ஆட்சியில் பங்கு கேட்டு அடம்பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புரியும்படி, "தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது' என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிகஅழுத்தமாகத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்துவிட்ட பிறகும், தங்களது கோரிக்கையை கைவிடவில்லை காங்கிரஸ் கட்சி. மாறாக, முன்பைவிட வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் பேசிவருகிறார்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள். இதனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி விவகாரம் சீரியஸாகிக்கொண்டிருக்கிறது.
கூட்டணி ஆட்சிக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்ததும், அதே வேகத்தில் ஆவேசப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் நாடாளு மன்ற லோக்சபா கொறடாவுமான மாணிக்கம் தாகூர், "கூட்டணி ஆட்சியா? ஒற்றைத் தலைமையிலான ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார் கள். 2006 தேர்தலின்போதே இதற்கு முடிவுகட்டியிருக்க வேண்டும். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், யாருக் கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக 96, காங்கிரஸ் 34, பா.ம.க. 18 இடங்களை பிடித்தன. காங்கிரஸ் ஆதரவுடன்தான் ஆட்சி அமைத் தது தி.மு.க. அதனால்தான் தி.மு.க. அரசை "மைனாரிட்டி கவர்மெண்ட்' என ஜெயலலிதா தொடர்ச்சியாக விமர்சித்துவந்தார். அந்த தேர் தலின்போதே கூட்டணி ஆட்சியை உருவாக்கியிருக்கவேண்டும்''’என்றார்.
மாணிக்கம் தாகூரின் இந்த பதிலடியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிஸ்ட் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தியும், ஸ்டாலினின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இவர்களின் ஆவேசத்துக்கு எதிராக தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ. தளபதி உள்ளிட்ட பலரும் காங்கிரசை கடுமையாகத் தாக்கினர். இதனால் கூட்டணிக்குள் குழப்பம் அதிகரித்தது.
இந்த நிலையில், கூட்டணி ஆட்சியை மறுக்கும் தி.மு.க. தலைமையை சீண்டும் வகையில் அடுத்த ரவுண்டில் இவர்கள் குதித்துள்ளனர். 15-ஆம் தேதி மதுரையில் கூட்டப்பட்ட மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், "ராகுல்காந்திக
ஆட்சியில் பங்கு கேட்டு அடம்பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புரியும்படி, "தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது' என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிகஅழுத்தமாகத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்துவிட்ட பிறகும், தங்களது கோரிக்கையை கைவிடவில்லை காங்கிரஸ் கட்சி. மாறாக, முன்பைவிட வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் பேசிவருகிறார்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள். இதனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி விவகாரம் சீரியஸாகிக்கொண்டிருக்கிறது.
கூட்டணி ஆட்சிக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்ததும், அதே வேகத்தில் ஆவேசப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் நாடாளு மன்ற லோக்சபா கொறடாவுமான மாணிக்கம் தாகூர், "கூட்டணி ஆட்சியா? ஒற்றைத் தலைமையிலான ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார் கள். 2006 தேர்தலின்போதே இதற்கு முடிவுகட்டியிருக்க வேண்டும். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், யாருக் கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக 96, காங்கிரஸ் 34, பா.ம.க. 18 இடங்களை பிடித்தன. காங்கிரஸ் ஆதரவுடன்தான் ஆட்சி அமைத் தது தி.மு.க. அதனால்தான் தி.மு.க. அரசை "மைனாரிட்டி கவர்மெண்ட்' என ஜெயலலிதா தொடர்ச்சியாக விமர்சித்துவந்தார். அந்த தேர் தலின்போதே கூட்டணி ஆட்சியை உருவாக்கியிருக்கவேண்டும்''’என்றார்.
மாணிக்கம் தாகூரின் இந்த பதிலடியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிஸ்ட் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தியும், ஸ்டாலினின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இவர்களின் ஆவேசத்துக்கு எதிராக தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ. தளபதி உள்ளிட்ட பலரும் காங்கிரசை கடுமையாகத் தாக்கினர். இதனால் கூட்டணிக்குள் குழப்பம் அதிகரித்தது.
