Advertisment

ராங்கால் நெல்லை ஜெயக்குமார்! உண்மைக்கு குழி தோண்டும் பெரும் புள்ளிகள் ! சூடு பிடிக்கும் பொருள் வழக்கு ஜாபர் தம்பியின் பரபர வாக்குமூலம்!

ff

"ஹலோ தலைவரே... அ.தி.மு.க. மாஜி மந்திரி செல்லூர் ராஜு பெரும் பரபரப்பை உண் டாக்கியிருக்காரே?''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, செல்லூர் ராஜு, என்ன நினைச்சாரோ தெரியவில்லை. திடீர்னு தனது எக்ஸ் தளத்தில், ’"நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி'’என்று தன் குரலிலேயே பேசி, ராகுல் உணவகம் ஒன்றில் சாப்பிடும் புகைப்படத் துடன் அதைப் பதி விட்டிருக்கிறார். அவர் இப்படிப் பத்தவச்ச நெருப்பு, அ.தி.மு.க. விலும் காங்கிரஸிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. குறிப்பாக, செல்லூர் ராஜுவின் வீடியோ பதிவைக் கண்டு அதிர்ச்சி யடைந்த அ.தி.மு.க. சீனியர்கள், எடப்பாடியைத் தொடர்புகொண்டு, ’"செல்லூர் ராஜுவுக்கு என்னாச்சு? ராகுல்காந்தியை எதுக்கு திடீர்னு புகழ்றார்? ஏதாவது கட்சி தாவுற ஐடியாவில் இருக்காரா?ன்னு கவனிங்க தலைவரே'ன்னு சொல்லியிருக்காங்க. அதோட, "அம்மா இருந்திருந்தா இப்படி ஒருத்தர் தைரியமா பேசமுடியுமா?'ன்னும் அவரை உசுப்பேத்திவிட்டி ருக்காங்க.''”

Advertisment

"இதுக்கு எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவாம்?''”

"இதைக்கேட்டு அப்செட் டான எடப்பாடி, "கட்சியில் என்ன நடக்குதுன்னே தெரியமாட் டேங்குது. அவங்கவங்களும் அவங்கவங்க விருப்பத்துக்கு நடக்கறாங்க. செல்லூரு ஏற்கனவே ஏடாகூடமா பேசுவார்? இந்த லட்சணத்தில், வேற கட்சியில் இருக்கும் ஒருத்தரை உணர்ச்சி வசப்பட்டுப் பாராட்டி, எல்லா ரையும் குழப்பியடிச்சிருக்கார்'னு புலம்பியதோட, செல்லூர் ராஜுவை கோபத்தோடு தொடர்புகொண்டு, "என்ன நினைச்சிக்கிட்டு

"ஹலோ தலைவரே... அ.தி.மு.க. மாஜி மந்திரி செல்லூர் ராஜு பெரும் பரபரப்பை உண் டாக்கியிருக்காரே?''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, செல்லூர் ராஜு, என்ன நினைச்சாரோ தெரியவில்லை. திடீர்னு தனது எக்ஸ் தளத்தில், ’"நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி'’என்று தன் குரலிலேயே பேசி, ராகுல் உணவகம் ஒன்றில் சாப்பிடும் புகைப்படத் துடன் அதைப் பதி விட்டிருக்கிறார். அவர் இப்படிப் பத்தவச்ச நெருப்பு, அ.தி.மு.க. விலும் காங்கிரஸிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. குறிப்பாக, செல்லூர் ராஜுவின் வீடியோ பதிவைக் கண்டு அதிர்ச்சி யடைந்த அ.தி.மு.க. சீனியர்கள், எடப்பாடியைத் தொடர்புகொண்டு, ’"செல்லூர் ராஜுவுக்கு என்னாச்சு? ராகுல்காந்தியை எதுக்கு திடீர்னு புகழ்றார்? ஏதாவது கட்சி தாவுற ஐடியாவில் இருக்காரா?ன்னு கவனிங்க தலைவரே'ன்னு சொல்லியிருக்காங்க. அதோட, "அம்மா இருந்திருந்தா இப்படி ஒருத்தர் தைரியமா பேசமுடியுமா?'ன்னும் அவரை உசுப்பேத்திவிட்டி ருக்காங்க.''”

