புதிய நிர்வாகிகள்? செல்வப்பெருந்தகைக்கு எதிர்ப்பு! -காங்கிரஸ் கலாட்டா

ss

மிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் 77 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள், மாநில செயலாளர்கள் எனப் பல்வேறு பதவிகளில் பலர் உள்ளனர். இந்நிலையில் மாநிலத்தலைவர் செல்வப் பெருந்தகை கடந்த 4ஆம் தேதி கட்சியினருக்கு காங் கிரஸ் இணையதளம் மூல மாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், கடந்த 19.9.24 அன்று சத்திய மூர்த்தி பவ னில் எனது தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டாக்டர் அஜய்குமார், செயலாளர் சூரஜ், ஹெக்டே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், தற்போ துள்ள செயற்குழு உறுப்பினர்கள், மாநில துணைத்தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர் பதவிகளை மாற்றியமைப்பது என்றும், புதிய நிர் வாகிகளை நியமிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

c

உதய்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில், மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகளின் பொறுப்புகளில் 50 சதவீதம் 50 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த பொறுப்புகளைப் பெறவிரும்பும் கட்சியினர், அதற்கான விண்ணப்பத்தினை கட்சியின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதில் மாவட்டத் தலைவர் பொறுப்புக்கு நன்கொடைக் கட்டணமாக 5,000 ரூபாய், மாநில நிர்வாகப் பொறுப்பு களுக்கு 1,000

மிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் 77 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள், மாநில செயலாளர்கள் எனப் பல்வேறு பதவிகளில் பலர் உள்ளனர். இந்நிலையில் மாநிலத்தலைவர் செல்வப் பெருந்தகை கடந்த 4ஆம் தேதி கட்சியினருக்கு காங் கிரஸ் இணையதளம் மூல மாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், கடந்த 19.9.24 அன்று சத்திய மூர்த்தி பவ னில் எனது தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டாக்டர் அஜய்குமார், செயலாளர் சூரஜ், ஹெக்டே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், தற்போ துள்ள செயற்குழு உறுப்பினர்கள், மாநில துணைத்தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர் பதவிகளை மாற்றியமைப்பது என்றும், புதிய நிர் வாகிகளை நியமிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

c

உதய்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில், மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகளின் பொறுப்புகளில் 50 சதவீதம் 50 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த பொறுப்புகளைப் பெறவிரும்பும் கட்சியினர், அதற்கான விண்ணப்பத்தினை கட்சியின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதில் மாவட்டத் தலைவர் பொறுப்புக்கு நன்கொடைக் கட்டணமாக 5,000 ரூபாய், மாநில நிர்வாகப் பொறுப்பு களுக்கு 1,000 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அந்த கட்டணத்தை வரைவோலையாகவோ, பணமாகவோ தங்கள் விண்ணப்பத்துடன் 18.1.2025 க்குள் தலைமைக்கு அனுப்ப வேண்டும். கட்டணம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை கடந்த 4ஆம் வெளியிட்டார். மாநிலத் தலைவரின் இந்த அறி விப்பு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெரும்பாலான நிர்வாகிகள் அதிருப்தியை செல்வப் பெருந் தகைக்கும். அகில இந்தியத் தலைமைக்கும் எழுத்துமூலம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த முட்டல் மோதல் குறித்து சில மாவட்ட, மாநில நிர்வாகிகள் நம்மிடம் தொடர்புகொண்டு பேசினர். "தலைவரின் அறிவிப்பு காரணமாக மாநிலத் தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர மறுத்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் விதிகளின்படி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு, வட்டாரத் தலைவர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் போன்றோர் தேர்வு செய்யப்பட்ட பிறகுதான் மாவட்டத்தலைவர் பதவிக்கு முறைப்படி மனு செய்து மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யால் அறிவிக்கப்பட்ட தேர்தலின்படி தேர்ந் தெடுக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களான எங்கள் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. நாங்கள் பொறுப்பேற்ற காலம் முதல் காங்கிரஸ் கமிட்டி அறிவித்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என அனைத்தையும் பெரும் பொருட்செல வுடன் நடத்தி வருகிறோம். நெருக்கடியான காலகட்டங்களில் பல்வேறு இன்னல்களைத் தாங்கி இந்த கட்சிக்காக உழைத்துவரும் எங்களை அவமதிக்கிறவிதமாக மாநில தலைவர் செல்லப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைப்பின் விதிகளுக்கு முரணாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் தேர்வுக் கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளார். ஆனால் தகுதி நிலை குறித்த விவரங்கள் இல்லை. யார் வேண்டுமானாலும் விண்ணப் பிக்கலாம் என்றிருப்பது காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே இல்லாதது'' என்கிறார்கள் நிர்வாகிகள்.

cc

மேலும் சிலரோ, "உதய்பூர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டத்தின் பிரகடனம் குறித்து, 19.9.2024 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது என்ற தகவல் தவறானது. அந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பதவிக்கான விண்ணப்பம் குறித்தெல்லாம் எந்த விவாதமும், முடிவும் எடுக்கப்படவில்லை. அது பொய்யான தகவல். கட்சியின் வளர்ச்சிக்கே ஊறுவிளைவிக்கும் அறிவிப்பாக இது உள்ளது. வரும் ஆண்டில் தேர்தல் வரவுள்ள நிலை யில், பொதுக்கமிட்டி முகவர்கள், நிர்வாகிகள் நியமனம், தேர்தல் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு எனப் பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தவேண்டிய சூழலில், இதி லெல்லாம் கவனம் செலுத்தினால் கட்சி தொய்வடையக்கூடும். ஏற்கெனவே காலியாகவுள்ள ஏழு மாவட்டங்களுக்கான தலைவர் பொறுப்புக்களை நிரப்ப வேண்டும். அதை விடுத்து, இருக்கின்ற மாவட்டத் தலைவர்களை நீக்கும் அறிவிப்பு தேவையில்லாதது.

காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி மாவட்டத் தலைவர்களை நியமனம் செய்வது அகில இந்திய காங்கிரஸின் செயலாகும். இதுவே அனைத்து மாநில காங்கிரஸ் கட்சிக்குமான விதிமுறை. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மட்டும் தன்னிச்சையாகச் செயல்படுவது ஏற்க இயலாதது. இது நிர்வாகி கள், தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, போராட்டங்களில் கள மிறங்கும் கட்சிக்காரர்களுக்கு உளச்சோர் வையே ஏற்படுத்தும்'' என்கிறார்கள். "செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சித்தலைவராகப் பொறுப்பேற்று பத்து மாதங்களாகிறது. இவரோ, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், கட்சியின் உயர்மட்டக் குழு உட்பட யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தன்விருப்பப்படி அறிவிப்புகளை வெளியிடு கிறார். கட்சி வளர்ச்சிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று மாவட்ட, வட்டார கமிட்டி நிர்வாகிகளை, கட்சித் தொண்டர்களைச் சந்திக்க வேண்டும். அதை முழுமையாக இதுவரை செய்ய வில்லை. அதை விடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நீண்ட நெடிய அரசியல் பாரம்பரி யத்தை, அதன் கட்டமைப் பைச் சீர்குலைக்கும் வகை யில் அவரது செயல்பாடு கள் உள்ளன. எனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு மாநி லத் தலைவரின் அறி விப்பை ரத்து செய்ய வேண்டும்'' என அகில இந் திய காங்கிரஸ் கட்சிக்கு பலர் புகார் அனுப்பியதா கத் தெரிவிக்கிறார்கள்.

இதன் எதிரொலியாக, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சட்ட மன்ற உறுப்பினர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் மறைவையடுத்து சத்திய மூர்த்தி பவனில் அவர் களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக 77 மாவட்டத் தலைவர்களுடன் செல்வப்பெருந்தகை நடத்திய வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனையில் 26 தலைவர்கள் மட்டுமே பங்கெடுத்தனர். அவரது இணையதள அறிவிப்புதான் புறக்கணிப்புக்கு காரணம் என்கிறார்கள். இதேநிலை தொடர்ந் தால், மாநிலத்தலைமை அறிவிக்கும் போராட் டங்களையும் புறக்கணிக்கும் சூழல் வரும்'' என்கிறார்கள்.

மன்மோகன்சிங், இளங்கோவன் படத் திறப்பு விழா முடிந்த மறுநாள் கட்சியின் கிராம சீரமைப்பு கமிட்டி குறித்த ஆலோசனை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து மாவட்ட தலைவர்களையும் மேலிடப் பார்வையாளர்கள் சந்தித்துப் பேசியபோது, "50க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள், செல்வப்பெருந் தகையின் தன்னிச்சையான முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்து எழுத்து மூலம் புகாரளித்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது, "பலர் நீண்டகாலம் பதவியில் உள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் உதய்பூர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த அகில இந்திய தலைமை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்தான் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது.

அனைத்துத் தரப் பினருக்கும் பாகுபாடு இல்லாமல் பதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளி யிட்டோம். மற்றபடி சொந்தமாக எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. பொறுப்புக் களுக்கு வரவிரும்பு கிறவர்கள் விண்ணப் பத்துடன் விருப்பப்பட்டால் கட்சிக்கு நன்கொடைத் தொகை அளிக்கலாம் என்று தான் குறிப்பிட்டுள்ளோம். கட்டணம் கட்டாய மில்லை... இதைத் தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை'' என்றார்.

"இப்படியிருந்தால் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மிகவும் கடினம். எனவே அனைத்து நிர்வாகிகளையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதே காங்கிரஸ் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் நல்லது'' என்கிறார்கள் மாவட்ட, மாநில நிர்வாகிகள்.

-எஸ்.பி.எஸ்.

படம் : எஸ்.பி.சுந்தர்

css

nkn150125
இதையும் படியுங்கள்
Subscribe