புது பிரதமர்! பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். ப்ளான்! ரஜினி வாய்ஸ்!

nitingadkari

""ஹலோ தலைவரே, தமிழகம் வந்த மோடிக்கு எதிராக, மிகப்பெரிய கறுப்பு அலை எழுந்ததை கவனிச்சீங்களா? அவருக்கு எதிராக இணையத்தில் தமிழர்களால் பதிவிடப்பட்ட 'ஏஞ இஆஈஃ ஙஞஉஒ' என்ற ஹேஷ்டாக் வாசகம், டிரண்டிங்கில் உலக அளவில் முதலிடம் பிடிச்சிருக்கு.''’

""ஆமாம்பா, நம்ம நக்கீரன் அலுவலகத்திலேயே கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டு, மோடிக்கு எதிரான தங்கள் கண்டனத்தைப் பதிவு செஞ்சிருந்தாங்களே?''’

pmmodi

""உண்மைதாங்க தலைவரே, காவிரி விசயத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதி மன்றமே உத்தரவிட்டும் கூட, மோடி அதைச் செய்யாமல் இழுத்தடிக்கக் காரணம், ஆடிக்கொண்டிருக்கும் அவரோட பதவி நாற்காலியைக் காப்பாத்திக்கத்தான்னு, பா.ஜ.க.வின் சீனியர்களே சொல்றாங்க. ஏன்னா மோடிக்கு முன்னாடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரா கருதப்பட்டவர் நிதின் கட்கரிதான். நாக்பூரைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள இவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களும் ஆதரவா இருந்தாங்க. ஆனால், அவர் மீது கடைசி நேரத்தில் எழுந்த ஒரு ஊழல் புகாரால், ராஜ்நாத்சிங்கால் மோடி முன்னிலைப்படுத்தப்பட்டார். மோடி எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டாரு.''’

""இதெல்லாம் தெரிஞ்சதுதானே?''’

nitingadkari

""ஆமாங்க தலைவரே, ஆனால் இப்ப ராஜஸ்தான், ம.பி., குஜராத் என இந்தி மாநிலங்கள் பலவற்றிலும் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துகொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தொடர்பான மோடி அரசின் பாலிஸியால் பா.ஜ.க.விலேயே இருக்கும் தலித் எம்.பி.க்களிடமே பெரும் புகைச்சலும் அதிருப்தியும் மோடிக்கு எதிராக எழுந்திருக்கு. அதனால் வருகிற கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க.வை மோடி கரையேற்றாவிட்டால், அவரது ப

""ஹலோ தலைவரே, தமிழகம் வந்த மோடிக்கு எதிராக, மிகப்பெரிய கறுப்பு அலை எழுந்ததை கவனிச்சீங்களா? அவருக்கு எதிராக இணையத்தில் தமிழர்களால் பதிவிடப்பட்ட 'ஏஞ இஆஈஃ ஙஞஉஒ' என்ற ஹேஷ்டாக் வாசகம், டிரண்டிங்கில் உலக அளவில் முதலிடம் பிடிச்சிருக்கு.''’

""ஆமாம்பா, நம்ம நக்கீரன் அலுவலகத்திலேயே கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டு, மோடிக்கு எதிரான தங்கள் கண்டனத்தைப் பதிவு செஞ்சிருந்தாங்களே?''’

pmmodi

""உண்மைதாங்க தலைவரே, காவிரி விசயத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதி மன்றமே உத்தரவிட்டும் கூட, மோடி அதைச் செய்யாமல் இழுத்தடிக்கக் காரணம், ஆடிக்கொண்டிருக்கும் அவரோட பதவி நாற்காலியைக் காப்பாத்திக்கத்தான்னு, பா.ஜ.க.வின் சீனியர்களே சொல்றாங்க. ஏன்னா மோடிக்கு முன்னாடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரா கருதப்பட்டவர் நிதின் கட்கரிதான். நாக்பூரைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள இவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களும் ஆதரவா இருந்தாங்க. ஆனால், அவர் மீது கடைசி நேரத்தில் எழுந்த ஒரு ஊழல் புகாரால், ராஜ்நாத்சிங்கால் மோடி முன்னிலைப்படுத்தப்பட்டார். மோடி எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டாரு.''’

