Advertisment

மதுரைக்குப் புது மேயர்? -அறிவாலயம் வரை நீண்ட பஞ்சாயத்து.

ss

துரை மாநகராட்சியில் பரபரப்பும், பதட்டமும் அதிகரிக்க... புழுதி பறந்துகொண்டிருக்கிறது.

Advertisment

அங்கே என்னதான் நடக்கிறது?

மதுரை மாநகராட்சியின் 8-ஆவது மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த இந்திராணி பொன்வசந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனி விமானத்தில் இதற்காகவே பறந்துவந்து கலந்து கொண்டார். ஆனால், அமைச்சர் பி.மூர்த்தியும், ஏனைய தி.மு.க.வின் மாநகர, புறநகர் மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்காமல் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர். அன்றிலிருந்து இன்றுவரை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சிபாரிசால் பதவிக்கு வந்த மேயர் இந்திராணியை எதிர்த்துப் புயலைக் கிளப்பி வருகிறார்கள் மற்றவர்கள்.

Advertisment

dd

கடந்த மே மாதம் மாநகராட்சிக் கூட்டத்திற்கு பிறகு கவுன்சிலர்களுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்த மேயர், அதற்கான அழைப்பிதழில், பி.டி.ஆர். பெயரை மட்டும் போட்டிருந்தார். மதுரையின் இன்னொரு அமைச்சரான மூர்த்தி மற்றும் நகர் மாவட்ட செயலாளர் தளபதி, புறநக

துரை மாநகராட்சியில் பரபரப்பும், பதட்டமும் அதிகரிக்க... புழுதி பறந்துகொண்டிருக்கிறது.

Advertisment

அங்கே என்னதான் நடக்கிறது?

மதுரை மாநகராட்சியின் 8-ஆவது மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த இந்திராணி பொன்வசந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனி விமானத்தில் இதற்காகவே பறந்துவந்து கலந்து கொண்டார். ஆனால், அமைச்சர் பி.மூர்த்தியும், ஏனைய தி.மு.க.வின் மாநகர, புறநகர் மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்காமல் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர். அன்றிலிருந்து இன்றுவரை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சிபாரிசால் பதவிக்கு வந்த மேயர் இந்திராணியை எதிர்த்துப் புயலைக் கிளப்பி வருகிறார்கள் மற்றவர்கள்.

Advertisment

dd

கடந்த மே மாதம் மாநகராட்சிக் கூட்டத்திற்கு பிறகு கவுன்சிலர்களுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்த மேயர், அதற்கான அழைப்பிதழில், பி.டி.ஆர். பெயரை மட்டும் போட்டிருந்தார். மதுரையின் இன்னொரு அமைச்சரான மூர்த்தி மற்றும் நகர் மாவட்ட செயலாளர் தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் பெயரைப் போடவில்லை. அவர்களை மேயர் அழைக்கவும் இல்லையாம். இந்த நிலையில், விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக அரங்கேற, தி.மு.க.வின் மொத்த 69 கவுன்சிலர்களில் 60 கவுன்சிலர்கள் அதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்கள்.

இந்த கறி விருந்தில் மைக் பிடித்த பி.டி.ஆர். பழநிவேல் தியாகராஜன், "கட்சியில் எனக்கு வரும் சில தகவல்கள் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்கச் சொல்லி மிரட்டுவதாக சொல்கிறார்கள். யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. தனிப் பாதையில் சென்றுகொண்டி ருக்கிறேன்''’என்று ஆதங்கத்தோடு கூற, அடுத்தடுத்த நிகழ்வுகள் வெடிக்கத் தொடங்கின

இதனைத் தொடர்ந்து ஒவ் வொரு மாமன்றக் கூட்டத்திலும் தி.மு.க. கவுன்சிலர்களே ”எங்கள் வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. அதிகாரிகள் எல்லோரும் அமைச்சர் பி.டி.ஆர். கண் அசைவுக்கே காத்திருப்பதால், வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடிய வில்லை''’என்றெல்லாம் புகார் சொல்லத் தொடங்கினர். மேலும், மதுரையின் மூன்று மாவட்ட செயலாளர் களும் ஒன்று சேர்ந்து மேயருக்கு எதிராகக் காய் நகர்த்த.. 60-க்கும் மேற் பட்ட தி.மு.க. மாமன்ற கவுன் சிலர்களும் மேயருக்கு எதிராக அணி திரண்டு நேருக்கு நேராக மோதத் தொடங்கிவிட்டனர்.