இந்த நிலையில், கூட்டணி ஆட்சியை மறுக்கும் தி.மு.க. தலைமையை சீண்டும் வகையில் அடுத்த ரவுண்டில் இவர்கள் குதித்துள்ளனர். 15-ஆம் தேதி மதுரையில் கூட்டப்பட்ட மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், "ராகுல்காந்திக்கு தி.மு.க. கொடுக்கும் மரியாதையை, கீழ்மட்டத்திலுள்ள காங்கிரஸ்காரர்களுக்கும் கொடுக்க வேண்டும். எங்களைப் பற்றி தளபதி பேசியதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்ததற்கு, இதுவரை தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் கமிஷனோ, காண்ட்ராக்டோ கேட்கவில்லை. நடவடிக்கைதான் கேட்கிறோம்; மரியாதையை எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ்காரன் யாருடைய சொத்துக்கும் ஆசைப்பட்டவன் கிடையாது. தி.மு.க. செய்த தவறுக்கு நாங்கள் பழியைச் சுமக்கிறோம்''’என்று கடுமை காட்டியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.
மாணிக்கம் தாகூர் பேசியதும் பிரவீன் சக்ரவத்தியும் கோதாவில் குதித்துவிட்டார். மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை 3,000, கோடை கால சிறப்புத்தொகை 2,000 என 5,000 ரூபாயை கொடுத்த ஸ்டாலினின் அறிவிப்பைக் குறித்து விமர்சனம் செய்துள்ள பிரவீன் சக்ரவர்த்தி, மகளிர் உரிமைத்தொகை சிறந்த திட்டம். ஆனால், தேர்தல் வெற்றி யை அது மட்டுமே உறுதிப்படுத்தும் என நம்புவது மூட நம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 மாநில அரசுகளில் 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 அரசுகள் தோல்வியடைந்தன''’என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படி தி.மு.க.வை மீண்டும் மீண்டும் இவர்கள் சீண்டிப் பார்ப்பதால் காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் தலைமை மீதும் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரைப்போலவே தி.மு.க.வின் இரண்டாம்நிலை தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை இந்த கோபம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.
மாணிக்கம்தாகூரும், பிரவீன் சக்ரவர்த்தியும் ராகுல்காந்திக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால், இவர்களின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை ராகுல்காந்தியின் கருத்தாகவே தி.மு.க. தலைமை கவனிக்கிறது. காரணம், ராகுல்காந்தியை இவர்கள் சந்தித்துவிட்டு வந்த பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் சீண்டிப் பார்ப்பதுதான்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, "கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு ஒத்துவராது என தொடங்கி, ஸ்டாலின் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் மொழிபெயர்த்து மாணிக்கம்தாகூரும், பிரவீன்சக்ரவர்த்தியும், ராகுல்காந்திக்கு அனுப்பி வைத்தனர். இருவரையும் நேரில் அழைத்து விசாரித்தார் ராகுல். அந்த சந்திப்பில், விஜய்யை முன்னிறுத்தி காங்கிரஸ் விளையாடுவதாக தி.மு.க. நினைக்கிறது. அதிக இடங்களை வாங்க வேண்டுமென்பதற்காகத்தான் ஆட்சியில் பங்கு விசயத்தை நாம் எடுத்திருப்பதாக தி.