வழக்கம் போல், நீட் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டும் பெரிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர் களின் தேர்ச்சி எண் ணிக்கை, ஆண்டுக் காண்டு தேய்பிறை யாகி வருவது, மாணவர்கள், பெற் றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. சமூக ஆர்வலர்கள், நீட் தேர்வு முடிவுகள் குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களை அலசுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NEET_2.jpg)
குறிப்பாக, இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகளின் சீட்டுகள் எண்ணிக்கை, தோராயமாக 92 ஆயிரம் என்றிருக்கும்போது எதற்காக 10 லட்சம் மாணவர்கள்வரை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஒன்றிய அரசு அறிவிக்கிறது? இதன்மூலம், தனியார் கல்லூரிகள் தானே இப்போதும் கல்லாகட்டுவார்கள்? பண வசதியுள்ளவர்களுக்கு மட்டும் தானே மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்கும்? ஓரளவு நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், போதிய பண வசதி இல்லாவிட்டால் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைப்பது எட்டாக்கனி தானே? அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்கள் மட்டும் தானே இந்த நீட் மூலம் பலனடைவார்கள்? மற்ற மாணவர் கள் கதி என்ன என்ற கேள்வி எழுகிறது.
மேலும், நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 80% பேருக்குமேல் தேர்ச்சி பெற முடியாமல் போயிருப்பது ஏன்? அரசு தரப்பில் பயிற்சியளித்தும் இந்த நிலை என்றால் எப் போதுதான் இது சரி யாகும்? நீட் தேர்வில் வெற்றிபெற வைப்ப தற்கான பயிற்சிகள் போதுமான அளவுக்கு கொடுக்கப்படவில் லையா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழு கின்றன. நீட் தேர் வை எதிர்கொள் வதில் தமிழக மாண வர்கள், தமிழக அரசின் அணுகு முறை எப்படி இருக்க வேண்டு மென்று, சமூக சமத்துவத்திற் கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தியிடம் கேட்டோம்.
"மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்களில், தோராயமாக 48 ஆயிரம் அரசு மருத்துவக்கல்லூரி இடங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அனைத்து இடங்களிலும் தமிழக மாணவர்களால் சேர்ந்திட முடியாது. அவற்றில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ இடங்கள் கிட்டத்தட்ட 5,000 என்ற எண் ணிக்கையில் இருக்கும். அவற்றிலும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்களைக் கொடுத்ததுபோக மீதமுள்ள இடங்களைத்தான் தமிழக மாணவர்களால் நிரப்ப முடியும், அதேபோல, மற்ற மாநிலங்களில் இருக்கும் 15% அகில இந்திய ஒதுக்கீட்டு இருக்கை களுக்கு நம் தமிழக மாணவர்களால் போட்டியிட இயலும். இந்த போட்டியில், இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மாணவர்களும் இருப்பார்கள் என்பதால், இங்கே இடங்களைக் கைப்பற்ற நமக்கான தகுதியையும், திறமையையும் அதிகரிக்க வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NEET1.jpg)
நீட் தேர்வு விலக்கு தான் தமிழக அரசின் லட்சியமாக இருந்தாலும், நீட் விலக்கு பெற்றாலும்கூட தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிப்பதை நிறுத்தக்கூடாது. ஏனென்றால், நீட் தேர்வில் தமிழகத்துக்கு மட்டுமே விலக்கு கிடைக்கும்பட்சத்தில், அகில இந்திய ஒதுக் கீட்டின் மூலம் கிடைக்கும் இடங்களுக்கு நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஆஒஒஙந, ஓஒடஙஊத, ராணுவ மருத்துவக் கல்லூரி, தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள் உட்பட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவம், ஆயுஷ் மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகியுள்ளது. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கும் நீட் அவசியமாகிறது. எனவே, இப்படியான அனைத்து வாய்ப்புக்களிலும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்களைப் பெறுவதற்கு நம்முடைய தமிழக மாணவர்களைத் தகுதியுடையவர்களாக உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதற்கு, தரமான இலவசப் பயிற்சியை, இலவச உணவு, பாதுகாப்பான தங்குமிடங்களுடன், 11, 12ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். இதனைத் தீவிர மாகச் செயல்படுத்தும்போதுதான் நீட் தேர்வு இருந் தாலும் சரி, விலக்கப்பட்டாலும் சரி, மருத்துவர்களாக அதிக அளவில் தமிழக மாணவர்கள் உருவாக முடியும்'' என்றார்.
இன்றைய சூழலில், வங்கி, அஞ்சலகம், ரயில்வே, விமான நிலையங்களில் வேற்று மொழி பேசுபவர்களின் ஆதிக்கம் மிகுந்துவருகிறது. இதே நிலை மருத்துவத்துறையிலும் வந்திடாதிருக்க, தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்றுவதில் தமிழக அரசு கூடுதல் கவனம் எடுத்து பயிற்சியளிக்க வேண்டும். நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், நீட் தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குவதிலும் தீவிர முனைப்பு காட்ட வேண்டும். தமிழகத்திலுள்ள மருத்துவமனைகளில் தமிழ் மொழி தெரிந்த மருத்துவர்கள் பணியாற்றினால்தான் சாமானிய மக்களால் சிக்கலில்லாமலும், சரியானபடியும் மருத்துவ வசதியைப் பெறமுடியும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/neet-t_0.jpg)