சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியில் கேஷுவாலிட்டி மெடிக்கல் ஆபீஸாராக இருப்பவர் டாக்டர் வெங்கடேசன். இவரது, மகன் உதித்சூர்யாவிற்கு பதில்தான் வேறொரு மாணவன் ‘நீட்’ தேர்வு எழுதி, தேனி மருத்துவக் கல்லூரியில் உதித்சூர்யா எம்.பி.பி.எஸ். சேர்ந்தது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, உதித்சூர்யாவின் பெயரில் தேர்வு எழுதிய மாணவன்தான் கலந்துரையாடலுக்கும் வந்திருக்கிறான். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷனின்போதும் வந்திருக்கிறான். அட்மிஷன் முடிந்து சிலநாட்கள் கழித்துதான் வகுப்புகள் தொடங்கும். அப்போதுதான், உதித்சூர்யா கல்லூரிக்கு வந்து படிப்பை தொடர்ந்திருக்கிறார். இதுகுறித்து, அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் புகார் வந்ததைத் தொடர்ந்துதான் கல்லூரி டீன் ராஜேந்திரன் தலைமையில் விசாரித்தபோது நீட் தேர்வு ஹால்டிக்கெட்டில் இருந்த புகைப்படம், மருத்துவக் கலந்தாய்வின்போது ஒட்டப்பட்டிருந்த புகைப்படம், அட்மிஷனின்போது ஒட்டப்பட்டிருந்த புகைப்படம் என மூன்று புகைப்படங்களிலும் உதித்சூர்யாவின் முகம் இல்லை. அது, வேறொருவனின் முகம் என்பது தெரியவந்தது. பிறகுதான், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நீட்’ தேர்வில் உதித் சூர்யாவிற்கு பதில் புகைப்படத்திலுள்ளவன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மும்பையிலுள்ள கோச்சிங் சென்டர் உதவி இல்லாமல் நிச்சயமாக உதித்சூர்யா தன்னிச்சையாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருக்கவே முடியாது. அதனால், உதித்சூர்யாவுக்கு பதில் தேர்வு எழுதியதுபோல கோச்சிங் சென்டர் ஆட்கள் மூலம் இன்னும் யார், யார
சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியில் கேஷுவாலிட்டி மெடிக்கல் ஆபீஸாராக இருப்பவர் டாக்டர் வெங்கடேசன். இவரது, மகன் உதித்சூர்யாவிற்கு பதில்தான் வேறொரு மாணவன் ‘நீட்’ தேர்வு எழுதி, தேனி மருத்துவக் கல்லூரியில் உதித்சூர்யா எம்.பி.பி.எஸ். சேர்ந்தது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, உதித்சூர்யாவின் பெயரில் தேர்வு எழுதிய மாணவன்தான் கலந்துரையாடலுக்கும் வந்திருக்கிறான். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷனின்போதும் வந்திருக்கிறான். அட்மிஷன் முடிந்து சிலநாட்கள் கழித்துதான் வகுப்புகள் தொடங்கும். அப்போதுதான், உதித்சூர்யா கல்லூரிக்கு வந்து படிப்பை தொடர்ந்திருக்கிறார். இதுகுறித்து, அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் புகார் வந்ததைத் தொடர்ந்துதான் கல்லூரி டீன் ராஜேந்திரன் தலைமையில் விசாரித்தபோது நீட் தேர்வு ஹால்டிக்கெட்டில் இருந்த புகைப்படம், மருத்துவக் கலந்தாய்வின்போது ஒட்டப்பட்டிருந்த புகைப்படம், அட்மிஷனின்போது ஒட்டப்பட்டிருந்த புகைப்படம் என மூன்று புகைப்படங்களிலும் உதித்சூர்யாவின் முகம் இல்லை. அது, வேறொருவனின் முகம் என்பது தெரியவந்தது. பிறகுதான், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நீட்’ தேர்வில் உதித் சூர்யாவிற்கு பதில் புகைப்படத்திலுள்ளவன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மும்பையிலுள்ள கோச்சிங் சென்டர் உதவி இல்லாமல் நிச்சயமாக உதித்சூர்யா தன்னிச்சையாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருக்கவே முடியாது. அதனால், உதித்சூர்யாவுக்கு பதில் தேர்வு எழுதியதுபோல கோச்சிங் சென்டர் ஆட்கள் மூலம் இன்னும் யார், யார் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வை எழுதியிருக்கிறார்கள்? என்ற கோணத்தில் உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடிவருகிறது காவல்துறை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் தாக்கல் செய்தார் உதித்சூர்யா.