மு.க. தலைமையை நம்பவைக்கிறார்கள் என இவர்கள் விவரித்துள்ளனர். இதனையடுத்து, நமது கோரிக்கை சீரியஸானது. அதிக சீட்டுகளும் வேண்டும்; ஆட்சியில் பங்கும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் உங்கள் பாணியில் பேசலாம் என ராகுல்காந்தி அனுமதி தந்திருக்கிறார். அதனால், இவர்களின் பேச்சு ராகுலின் அனுமதியுடன்தான் நடக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/stalin-raghul1-2026-02-16-15-57-06.jpg)
அவர்களை அனுப்பி வைத்துவிட்டு மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், கிரிஷ் ஷோடங்கர் ஆகியோரோடு விவாதித்திருக்கிறார் ராகுல். அப்போது, கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு ஒத்துவராது என்கிற ஸ்டாலினின் கருத்துகுறித்துத்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, 2006போல இப்போதும் நாம் ஏமாந்துவிடக்கூடாது. 2021 தேர்தலில் 25 சீட் கொடுத்தனர். இப்போ, 28 சீட்டுகள்னு தி.மு.க. சொல்லுது. தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது 2 சீட்டுகளை கூடுதலாக்கி 30 சீட்டுகளை வாங்கிக்கொள்ள வற்புறுத்துவார்கள். கூட்டணி ஆட்சிக்கு ஸ்டாலின் ஒப்புக்கொள்ளமாட்டார். உங்களிடமே ஸ்டாலின் பேசுவார். அவரது பேச்சில் நீங்கள் மயங்கிவிடக்கூடாது. ஆட்சியில் பங்குக்கு அவரை சம்மதிக்க வைக்க வேண்டும். அதிகாரத்தில் பங்கு கேட்க பிரதான மாநில கட்சிகளுக்கு உரிமை இருக்கும்போது மாநில அரசு அதிகாரத்தில் பங்கு கேட்க தேசிய கட்சிகளுக்கும் உரிமை உண்டு.
இன்றைய அரசியல் சூழலில், தி.மு.க.வுக்கு, காங்கிரஸ் தேவைப்படுகிற அளவுக்கு நமக்கு தி.மு.க. தேவையில்லை. ஏன்னா, நமக்கு விஜய் என்கிற சாய்ஸ் இருக்கு. ஆனா, தி.மு.க.வுக்கு காங்கிரஸ் வெளியேறினால் காங்கிரஸ் இடத்தை பூர்த்திசெய்ற அளவுக்கு வேறு எந்த சாய்ஸும் இல்லை. காங்கிரஸுக்கு வெறும் 5 சதவீத ஓட்டுதானே இருக்கு. அதை ஈசியா மேனேஜ் பண்ணிடலாம்னு ஸ்டாலினுக்கு யோசனை சொல்வாங்க. 5 சதவீத ஓட்டுன்னே வெச்சிக்கிட்டாலும், காங்கிரஸ் இருந்தால்தான் தி.மு.க. கூட்டணிக்கு ஒரு வலிமை கிடைக்கும். அந்த இமேஜை தி.மு.க.வுக்கு எந்த கட்சியும் தந்துவிடாது. தேர்தல் அரசியலில் அரித்மேட்டிக் கால்குலேசனும் இமேஜும் சேர்ந்தாதான் வெற்றி. அதனால, ஆட்சியில் பங்கு விசயத்தில் நாம் காம்ப்ரமைஸ் ஆகக்கூடாது என ராகுலுக்கு புகட்டியிருக்கிறார்கள். இதற்கு ராகுலும் தலையசைத்து ஆமோதித்துள்ளார்''’என்று விவரிக்கின்றனர் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, "காங்கிரசை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பதோடு 2029 நாடாளுமன்றத் தேர்தலையும் வச்சு கணக்குப்போடுகிறது. அதாவது, கூட்டணியை விட்டு நாமளாக வெளியேறுவதை விட தி.மு.க.வே நம்மை வெளியேற்ற வேண்டும். அப்போது காங்கிரஸும் காங்கிரஸ் வைத்த கோரிக்கையும் மக்கள் மத்தியில் பாசிட்டிவாகப் பேசப்படும். அந்த இமேஜோடு விஜய்யின் த.வெ.க. கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உதவும்.