இந்தத் தகவல் அறிவாலயத்தின் காதுவரை செல்ல, அமைச்சர் கே.என்.நேருவை மதுரைக்கு அனுப்பியது அறிவாலயம். டிசம்பர் 25-ஆம் தேதி மதுரை வந்த அவர், மேயர் உள்பட அனைத்து தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களையும் அழைத்து தமிழ்நாடு ஓட்டலில் சமாதானக் கூட்டம் போட்டார். மேயரிடம், "மாநகராட்சி வேலை களை மண்டலத் தலைவர்களுக்குப் பிரித்துக் கொடுங்கள். எதையும் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்''’என்று அட்வைஸ் செய்துவிட்டுச் சென்றார்.

ஆனால் அடுத்தநாளே, மாமன்றக் கூட்டத் தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, "உங்கள் பஞ்சாயத்தைத் தீர்க்க அமைச்சர் கலந்துகொண்ட ஓட்டல் கூட்டத்துக்கு, எதற் காக மாநகராட்சி ஆணையாளரையும், பொறியாளரையும் அழைத்தீர்கள்?'' என்று கேள்வி எழுப்பி பரபரப்பூட்டினார்.

dd

இதன்பின் நடந்தது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், "அமைச்சர் நேரு வந்து சமாதானம் செய்ததோடு, மேயரின் தன்னிச்சைப் போக்கைக் கண்டித்தார். "கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்' என்றும் அட்வைஸ் செய்தார். உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றால் அப்புறம் எதுக்கு மேயராக இருக்கிறீர்கள்?'' என்றெல்லாம் கடிந்துகொண்டதோடு, மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு, அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் மற்றும் மண்டல தலைவர்களை அழைத்துப் பேசினார். அவர்களும், "யாரையும் மேயர் மதிப்பதே இல்லை. இதற்கு கடிவாளம் போட்டே ஆகவேண்டும்' என்றதோடு, "மாமன்றக்குழு தலைவர், செயலாளர், கொறடா பதவிகளை உருவாக்கினால் மாநகராட்சி நிர்வாகத்தில் மேயருடைய தயவு இல்லாமலேயே வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் மாமன்றக் குழுத் தலைவராக ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். 2023 புது வருடம் பிறந்ததும், புது பிரச்சனையாக மேயர் இந்திராணி, அதலை செந்திலுடன் அறிவாலயம் சென்று முதல்வரை பார்த்து, ஏதோ புகார் மனு கொடுத்ததாகத் தகவல் வந்தது. அதனால் மேயரை மாற்றுங்கள் என்று புதிய கோஷத்துடன் மொத்த 60 கவுன்சிலர்களும் அறிவாலயம் சென்று, முதல்வரைப் பார்த்து வலியுறுத்தி இருக்கிறோம். அங்கே வந்த மேயரை சந்திக்காமல், லெட்டர் பேடில் மேயரிடம் கையெழுத்து வாங்கியதாகவும் சொன்னார்கள். அடுத்த நாளான 4 ஆம் தேதி தி.மு.க.வின் 60 கவுன்சிலர்களும் எங்களது தரப்பு நியாயத்தை விளக்கி மனுவைக் கொண்டு சென்று முதல்வரை பார்த்தபோது, அனைவரையும் நலம் விசாரித்தவர், எங்கள் தரப்பு குறைகளைக் கேட்டுவிட்டு வெளியே இருக்கச்சொன்னார். பிறகு முக்கிய நபர்களான மாமன்ற தலைவர் மா.ஜெயராமன் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள், மாமன்ற மண்டலத் தலைவர்களையும் இருக்கச் சொல்லி நிதானமாக விளக்கம் கேட்டு நிச்சயம் இதற்கான தீர்வு கிடைக்கும். தைரியமாகச் செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்''’என்றார் மகிழ்ச்சியோடு.

மதுரையில் புதிய மேயர் விரைவில் பொறுப்பேற்பார் என்றும், இதற்கான ரேஸில் மூர்த்தி ஏற்கனவே சிபாரிசு செய்த வாசுகி சசிகுமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் மதுரை உடன்பிறப்புகள் அழுத்தமாக நம்புகிறார்கள்.

nkn180123
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe