நெல்லை மேயர் ரேஸ்! யாருக்கு சீட்டு?

aa

டகிழக்கு பருவ மழையின் தாக்கம் ஓய்ந்துகொண்டிருந்த நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வெப்பம் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய அரசியலில் தி.மு.க.விற்கு தனிச் சந்தை உருவாகியிருப்பதால் சீட்டுக்காகப் படையெடுப்பவர்களின் பங்கு உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது.

இதில் அல்வா நகரில் மேயர் சீட் ரேசில் பங்கேற்போரின் எண்ணிக்கை சற்று தூக்கல்தான். மேயர் சீட் பொது என்றாலும்... அதில் பெண்ணுக்கு ஒதுக்கீடா என அறியாத நிலையிலும் இரு தரப்பிலும் ஓட்டம் கடுமையாகியிருக்கிறது. பிள்ளை, முதலியார் அடுத்து, யாதவர், பின்னர் முஸ்லிம் என நெல்லை மாநகரின் சமூக வாக்கு வங்கியின் வரிசை போகிறது.

ee

தி.மு.க.வின் நெல்லை மாநகர மாவட்ட அவைத்தலைவரும் கட்சியின் பழம்பெரும் உறுப்பினருமான சுப.சீத்தாராமன் கலைஞருக்கு நெருக்கமானவர். தன்னுடைய மகளான அமுதாவிற்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார். அமுதா ஏற்கனவே கடந்த நெல்லை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அ.தி.மு.க.வின் வேட்பாளர் விஜிலா சத்யானந்திடம்

டகிழக்கு பருவ மழையின் தாக்கம் ஓய்ந்துகொண்டிருந்த நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வெப்பம் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய அரசியலில் தி.மு.க.விற்கு தனிச் சந்தை உருவாகியிருப்பதால் சீட்டுக்காகப் படையெடுப்பவர்களின் பங்கு உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது.

இதில் அல்வா நகரில் மேயர் சீட் ரேசில் பங்கேற்போரின் எண்ணிக்கை சற்று தூக்கல்தான். மேயர் சீட் பொது என்றாலும்... அதில் பெண்ணுக்கு ஒதுக்கீடா என அறியாத நிலையிலும் இரு தரப்பிலும் ஓட்டம் கடுமையாகியிருக்கிறது. பிள்ளை, முதலியார் அடுத்து, யாதவர், பின்னர் முஸ்லிம் என நெல்லை மாநகரின் சமூக வாக்கு வங்கியின் வரிசை போகிறது.

ee

தி.மு.க.வின் நெல்லை மாநகர மாவட்ட அவைத்தலைவரும் கட்சியின் பழம்பெரும் உறுப்பினருமான சுப.சீத்தாராமன் கலைஞருக்கு நெருக்கமானவர். தன்னுடைய மகளான அமுதாவிற்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார். அமுதா ஏற்கனவே கடந்த நெல்லை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அ.தி.மு.க.வின் வேட்பாளர் விஜிலா சத்யானந்திடம் வாய்ப்பை இழந்தவர். இம்முறை ஆளுங்கட்சியின் செல்வாக்கும், பழைய அனுதாபமும் கைகொடுக்கும் என்று நம் பிக்கையிலிருக்கிறார்.

தி.மு.க.வின் எக்ஸ் எம்.எல்.ஏ.வும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனுடன் மோதி வெற்றியைப் பறிகொடுத்தவருமான ஏ.எல்.எஸ்.லட்சுமணன், கட்சியின் நெல்லை மாநகர செயலர். தி.மு.க.வின் வழி வந்த குடும்பம் தந்தை ஏ.எல்.சுப்பிரமணியிடம் கலைஞர் தனி மதிப்பைக் கொண்டவர். எம்.எல்.ஏ. மற்றும் மேயர் பொறுப்புகளிலிருந்தவர் ஏ.எல்.எஸ். என்ற அடையாளம் கொண்டவர். பாரம்பரியமும், அனுதாபமும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையிலிருக்கிறார் லட்சுமணன்.

நெல்லை மாவட்ட மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் துரை.சக்திசீதா, சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவி. சட்டக்கல்லூரியின் மாணவ தி.மு.க.வின் முதல் பெண் தலைவர் என்ற முகவரியும் கொண்டவர். பரம்பரையாக தி.மு.க. வழிவந்த குடும்பம். 1939-ல் நாங்குநேரியில் நடந்த மொழிப்போரில் உயிர்நீத்த மந்திரத் தேவரின் கொள்ளுப் பேத்தி. தாத்தாவும் மாமனாரும் தி.மு.க.வில் பொறுப்பு வகித்தவர்கள். கணவர் ராஜவர்மன் ஆந்திர மாநில தி.மு.க.வின் மாணவரணித் தலைவர். ராஜபக்சே திருப்பதி வந்தபோது அவரை எதிர்த்துக் கருப்புக்கொடி காட்டியவர். கணவர் நடத்தும் அகாடமியின் மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புச் சந்தை மூலம் இலவச வேலை வாய்ப்பு பெற்றுத் தந்தவர் என்ற பயோடேட்டாவுடன் சீட்டைப் பெறுவதில் தீவிரமாகியிருக்கிறார் துரை.சக்திசீதா.

நெல்லை மாநகர தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும் பொறியாளருமான கருப்பசாமி கோட்டையப்பன் ரேஸில் இருக்கிறார். தந்தையான கே.கே.கோட்டையப்பன் தி.மு.க.வின் நீண்ட கால உறுப்பினர். 1996களில் நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் பொறுப்பிலிருந்த சமயம், மு.க.ஸ்டாலின் சென்னை மேயர். அதுசமயம் நெல்லையில் அரசியல் மோட்டிவ் காரணமாக கே.கே.கோட்டையப்பன் கொலையுண்ட சம்பவம், நெல்லை மாவட்டத்தையே பரபரப்பில் தள்ளியது. தி.மு.க. மற்றும் பிற அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் "ட்ரிபிள் கே' என்ற அடையாளத்தைக் கொண்டவர் கோட்டையப்பன். கட்சித் தலைமையிலும் ஆரோக்யமான முகவரி கொண்ட குடும்பம் என்ற அடையாளங்களோடு சீட் ரேஸில் மிகுந்த எதிர்பார்ப்புடனிருப்பவர் கருப்பசாமி கோட்டையப்பன்.

be

நெல்லை தேர்தலில் எதிர்ப்பின்றி அ.தி.மு.க.வின் மேயர் பொறுப் பிற்கு வந்தவர் புவனேஸ்வரி. பதவியின் கால அவகாசம் குறைவானது என்றாலும் மக்கள் பணியில் தீவிர கவனம் செலுத்தியவர். அண்மையில் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த புவனேஸ்வரி, பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூக அக்கறையுடன் சமூகப் பணியை தொடர்ந்து நடத்துகிற ஏழ்மையான குடும்பம். தி.மு.க. தலைமை வாய்ப்பைத் தரும் என்று ஏக எதிர்பார்ப்பி லிருக்கிறார். புவனேஸ்வரி.

அ.தி.மு.க.விலிருந்தபோது நெல்லையின் முன்னாள் மேயர், பின்னர் மாநிலங்களவையின் எம்.பி என்ற அடையாளம் கொண்டவர் விஜிலா சத்யானந்த். அண்மையில் தி.மு.க.வில் இணைந் தவர் என்றாலும், மேயர் வேட்பாளர் வாய்ப் புக்கான தீவிரத்திலிருக்கிறார். அ.தி.மு.க.விலும் வரிந்து கட்டுகிறார்கள். மாநகருக்கு அறிமுகமான அறியப்பட்ட புள்ளிகள் என்ற கோதாவில் வேகம் கூடுகிறது. அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளரும் நீண்டகால அ.தி.மு.க. உறுப்பினர் மட்டுமல்ல அ.தி.மு.க.வின் வழி வந்த குடும்பம் என்பதால் மாநகரமெங்கும் அறியப் பட்டவர் என்ற பயோடேட் டாவுடன் கட்சித் தலை மையின் இரட்டைத் தலைமையிடமே மூவ் செய்து வருகிறார் சுதா.பரமசிவன். இம்முறை வாய்ப்பு நிச்சயம் என்ற முழு நம்பிக்கை யோடிருப்பவராம்.

dd

இவருக்கு சற்றும் சளைத்தவரல்ல மாநகர மாவட்ட அ.தி.மு.க.வின் அவைத்தலைவரான சங்கரலிங்கம். கட்சியின் நெல்லை உறுப்பினர்களின் முன்னோடி. தனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், இளம் பெண்கள் பாசறை பொறுப்பிலிருக்கும் தன் மகள் ஜெயலலிதாவுக்கு சீட் பெற காய்களை நகர்த்திவருகிறார் சங்கரலிங்கம்.

அ.தி.மு.க.வின் நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். அனுதாபம், அதனை ஈடு கட்டும் வகையில் மேயர் வாய்ப்புக்காக மூவ்களை நடத்திவருகிறார்.

மேயர் ரேசிலிருப்பவர்களின் பல்ஸ் ரேட் தடதடக்கிறது.

nkn151221
இதையும் படியுங்கள்
Subscribe