""இதெல்லாம் தெரிஞ்சதுதானே?''’

nitingadkari

""ஆமாங்க தலைவரே, ஆனால் இப்ப ராஜஸ்தான், ம.பி., குஜராத் என இந்தி மாநிலங்கள் பலவற்றிலும் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துகொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தொடர்பான மோடி அரசின் பாலிஸியால் பா.ஜ.க.விலேயே இருக்கும் தலித் எம்.பி.க்களிடமே பெரும் புகைச்சலும் அதிருப்தியும் மோடிக்கு எதிராக எழுந்திருக்கு. அதனால் வருகிற கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க.வை மோடி கரையேற்றாவிட்டால், அவரது பிரதமர் பதவியை நிதின் கட்கரியிடம் கைமாற்றணும்னு பா.ஜ.க. சீனியர்கள் நினைக்கிறாங்க. அது நடக்கலைன்னா அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் கட்கரியை அறிவிக்கணும்னும் அவர்கள் மத்தியில் டோன் எழத்தொடங்கியிருக்கு. குறிப்பா, அத்வானி, அருண்சோரி, யஷ்வந்த் சின்ஹா போன்ற சீனியர்கள் மோடிக்கு எதிரா கைகோக்க ஆரம்பிச்சிருக்காங்க. இமேஜைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிக்கும் மோடி தரப்போ, கர்நாடக மாநில வெற்றியைக் குறிவைத்து, ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்வரை கொடுக்கவும் தயாராக இருக்கு. கன்னட வாக்காளர்களின் அபிமானத்தைப் பெற காவிரி விவகாரத்தை மோடி இழுத்தடிப்பதாகச் சொல்லப்படுகிறது.''’

""அதனால்தான் தமிழகம் வந்த மோடி, காவிரி பற்றிப் பேச, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் இ.பி.எஸ்.சிடம் கூட கொஞ்சமும் பிடி கொடுக்கலையா?''’

""ஆமாங்க தலைவரே, மோடியின் தமிழக விசிட்டின்போது, ஏர்போர்ட்டிலாவது காவிரி பற்றி மனுகொடுத்து பேச, எங்களுக்கு 5 நிமிட நேரம் ஒதுக்குங்கன்னு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் பல்வேறு வகைகளில் கேட்டும், அதை நிராகரிச்சிட்டார் மோடி. இதுபத்தி போனமுறையே நாம பேசிக்கிட்டோம். நாம் சொன்ன மாதிரியே ஏர்போர்ட்டில் இந்த இருவரிடமும் சால்வையையும் பொகேயையும் வாங்கிக்கிட்ட மோடி, அவர்களை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல் ஹெலிகாப்டரை நோக்கி நடந்தார். அப்படியும் கூடவே எடப்பாடி ஓடியும் அவரை மோடி கண்டுக்கலை. அதேபோல் தான் மேடையில் இருக்கும்போதும் காவிரி பத்தி யாரும் வாய் திறக்கக் கூடாதுன்னு மோடி ஸ்ட்ரிக்டா சொல்லிட்டதால், ஆயுதக் கண்காட்சி நிகழ்ச்சியிலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை விழாவிலும் முதல்வர் எடப்பாடி காவிரி பத்தி மூச்சுக்கூட விடலை. கடைசியா விழா முடிஞ்சி மோடி கிளம்பும் போது, காவிரி பத்திய கோரிக்கை மனுவை அவர் கையில் கொடுத்துட்டு ஒதுங்கி நின்னுட்டார் எடப்பாடி.''’

""எடப்பாடி, ஓ.பி.எஸ். தரப்புக்கு டெல்லித் தகவல் ஒண்ணும் பதட்டத்தை உண்டாக்குதாமே?''’

indiranimukherji""உண்மைதாங்க தலைவரே, மத்திய சட்ட ஆணையம் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, இரண்டு வரைவுகளைப் பரிந்துரை பண்ணியிருக்கு. அது என்னன்னா, இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி.யின் சட்டசபை ஆயுட் காலத்தை, சிறப்பு மாநில அந்தஸ்து பெற்ற காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டதுபோல் 5 வருடத்தில் இருந்து 6 வருடமாக உயர்த்திக் கொடுக்கலாம்ன்னு சொல்லியிருக்கு. இன்னொரு வரைவிலோ, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் போது, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 19 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தலாம் என்பதுதான். இது குறித்து முடிவெடுக்க அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை கூட இருக்குது. அப்போது இந்த 2 வரைவுகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தீர்மானமாக நிறைவேற்றப்படும். இது குறித்த செய்தியை அறிந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். தரப்பு, விரைவில் தமிழக சட்டசபையும் கலைக்கப்பட்டால் என்ன செய்வது என்ற பரிதவிப்பில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் இதை எதிர்க்கும் போது, நாமும் இதை எதிர்க்கலாமா? எதிர்க்க நம்மால் முடியுமா? என்ற ஆலோசனையிலும் இந்தத் தரப்பு இருக்கிறது.''’

""பொதுவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தால் தமிழகமே அதிர்றதுதான் வழக்கம். ஆனால் இந்தமுறை ரஜினி வாய்சுக்கு எதிரான வாய்ஸ் பலமா கேட்டதே?''

rajini

""ஐ.பி.எல்.லை எதிர்த்து திரையுலகத்தினரும் தமிழ் அமைப்புகளும் நடத்திய மறியலின் போது, ஒரு காவலர் தாக்கப்பட்ட நிகழ்ச்சியை, வன்முறையின் உச்சம்ன்னு தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டித்த ரஜினி, இதை எல்லாம் தடுக்க இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றப்படணும்னும் சொன்னார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் உட்பட பல தரப்பினரும், இயக்குநர்களையும் அப்பாவி இளைஞர்களையும் குறிவைத்துக் கடுமையாகத் தாக்கிய போலீஸைக் கண்டிக்காத ரஜினி, யார் சொல்லி இப்படி கருத்து சொல்றார்ன்னு அவருக்கு எதிரா கோபத்தை எதிரொலிச்சிருக்காங்க. அதேபோல் 91- 96 ஜெ.’ ஆட்சிக் காலத்தில், ரஜினியின் படங்கள் வெளியான போதெல்லாம், போலீஸின் இதுபோன்ற அராஜகத்தை அவர் ரசிகர்கள் அனுபவிச்சாங்களே.. அதை எல்லாம் ரஜினி மறந்துட்டாரான்னும் கேள்வி எழுப்பியிருக்காங்க.''’

""இந்த எதிர்ப்பை எல்லாம் ரஜினி எப்படி ஃபீல் பண்றாராம்?''’

""இது சம்பந்தமா அவர் நட்பு வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே, ரஜினி தன்னோட கருத்து குறித்து வருத்தமா ஃபீல் பண்றாராம். அதேபோல் அவர் குடும்பத் தரப்பிலும் கேட்டேங்க தலைவரே. ஆடிட்டர் குருமூர்த்திதான் ரஜினியைத் தொடர்புகொண்டு, "ரொம்ப அராஜகம் பண்றாள். இதை நீங்க கண்டிச்சாதான் மக்கள் மத்தியில் உங்க மதிப்பு அதிகமாகும்'னு சொல்லி, போலீஸ் தாக்கப்பட்ட காட்சியைக் காட்டி வாய்ஸ் கொடுக்க வச்சிருக்காருன்னு சொல்றாங்க.''’

""நானும் ஒரு அதிரடிச் செய்தியை சொல்றேன். மகளைக் கொன்ற வழக்கில் தெற்கு மும்பை சிறையில்அடைக்கப்பட்டிருந்த, ஐ.என்.எக்ஸ் நிறுவனத் தலைவரான இந்திராணி முகர்ஜி, அண்மையில் அதிக தூக்க மாத்திரைகளை விழுங்கி, மும்பையில் இருக்கும் ஜெ.ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாரு. உடல் நலம்தேறி, மறுபடியும் அவர் சிறைக்குப் போகும்போது, கார்த்தி சிதம்பரத்தாலதான் தன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிவிட்டுப் போனார். இது உண்மையிலேயே இந்திராணியின் வாய்ஸ்தானா? அல்லது மேலிடம் கொடுக்கும் டப்பிங் வாய்ஸுக்கு வாயசைச்சிட்டு போனாரான்னும் அந்தத் தரப்பே கேள்வி எழுப்புது. இப்ப சி.பி.ஐ., அவர் குற்றம் சாட்டியது குறித்த விசாரணையில் இறங்கியிருக்கு.''’

---------------------------------------------------

இறுதிச்சுற்று

உயிரை கொடையாக தந்த இளைஞன்!

fசந்தை மற்றும் திருவிழாக்களில் விளையாட்டுப் பொம்மை பொருட்கள் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் வாழ்ந்து வந்த தர்மலிங்கம் எந்த அரசியல் இயக்கத்திலும் இல்லை. மொழியை, இனத்தை உயிராக நேசித்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் வயதான தனது பாட்டி ரத்தினாம்பாளுடன் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். 25 வயது. திருமணமாகவில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு துரோகம் செய்வதைப் பற்றி வேதனையுடன் அருகில் வசிப்பவர்களிடம் பேசி வந்துள்ளார். மோடி வருகை குறித்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 12 விடியற்காலை 3 மணிக்கு தன் வீட்டு சுவரில் "காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும், மோடி அரசுக்கு எடப்பாடி அரசே துணை போகாதே... "மோடியே திரும்பிப்போ..' என எழுதி வைத்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து சாலைக்கு வந்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு கோஷம் எழுப்பியுள்ளார். மோடி சென்னையில் இருக்கும்போதே காவிரிக்காக தர்மலிங்கத்தின் உயிர் பிரிந்தது. தமிழுணர்வாளர்கள் பலரும் தர்மலிங்கத்திற்கு வீர வணக்கம் செலுத்தினர்.

-ஜீவாதங்கவேல்

Nitin Gadkari
இதையும் படியுங்கள்
Subscribe