்டும்தான் அமலா பால் நம்பியிருப்பதாக செய்தியின் முன்பகுதியில் எழுதியிருந்தோம். அந்தப் படம் முழுவதும் முடிந்து, தமிழ்-தெலுங்கில் மார்ச் மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்… டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் கணிசமான தொகையை அட்வான்ஸ் வாங்கி விட்டார் படத்தின் தயாரிப்பாளரான ஜோன்ஸ். ஜோன்ஸ் கையில் காசு வந்த நேரத்தில்தான் லாக்டவுனும் வந்துவிட்டது. இனிமேல் தியேட்டர் ரிலீஸ் சரிப்பட்டு வராது என்ற முடிவுடன் ஓ.டி.டி.யில் ரிலீஸ் பண்ண ஒரு தொகையை அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம் ஜோன்ஸ். இது டைரக்டர், ஹீரோயின், டிஸ்ட்ரி பியூட்டர்சுக்கு ஷாக் தந்திருக்கிறது. ஜோன்ஸின் முதல்படமான த்ரிஷா நடித்த ‘கர்ஜனை’ முடிந்து 3 வருடங்களாகியும் ரிலீஸாகவில்லை.

-ஈ.பா.பரமேஷ்வரன்

____________________

மாற்றுத் திறனாளியின் சாதனை!

cc

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் பட்டாளத்தைச் சம்பாதித்துள்ளார் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளியான இவர், தனது கேள்வித்திறனால் சங்கீதத்தின் சங்கதிகளை தெளிவாகப் புரிந்து பாடும் திறன் கொண்டவர்.

இப்போது, ‘கால் டாக்ஸி’ படத்தில் "கிக்கு செம கிக்கு' என்ற குத்துப்பாடலை இசையமைப்பாளர் பாணர் இசையில் பாடி பட்டையைக் கிளப்பியிருக்கும் வைக்கம் விஜயலட்சுமி, சிறந்த வீணை இசைக்கலைஞரும் கூட.