திகாரிகளின் அலட்சியத்தால் பல்லாயிரம் மெட்ரிக் டன் நெல் வீணடிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. கொள்முதல்  செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சரியாகப் பராமரிக்காததால், நெல் முளைத்தும், மக்கியும்  சேதமாகி பல லட்ச ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரையடுத்த கொடூர் ஊராட்சியில் ஆட்சிவிளாகம் பகுதியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முறை யான பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து, ஈரப்பதத்தில் நெல் முளைப்பு ஏற்பட்டு நாற்று வளரத் துவங்கியுள்ளது. மேலும், நெல்  மூட்டைகள் மக்கியதால், மூட்டைகள் கிழிந்து அதிலிருந்த நெல்லெல்லாம் கீழே கொட்டி வீணாகி வருகிறது. ஆகையால் நுகர்பொருள் வாணிபக் கழகத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாய சங்க நிர்வாகி வெங்கடேசனை தொடர்புகொண்டு கேட்டபோது, "இந்த ஆண்டு பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையத்தில் முறையான பராமரிப்பின்றி நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியது. குறிப்பாக, கூவத்தூரை அடுத்த ஆட்சிவாக்கம், ஆண்டவாக்கத்தில் மட்டும் சுமார் 20,000 மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் வீணடிக்கப்பட் டுள்ளன. கடந்த ஆண்டு செங்கல்பட்டு ரயில்வே நடைமேடையில் வைக்கப்பட் டிருந்த பல்லாயிரம் நெல் மூட்டைகள் இதேபோல் வீணானது குறிப்பிடத்தக் கது, உத்திரமேரூர் பகுதியிலும் இதே நிலைதான். அதிகாரிகளைக் கேட்டால் ஆட்சி செய்பவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். அவர்களைக் கேட்டால் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

எந்த அரசு வந்தாலும் சரி, சாலை அமைப் பது, இடுகாடு எரிமேடை அமைப்பது போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவே தவிர, விவசாயிகளின் கோரிக்கையான நெல் உலர்த்தும் களம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வீணடிக்காமல் வைக்க குடோன் இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்படாது. முறையான பாதுகாப்பில்லாததால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு மதிப்பில்லாமல் போகின்றது. இதே நிலை நீடித்தால் நாளை உணவுக்காக வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். 

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து கேட்க, நேரடி நெல் கொள்முதல் நிலைய மாவட்ட அதிகாரி ரேணுகாம்பாளை தொடர்புகொண்ட போது அவர் தொடர்பை எடுக்கவில்லை. பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசியதில், இந்த விஷயம் தொடர்பாக மூன்று பேர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரி வித்தார்.