Advertisment

"இதுக்கு எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவாம்?''”

"இதைக்கேட்டு அப்செட் டான எடப்பாடி, "கட்சியில் என்ன நடக்குதுன்னே தெரியமாட் டேங்குது. அவங்கவங்களும் அவங்கவங்க விருப்பத்துக்கு நடக்கறாங்க. செல்லூரு ஏற்கனவே ஏடாகூடமா பேசுவார்? இந்த லட்சணத்தில், வேற கட்சியில் இருக்கும் ஒருத்தரை உணர்ச்சி வசப்பட்டுப் பாராட்டி, எல்லா ரையும் குழப்பியடிச்சிருக்கார்'னு புலம்பியதோட, செல்லூர் ராஜுவை கோபத்தோடு தொடர்புகொண்டு, "என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? தெரிஞ்சிதான் பதிவு போடறீங் களா?'ன்னு ஆரம்பிச்சி, இப்படித் தான்னு இல்லாமல் கடுமை யாகக் கண்டித்திருக் கிறார். இதற்கு ராஜு ஏதேதோ விளக்கம் சொல்ல முயல, அதை ஏற்காத எடப்பாடி, "முதல்ல அந்தப் பதிவை நீக்கிவிட்டு அப்புறம் என்கிட்டே வந்து பேசுங்க'ன்னு முகத்தில் அடித்தமாதிரி சொல்லி, தொடர்பைத் துண்டிச்சிட்டாராம். அவரது கோபத்தைப் பார்த்து ஆடிப்போன செல்லூர் ராஜு, "அடுத்த கட்சிக்காரங்களைப் பாராட்டுறதை அரசியல் நாகரிகம்னு கூட புரிஞ்சிக்காம, இப்படிக் கொந்தளிச்சா என்ன பண்றது?'ன்னு வருத்தப்பட்டு, ராகுலைப் பாராட்டிய பதிவை நீக்கியிருக்கிறார்.''”

’"மாஜி வேலுமணியின் ஆதரவாளர்களை எடப்பாடி நீக்கப்போகிறாராமே?''”

"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும் மாஜி மந்திரி வேலுமணிக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தைத் தாண்டியிருக் கிறது. கோவைக்கு எடப்பாடி விசிட்டடித்த நேரத்திலேயே இது வெளிப்பட்டிருக்கிறது. அண்மையில் கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மலரவன் மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோவைக்குச் சென்றார் எடப்பாடி. அப்போது துக்க வீட்டில் இருந்த வேலுமணி, அங்கு வந்த எடப் பாடியைக் கண்டு கொள்ளவே இல்லை. இதில் எடப்பாடி டென்ஷ னான நிலையில், "உங்களைக் கட்டம் கட்டுகிற நிலையை உருவாக்க வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இருந்து கட்சியை உடையுங்கள்'’ என்று பா.ஜ.க. தரப்பில் இருந்து வேலுமணிக்கு அட்வைஸ் தரப்பட்டதாம். இதைத் தொடர்ந்து எடப்பாடியை விமான நிலையத்தில் வழியனுப்பச் சென்ற வேலுமணி, "எடப்பாடி சிறந்த நிர்வாகி. எங்களை யாராலும் பிரிக்க முடியாது' என்று தானாகவே ஆஜராகி பேட்டியளித்திருக்கிறார். எனினும் எடப்பாடியோ, முதலில் கட்சியில் இருக்கும் வேலுமணியின் ஆதரவாளர்கள் ஏழுபேரை கட்டம் கட்டும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.''”

rr"போதைப்பொருள் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக்கின் சகோதரர்களையும் அமலாக்கத்துறை விசாரிக்கிதே?''”

"போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத்துறையும் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. சமீபத்தில், திஹார் சிறைக்குள் சென்று ஜாபர் சாதிக் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தி, அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். அப்போது, தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகிய இருவரும், இந்த போதைப் பொருள் கடத்தல் விசயத்தில் எப்படிப்பட்ட ரோல் வகித்தார்கள் என்பதையும் ஜாபர் ஒப்பித்தாராம். இதையடுத்து, சலீம் மற்றும் மைதீன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பினார் கள். இதைத் தொடர்ந்து ஆஜரான சலீமிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்திருக்கிறார்கள். ஜாபர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப் படையிலேயே அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. சலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட அளவில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஜாபர் சொல்லாத பல வில்லங்க விபரங்களும் சலீமிடமிருந்து அமலாக்கத் துறைக்குக் கிடைத்திருக்கிறதாம்.''”

"தமிழக கோயில்களை அப்பகுதி மக்களே உழவாரப் பணி செய்துகொள்ளலாம்னு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறதே?''

"ஆமாங்க தலைவரே, இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 1,636 கோவில்களுக்கு கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டிருக்கு. இப்படிப்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களைப் பலரும் ஆக்கிரமித்து வைத்திருப்பதால், அவற்றால் வருமானம் ஈட்டமுடியவில்லை. இந்த நிலையில் அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து ஏறத்தாழ 1,000 ஏக்கர் நிலத்தை மீட்டது. இந்த நிலையில், அவரவர் வாழும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு அவரவரும் உழவாரப் பணி செய்ய அனுமதி கேட்டு அறநிலையத் துறை அமைச்சரான சேகர்பாபு, உயர்நீதிமன்றத்தை அணுகினார். கார்த்தி என்பவரும் நீதிமன்றத்தை இதே கோரிக்கையோடு அணுக, இவற்றை விசாரித்த நீதிமன்றம், மக்களே உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறது.''”

rr

"நானும் என் காதுக்கு வந்த தகவல் ஒன்றைப் பகிர்ந்துக் கறேன். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதை கண்டறி வதில் சில ஆதா ரங்கள் போலீசா ருக்கு கிடைத் திருக்கிறது. அதனை உறுதி செய்துகொள்ள மேலும் ஆதாரங் களைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் அதி காரம் மற்றும் பண பலம் மிக்க சிலர், ஜெயக் குமார் தற்கொலை செய்து கொண்டார் என வழக்கை முடிக்கும்படி அழுத்தம் கொடுத்து வருகிறார் களாம். இதை ஏற்காத விசாரணை அதிகாரி கள், ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட விதமும், அங்கிருந்த சூழலும் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றன. அப்படி இருக்கையில், நாங்கள் எப்படி அப்படி வழக்கை ஊத்தி மூடமுடியும்? என்கிறார்களாம். ராமஜெயம் கொலை வழக்கு போல, ஜெயக்குமார் வழக்கும் காவல்துறைக்கு பெரும் தலைவலியைக் கொடுத்த நிலையில், தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.''”

_______

இறுதிச் சுற்று!

rr

பா.ம.க. தலைவராக இருந்த ஜி.கே.மணியை கௌரவத் தலைவராக மாற்றிவிட்டு, பா.ம.க. தலைவராக தனது மகன் அன்புமணியை சில வருடங்களுக்கு முன்பு நியமித்தார் டாக்டர் ராமதாஸ். அன்புமணி வகித்து வந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் பதவி, ஜி.கே.மணியின் மகன் தமிழ்க் குமரனுக்கு கொடுக்கப்பட்டது. தமிழ்க்குமரனோ, பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் துணைத்தலைவராக இருந்துவந்ததால் சிலபல எதிர்மறை விமர்சனங்கள் பா.ம.க.விலும் லைக்கா விலும் எழுந்தது. இந்த நிலையில், இளைஞரணி தலை வர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழ்க்குமரன். சுமார் 2 வருடங்களாக அந்த பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், தனது மூத்த மகள் காந்தியின் மகனை பா.ம.க.வின் இளைஞரணித் தலைவராக நியமிக்க டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். இது பற்றிய ஆலோசனை தைலாபுரம் தோட்டத்தில் நடக்க, குடும்ப உறுப்பினர்களை பா.ம.க.வின் உயரிய பதவிகளில் நியமிப்பது அரசியல் ரீதியாகத் தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கும் என்பதால், அய்யா ராமதாசின் விருப்பத்தை எதிர்க்கிறாராம் டாக்டர் அன்புமணி.

-இளையர்

nkn250524
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe