Advertisment

தனியார் பள்ளிகளின் அலட்சியம்! பலிகடாவாகும் பிஞ்சுகள்!

cc

ங்களைப் போலல்லாமல், தங்கள் குழந்தைகளுக்காவது நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும், வாழ்வில் உயர்த்த வேண்டும் என்ற லட்சியக் கனவோடு, பாடுபட்டுப் பணத்தைச் சம்பாதித்து தனியார் கல்வி நிறுவனங்களில் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர் மிகுதியாக இருக்கிறார்கள்.

Advertisment

cc

ஆனால், கல்வி நிறுவனங்களின் அலட்சியத்தால், பிஞ்சுகளின் உயிர் காவு வாங்கப்பட்டு, பெற்றோரின் லட்சியக்கனவு சிதைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நடப்பு ஆண்டிலும், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பட்டாம்பூச்சிகளாய்ச் சிறகடித்த, சென்னை கே.கே.நகர், வாணி வித்யாலயா சீனியர் செகண்டரி மற்றும் ஜுனியர் காலேஜ் என்ற சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கு விபரீதம் காத்திருந்தது.

மீனாட்சியம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த பள்ளியில், பிளஸ் டூ வரை ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர், இந்த பள்ளி, 'ப' வடிவ அமைப்பில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்குமுன், பள்ளியின் நான்காவது தளத்தில் உள்ள வகுப்பறையின் சிமெண்டு மேற்கூரை இடிந்து விழுந்தத

ங்களைப் போலல்லாமல், தங்கள் குழந்தைகளுக்காவது நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும், வாழ்வில் உயர்த்த வேண்டும் என்ற லட்சியக் கனவோடு, பாடுபட்டுப் பணத்தைச் சம்பாதித்து தனியார் கல்வி நிறுவனங்களில் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர் மிகுதியாக இருக்கிறார்கள்.

Advertisment

cc

ஆனால், கல்வி நிறுவனங்களின் அலட்சியத்தால், பிஞ்சுகளின் உயிர் காவு வாங்கப்பட்டு, பெற்றோரின் லட்சியக்கனவு சிதைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நடப்பு ஆண்டிலும், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பட்டாம்பூச்சிகளாய்ச் சிறகடித்த, சென்னை கே.கே.நகர், வாணி வித்யாலயா சீனியர் செகண்டரி மற்றும் ஜுனியர் காலேஜ் என்ற சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கு விபரீதம் காத்திருந்தது.

மீனாட்சியம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த பள்ளியில், பிளஸ் டூ வரை ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர், இந்த பள்ளி, 'ப' வடிவ அமைப்பில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்குமுன், பள்ளியின் நான்காவது தளத்தில் உள்ள வகுப்பறையின் சிமெண்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர், ஆனால் அதனைப் பள்ளி நிர்வாகம் மூடிமறைத்துவிட்டது. பின்னர் மீண்டும் அந்த பள்ளியின் மேற்கூரை மற்றும் ஜன்னல் சேதமடைந்து விழுந்ததில் மாணவர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு கை மற்றும் உடலின் மற்ற பாகங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பள்ளி மாணவர் ஒருவரின் பெற்றோர், நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஆதாரங்களை நம்மிடம் அளித்து விசாரிக்குமாறு கூறியதோடு, தங்களது பெயர் வெளியானால் பிள்ளையின் படிப்பு பிரச்சனையாகிவிடும் என்பதால், பெயரை வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் அளித்த வீடியோவில், பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது.

Advertisment

cccc

இதுகுறித்து விசாரிக்க, சம்பந்தப்பட்ட வாணி வித்யாலயா பள்ளிக்குச் சென்றோம். உள்ளே அனுமதிக்க வில்லை. எனவே பள்ளியில் சில கட்டிட வேலைகள் நடப்பதை வெளியிலிருந்து படமெடுத்தோம். பின்னர் செல்பேசி மூலம் பள்ளியின் துணை முதல்வரைத் தொடர்பு கொண்டோம். வெகு நேரத்திற்குப் பின்னர் நம்மிடம் பேசியவர், "நான்காவது மாடி வகுப்பறைகளில் ஆல்ட்ரேஷன் வேலைகள் தான் நடக்கின்றன. மற்றபடி, தங்களுக்கு பதில் கூற முடியாது" என்றார். "பள்ளிக் கட்டிட மேற்கூரை உடைந்து விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தின் வீடியோவே உள்ளது" என்று சொன்னதும், "அதெல்லாம் ஒன்றுமில்லை. யாரிடம் அனுமதி வாங்க வேண்டுமோ, அவர்களிடம் முறையாக அனுமதி வாங்கிவிட்டுத்தான் பள்ளிக்கட்டிட மறுசீரமைப்பு வேலை நடக்கிறது" என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். பள்ளி அமைந்துள்ள கே.கே.நகர் பகுதி பத்தாவது மண்டல செயற்பொறியாளர் பெரியசாமியிடம் பேசினோம், "அந்தப் பள்ளியிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. உதவி செயற்பொறியாளர் ராஜாவை கேட்டுப் பாருங்கள்'' என்றார். அவரைத் தொடர்புகொண்டோம், அவருக்கும் எந்தத் தகவலும் வரவில்லை என்றார். ஆக, முறை யாக எந்தவித முன்அனுமதியோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ செய்யாமல் இதுபோல் அலட்சிய மாகச் செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை பாயும்தானே?

பள்ளிகளுக்கு பிஞ்சுக் குழந்தைகளைச் சுமந்துசெல்லும் வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை. சென்னை தாம்பரம் சியோன் பள்ளி மாணவி சுருதி, சென்னை வளசரவாக்கம் ஸ்ரீவெங்கடேஷ்வரா பள்ளி மாணவன் தீக்சித் வரிசையில் தற்போது மாணவன் செல்வநவீன் பலியாகியுள்ளான்.

தூத்துக்குடி மாவட்டம் நாட்டார்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ராஜி, அப்பகுதி பள்ளி மாணவர்களை பாளையில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 27-ஆம் தேதியன்று ஏழு பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும்போது, செல்போனில் பேசியபடியே அலட்சியமாக ஆட்டோவை ஓட்டியிருக்கிறார். அனவரதநல்லூர் தென்னம்பாண்டி சாஸ்தா கோயில் அருகே ஆட்டோ செல்லும்போது செல்போன் நழுவி விழ, ஆட்டோ ஓட்டிய படியே அதனைப் பிடிக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்ததில், ஆட் டோவின் அடியில் சிக்கி, ஊத்தப் பாறையைச் சேர்ந்த பால கிருஷ்ணனின் நான்கு வயது மகன் செல்வநவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலே பலியானான். மேலும் ஐந்து மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். ஒரு மாணவன் மட்டும் லேசான காயத்துடன் தப்பினான். விபத்தில் மாணவன் பலியானதைக் கண்டதுமே ஆட்டோ டிரைவர் ராஜி தலைமறைவாகிவிட்டார்.

விபத்தில் பலியான எல்.கே.ஜி. மாணவன், அன்றுதான் முதன்முதலில் பள்ளிக்குச் சென்றான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிஞ்சுக் குழந்தைகள் பள்ளி செல்லுமுன் சேர்த்துக்கொள் ளப்படும் ப்ரீஸ்கூல்களின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு புகார்கள் வருகின்றன. குழந்தைகளை தூங்க வைப்பதற்காக தூக்க மருந்து கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

சமீபத்தில் பல்லாவரம் தர்கா சாலை, கோபாலன் தெருவில் இயங்கிவரும் ப்ரீஸ்கூலில் 9 மாத குழந்தை கவிஸ்ரீ இத்திகா, அங்குள்ள கழிப்பறை தண்ணீர் பக்கெட்டினுன் விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. அந்த ப்ரீஸ்கூலில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஜெயஸ்ரீ என்பவரின் குழந்தைதான் இந்த கவிஸ்ரீ என்பது கூடுதல் அதிர்ச்சி. ஓர் ஆசிரியையின் குழந்தையே அஜாக்கிரதையால் உயிரிழந்ததால் இச்சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி நடக்கிறது.

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் கல்வித்துறை அதிகாரிகள், அதேபோல், தனியார் பள்ளிகளின் கட்டிட வசதி, வாகன வசதிகள் குறித்தும் தீவிர ஆய்வு நடத்தினால்தான் இத்தகைய உயிரிழப்புகள் தொடராமல் தடுக்க இயலும். செய்வார்களா?

nkn060722
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe