புதிய மாவட்டங்கள்! ஏக்கத்தில் 9 மாவட்ட மக்கள்!

ss

தி.மு.க. ஆட்சியமைந்து நான்காண்டுகள் முடியவுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வருமா என்ற கேள்வி 9 மாவட்ட மக்களிடம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காஞ்சி புரம், வேலூர், விழுப்புரம், நெல்லை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல் பட்டு, தென்காசி உட்பட 6 புதிய மாவட்டங்கள் உரு வாக்கப்பட்டன. அப்படி யிருந்தும் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அதிகமாக வுள்ள இன்னும் சில மாவட்டங்கள் பிரிக்கப் படாமலே உள்ளன. தற்போ தைய நிலையில் 6,266 சதுர கி.மீ பரப்பளவில், திண்டுக்கல் தான் தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக உள்ளது. அதற்கடுத்து 6,191 ச.கி.மீ. பரப்பளவில் திருவண்ணாமலை மாவட்டமும், அடுத்ததாக ஈரோடு 5,722 ச.கி.மீ., சேலம் 5,205 ச.கி.மீ., திருப்பூர் 5,186 ச.கி.மீ., கிருஷ்ணகிரி 5143 ச.கி.மீ. பரப்பள வுள்ள மாவட்டங்களாக உள்ளன.

ssd

திண்டுக்கல்லிலிருந்து பழனி மாவட்டத்தை உருவாக்கவே

திண்டுக்கல்லிலிருந்து பழனி மாவட்டத்தை உருவாக்கவேண்டும், திருவண்ணாமலையிலிருந்து செய்யார் மாவட்டத்தை உருவாக்க வேண்டும், கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் மாவட் டத்தை உருவாக்க வேண்டும், சேலத்திலிருந்து ஆத்தூர் மாவட் டத்தை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் உள்ளன. அதுமட்டு மல்லாமல், திருவள்ளூர், கடலூர், திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களையும் பிரிக்கவேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் அப்பகுதி மக்களிடமிருந்து வைக்கப்படுகின்றன.

தி.மு.க. ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகளாகியும் இப் போதுவரை புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படாமல் உள் ளன. இது அம்மாவட்ட மக்களிடம் அதிருப்தி யை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பிரித்தே ஆகவேண்டிய கட்டாயத்திலிருப்பது திண்டுக் கல், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட் டங்கள் தான். திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட வேண்டுமென்று சொல்வதன் நோக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள், 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் செய்யார், வந்தவாசி, ஆரணி தொகுதி மக்கள், தங்களை தனி மாவட்டமாக்க வேண்டுமென்று 20 ஆண்டு காலமாகக் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆரணி, செய்யார் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இம்மாவட்டத்தின் வடக்கு எல்லை காஞ்சிபுரம் மாநகரிலிருந்து 5வது கிலோமீட்டரில் மாமண்டூரில் தொடங்குகிறது. அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு காரில் வருவதற்கே 3 மணி நேரமாகிவிடும். ரெகுலர் பேருந்துகளில் வந்தால் இன்னும் ஒரு மணி நேரம் கூடுத லாகும். செய்யார், ஆரணி, போளூர் நகரங் களைக் கடந்துதான் திருவண்ணாமலை வர வேண்டும். அதேபோல் கிழக்கே மேல்மருவத் தூர் அருகில் சீசமங்கலத்தில், தெற்கே தருமபுரி மாவட்டம் அருகே மோத்தக்கல்லில் தொடங்கு கிறது. அங்கிருந்து தலைநகர் வருவதற்கு 2 மணி நேரத்துக்கு மேலாகிவிடுகிறது. வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெறும் மனுநீதி நாள், மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் மாவட்ட அளவிலான விவசாயி கள் குறைதீர்ப்புக் கூட்டம், வாரந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு பொதுமக்கள் வந்துசெல்வதற்குள் நொந்துபோகிறார்கள். இதனால் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் செய்யார் கோட்டாட்சியர் அலுவலகம், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படுகின்றன. ஆனாலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தால் பிரச்சனை தீருமென்ற நம்பிக்கையில் மக்கள் வரத்தான் செய்கிறார்கள்.

செய்யார் நகரம், அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், ஆரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், தங்கள் சிரமத்தைக் குறைக்க தங்கள் பகுதியை புதிய மாவட்டமாகப் பிரித்துத் தரவேண்டுமென்று தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அ.தி. மு.க. ஆட்சிக்காலத்தில் போராட்டம் நடை பெற்றபோது, தி.மு.க. நிர்வாகிகள் அந்த போராட்டத்துக்கு மறைமுக ஆதரவு தந்து ஊக்குவித்தனர். தி.மு.க. ஆட்சி வந்தபிறகு அதே பிரமுகர்கள் சைலண்ட்மோடுக்கு போய்விட்டார்கள் எனக் குறைப்படுகின்றனர் வியாபாரிகளும், பொதுநல அமைப்பினரும். மாவட்டத்தில் 12 தாலுகாக்கள் உள்ளன. இதில் பல தாலுகாக்கள் பரப்பளவில் பெரியதாக உள்ளன. மக்கள் சிரமத்தைக் குறைக்க அதனை யாவது பிரியுங்கள் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லையென இப்பகுதி தி.மு.க.வினரே வருத்தப்படுகிறார்கள்.

தெலுங்கானாவில் சராசரியாக ஒரு மாவட்டத்தின் மக்கள் தொகை 11 லட்சம் மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தின் மக்கள் தொகை 34 லட்சம், மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகை 30 லட்சம், திருவள்ளூர் 37 லட்சம், கோவை 34 லட்சம், திருப்பூர் 25 லட்சம், கடலூர் 26 லட்சம், திருச்சி 27 லட்சம், திருவண்ணாமலை 25 லட்சம், தஞ்சாவூர் 24 லட்சம். அதனால், தமிழகத்தின் மாவட்டங்களை மறுசீரமைத்து சராசரியாக 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் என்கிற கணக்கில் புதிய மாவட்டங்களை உருவாக்கவேண்டும் என்கிற கோரிக்கை, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உட்பட சில தலைவர்களால் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

புதிய மாவட்டத்தை உருவாக்கி நிர்வகிக்க, குறைந்தபட்சம் 300 கோடி அளவுக்கு நிதி தேவைப்படுகிறது. அரசாங்கம் நிதி நெருக்கடியிலுள்ளதால் தள்ளிப் போடுவதாகக் கூறுகிறார்கள் ஆளுங் கட்சியினர்.

nkn120425
இதையும் படியுங்கள்
Subscribe