இதேபோல், கடந்த செப்டம்பர் 10-ந் தேதி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கையில் நீட் தேர்ச்சி சான்றிதழ் இல்லாமல் உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழைக் கொடுத்து சேரவந்ததால் வெளிமாநிலத்தை சேர்ந்த ரியாஷ் என்பவனும் காவல்துறையில் சிக்கியுள்ளான். இன்னொரு மாணவனை தேடிவருகிறது போலீஸ்.
2019-ஆம் ஆண்டில் நடந்து முடிந்த மருத்துவ மாணவர் சேர்க்கையில் 80-க்கு மேற்பட்ட மாணவர்கள் தவறான இருப்பிட சான்று கொடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் திருக்கும் வழக்கறிஞர் கண்ணன். நம்மிடம், ""அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்படும் மாநில சீட்கள் அந்தந்த மாநிலத்திலுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு மாநிலத்தில் பிறந்திருந்தாலும் 6 முதல் 12-ஆம் வகுப்புவரை ஒரு மாநிலத்தில் படித்திருந்தால் அந்த மாநில அரசின் மருத்துவ சீட்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்களின் மாநில அரசு சீட்களுக்கும் விண்ணப்பித்துவிட்டு தமிழகத்தில் இருப்பதுபோல் சர்டிஃபிகேட் வாங்கி, தமிழகத்திலும் மோசடியாக விண்ணப்பித்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.
ஆனாலும், அரசாங்கம் அதுகுறித்து கண்டுகொள்ளவே இல்லை. உண்மையில் மற்ற மாநில அரசு தரவரிசைப் பட்டியலை வைத்து தமிழக அரசு விசாரணை நடத்தினால் மோசடியாக சேர்ந்த பல்வேறு மாணவர்கள் சிக்குவார்கள். இதனால், எத்தனை மாணவர்கள் மோசடியாக சேர்ந்தார்களோ அத்தனை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டிய சீட் கிடைக்காமல் போய்விடுகிறது. இதைவிடக் கொடுமை, இப்படி கிடைக்காமல் போன மாணவர்களைவிட மோசடியாக சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களாக இருப் பார்கள்.
7 வருடங்கள் ஒரு மாநிலத்தில் பள்ளிப் படிப்பை படித்திருந்தால்தான் நேட்டிவிட்டி சர்டிபிகேட் கொடுக்கவேண்டும் என்று விதி இருந்தும் ஐந்து வருடங்கள் இருந்தால் அவர் களுக்கு நேட்டிவிட்டி சர்டிபிகேட் கொடுத்து விடுகிறார்கள் தாசில்தார்கள். ஆக, மோசடிக்கு அரசு அதிகாரிகளே துணையாக இருக் கிறார்கள். நீட் தேர்வு விண்ணப்பத்தின்போதே எந்த மாநிலம் என்று கேட்கிறார்கள். அந்தப் பட்டியலை வைத்தே பலரை கண்டுபிடிக்க லாம்''’என்கிறார் அவர்.
"நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுத்தும் இரட்டைச் சான்று மோசடியால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டிய என் மகளின் மருத்துவ சீட் பறிபோனது'’என்று குற்றஞ்சாட்டுகிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் ஒருவரான தீனதயாளன் நம்மிடம், ""நான் எம்.பி.சி. என்பதால் இட ஒதுக்கீட்டின்படி 20 சதவீதம் என்ற அடிப்படையில் அரசுக் கல்லூரியில் சுமார் 500 சீட்டில் ஒரு இடத்தை பிடித்திருப்பாள் என் மகள். கஷ்டப்பட்டு பணம் செலவு செய்து படிக்க வைத்துதான் நீட் தேர்வில் 206 மதிப்பெண்கள் பெற்றார் என் மகள். ஆனால், 1404 வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ்களை கொடுத்துவிட்டு தமிழகத்தில் சேர்ந்ததால் எனது மகளின் அரசு மருத்துவக் கல்லூரி சீட் பறிபோனது. ஒரே மாணவன் தமிழக அரசு தரவரிசை பட்டியலிலும் இருக்கிறான். பாண்டிச்சேரி தர வரிசை பட்டியலிலும் இருக்கிறான். மத்திய அரசின் ஜிப்மர் தரவரிசைப் பட்டியலிலும் இருக்கிறான். எப்படி, மூன்று இடத்தில் இருக்க முடியும்? என்று ஆராய ஆரம்பித்தபோதுதான் நீட் மோசடியை கண்டுபிடிக்க முடிந்தது. அதுமட்டுமல்ல, நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் செலக்ட் ஆன மாணவர்கள் மாநில அரசின் சீட்களை பிடிக்க முடியாது. ஆனால், கடந்த 2017-ல் பணபலம், அதிகார பலம்கொண்ட வி.வி.ஐ.பி. பிள்ளைகள் 1600 பேர் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களிலிருந்து தமிழக அரசின் மருத்துவ சீட்டுகளை பிடித்துவிட்டார்கள். இதுகுறித்து, வழக்கு தொடுத்தும் தமிழக அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல், 15 சதவீதம் ஒதுக்கப்படும் மத்திய அரசு கோட்டாவிலும் ஊழல்கள் நடக்கின்றன. நீட் வந்தால் தகுதியான மாணவர்கள் மருத்துவம் சேர்வார்கள் என்பதையே பொய்யாக்கியிருக்கின்றன இதுபோன்ற சம்பவங்கள்'' என்று குமுறி வெடிக்கிறார்.
இரட்டைச் சான்று மோசடி குறித்து சட்டப்போராட்டம் நடத்திவருபவரும் சட்ட மன்றத்தில் கவனஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்புக்குரல் கொடுத்தவருமான தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் நாம் கேட்டபோது, ""2017-ல் 1400-க்கு மேற்பட்ட மாணவர்கள் மோசடியாக சேர்ந்திருக்கிறார்கள் என்பதை நீதிமன்றமே ஏற்றுக்கொண்டது. அதற்குப்பிறகு, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் செய்தபிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்பேரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எனது கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமன்றத்திலேயே உறுதி அளித்தார். ஆனால், 2019-லும் மாணவர் சேர்க்கையில் மோசடி ஏற்பட்டிருக்கிறது என்றால் சுகாதாரத்துறைதான் காரணம். இதனால், கஷ்டப்பட்டு நீட் தேர்வுக்கு தயாரான தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்''’என்று குற்றஞ்சாட்டுகிறார்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மாநில அமைப்புச்செயலாளர் “டாக்டர் ராமலிங்கம், ""அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட சீட்டிங் நடந்திருக்கலாம். தமிழகத்தில் கண்காணிப்பு அதிகம் என்பதால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வே கூடாது. ஏனென்றால் என் மகனையோ, மகளையோ கோச்சிங் சென்டரில் சேர்த்து ஈஸியாக டாக்டராக்க முடியும். ஆனால், என்னைப்போன்று முதல்தலைமுறை மாணவர் டாக்டர் ஆகவே முடியாது''’’என்கிறார் வேதனையோடு.
வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டுவரும் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் நிலையில் உள்ளது. நீட்டே ஏழை-எளிய மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் ஏமாற்று வேலைதான். அந்த, அரசாங்கத்தையே ஏமாற்றிவிட்டதால் தேடப்பட்டு வருகிறார் தமிழக மாணவர். ஆனால், அரசாங்கத்தின் உதவியுடன் ஏமாற்றி பல்வேறு மாணவர்கள், அரசுக் கல்லூரிகளில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு தண்டனை? அவர்கள், எப்படி ஏழை-எளிய மக்களின் உயிரைக் காப்பாற்றுவார்கள்?
-மனோசௌந்தர், சக்தி