ராங்கால் சட்டமன்றத்தை வேவு பார்க்க புது அதிகாரி! போயஸ் கார்டன்! ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்.ஸிடம் தீபா-தீபக் டீல்!

rang

"ஹலோ தலைவரே, தலைமைச் செயலகமே பரபரப்பில் மூழ்கியிருக்கு.''”

"ஆமாம்பா, 2022-ன் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 5-ல் கூடப் போகுதே.''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக சட்டமன்றத்தின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கவர்னர் ஆர்.என்.ரவி யின் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி தொடங்குது. அவரது உரையில் தி.மு.க அரசின் செயல்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள், நிதி நிலைமைன்னு பல்வேறு விசயங்கள் இடம்பெறும் வகையில், அவருக்கான உரையைத் தயாரிக்கும் வேலை நடக்குது. இதற்காக நிதித்துறையுடன் இணைந்து சட்டப் பேரவைச் செயலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கிட்டு இருக்குது. அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை ஆளுநர் வாசிப்பதுதான் இதுநாள் வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு.''”

"ஆமாம்பா, அந்த மரபுப்படி, தி.மு.க அரசு தயாரித்துத் தரும் உரையை, அரசுக்கு செக் வைப்பதற்காகவே உட்காரவைக்கப்பட்டிருக்கும் கவர்னர் ரவி அப்படியே வாசிப்பாரா?''”

rr

"இதே கேள்விதான் கோட்டை வட்டாரத் திலும் எதிரொலிக்கிது. அவர் அந்த உரையை முழுதாக ஏற்காமல், அதில் ஏதேனும் திருத்தம் செய்வாரோங்கிற சந்தேக மும் நிதித்துறை வட்டா ரங்கள்ல இப்பவே எதிரொலிக்குது. கவர்னர் உரை, அதன் மீதான கருத்துகள், உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எல்லாத்தையும் உள்ளடக்கி அதிகபட்சம் 5 நாட் களுக்குள் முடிக்க அரசு திட்ட மிட்டிருப்பதாகவும் பேரவைத் தரப் பில் பேச்சு அடிபடுது. கொரோனா தாக்கம் பரவியதிலிருந்து இதுநாள் வரை கலைவாணர் அரங்கில் நடந்து வந்த சட்டப்பேரவை நிகழ்வுகள், இனி வழக்கம்போல கோட்டையில் உள்ள

"ஹலோ தலைவரே, தலைமைச் செயலகமே பரபரப்பில் மூழ்கியிருக்கு.''”

"ஆமாம்பா, 2022-ன் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 5-ல் கூடப் போகுதே.''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக சட்டமன்றத்தின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கவர்னர் ஆர்.என்.ரவி யின் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி தொடங்குது. அவரது உரையில் தி.மு.க அரசின் செயல்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள், நிதி நிலைமைன்னு பல்வேறு விசயங்கள் இடம்பெறும் வகையில், அவருக்கான உரையைத் தயாரிக்கும் வேலை நடக்குது. இதற்காக நிதித்துறையுடன் இணைந்து சட்டப் பேரவைச் செயலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கிட்டு இருக்குது. அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை ஆளுநர் வாசிப்பதுதான் இதுநாள் வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு.''”

"ஆமாம்பா, அந்த மரபுப்படி, தி.மு.க அரசு தயாரித்துத் தரும் உரையை, அரசுக்கு செக் வைப்பதற்காகவே உட்காரவைக்கப்பட்டிருக்கும் கவர்னர் ரவி அப்படியே வாசிப்பாரா?''”

rr

"இதே கேள்விதான் கோட்டை வட்டாரத் திலும் எதிரொலிக்கிது. அவர் அந்த உரையை முழுதாக ஏற்காமல், அதில் ஏதேனும் திருத்தம் செய்வாரோங்கிற சந்தேக மும் நிதித்துறை வட்டா ரங்கள்ல இப்பவே எதிரொலிக்குது. கவர்னர் உரை, அதன் மீதான கருத்துகள், உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எல்லாத்தையும் உள்ளடக்கி அதிகபட்சம் 5 நாட் களுக்குள் முடிக்க அரசு திட்ட மிட்டிருப்பதாகவும் பேரவைத் தரப் பில் பேச்சு அடிபடுது. கொரோனா தாக்கம் பரவியதிலிருந்து இதுநாள் வரை கலைவாணர் அரங்கில் நடந்து வந்த சட்டப்பேரவை நிகழ்வுகள், இனி வழக்கம்போல கோட்டையில் உள்ள பேரவையிலேயே, நடக்கப் போகுது.''”

rr

"இந்த நேரத்தில் நாடாளுமன்ற செயலகத்தில் இயக்குநர் அந்தஸ்தில் பணிபுரிந்த தமிழக அதிகாரி ராஜாவை தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு அதி காரியாக டெல்லி நியமிச்சிருக்கே?''”

ravi"ஆமாங்க தலைவரே, ராஜாவின் நியமனம் அதிகாரிகள் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தி யிருக்கு. குறிப்பாக, தமிழக அரசின் நிதிச் செலவினங்களைக் கண்காணித்து, மத்திய அரசுக்கு அவர் தெரிவிப்பாருன்னும், சட்டப் பேரவையை அவர் வேவு பார்க்கவே நியமிக்கப்பட்டு இருக்காருன்னும் அதிகாரிகள் தரப்பில் விமர்சனம் எழுந்திருக்கு. இந்த சூழலில் நிதித்துறை சம்பந்த மான மூன்று நிலைக் குழுக்களின் கோப்புகள் ராஜாவின் பார்வைக்குப் போன பிறகே, நிதித் துறைக்குச் சென்றதாகவும் சொல்கிறார்கள். சட்டப் பேரவை செயலகத்தில் இருக்கும் முக்கியமான அதி காரிகளுக்கு ராஜாவின் நியமனம் பிடிக்கலையாம்.''

"ஆனா, இந்த ராஜாவின் நியமனமே நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் சாய்ஸ்தானாமே?''“

"சட்டமன்றத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் குழு, பொது மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்கு குழு ஆகிய மூன்று நிலைக் குழுக்களும் நிதித்துறையின் கட்டுப்பாட்டில்தான் வருது. இந்த மூன்றையும் இணைத்து தனிச் செயலகம் உருவாக்கப்படும்னு போன பட்ஜெட்டின்போதே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அதன்படி தனிச் செயலகம் உருவாக்கப்பட்டிருக்கு. கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளைக் கண்டுபிடிக்கவும், இனி தவறுகள் நடக்காமல் இருக்கவும்தான் இந்த தனிச் செயலகம் உருவாக்கப்பட்டிருக்கு. இந்த செயலகத்தின் அதிகாரியாக இங்குள்ள அதிகாரி எவரையும் நியமிக்க அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு விருப்பமில்லை. அதனால்தான், நிறைய அனுபவம் பெற்ற ராஜாவை நாடாளுமன்ற செயலகத்திலிருந்து தமிழகத்துக்கு அவர் கொண்டு வந்திருக்கார். ஆனால், இந்த நிலைக்குழுக்களின் அதிகாரத்தை நிதித்துறை எடுத்துக்கொள்ளுமோங் கிற ஆதங்கத்தில்தான் அதிகாரிகள் தரப்பில் முணுமுணுப்பு கேட்குது.''

"சரிப்பா, டான்சி நிறுவனம் பற்றிய சர்ச்சைகளும் எழுந்திருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக அரசுக்கு தேவையான பல்வேறு உபகரணங்களை தமிழ்நாடு சிறுதொழில் கழகமான டான்சிதான் தயாரிச்சி தருது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் முடிவில், இங்குள்ள 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றல், கற்பித்தல் திட்டத்திற்கான உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் காண்ட்ராக்டை, பள்ளிக் கல்வித்துறை, டான்சி நிறுவனத்துக்கு வழங்குச்சு. இதன் மதிப்பு 23 கோடி ரூபாய். இந்தப் பணம் முழுவதும் கொடுக் கப்பட்டு விட்டது. இருந்தும் 9 மாதங்களாகியும் டான்சி நிறுவனம் அந்தப் பொருட் களைக் கொஞ்சமும் சப்ளை செய்யலை. டான்சியின் சேர் மன் மற்றும் நிர்வாக இயக்கு நராக இருக்கும் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்., கடந்த ஆட்சியில் எடப்பாடியின் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். அவர் இதுபற்றி கொஞ்சமும் அக்கறை காட்டலையாம்.''

rang

"சட்டமன்றத் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. வுக்கு முழு ஆதரவு தந்து, தி.மு.க.வை அதிர வைத்த கொங்கு மண்டலத்தில், இப்ப அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பொறுப்பாளரா ஆளுங் கட்சி நியமித்திருப்பதால, அ.தி.மு.க. தரப்பில் ஷாக்காமே?''”

