ற்போது, கொரோனா பேரிடர் சூழலில் சிறப்பாக சிகிச்சை அளிக்கும் பெரும்பாலான அரசு மருத்துவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெடிக்கல் சீட் பெற்று டாக்டர்கள் ஆனவர் கள்தான். நீட் எழுதியவர்களல்ல. ஆனால், நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபிறகு அரசுக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர் களின் எண்ணிக்கை மிக மிக மிக குறைந்து விட்டது. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கி எளிதாக வாய்ப்பு பெற வேண்டிய அரியலூர் அனிதா தொடங்கி பிரதிபா, ரித்து ஸ்ரீ, வைஷ்யா, மோனிகா என பல மாணவர் களை நீட் எனும் கயிறு தற்கொலையில் தள்ளிவிட்டது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் ஒருவர்கூட கடந்த ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடிய வில்லை. அரசு நடத்திய நீட் கோச்சிங்கும் கண்துடைப்புதான்.

neet

நீட் தேர்வில் பாஸ் செய்தாலும் கூடுதல் மார்க் எடுத்தால்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கும். அரசுபள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களால் பணம் கொடுத்து தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவிலும் சேரமுடிய வில்லை. ஆனால், நீட் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார்ப்பள்ளி மாணவர் கள் கூட பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் சீட்டில் மருத் துவம் பயின்று வருகிறார்கள். இதனால், ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு சிதைந்துபோனது. இன்னொரு பக்கம், நீட் தேர்வே எழுதாமல் புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்தும் தனியார்ப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.

இந்நிலையில்தான், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேரும் வகையில் உள் ஒதுக்கீடு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று கடந்த 2020 மார்ச்-21 ந்தேதி 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் சட்டத் துறைச்செயலாளர் கோபி ரவிக்குமார், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவக்கல்வி தேர்வுக்குழு இயக்குனர் செல்வராஜ், கோவை கே.எம்.சி. ஹெச். தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி.பழனிச்சாமி ஆகியோரைக்கொண்டு அமைக்கப்பட்ட குழு ஒருமாதத்தில் இதற்கான பரிந்துரையை அளிக் கும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

Advertisment

ஒரு மாதம் கடந்துவிட்டநிலையில், இக் குழுவால், அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர வழி உண்டா? என்று தமிழ்நாடு மருத்துவக்கல்வி முன்னாள் இயக்குனர் டாக்டர் கலாநிதியிடம் நாம் கேட்ட போது, ""ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண் டாம் வகுப்புவரை தமிழக அரசு மற்றும் அரசு 100 சதவீத உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே இந்த உள் ஒதுக்கீடு பொருந் தும். கடந்த 2019ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 5 லட்சத்து 20,000 மாணவர்கள் சயின்ஸ் குரூப் மாணவர்கள். இவர்கள்தான், மருத்துவ சீட்களுக்கு விண்ணப்பிக்கமுடியும். இதில், அரசுப்பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்? தனியார்ப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் என்று பிரித்து 50 சதவீத மருத்துவ சீட்களில் அரசுப்பள்ளி மாணவர்களையும் 50 சதவீத சீட்களில் தனியார்ப்பள்ளி மாணவர்களையும் புதிய உள் ஒதுக்கீடு சட்டத்தின்மூலம் நிரப்பி னாலே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தலங்கள் 50 சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு சீட்களிலும் எளிதாக சேரமுடியுமே?'' என்றார் ஆலோசனையாக.

தமிழக அரசின் நீட் உள் ஒதுக்கீடு புதிய சட்டம் குறித்தும் டாக்டர் கலாநிதியின் ஆலோசனை குறித்தும் பொதுப்பள்ளிகளுக் கான மாநிலமேடை அமைப்பின் பொதுச் செயலாளரும் பிரபல கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் நாம் கேட்ட போது, ""இந்த உள் ஒதுக்கீடு புதிய சட்டத்தின் மூலம் ஒரேயொரு அரசுப்பள்ளி மாணவர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நீட் தேர்வு எழுதக்கூடிய அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான் இந்த உள் ஒதுக்கீடு பொருந்தும். ஆனால், லட்சக்கணக்கில் பணம் கட்டமுடியாமல் நீட் கோச்சிங் செண்டர்களில் சேரமுடியாத நீட் தேர்வே எழுத முடியாத ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்துதான் நாங்கள் கவலைப் படுகிறோம். அதனால்தான், நீட்டுக்கு நிரந்தர விலக்கு கேட்டு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

neet

Advertisment

தமிழக அரசு தனது வாக்குறுதிகளிலிருந்து தவறுகிறது. மருத்துவக்கனவில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றுகிறது. இதையெல்லாம், திசை திருப்பத்தான் இப்படியொரு குழுவை அமைத் திருக்கிறார்கள். உண்மையான தீர்வு, நீட் விலக்கு தான். அதுகுறித்து, பேசுவதற்கோ விவாதிக்கவோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயங்குவது ஏன்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

இளைஞர் இயக்கத்தின் தலைவரான டாக்டர் எழிலன், ""சி.எம்.சி. வேலூர் மருத்துவக் கல்லூரியில் முதல் வருடம் நீட் தேர்வு நடத்த வில்லை. பிறகு, மத்திய அரசிடம் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தது சி.எம்.சி. நிர்வாகம். மிஷன் கோட்டா எனப்படும் 15 சதவீத ஒதுக்கீடாக தேவாலய உறுப்பினர்கள், அவர்களுடைய ஆலயத்திற்காக பணியில் ஈடுபட்டவர்கள், சி.எஸ்.ஐ.க்காரர்களுக்கு ஸ்பான்சர் சீட் என ஒதுக்கமுடிவு செய்தது. உச்சநீதிமன்றம் அதை யெல்லாம் நிராகரித்துவிட்டது. இதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு

புதிய சட்டத்தையோ மருத்துவக்கல்வி முன்னாள் இயக்குனர் கலாநிதியின் ஆலோ சனையையோ நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும்போது எடுபடாமல் போய்விடும். இப்படி, தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரிம்கோர்ட் உத்தரவும் உள்ளது.

கிராமப்புறத்திலுள்ள அரசுப்பள்ளியில் 10 வருடங்கள் படித்த மாணவர்களுக்கு கல்லூரி யில் சேர, கலைஞர் 5 சதவீதம் ரூரல் கோட்டா என்று கொண்டுவந்தார். அடுத்தவருடம் 10 சதவீதம், அதற்கடுத்து 15 சதவீதமாக ரூரல் கோட்டாவை அதிகப்படுத்தினார். ஜெயலலிதா 2001-ல் ஆட்சிக்குவந்தபிறகு அதை 25 சதவீத மாக அதிகப்படுத்தினார். இந்த, ரூரல் கோட்டா வுக்கு எதிராக பார்ப்பன மாணவர்கள் சுப்ரிம் கோர்ட்டுக்கு போய்விட்டார்கள். வட்டார ரீதியாக, பள்ளி ரீதியாக டிஸ்கிரிமினேட் செய்யக்கூடாது. இது, சட்டத்துக்குப் புறம் பானது என்று ரூரல் கோட்டாவையே தடை செய்துவிட்டது சுப்ரிம் கோர்ட். அதேபோல், இதுவும் நீதிமன்றத்தால் தடை செய்யப்படலாம்.

இது, பேரிடர் காலம். எப்படி, லட்சக் கணக்கான மாணவர்களை, நூறுநூறாக ஒவ்வொரு மையத்திலும் ஒன்றுகூட்டி நீட் தேர்வை நடத்தப்போகிறார்கள்? இந்த பேரிடர் காலத்தையே அடிப்படையாக வைத்து இந்த வருடம் பதினொன்று-பன்னிரெண்டாம் வகுப் புகள் அடிப்படையில் மருத்துவச்சேர்க்கையை நடத்துங்கள் என்கிறேன். இந்தவருடம், நீட் இல்லாமல் மருத்துவச்சேர்க்கை நடத்தினால் நீட் தேர்வுக்கு முன்பு,பின்பு, விலக்குக்குப்பிறகு என மாணவர்களின் மருத்துவச்சேர்க்கை எப்படி இருந்தது? என்ற வித்தியாசங்களும் புள்ளிவிவரங்களும் நமக்கு கிடைத்துவிடும்.

நீட் வந்ததால் மருத்துவக்கல்வியில் புதிய மாற்றத்தை உண்டாக்கவில்லை, தனியார் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டியே நீட்டுக்கு நிரந்தர விலக்கு கோரமுடியும். ஓட்டுக்காக மக்களை ஏமாற் றாமல் இந்த வருடம் கொரோனா பேரிடர் காலத்தைக் காண்பித்து நீட் தேர்வு வைக்காமல் பன்னிரெண்டாம் வகுப்பு அடிப்படையில் தேர்வு நடத்துமா தமிழக அரசு?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

தமிழக அரசு நியமித்த நீட் உள் ஒதுக்கீடு கமிட்டியின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியு மான கலையரசனிடம் அரசுக்கு ஏதாவது பரிந்துரை கொடுத்திருக்கிறீர்களா? என்று நாம் தொடர்புகொண்டு கேட்டபோது,“""இதுகுறித்து, ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கொரோனா சூழலால் இன்னும் பரிந்துரையை அரசுக்கு வழங்கவில்லை. இன்னும், கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், லாக்டவுன் முடிந்து வழக்கமான சூழல் நிலவியதும் முழுமையான பரிந்துரையை அரசுக்கு அளிப்போம்'' என்றார் அவர்.

நீட் கோச்சிங் செண்டரில் பணத்தைக் கொட்டி படித்துவிட்டு அரசு மருத்துவக் கல்லூரியிலும் தனியார் மருத்துவக் கல்லூரி களில் அரசின் இடங்களையும் பிடித்து படிக்கும் பணக்கார தனியார்பள்ளி மாணவர் கள், அரசாங்கத்தின் செலவிலேயே மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளுக்கோ வெளிநாடு களுக்கோ போய்விடுவார்கள். எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பரிந்துரைப்பதற்கு பதிலாக நிரந்தர நீட் விலக்கை பரிந்துரை செய்தால் ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் டாக்ட ராகி அரசு மருத்துவக்கல்லூரிகளிலேயே பேரிடர் காலங்களிலும் உயிரைக்கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றுவார்கள் என்பது நக்கீரனின் ஆலோசனை மட்டுமல்ல பெரும்பா லான கல்வியாளர்கள், பொதுமக்களின் கோரிக்கையும்கூட.

- மனோசௌந்தர்