அதாவது, நடிகர் விஜய்க்கு தமிழகத்தையும் கடந்து புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யுடன் கூட்டணி வைப்பதினால் அவரது ரசிகர்களின் ஆதரவு, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தையும் கடந்து அண்டை மாநிலங்களிலும் காங்கிரசுக்கு பலனளிக்கும் என்று கணக்குப் போட்டு காய் நகர்த்துவதால்தான் தி.மு.க.வோடு தொடர்ந்து முரண்பட்டு மோதலை அதிகரித்து வருகிறது காங்கிரஸ்” என்கின்றனர்.
தி.மு.க.வை பொறுத்தவரை 165 இடங்களுக்கும் குறைவில்லாமல் போட்டி யிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. கூட்டணியிலுள்ள சிறிய கட்சிகளையும் உதயசூரியன் சின்னத் தில் போட்டியிட வைக்கவே திட்டமிட்டுள்ளது. அப்போது தான், தனிப்பெரும்பான்மைக்கான இடங்களில் வெற்றிப்பெறுவதை உறுதிசெய்யமுடியும் என ஸ்டாலின் கணக்கிட்டுள்ளார். அந்த வகையில், காங்கிரசின் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ள மறுக்கும் அதே வேளையில், அதிக சீட்டுகளை ஒதுக்கவும் தயக்கம் காட்டுகிறது.
காங்கிரஸுக்கு அதிக சீட்டுகள் ஒதுக்கினால், கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளும் கூடுதல் சீட் கேட்டு அடம் பிடிக்கும். அவர்களுக்கும் கூடுதல் சீட் ஒதுக்கினால் தி.மு.க. போட்டியிடும் எண்ணிக்கை குறையும். இதனால் பெரும் பான்மைக்கான மேஜிக் நெம்பரை எட்டிப் பிடிப்பதில் நெருக்கடி ஏற்படும். இது மட்டுமல்ல, அதிக இடங்களை தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கி னால் அந்த இடங்களில் எதிர்க்கட்சிகள் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகமாகும். அதை சமாளிப்பதும் பெரும் சிக்கல். அதேசமயம், கூடுதல் சீட் மறுக்கப்பட்டால் கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதும் கடினம். இதனை எதிர்கொள்வது அதைவிட சிரமம்.
இப்படிப்பட்ட நெருக்கடிகளும், சவால்களும் இருக்கும் சூழலில், காங்கிரசுடன் 22-ஆம் தேதி தொகுதி பேச்சுவார்த்தையை துவக்க தி.மு.க. முடிவு செய்திருக்கிறது. அதில் தி.மு.க. முன்வைக்கும் யோசனைகளை சம்மதிக்காமல் கூட்டணி உறவை காங்கிரஸ் முறிக்கும்பட்சத்தில் 1996-ல் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு மீண்டும் உருவாகும் என்கிற தகவல்களும் கிடைக்கின்றன.
இந்நிலையில்... தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அவசரமாக டெல்லிக்கு அழைத்துள்ளது காங்கிரஸ் தலைமை. இதனையடுத்து, திங்கள்கிழமை டெல்லிக்கு பறந்தார் செல்வப்பெருந்தகை. அவரின் அவசர டெல்லி பயணம் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. "தி.மு.க.விடம், கூடுதல் சீட்; கூட்டணி ஆட்சி' கேட்டு காங்கிரஸ் தலைமை மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க. ஆதரவு மனநிலையில் செல்வப் பெருந்தகை இருந்துவருவதால் அவருக்கு தேவையான அட்வைஸ் கொடுக்கவே அவரை டெல்லி அழைத்திருக்கிறது.
மேலும், "காங்கிரசுடன் அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தையை 22-ஆம் தேதி தி.மு.க. துவக்கவிருப்பதால், அது குறித்து விவாதிப்பதற்கும் அழைக் கப்பட்டிருக்கிறார் செல்வப் பெருந்தகை'' என்கிறார்கள் கதர்ச் சட்டையினர்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us