"உண்மைதாங்க தலைவரே, கொங்கு மண்டலத்தில் வேலுமணியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியே தீருவேன்னு வரிஞ்சிகட்டி நிக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதனால் அந்தத் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களையும், அங்கே ஓரங்கட்டப்பட்ட மாஜி மந்திரிகள் மற்றும் மா.செ.க்களையும் தி.மு.க. பக்கம் கொண்டுவரும் முயற்சியில் தீவிரம் காட்டறார். அந்த வகையில், அவரது தூண்டிலில் விழுந்த முதல் டிக்கெட் முன்னாள் எம்.பி. நாகராஜ். இவர் சசிகலாவின் ஆதரவாளர் என்பதால் எடப்பாடியும் வேலுமணி யும் இவரை மதிக்கவே இல்லை. இதனால் விரக்தி யில் இருந்த அவரை, தி.மு.க.வில் ஐக்கியமாக்கி விட்டார் செந்தில் பாலாஜி. அவரது மூவ்களைக் கண்டு அரண்டுபோயிருக்கிறது இலைத்தரப்பு”

"யு டியூபர் மாரிதாஸ் விவகாரத்தால் கோபமடைந்த பா.ஜ.க. தரப்பு பழிவாங்கும் நடவடிக்கைக்கு ரெடியாகுதே?”

"ஆமாங்க தலைவரே, சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி பேசியதாக கைது செய்யப்பட்ட மாரிதாசை, ஒரு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. இருந்த போதும் மேலும் அவர் மீதுள்ள இரண்டு வழக்குகள் அவரை, சிறையி லேயே இருக்க வைத்திருக்கின்றன. இந்த வழக்கு களையும் முறியடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க. தரப்பு. மேலும் மோடி பற்றி விமர்சித்ததாக இங்கிருந்து அவர்கள் தரப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் உ.பி. போலீஸ் வாரண்டோடு வந்து சென்னை மாதவரத்தைச் சேர்ந்த மன்மோகன் மிஸ்ரா என்பவரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது. இதேபோல் பா.ஜ.க. பற்றியும் மோடி பற்றியும் விமர் சிப்பவர்களின் பட்டி யலை எடுத்து, வெளி மாநிலங்களில் வழக்கைப் பதிவுசெய்ய வைத்து, ஒன்றிய அரசின் அதிகாரத்தை வைத்து, அவர்களை கைது செய்யும் வியூகத்திலும் பா.ஜ.க. தரப்பு இருக்கிறதாம்.''”

poegarden

"ஜெ’வின் போயஸ் கார்டன் இல்லத்தை, அவரது வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறை யீடு செய்திருக்குதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, போயஸ்கார்டன் இல்லத்தை ஜெ.வின் வாரிசுகளிடம் ஒப்படைத்தது தவறுன்னு அ.தி.மு.க. உயர் நீதிமன்றத்தில் முறை யீடு செய்திருக்கு. அந்த மனுவை நீதிமன்றம் விசா ரணைக்கு ஏற்றுக்கொண்டதால், தீபாவும் தீபக்கும் அதிர்ந்து போயிருக்காங்க. இதற்கிடையில் போயஸ் கார்டன் இல்லம், ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதால் அந்த இல்லத்தின் பொறுப்பை ஜெ.வின் வாரிசுகள் ஏற்றாலும், அது அரசுக்கே போய்ச்சேரும் என்பது தான் நிலவரம். அதனால், அ.தி.மு.க. இரட்டைத் தலைமையான ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். தரப்பிடம் பேசத் தொடங்கியிருக்கும் வாரிசுகள் தரப்பு, எங்க ளுக்கு ஏதேனும் ஒரு தொகையை கொடுத்தால், போயஸ் இல்லத்தை உங்களிடமே ஒப்படைத்து விடுகிறோம் என்று டீலிங் பேசுகிறதாம்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேம்பா. தமிழக சட்டப்பேரவை செயலாளராக இருக்கும் சீனிவாசன், பெரம்பூரில் மிகப்பெரிய பங்களாவைக் கட்டி வருகிறாராம். இந்த நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, வருமானவரித்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கு. இது, சட்டப்பேரவைத் தரப்பை ரொம் பவே அதிர வச்சிருக்கு.''

nkn181221
இதையும் படியுங்கள்
Subscribe