பீகார் தேர்தலில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் தேர்தலில் 202 இடங்களில் அக்கூட்டணி வெற்றிபெற, அதில் பா.ஜ.க. 89 இடங்களையும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் சம்பாதித்துள்ளன. மாறாக மகாபந்தன் கூட்டணி ஒட்டுமொத்தமாக 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆர்.ஜே.டி., காங்கிரஸ் இரண்டுமே முந்தைய தேர்தலைவிட குறைவான தொகுதிகளையே வென்றுள்ளன.
எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்ட 68 லட்சம் வாக்காளர்கள் போக இறுதி வாக்காளர்கள் 7.42 கோடிப் பேர் என தேர்தல் ஆணையம் இறுதிசெய்ய, களத்தில் இறங்கின கட்சிகள். இதில் தேர்தலுக்கு நெருக்கமாக பீகாரின் 75 லட்சம் பெண்களுக்கு தொழில் தொடங்க ஆளும்கட்சி ரூ 10,000 நிதி வழங்குவதை மௌனமாக தேர்தல் ஆணையம் வேடிக்கைபார்த்தது.
அதேபோல, தேர்தல் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் கடைசிவரை காங்கிரஸ்- ஆர்.ஜே.டி. கட்சிகள் அடித்துக்கொண் டிரு
பீகார் தேர்தலில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் தேர்தலில் 202 இடங்களில் அக்கூட்டணி வெற்றிபெற, அதில் பா.ஜ.க. 89 இடங்களையும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் சம்பாதித்துள்ளன. மாறாக மகாபந்தன் கூட்டணி ஒட்டுமொத்தமாக 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆர்.ஜே.டி., காங்கிரஸ் இரண்டுமே முந்தைய தேர்தலைவிட குறைவான தொகுதிகளையே வென்றுள்ளன.
எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்ட 68 லட்சம் வாக்காளர்கள் போக இறுதி வாக்காளர்கள் 7.42 கோடிப் பேர் என தேர்தல் ஆணையம் இறுதிசெய்ய, களத்தில் இறங்கின கட்சிகள். இதில் தேர்தலுக்கு நெருக்கமாக பீகாரின் 75 லட்சம் பெண்களுக்கு தொழில் தொடங்க ஆளும்கட்சி ரூ 10,000 நிதி வழங்குவதை மௌனமாக தேர்தல் ஆணையம் வேடிக்கைபார்த்தது.
அதேபோல, தேர்தல் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் கடைசிவரை காங்கிரஸ்- ஆர்.ஜே.டி. கட்சிகள் அடித்துக்கொண் டிருக்க, ஆரம்பத்திலேயே தொகுதிப் பங்கீட்டை முடித்து பிரச்சாரத்தில் இறங்கி அடித்து ஆடியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. தவிரவும் கடந்த தேர்தலில் சிராக் பாஸ்வான் தனித்துப் போட்டியிட்டது கூட்டணியைப் பாதித் திருந்ததால், அவருக்கு உரிய இடங்களைக் கொடுத்து கூட்டணியில் ஐ.ஜ.தளம் இணைத்துக் கொண்டது பலனளித்திருக்கிறது. ஆர்.ஜே.டி.- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகத் திரண்ட கூட்டமும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் சிலரை தொகுதி மக்கள் விரட்டியடித்ததும் ஆட்சி மாற்றம் ஏற்படுமோ என்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியது. அதேபோல, வழக்கத்தைவிட அதிகமாகப் பதிவான வாக்குப் பதிவு விகிதத்தை தங்களுக்குத்தான் சாதகம் என அனைத்துக் கட்சிகளும் அடித்துக்கொண்டன. ஆனால், இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்ததும் நடந்த கருத்துக்கணிப்பில் தேசிய ஜன நாயகக் கூட்டணியே பெரும் பான்மை பெறுமென அனைத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. அதே போன்று வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணி வகித்ததுடன் 202 இடங்களையும் வென்றிருக்கிறது. மாறாக, ஆர்.ஜே. டி.யின் தேஜஸ்வியே ராகோபூர் தொகுதியில் போராடித்தான் வென்றிருக்கிறார்.
பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் இரண்டும் சமமாக 101 இடங்களில் போட்டியிட்டபோதும் பா.ஜ.க. கூடுதலாக நான்கு இடங்களில் வென்று 89 இடங்களைக் கைப் பற்றியிருக்கிறது. அதனால் தங்க ளுக்கே முதல்வர் பதவி என பா.ஜ.க. எதிர்பார்க்கக்கூடும். ஆனால் தேர் தலில் வெற்றியெனத் தெரிந்ததும், நிதிஷ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என ஐக்கிய ஜனதா தளம் ட்வீட் பதிவுசெய்து, அதை உடனடியாக நீக்கியுள்ளது. இதனால், யார் முதல்வர் என்பதில் வெளியே தெரியாத உரசல் நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தருவதையும், தனக்கு வயதாகிவருவதையும் கூறி முதல்வர் பதவியை நிதிஷ்குமார் மீண்டும் உறுதிசெய்துகொள்வார் என அரசியல்நோக்கர்கள் யூகிக் கின்றனர்.
அதேசமயம், எதிர்முகாமில் இந்தத் தோல்வியை நம்பமுடியாமல் தவிக்கின்றனர். அதற்குக் காரணம் இருக்கிறது. தனித் தனி கட்சியாகப் பார்த்தால் இந்தத் தேர்தலில் அதிக வாக்கு சதவிகிதத்தைப் பெற்ற கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம்தான். கிட்டத்தட்ட 23% வாக்குகளுடன் (1,15,02,563) முதலிடத்தைப் பெற் றுள்ளது. ஆனால் 25 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. இரண்டாவது அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக பா.ஜ.க. 20.07% வாக்குகளை (1,00,42,870) பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தின் சமஸ்டிபூர் மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான விவிபேட் ஒப்புகைச் சீட்டு எனப்படும், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்று காட்டும் சீட்டுகள் தெருவில் கண்டெ டுக்கப்பட்டன. இது சர்ச்சையாகி பெரிய அளவில் பிரச்சனை யானதும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “"ஆமாம், இது உண்மைதான். ஆனால் மாதிரி வாக்குப் பதிவுகளின்போது பயன்படுத்தப்பட்ட சீட்டுகள்'’ எனச் சமாளித்தார். மாதிரி வாக்குப்பதிவுகளில் 50, 100 வாக்குகள் பதிவார்கள். இப்படி ஆயிரக்கணக்கில் ஒப்புகைச் சீட்டுகள் பதிவார்களா…? அதனை தேர்தல் முடியும் முன்பே தெருவில் வீசியெறிய வேண்டிய அவசியமென்ன என்று கேள்வியெழுப்பின எதிர்க்கட்சிகள்.
"இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது 7.42 கோடி வாக்காளர்கள் என்ற தேர்தல் ஆணையம், இரண்டாம்கட்ட தேர்தல் முடிந்ததும் 7,45,26,858 என்கிறது. இடையில் 3,26,858 வாக்குகள் எங்கிருந்து முளைத்தன?' என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதற்கிடையில் ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் ஆறுதல் வெற்றிபெற்றுள்ளது.
வாக்குத் திருட்டு சந்தேகமிருந்தால், எதிர்க்கட்சிகள் மும்பை தேர்தலில் கோட்டை விட்டதுபோல் விடாமல், சந்தேகத்துக்குரிய தொகுதிகளில் எல்லாம் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகளைக் கோரி பெற்று, அவற்றை ஆராய்ச்சி செய்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியதுதான்.
ஓட்டுத் திருட்டை தேர்தலுக்கு முன்னால் கண்டு பிடிக்காமல், தேர்தல் நடந்த ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பின் கண்டுபிடிப்பதால் காங்கிரஸுக்கும் பயனில்லை, மக்களுக்கும் பயனில்லை.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us