புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க! சிக்கிய 'மைக்' டைசன்! அலறும் மந்திரிகள்

jayakumar

சுமார் 9 மாதங்களுக்கு முன் ஒருநாள் "சிந்து' என்ற பெண் அ.ம.மு.க.வைச் சேர்ந்த வெற்றிவேலை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். தன்னை அமைச்சர் ஜெயக்குமார் ஏமாற்றிவிட்டதாகச் சொன்னதும் பரபரப்பானார் வெற்றி. சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.விலிருந்து ஒதுக்கிவைப்பதாக முதன்முதலில் அறிவித்த ஜெயக்குமாருக்கு எதிராக சரியான துருப்புச்சீட்டு கிடைத்தது என்று சிந்துவை சந்தித்தார்.

""எனக்கு கல்யாணமே ஆகலைன்னு பரிகாரம் கேட்பதற்காக கோவளம் தர்காவுக்கு போனேன். அங்கே ஒரு சாமியார் என்னிடம் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கி ஏமாத்திட்டான். அவன்கிட்டயிருந்து பணத்தை வாங்கித்தர உதவும்படி கேட்க நான் அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்தேன். அப்போது மயக்க மருந்து கொடுத்து என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார்.

jayakumarஅதுக்கப்புறம் பல இடங்களுக்கு என்னை அழைத்துப்போய் அவருடைய இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டார். ஒருகட்டத்தில் "என்னை இப்படி ஆக்கிட்டீங்களே'ன்னு ஜெயக்குமாரிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர்... தனது மனைவி, மகன் சம்மதத்தோடு என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன்''’என்று சிந்து தனது கதையை வெற்றிவேலிடம் கூறியிருக்கிறார்.

ஒருமாதம் கர்ப்பமாக சிந்து இருப்பதை அறிந்த வெற்றிவேல், ஜெயக்குமாருக்கு எதிராக இதை பயன்படுத்த திட்டமிட்டு, விசாரணையில் இறங்குகிறார். அப்போதுதான் திண்டுக்கல்லில் ஜெயக்குமார் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அருகிலேயே இந்த பெண் தங்கியிருந்த விவரம், ஜெயக்குமார் அறைக்குள் நுழைந்த காட்சி, ஹோட்டலில் இருந்து இருவரும் பல இடங்களுக்கு போன காட்சிகளை சி.சி.டி.வி. உதவியோடு சேகரிக்கிறார்.

அதன்பிறகு, ஜெயக்குமாருடன் இந்தப் பெண்ணின் சார்பாக அவருடைய அம்மாவையும், இவரையும் பலமு

அதன்பிறகு, ஜெயக்குமாருடன் இந்தப் பெண்ணின் சார்பாக அவருடைய அம்மாவையும், இவரையும் பலமுறை பேசவைத்து அவற்றையும் ரெகார்ட் செய்கிறார். ""போதுமான ஆதாரம் கிடைத்துவிட்டது. ஜெயக்குமார் மீது போலீஸில் புகார்செய்துவிட்டு, குழந்தையை கலைத்து விடுங்கள்'' என்று வெற்றிவேல் கூறியிருக்கிறார். அதற்கு அந்தப்பெண், ""இல்லை... இந்தக் குழந்தையை பெற்றுக்கொண்டு, அவரை பழிவாங்கப்போகிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

சிந்துவின் அப்பா வெளிநாட்டில் வேலை செய்கிறார். அம்மா பெயர் சாந்தி. முத்தியால்பேட்டையில் உள்ள பிபிசி வில்லா காம்ப்ளக்ஸில் முதல் தளத்தில் 17-ஆம் எண் வீட்டில் குடியிருக்கிறார்கள். வீடு முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வீடு பூட்டியிருந்ததால், இந்தப்பெண் குறித்து மேலும் தகவல் தெரிந்துகொள்வதற்காக வெற்றிவேல் தரப்பிடம் பேசினோம். அவர்கள் ஜெயக்குமார் குறித்து புதிய பல தகவல்களை கொடுத்தார்கள்.…""ஜெயக்குமாருக்கு இது ஒன்றும் புதிதில்லை. தனது சொந்தங்களிடையிலேயே மேற்கொண்ட அணுகுமுறையால் ஒரு தற்கொலைக்கு காரணமாக இருந்தார். இன்னொரு பெண்ணின் கணவர் குடித்தே நாசமாகப் போனார். கட்சிக்காரரின் குடும்பத்தில் நுழைந்து அவருடைய குடும்பமும் கெட்டுப்போனது. பொதுவாக ஜெயக்குமார் புகைப்பிடிக்க மாட்டார். மது அருந்தமாட்டார் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், எல்லாப் பழக்கமும் அவருக்கு இருக்கிறது. 60 வயதாகும் அவருக்கு இது ஒன்றும் புதிதில்லை. அவருக்கு எதிராக ஆதாரங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. இவர் மட்டுமில்லை, அமைச்சர் கே.சி.வீரமணி மீதும் இருக்கிறது''’என்று பகீர் கிளப்பினார்கள்.

