தமிழ்நாடு டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலு வலகத்திற்கு வந்த அறிக்கையில், கடந்த காலங்களில் குற்ற வழக்குகளில் சிக்கியவர் களைக் கவனித்து, மீண்டும் குற்றச் செயல் களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், காவல் நிலைய குற்றப்பட்டியலில் பெயர் சேர்க்கவும் கேட்டுக்கொண்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, பழைய குற்ற வழக்குகளில் உள்ளவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அனைத்து டி.எஸ்.பி.க் களுக்கும் அனுப்பி, அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் மூலம் கண்காணித்து அறிக்கை அனுப்பக் கேட்கப்பட்டிருந்தது.
இதேபோல புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி லிருந்து பழைய கஞ்சா வியாபாரிகள் பட்டியல் அறந்தாங்கி டி.எஸ்.பி. ரவிக்குமாருக்கு வந்தது. அந்த பட்டியலை வைத்துக்கொண்டு பழைய குற்ற வழக்குகளில் உள்ளவர்களிடம் புரோக்கர்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுதொடர்பான ஆடியோக்களும் சுற்றிச்சுற்றி வருகிறது. இதில் ஒரு ஆடியோவில், ஆய்வாளருக்காக பேசும் புரோக்கரான மாதேஷ் என்பவர், மணல் வழக்கிலுள்ள சேது என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசுகிறார். இதுகுறித்த புகார், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்தறை அதிகாரிகளுக்கு செல்ல, தகவலை தெரிந்துகொண்ட அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டி, உடல்நிலை சரியில்லையென்று மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொண்டார். இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி, இந்த ஆடியோக்களில் தொடர்புடைய மதன், மாதேஷ், வழக்கறிஞர் ராமநாதன் ஆகியோரிடம் ஏ.டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை செய்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aranthangi_1.jpg)
விசாரணைக்குப்பின் மதன் நம்மிடம், "சார் நான் சீட்டு நடத்தினபோது எனது வாடிக் கையாளர் சொன்ன நம்பருக்கு சீட்டுப்பணம் அனுப்பினேன். அந்த நம்பர் பெண் கஞ்சா வியாபாரியோட நம்பர்னு எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணை பிடிக்கும்போது என்மீதும் வழக்காகி, அப்புறமா விடுதலையாகி ஃபாரஸ்ட்ல ஒப்பந்தம் எடுத்து வேலை செய்றேன்.
இந்த நேரத்தில் பழைய குற்ற வழக்குகளில் உள்ளவர்கள் பட்டியலில் என் பெயரும் இருந்ததால், அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி டீம், நான் வீட்ல இல்லாதப்ப என் வீட்டில் சோதனை செஞ்சிருக்காங்க. நான் வீட்ல இல்லாதப்ப ஏன் வந்தீங்கன்னு கேட்டேன். நான் மறுபடியும் கஞ்சா விற்கிறேன்னு எஸ்.பி. ஆபீசுக்கு தகவல் போயிருக்கிறதா சொல்லி, 2 லட்சம் கொடுத்தால், கஞ்சா விற்கல, திருந்திட்டார்னு அறிக்கை கொடுக்குறேன்னு எனக்கு வேண்டிய வக்கீல் மூலமா எங்கிட்ட பேசினார். நான் ஏன் பணம் கொடுக் கணும்னு கேட்டேன். இந்தப் பணம், டி.எஸ்.பி. உள்பட எல்லாருக்கும் தான்னு சொல்லியிருக்கார். அதேபோல், அந்த கஞ்சா பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் வாங்கிட்டு, என்னிடம் ஏன் 2 லட்சம் கேட்கறீங்கன்னு கேட்டேன். அப்புறமா புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் கொடுத்துட்டேன். இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் உடல்நிலை சரியில்லைன்னு மருத்துவமனைக்கு போய்ட்டார். இதுகுறித்து என்னிடம் விசாரணை நடத்தியதில் அனைத்தையும் சொல்லிட்டேன். நிச்சயம் நடவடிக்கை இருக்கும்னு நம்புறேன்'' என்றார்.
மாதேஷ் நம்மிடம், "என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்தையும் சொல்லியிருக்கேன். சேது என்னிடம் பேசியபோது அவரை சமாளிக்க இன்ஸ்பெக்டர் பணம் கேட்டதாக சொன்னேன்'' என்றவரிடம், "வேறு சில புகார்களுக்கும் பணம் வாங்கிக் கொடுத்ததா சொல்லியிருக்கீங்களே?'' என்றபோது, "அதுவும் சேதுவை சமாளிக்கச் சொன்னது தான்'' என்றார். வழக்கறிஞர் ராமநாதனின் போனை எடுத்தவர், "சார் வெளியில போயிட்டார்'' என்றார்.
அறந்தாங்கி காவல் நிலையம் வட்டாரத்தில், "டி.எஸ்.பி. ரவிக்குமார், அரசர்குளத்தில் ஒரு கடையில் ரூ.80 ஆயிரத்திற்கு கட்டில் வாங்கிட்டு பணம் கொடுக்கலன்னு எஸ்.பி. ஆபீஸ்வரை புகார் போனபிறகு பணம் கொடுத்து சரி பண்ணினார். யார் மேல குற்றச் சாட்டு சொல்றாங்களோ, அவங்களிடம் நட்பாக இருப்பதாக டி.எஸ்.பி மேல புகார் போனதால மத்தவங்க மேல பழியப் போட்டு தப்பிச்சுட்டார்'' என்றனர்.
ஆய்வாளர் செந்தூர்பாண்டி ஏற்கெனவே கறம்பக்குடியில் இருந்தப்ப ஜாதிரீதியாக செயல் படுவதாக குற்றச்சாட்டு இருந்தது. காவலர்களை பொது இடங்களில் ஒருமையில் பேசுவார். அதனால் கரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட வர், புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய சில்மிசப் பேச்சால் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, சில மாதங்களுக்கு முன்புதான் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
இங்கும் கலெக்சனில் இறங்கிய சூழலில் தான் மணல் வண்டி சேது, மதன் ஆகியோரிடம் புரோக்கர்கள் மூலம் பணம் கேட்டு சிக்கியிருக் கிறார். இப்ப ஏ.டி.எஸ்.பி. முரளிதரன் சார் விசாரணை செய்துள்ளதால் இனி நடவடிக்கை இருக்குமென்று நம்புகிறோம்'' என்றனர்.
காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டி, "நான் யார்கிட்டயும் பணம் கேட்கல. அந்த ஆடியோவுல அவங்களுக்குள்ளயே பேசிக்கிறாங்க. எனக்கு அதில் சம்பந்தமில்லை. என் மேல வீண்பழி போடுறாங்க'' என்றார்.
இந்த புகார்கள் குறித்து விளக்கமறிய டி.எஸ்.பி. ரவிக்குமாரை தொடர்பு கொண்டோம், போனை எடுக்கவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/aranthangi-t.jpg)