ந்தியாவின் அருகிலுள்ள நாடான நேபாளத்தில் நடந்த வன்முறை கலவரங்களில் சிக்கி உயிர் தப்பியதுடன் 30-க்கும் மேற்பட்ட வெளி நாட்டுக் குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தமிழருமான செந்தில் தொண்டமான். 

Advertisment

நேபாள அரசின் ஊழல்களுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய புரட்சிப் போராட் டங்களில் நடந்த வன்முறை வெறியாட்டங்களால் அந்த நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.  நடந்த வன்முறை கலவரத்தில் செந்தில் தொண்டமானும் சிக்கிக்கொண்டார். புரட்சியாளர்கள் மற்றும் கல வரக்காரர்களிடமிருந்து சமயோஜிதமாக தப்பிய துடன் பல குடும்பங்களையும் காப்பாற்றியுள்ளார். 

அந்த திகில் அனுபவம் குறித்து செந்தில் தொண்டமானை தொடர்புகொண்டு பேசிய போது... "நேபாளம் தலைநகர் காட்மாண்டில் நடக்கும் ஆசிய பசிபிக் தொழிற்சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நான், பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தேன். கான்ஃபரன்ஸ் தொடர்பாக, ஹோட்டல் லாபியில் உட்கார்ந்து போனில் பேசிக்கொண்டிருந்தபோது, சுனாமி மாதிரி ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் திடீரென்று ஹோட்ட லுக்குள் நுழைந்தனர். எல்லோரும் மாஸ்க் மற்றும் ஸ்கார்ப் ஆகியவைகளை கொண்டு முகத்தை மூடியிருந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் உருட்டுக்கட்டைகள். 

ஹோட்டலில் நுழைந்ததும் கண்ணுக்குக் கிடைத்த எல்லா பொருட்களையும் அடித்து நொறுக்கினார்கள். ஏர்போர்ட்டுக்கு கிளம்ப பலர் லாபியில் காத்திருந்தனர். இந்த கலவரத்தைக் கண்டு அங்குமிங்கும் அலைந்தனர். எதிர்ப்பட்ட மக்களை அடித்து வெளியேற்றினார்கள் போராட் டக்காரர்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் பதட்டமானது. இதயம் வேகவேகமாகத் துடித்தது. சட்டென்று அங்கிருந்த ஸ்கார்ப்பை எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டேன். இதனால், என்னை அவர்களின் ஆட்களைச் சேர்ந்தவன் என நினைத்து கடந்து சென்றனர். சினிமாவில் நடக்கும் கலவரக்காட்சிகள் போல அங்கே நிஜமாகவே அரங்கேறியது. எங்கு பார்த்தாலும் அலறல் சத்தம். போராட்டக்காரர்களிடம் வெறித்தனமும் ஆவேசமும் பயங்கரமாக இருந்தது. 

Advertisment

அங்கு கீழே கிடந்த ஒரு கட்டையை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தேன். என்னை பார்த்த போராட்டக்காரர்கள், "ஹேய்… உள்ளே வா...… உள்ளே வா'…என்று ஆங்கிலத்தில் சத்தமிட்டனர். அதை காதில் வாங்கிக்கொண்டே ஹோட்டலுக் குள் செல்வது போல பாசாங்கு காட்டிவிட்டு, மெல்ல வெளியேறினேன். வெளியே வந்ததும்தான் பதட்டம் கொஞ்சம் தணிந்தது. 

நட்சத்திர ஹோட்டலுக்கு சற்று தள்ளி அந்த தெருவில் ஒரு சின்ன ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கு நின்றுகொண்டு, நான் தங்கியிருந்த நட் சத்திர ஹோட்டலையே பார்த்துக்கொண்டிருந் தேன். அதேசமயம், ஹோட்டலில் தங்கியிருந்த பலர் என்னிடம் ஏற்கனவே பழகியிருந்தனர். அவர்களது போன் நம்பர் என்னிடம் இருந்தது. அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, லைன் போகவில்லை. தொடர்ந்து முயற்சித்தபோது சில நபர்களோடு தொடர்புகிடைக்க, ரூமுக்குள் இருப்பதாகவும் எந்த நேரத்திலும் எதுவும் ஆகலாம்; பயமாக இருக்கிறது என்றும் கதறினார் கள். அவர்களுக்கு தைரியம் கொடுத்துவிட்டு, ஹோட்டலில்  எமெர்ஜென்சி எக்சிட் (அவசரகால வழி)  இருக்கிறது. அதிலிருந்து பின்புறம் வழியாக வெளியே வாருங்கள் என நான் யோசனை சொன்னபோது, அதைத் திறக்க முயற்சித்திருக் கிறார்கள் முடியவில்லை. 

இந்த சூழலில், ஹோட்டல் லாபிக்கு தீ வைத்தது ஒரு கும்பல், அந்த தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியதைக் கண்டு மனசு பதை பதைத்தது. தமிழனுக்கே உரிய தைரியம், அசாதாரணமான சூழல்களில் வெளிப்படும். அது தமிழர்களுக்கு மட்டுமே இருக்கும் உணர்வு. எனக்குள் அந்த உணர்வு வெளிப்பட, முகத்தை ஸ்கார்ப்பால் மூடிக்கொண்டு மீண்டும் ஹோட்ட லுக்குள் நுழைந்தேன்.  

Advertisment

நேராக அவசரகால வழி இருக்கும் ப்ளோ ருக்கு சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் கும்மென்று இருட்டு. எமர்ஜென்சி எக்சிட் அருகே சென்றேன். டிஜிட்டல் லாக் என்பதால் அவ்வளவு எளிதாகக் கதவை திறக்க முடியவில்லை. அந்த ப்ளோரில் ஒரு மூலையில் சில இரும்பு ராடுகள் கிடந்தது. அதை வைத்து கதவை உடைத்தோம். கலவரக்காரர்களின் கூக்குரலில் கதவு உடைபடும் சத்தம் அவ்வளவாக வெளியே கேட்கவில்லை. 

20 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு கதவு உடைந்து வழி கிடைத்தது. உடனே ஒவ்வொரு ரூம், ரூமாகச் சென்று வெளியே வரவழைத்து எமர்ஜென்சி எக்சிட் வழியாக வெளியேற்றினேன், அந்த வழி, ஹோட்டலின் பின்புறமாகச் செல்லக்கூடியது. கிட்டத்தட்ட 40 நிமிடத்தில் 30 குடும்பங்கள் வெளியேறியது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் அந்த ஹோட்டலில் இருந்த மக்களுக்கு மரண அவஸ்தைகள். இன்னும் பலரை காப்பாற்ற முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் அந்த ஹோட்டலிலிருந்து தப்பித்து வந்தபோது இருந்தது. இலங்கையில் எத்தனையோ போராட்டங்கள், கலவரங்களை பார்த்திருக்கிறேன்; எதிர்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் நேபாளத் தில் உருவான இந்த கலவரம் மிக பயங்கர மானது''’என்று தனக்கேற்பட்ட திகில் அனுபவத்தை விவரித்தார் செந்தில் தொண்டமான். 

உயிருக்குப் பயமில்லாமல் அந்த கலவரத்தி லிருந்து செந்தில் தொண்டமானால் காப்பாற்றப் பட்ட குடும்பத்தினர், அவரது துணிச்சலான செயலை சோசியல் மீடியாக்களில் பதிவு செய்ய... அவருக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.