சிந்துவை நேரில் விசாரிப்பதற்காக அவருடைய மொபைல் நம்பரை வெற்றிவேல் தரப்பிடம் பெற்றோம். அவருடைய எண்: 73583 54848. இந்த எண்ணுக்கு அழைத்தபோது சில நேரம் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. சில நேரம் ரிங் போய் கட்டாகியது. இதைத் தொடர்ந்தே சிந்துவின் வீட்டுக்கே போனோம். வீடு பூட்டியிருந்தது. சிந்துவின் போன் எண்ணை ட்ரூகாலரில் போட்டுப் பார்க்கும்போது அந்த எண் "சிந்து சந்தோஷ்' என்று காட்டியது. "இந்த சந்தோஷ் யார்' என்று வெற்றிவேல் தரப்பிடம் கேட்டோம். அவர்கள், "சிந்துவின் சகோதரர்' என்றார்கள்.

இதையடுத்து அந்த சந்தோஷ் யார் என்று அறிய தேடுதலைத் தொடர்ந்தோம். அவருடைய மொபைல் எண் கிடைத்தது. எண்: 86087 92996. இந்த எண்ணை வைத்து அவருடைய முகவரியைக் கண்டுபிடித்தோம். சந்தோஷின் அப்பா பெயர் பார்த்தசாரதி என்றும் அம்மா பெயர் பரிமளம் என்றும் அறிந்தோம். வியாசர்பாடியில் உள்ள முல்லை குவார்ட்டர்ஸில் எம் 19/3 என்ற முகவரியில் உள்ள சந்தோஷின் வீட்டுக்குப் போனோம். "சிந்து என்ற பெண்ணுடன் சுமார் 12 ஆயிரம் வினாடிகள் போனில் பேசியிருக்கிறாரே, அவருக்கும் உங்கள் மகனுக்கும் என்ன உறவு?' என்று கேட்டோம். சந்தோஷின் அம்மா அழும் நிலைக்கே வந்துவிட்டார்.

santhosh

நாம் வெளியே வந்து சந்தோஷை தொடர்புகொண்டோம். அவர் மின்ட் பஸ் ஸ்டாண்ட் அருகே வரும்படி சொன்னார். "உங்கள் வீட்டருகே வந்துவிடுங்கள்' என்றோம். "சரி' என்றவர் வரவில்லை. மீண்டும் நாமே அவரைத் தொடர்புகொண்டோம். போனிலேயே பேசத் தொடங்கிவிட்டார்.

""சிந்து என்னோட நண்பரின் தங்கை. என்னுடைய பெயரில்தான் நான் சிம்கார்டு வாங்கிக் கொடுத்தேன்''’என்றார். நாம், "சிந்துவிடம் 12 ஆயிரம் வினாடிகள் பேசியிருக்கிறீர்களே ஏன்?' என்று கேட்டோம். உடனே, பக்கத்திலிருந்த இன்னொருவரிடம் போனைக் கொடுத்துவிட்டார். அவரோ, "கல்யாணம் ஆகாத பையனை யாருடனோ சம்பந்தப்படுத்திப் பேசுவது சரியல்ல'’என்று கன்னாபின்னாவென்று திட்டினார். நாம் மீண்டும் சந்தோஷின் அப்பா, அம்மாவிடம் சந்தோஷ் வந்தால் பேசச்சொல்லும்படி கூறிவிட்டு வந்தோம். அதன்பிறகு சந்தோஷை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் போனை எடுக்கவில்லை. அவருடைய பெற்றோரும் நம்மைத் தொடர்புகொள்ளவில்லை.

