துரை முன்னாள் ஆதீனமான அருணகிரியார் சமாதியில் திடீரென அவரின் இளைய சன்னிதானமாக இருந்த தம்பிரான்சாமிகள் உண் ணாவிரதம் இருப்பதாக தகவல்வர, நாம் அங்கு சென்றோம். நாம் அவ ருடன் பேசுவதற்கு முன் பாகவே காவல்துறையினர் உள்ளே வந்து, பேச்சு வார்த்தை நடத்த அவரை அழைத்துச்சென்றனர். 

Advertisment

இதனைத் தொடர்ந்து அடுத்தநாள், மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு வருகைதந்த ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்பிரான், மதுரை ஆதீனத்திற்கு புதிய ஆதினத்தை நியமிக்க இந்து அறநிலையத்துறை அதி காரிகள் ஆதீனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கவேண்டும் என கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமாரிடம் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக இந்து அற நிலையத்துறை ஆணை யருக்கு  மனுவை அனுப்பி வைப்பதாக பதிலளித்தார்.

நாம் விஷ்வலிங்க தம்பிரானை சந்தித்து என்ன நடக்கிறது மதுரை ஆதீன மடத்தில் என்றதும், இங்கு வேண்டாம் என்று சொல்லி ஒரு முகவரி கொடுத்தார். நாம் அங்கு சென்றோம்.

தம்புரான் சாமியைப் பார்த்ததும், "அய்யா அமருங்கள். இவர் நடராஜர் சுவாமிகள். தற்போது ஆதீனத்திற்கு எதிரான வழக்கின் முதல் சாட்சியே இவர்தான். இவரிடம் முதலில் கேளுங்கள், அடுத்து நான் சொல்கிறேன்''’என்றார். 

Advertisment

இந்தியாவின் வடபகுதியில் சைவ சித்தாந்த தமிழ் மரபு மடங்கள் எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் 18 சைவநெறி பரப்பும் ஆதீன மடங்கள் உள்ளன. இவை யனைத்தையும் சனாதன இந்து கோட்பாடுகளுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற சதி நடக்கிறது. தற்போதைய ஆதீனம் முழுக்க, முழுக்க சனாதனவாதிகளின் கைகளில் போய்விட்டார். ஆதீனங்கள் எங்கு சென்றாலும் "திருஞானசம்பந்தர் போற்றி' என்று சொல்லித்தான் பேசவே ஆரம்பிப்பார்கள். இவர் "பாரத் மாதாக்கி ஜே' என்று சொல் கிறார். இவர் ஒருமுறை கூட மடத்திற்குள் வரும்போது திருஞான சம்பந்தரின்       சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதில்லை. தமிழ் மரபுகளை ஒவ்வொன்றாக நீர்த்துப் போகச் செய்கிறார். மடத்தில் முதலில் விநாயகர் துதியே கிடையாது. திருவடியைப் பாடும்போது முதலில் நால்வர் துதியை சொல்லித்தான் தொடங்கவேண் டும். சிவ வழி பாட்டில் நவக்கிரக வழிபாடு கிடையாது. எல்லா மரபுகளையும் மீறுகிறார்கள். சனாதனம், சைவ சித்தாந்த ஆதீன மடங்களை விழுங்கப் பார்க்கிறது. எல்லா வற்றையும் இந்து என்ற பிராண்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். 

நாங்கள் இந்துக்கள் அல்ல,… சைவர்கள். எங்களுக்கென்று தமிழ் வேதங்கள் இருக்கின்றன. பழைய அருணகிரி மதுரை ஆதீனம், இந்த விஷ்வலிங்க தம்பிரான் சிறுவயதிலிருந்தே தமிழ் வேதங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர் என்பது தெரிந்துதான் அவரை அழைத்துவந்து மதுரை ஆதீனகர்த்தருக்கு தம்பிரானாக அமரவைத்து அடுத்த ஆதீனமாக வர ஏற்பாடு செய்தார். 

சில அழுத்தங்களினால் வேறு வழியின்றி தற்போதிருப்பவர் ஆதீன              மாகக் கொண்டுவரப்பட்டார். அடுத்து விஷ்வலிங்க தம்பிரான் ஆதீனமாக வரவேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அது தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அவர் மறைவுக்குப் பிறகு இவரைத் தவிர்க்கிறார்கள். சைவ மடத்திற்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது''” என்று முடித்துகொள்ள...   

Advertisment

நாம் விஷ்வலிங்க தம்பிரானிடம் பேசினோம். “மிகப்பழமையான மடம் மதுரை ஆதீன மடம். இங்கு 2018-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் இருந்தேன்.  292-ஆவது ஆதீனம் மற்றும் தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் ஆகியோர் அடுத்து நான்தான் வாரிசாக வரவேண்டுமென்று கூறியிருந்தனர். அதன்படிதான் நான் தம்பிரானாக தேர்ந் தெடுக்கப்பட்டிருந்தேன். 

அருணகிரி ஆதீனகர்த்தர் இருக்கும்போதே ஏதோ அழுத்தம் காரணமாக  ஒரே இரவில் முடிவாகி அவசர, அவசரமாக தற்போதைய ஆதீனத்தைக் கொண்டுவந்தனர். இவர் வந்தது   முதல் சைவ சித்தாந்த தமிழ் மரபுகளை       சரியாகப் பின்பற்றவில்லை. இதை பலமுறை சுட்டிக்காட்டினேன். அப்போதே எனக்கும் அவருக்கும் முரண்பாடுகள் ஆகின. 

மடத்தினுள் அரசியல்வாதிகள் அதிகம் வரத்தொடங்கினர் குறிப்பாக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் சன்னிதானத்தைச் சுற்றியிருந்து ஆலோசனைகள் வழங்கத் தொடங்கினர். மடத்தில் பல வருடங்களாக இருந்த நிர்வாகிகளை வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்துதான் என்னையும் தவிர்க்க ஆரம்பித்தார். தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டைக் கூறி தேவையில்லாமல் வழக்கில் சிக்கியிருப்பது இதுவரை ஆதீனங்களுக்கு நடக்காதது. தமிழக அரசு வழக்கிலிருந்து அவரை விடுவித்து மதுரை ஆதீன மட பாரம்பரியத்தைக் காப்பாற்றவேண்டும், 

தற்போது 293-ஆவது ஆதீனம், மீனாட்சிசுந்தரம் என்ற ஒருவரை பட்டம் கட்டும் முடிவிலுள்ளார். நான் தம்பிரான் சுவாமியாக தீட்சை  வாங்கியதற்கு புகைப்பட ஆதாரம் உள்ளது. ஆதீனமட நிர்வாகம் பார்த்ததற்கான என் கையெழுத்து உள்ளது. சன்னிதானத்தின் மீது எஃப்.ஐ.ஆர் இருக்கிறது. ஜாமீனில் இருக்கிறார் என்பதால் தார்மீகமாக அவர் நிர்வாகத்தில்    இருந்து விலகவேண்டும். குற்றம்சாட்டப் பட்டிருக்கக் கூடிய நிலையில், அதுவரை அடுத்த பட்டம் கட்டுவதை தள்ளி வைத்திருக்கலாம். தமிழ்நாட்டிலுள்ள 18 சைவ சிந்தாந்த ஆதீனகர்த்தர்களும் ஒன்றுசேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும்''’என்றார்.