அரசு ஊழியர்களின் நலன்களுக்காக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், பங்களிப்பு ஓய்வூதியம் ஒழிப்பு (சி.பி.எஸ். ஒழிப்பு) இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தி.மு.க. அரசின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் ஏங்கல்ஸ், ‘’நடை முறையிலுள்ள ஒன்றிய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கும் தற்போது முதல்வர் அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சி.பி.எஸ். திட்டத்தின் மறு வடிவம்தான் இது.
அதாவது, 2003-க்கு முன்பாக இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் சந்தா பிடிக்காத திட்டம். தற்போது முதல்வர் அறிவித்திருப்பது சந்தா பிடிக்கும் திட்டம். மத்திய அரசின் சி.பி.எஸ். திட்டமும் சந்தா பிடிக்கப்படுகிற திட்டம்தான்
அரசு ஊழியர்களின் நலன்களுக்காக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், பங்களிப்பு ஓய்வூதியம் ஒழிப்பு (சி.பி.எஸ். ஒழிப்பு) இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தி.மு.க. அரசின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் ஏங்கல்ஸ், ‘’நடை முறையிலுள்ள ஒன்றிய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கும் தற்போது முதல்வர் அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சி.பி.எஸ். திட்டத்தின் மறு வடிவம்தான் இது.
அதாவது, 2003-க்கு முன்பாக இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் சந்தா பிடிக்காத திட்டம். தற்போது முதல்வர் அறிவித்திருப்பது சந்தா பிடிக்கும் திட்டம். மத்திய அரசின் சி.பி.எஸ். திட்டமும் சந்தா பிடிக்கப்படுகிற திட்டம்தான். அதனால், சி.பி.எஸ். திட்டத்தின் மறு வடிவம்தான் தற்போதைய திட்டம். இந்த திட்டத்தினால் அரசு ஊழியர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ எந்த நன்மையும் இல்லை.
மேலும், முதல்வர் அறிவித்துள்ள இந்த திட்டம் ஒரு செய்திக் குறிப்பாகத்தான் இருக்கிறது. அரசாணை கிடையாது. அரசாணை பிறப் பிக்கப்படும் போதுதான், அது நடைமுறைக்கு வரும். எந்த தேதியிலிருந்து இந்த திட்டம் அமலுக்கு வருகிறது? திட்டத்தை அறிவித்த நாளிலிருந்து அமல்படுத்தப்படுகிறதா? அல்லது 2003-லிருந்து அமல்படுத்தப்படுமா? சி.பி.எஸ். திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, தி.மு.க. அரசின் உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டத்தின் செய்திக் குறிப்பில் பதில் இல்லை. பதில் இல்லாததால் பல்வேறு சந்தேகங்களும் ஏற்படுகின்றன.
குறிப்பாக, தேர்தலை மையப்படுத்தி வாக்கு அரசியலுக்காக, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் சமாதானப்படுத்த இந்த திட்டத்தை அறிவித்திருப்பதாகத்தான் சந்தேகப்பட வைக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்வூதியத் திட்டம் (சி.பி.எஸ்.) ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தது தி.மு.க. தலைமை. அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை. அதை நிறைவேற்றத்தான் நீண்ட வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இனியும் போராடுவோம். பென்சன் என்பது சலுகை அல்ல : அது, உரிமை!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/pension1-2026-01-08-15-47-14.jpg)
புதிய திட்டத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன. அதனால், திட்டத்திற்கு புதிய புதிய பெயர்களை வைத்து அறிவிப்பதை தவிர்த்துவிட்டு, நேரடியாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துகிறோம் என முதல்வர் அறிவித்தால் மட்டுமே தி.மு.க.வுக்கும் தி.மு.க. அரசுக்கும் நன்மை பயக்கும்''’என்கிறார் பிரெடெரிக் ஏங்கல்ஸ் அழுத்தமாக.
அதேபோல, முதல்வர் அறிவித்துள்ள புதிய பென்சன் திட்டத்தை எதிர்க்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், தி.மு.க. அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தில், பணியாளர் பங்களிப்புத் தொகை திரும்ப வழங்குவது குறித்து எந்த குறிப்பும் சொல்லப்படவில்லை. இது ஓய்வுபெறும் நாளில் ஒரு அரசு ஊழியருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்.
ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது அவருக்கு பிள்ளைகளின் திருமணம், வீடு கட்டுதல், கடனை அடைத்தல் உள்ளிட்ட முக்கிய கடமைகள் இருக்கும். இவை அனைத்தையும் ஈடுகட்ட அவரது பங்களிப்பு சேமிப்பிலிருந்து திரும்ப வழங்குவது குறித்து உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டத்தில் உறுதி செய்யப்படவில்லை. அதற்கு மாற்றாக பணிக்கொடை வழங்க உள்ளோம் என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பணிக் கொடை வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். ஓய்வூதியச் சட்டம் வேறு, பணிக்கொடை சட்டம் என்பது வேறு. திமுக அரசு தனது கடமையிலிருந்து நழுவிக்கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி எங்களின் போராட்டம் தொடரும்''’என்று தெரி விக்கிறார்கள்.
இதற்கிடையே, பழைய ஓய்வூதியத் திட் டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசுக்கு எதிராக பிரெடெரிக் ஏங்கல்ஸ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன் மற்றும் ஆர்.கலை மதி அமர்வின் முன்பு 6-ந்தேதி வந்தபோது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான அரசாணை 10 நாட்களில் வெளியிடப் படவிருக்கிறது என்று தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தின் அடிப்படையில் இந்த வழக்கினை 21-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
தமிழக அமைச்சரவையின் கூட்டத்தை 6-ந்தேதி கூட்டியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். கவர்னர் ரவியின் உரையுடன் தொடங்கவிருக்கும் 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தில் எப்படி நடந்துகொள்ளப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு திட்டங்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப் பட்டிருக்கிறது.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தி.மு.க.வின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருந்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வருமேயானால், அதனை சந்தேகத்திற்கும் கேள்விகளுக்கும் இட மளிக்காதவாறு நிறை வேற்றினால் மட்டுமே தேர்தல் காலத்தில் பலனளிக்கும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us