இதனிடையே இரவு முத்தியால்பேட்டை காவல்நிலையத்திலிருந்து நமக்கு ஒரு போன் வந்தது. போன் செய்தவர், "வழக்கறிஞர் ஒருவர் சிந்து மீது புகார் கொடுத்திருக்கிறார். சவுகார்பேட்டையில் உள்ள வங்கி மேலாளர் ஒருவரையும், எக்மோரில் உள்ள சர்ச் பாதிரியாரையும் இதுபோலவே மிரட்டியிருக்கிறார்' என்றார். வங்கி மேலாளரையும், பாதிரியாரையும் மிரட்டியது தொடர்பான பஞ்சாயத்து காவல்நிலையத்தில்தான் நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் பழசு என்றாலும், இவைகுறித்து ஜெயக்குமார் தூண்டுதலில், அக்டோபர் 24-ஆம் தேதிதான் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நமக்கு நெருக்கமான சோர்ஸ் கூறினார்.

ஆக, இந்த விவகாரத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் ஏராளமாக இருக்கின்றன. "சிந்து யார்? ஜெயக்குமாருக்கு குழந்தை பெற்றதாக அந்த பெண் ஏன் தானாக முன்வந்து அறிவிக்கவில்லை? வெற்றிவேல் மூலமாக இந்த அறிவிப்பு வந்தது ஏன்?' என்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

ஜெயக்குமார் தரப்பைத் தொடர்புகொண்டபோது, இந்த மொத்த எபிஸோடும் ஆடியோ மிக்ஸிங் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். "இது ஒரு பிளாக்மெயில் கும்பல்' என்கிறார்கள். அதேசமயம், திண்டுக்கல் ஹோட்டலில் ஒருவேளை சிந்து வந்து தங்கியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

வெற்றிவேல் தரப்பிலோ, "ஹோட்டலில் சிந்து தங்கியதற்கான பில் இருக்கு. அங்கு எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் இருக்கு. பாதிக்கப்பட்ட சிந்து நேற்றுவரை சென்னையில் இருந்ததாகவும், தாங்கள்தான் அந்தப் பெண்ணை வேறு இடத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும்' கூறுகிறார்கள்.

jayakumar"சிந்துவை மறைக்க காரணம் என்ன? சிந்து மீது மற்ற புகார்கள் இருக்கின்றனவே அவை உண்மையா? சந்தோஷுக்கும் சிந்துவுக்கும் இடையிலான உறவு என்ன?' என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.

அதேசமயம் பள்ளியில் படிக்கும்போது இதே போன்ற சர்ச்சையில் சிக்கி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டவர் சிந்து என்ற தகவலும் உள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியும் வேறொரு பெண்ணுடனான சர்ச்சையில் சிக்கி அவதிப்படுகிறார்.

ஜெயக்குமார் தரப்பில், "சிந்துவுக்கும் சந்தோஷுக்கும் பிறந்த குழந்தை' என்றும், வெற்றிவேல் தரப்பில் "ஜெயக்குமாருக்கு பிறந்த குழந்தை' என்றும் கூறும் நிலையில்... உண்மையை அறிய டி.என்.ஏ. டெஸ்ட் வரை போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பின்னணிப் பாடகி சுசீலாவுடன் இணைந்து அமைச்சர் ஜெயக்குமார் பாடியதால் சமூக வலைத்தளங்களில் "மைக்' டைசன் ஆனார் அமைச்சர்.

இதுமாதிரி நம்மளப் பத்தின எசகுபிசகான ஆதாரம் எதுவும் சிக்கியிருக்குமோ என மற்ற மந்திரிகள் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

_________________

ஜெ.வைத்த வேட்டு!

nakkheeran

அ.தி.மு.க.வில் ஜெ. பிறந்த நாளைத் தவிர வேறு யார் பிறந்த நாள் என்றாலும், அது அமைச்சராக இருந்தாலும் சரி, தடபுடலாக கொண்டாடக் கூடாது என்பது ஸ்ட்ரிக்ட் ஆர்டர். இதையும் மீறி, 2012-ல் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார், தனது பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடினார். கோட்டையை ஆளும் யோகம் விருச்சிக ராசிக்காரரான ஜெயக்குமாருக்கு இருப்பதாகவும் அடுத்தது அண்ணன்தான் என அவரது ஆதரவாளர்கள் கோஷம் போட்டதாகவும் 2012 செப்.22-25 தேதியிட்ட நக்கீரனில் செய்தி வெளியானது. நமது செய்தி வெளியான மறுவாரமே ஜெயக்குமாரின் சபாநாயகர் பதவிக்கு வேட்டு வைத்தார் ஜெ. இந்த செய்தியையும் 2012 அக்.03-05 தேதியிட்ட நக்கீரனில் வெளியிட்டிருந்தோம்.

nkn301018
இதையும் படியுங்கள்
Subscribe