Advertisment

புது வீடு, சீர் வரிசை! நெகிழவைத்த விருத்தாசலம் போலீசார்!

ss

டலூர் மாவட்டம் விருத்தாசலத்தை ஒட்டியுள்ள மணலூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சக்திவேலின் மனைவி முத்துலட் சுமி. இவர்களுக்கு 5 குழந்தைகள். மிகவும் ஏழ்மை யோடு குடிசையில் வாழ்ந்துவந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் திட்டக்குடியில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்துகொண்டி ருந்த சக்திவேல் மீது ஏதோவொரு வாகனம் மோதி யதில் உயிரிழந்தார். இந்நிலையில், ஐந்து குழந்தை களோடு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முத்து லட்சுமி, விருத்தாசலம் துணை கண்கா

டலூர் மாவட்டம் விருத்தாசலத்தை ஒட்டியுள்ள மணலூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சக்திவேலின் மனைவி முத்துலட் சுமி. இவர்களுக்கு 5 குழந்தைகள். மிகவும் ஏழ்மை யோடு குடிசையில் வாழ்ந்துவந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் திட்டக்குடியில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்துகொண்டி ருந்த சக்திவேல் மீது ஏதோவொரு வாகனம் மோதி யதில் உயிரிழந்தார். இந்நிலையில், ஐந்து குழந்தை களோடு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முத்து லட்சுமி, விருத்தாசலம் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜை சந்தித்து, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற உதவி செய்யும்படி மனு கொடுத்தார்.

Advertisment

newhouse

இதையடுத்து, முத்துலட்சுமியின் வீட்டு நிலையை ஆய்வு செய்த டி.எஸ்.பி., அக்குடும்பத்துக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். முத்துலட்சுமியின் குடிசை வீட்டு நிலவரத்தை வீடியோவாக படம்பிடித்து, 'உதவும் காவல் இதயங்கள்' என்று வாட்ஸப் குரூப்பில் பதிவிட்டு, நல்ல உள்ளங்களின் மூலம் அக்குடும்பத்துக்கு உதவுவதற்கான நிதியைத் திரட்டினார். முதலில் அக்குழந்தைகளுக்கு நல்ல கல்வியை உறுதி செய்வதற்கான முயற்சியெடுத்தவர், படிப்புக்கான செலவுகளை தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்.

Advertisment

விருத்தாசலம் சரக காவல் பணியி லுள்ள இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் பலரின் உதவியோடு, சுமார் பத்து லட்சம் செலவில் அருமையான வீடு கட்டி முடிக்கப் பட்டது. கடந்த 25ஆம் தேதி, தாய் வீட்டு சீதன மாக சீர்வரிசைகளுடன் காவலர்கள் வர, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கரங்களால் குத்துவிளக்கேற்றி, புது வீட்டைத் திறந்துவைத்து, வீட்டுச் சாவியை முத்துலட்சுமியிடம் ஒப்படைத் தார். இதுகுறித்து பயனாளி முத்துலட்சுமி கூறுகையில், "குடிசை வீட்டில், கணவரின் குறைந்த சம்பாத்தியத்தில் ஐந்து குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருந்தோம். கணவர் விபத்தில் இறந்ததும் வாழ்க்கையே இருண்டுபோனது போலானது. இந்நிலையில்தான் எங்களுக்கு உதவும்படி டி.எஸ்.பி. ஐயாவிடம் போய் நின்றேன். எங்களுக்கு ஒரு மச்சு வீடு கட்டிக்கொடுத்து, படிப்புக்கும் உதவிசெய்து எங்கள் அனைவருக்கும் சந்தோஷத் தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார். ஐயாவின் உதவியை எப்போதும் மறக்க மாட்டோம்'' என்றார்.

டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் கூறுகையில், "பொதுவாக குற்றவாளிகள் உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையே காரணமாகிறது. கணவரின் மறைவுக் குப் பின் முத்துலட்சுமியின் குடும்பத்தைப் பார்த் ததும் மனம் பதறியது. எனவே ஐந்து குழந் தைகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்ததோடு, சக காவலர்களின் ஒத்துழைப்போடு புது வீடு கட்டிக் கொடுக்க முடிவெடுத்தேன். நல்ல மனம் படைத்தவர்களின் உதவியால் இது சாத்தியமானது'' என்றார் மனநிறை வோடு. உயர்ந்த உள்ளங்கள் வாழ்க!

nkn011123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe