நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் தோண்டத் தோண்ட நிறைய விவகாரங்கள் கிடைக்கின்றன. இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை' என்கிறார்கள் இந்த மோசடியை விசாரிக்கும் காவல்துறையினர்.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் பற்றியும் அதில் நடைபெறும் முறைகேடுகள் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்ததும் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல பல புதிய தகவல்கள் வந்து கொண்டி ருக்கின்றன. இந்தியா முழுவதும் 20 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வில், முறைகேடுகள் செய்யலாம் வாருங்கள் என அழைக்கும் இணையதளங்கள் இந்தத் தேர்வு தொடங்கிய 2013-ம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகின்றன. இந்த இணைய தளங்கள் AD- MKTING, HP MKTING AX-STUDENT, MD-DRYAO ஆகிய பெயர்களில் இயங்குகின்றன. இந்த வெப்சைட்டுகள் நீட் எழுதும் மாணவர்களுக்கு நிறைய மெசேஜ்களை அனுப்புகின்றன.
'நீங்கள் நீட் தேர்வு எழுதுபவர் என தெரியும். நீட் தேர்வில் நீங்கள் என்ன மார்க் எடுத்தாலும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நல்ல கல்லூரியை நாங்கள் வாங்கித் தருகிறோம். நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் நாங்கள் உங்களை டாக்டர் ஆக்குகிறோம்' என இந்த வெப்சைட்டுகளில் இருந்து நீட் தேர்வாளர்களுக்கு மெசேஜ்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. மாணவர் களுக்கு மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்களுக்கும் மெசேஜ் வருகிறது. சிலசமயம் இந்த வெப்சைட்டை நடத்துபவர்கள் தொலைபேசியிலும் அழைப்பார்கள். இதுபோல இருபது வெப்சைட்டுகள் இந்தியா முழுவதும் இயங்குகின்றன.
இவர்கள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் அடையாளங்கள் மற்றும் அவர்களது முகவரிகள் எல்லாம் நீட் தேர்வை நடத்தும் தேசிய சோதனை மையம் (National Testing Agency) வெளியே விடுகிறது என விவேக் பாண்டே என்கிற சமூக ஆர்வலர் புகார் தெரிவிக்கிறார். நீட் எழுத ஆரம்பித்தது தொடங்கி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிப்பது வரை இந்த வெப்சைட் நபர்க
நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் தோண்டத் தோண்ட நிறைய விவகாரங்கள் கிடைக்கின்றன. இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை' என்கிறார்கள் இந்த மோசடியை விசாரிக்கும் காவல்துறையினர்.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் பற்றியும் அதில் நடைபெறும் முறைகேடுகள் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்ததும் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல பல புதிய தகவல்கள் வந்து கொண்டி ருக்கின்றன. இந்தியா முழுவதும் 20 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வில், முறைகேடுகள் செய்யலாம் வாருங்கள் என அழைக்கும் இணையதளங்கள் இந்தத் தேர்வு தொடங்கிய 2013-ம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகின்றன. இந்த இணைய தளங்கள் AD- MKTING, HP MKTING AX-STUDENT, MD-DRYAO ஆகிய பெயர்களில் இயங்குகின்றன. இந்த வெப்சைட்டுகள் நீட் எழுதும் மாணவர்களுக்கு நிறைய மெசேஜ்களை அனுப்புகின்றன.
'நீங்கள் நீட் தேர்வு எழுதுபவர் என தெரியும். நீட் தேர்வில் நீங்கள் என்ன மார்க் எடுத்தாலும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நல்ல கல்லூரியை நாங்கள் வாங்கித் தருகிறோம். நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் நாங்கள் உங்களை டாக்டர் ஆக்குகிறோம்' என இந்த வெப்சைட்டுகளில் இருந்து நீட் தேர்வாளர்களுக்கு மெசேஜ்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. மாணவர் களுக்கு மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்களுக்கும் மெசேஜ் வருகிறது. சிலசமயம் இந்த வெப்சைட்டை நடத்துபவர்கள் தொலைபேசியிலும் அழைப்பார்கள். இதுபோல இருபது வெப்சைட்டுகள் இந்தியா முழுவதும் இயங்குகின்றன.
இவர்கள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் அடையாளங்கள் மற்றும் அவர்களது முகவரிகள் எல்லாம் நீட் தேர்வை நடத்தும் தேசிய சோதனை மையம் (National Testing Agency) வெளியே விடுகிறது என விவேக் பாண்டே என்கிற சமூக ஆர்வலர் புகார் தெரிவிக்கிறார். நீட் எழுத ஆரம்பித்தது தொடங்கி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிப்பது வரை இந்த வெப்சைட் நபர்கள் மாணவர்களை கண்காணித்தபடியே இருக்கிறார்கள். பல கோடிகள் புரளும் இந்த வியாபாரத்தை பற்றி இந்தியாவில் மருத்துவ தொழிலை கண்காணிக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலிடமே விவேக் பாண்டே ஆதாரங்களுடன் புகார் கொடுத்திருக்கிறார். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு பலியாகாதீர்கள் என இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டது.
முதலில் கல்லூரிகளில் சேருவதற்கு நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில் நல்ல கல்லூரியில் சேரத் தான் இந்த வெப்சைட்டுகள் செயல்பட்டன. நீங்கள் நீட் தேர்வில் 16.66 சதவிகிதம் பார்டரில் பாஸ் ஆனவரா? அல்லது 570-580 மார்க் வாங்கியவரா? உங்களுக்கு நல்ல கல்லூரியில் சீட் வாங்கித் தர நாங்கள் தயார்' என வெப்சைட் வியாபாரிகள் விளம்பரங்களே வெளியிட்டார்கள். இந்த விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள் என மெடிக்கல் கவுன்சில் விளம்பரம் மட்டும் செய்தது.
அடுத்தகட்டமாக நீட் தேர்வு எழுதும் மையங்களை நோக்கி பயணம் ஆரம்பித்தது. இன்று தமிழகத்தையே கலக்கும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி கோவாவில் நடை பெற்றது. 2017ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது என நான்கு மாணவர்களை கோவா போலீசார் கைது செய்து தமிழகத்தைப் போலவே மாணவர்களின் பெற்றோர் மற்றும் புரோக்கர்களுடன் சிறைக்கு அனுப்பினர். இந்த மாநிலங்களில் நடைபெறும் நீட் தேர்வுகளில் தமிழகத்தில் நடைபெறுவது போன்ற சோதனைகள் நடைபெறுவது இல்லை. நீட் தேர்வு ஆரம்பித்த 2013-ம் ஆண்டு முதல் இன்று வரை நீட் கேள்வித் தாள்கள் வருடம்தோறும் தேர்வுக்கு முன்பே லீக் ஆகிறது. அப்படி லீக் ஆகிய கேள்வித்தாள்களில் உள்ள பதில்களை எழுதிக் கொடுத்து அதை அப்படியே விடைத்தாள்களில் எழுதும் பழக்கம் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் சீதாதேவி என்கிற மாணவி 2018-ஆம் ஆண்டு நிறைய மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்வு பெற்றார். பள்ளியில் மக்கு மாணவியான அந்த மாணவி அகில இந்திய அளவில் நல்ல மதிப்பெண் பெற்றார் என்பதை அவருடன் படித்தவர்கள் நம்பவில்லை. அவர்கள் சீதாதேவியை அழைத்து மறுபடியும் நீட் தேர்வில் எழுதிய பதில்களை எழுதுமாறு கூறினர். அந்த பெண்ணால் எழுத முடியவில்லை. சீதாதேவி மற்றும் அவருக்கு உதவி செய்த புரோக்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். "நீட் தேர்வு ஒரு டுபாக்கூர் தேர்வு. இது எங்களுக்கு வேண்டாம்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் அளவிற்கு சீதாதேவி சம்பவம் பெரிய விவாதமானது.
""நீட் தேர்வு முறைகேடாக நடக்கிறது என குரல் எழாத மாநிலங்களே இல்லை. இன்று தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீட் ஆள் மாறாட்ட மோசடி பற்றி இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவரான வி.கே.பால், தேசிய சோதனை வாரியத்தின் தலைவர் எம்.எஸ்.ஆனந்த் ஆகியோர் வாய் திறப்பதில்லை. தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் உள்ள நாராயணபாபுவும் வாய் திறக்கவில்லை. ஆனால் நீட் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில் பெரம்பலூர் அனிதா உட் பட 20-க்கும் மேற்பட்ட வர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்'' என வருத்தத்துடன் தெரிவிக் கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
""இரண்டு வருடங் களுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். நீட் தேர்வுகளுக்கு முன்பு நடந்த மோசடி ஒன்று வெளிப்பட்டது. அந்த மோசடியில் ஈடுபட்ட டாக்டரின் மருத்துவ பட்டத்தை இதுவரை தமிழக அரசு பறிக்கவில்லை. அந்த மாணவரையும் கைது செய்யவில்லை. அவர்களா இந்த நீட் தேர்வு முறை கேடுகளுக்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி தமிழகத்தில் சமூக ஆர்வலர்க ளுக்கு மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அர்ச்சனா என்கிற உயர்சாதி பெண் +2 தேர்வில் பெயிலாகிறார். வி.ஏ.ஓ.வான அவரது தந்தையோ, துலுக்காணம் என்கிற இறந்துபோன தாழ்த்தப்பட்ட பெண்ணின் மார்க்கை வைத்து அர்ச்சனாவை மருத்துவ படிப்பு படிக்க வைத்து டாக்டராக்கிவிட்டார். அர்ச்சனாவை திருமணம் செய்த கணவன், "அர்ச்சனா எந்த ஜாதி' என காவல்துறையில் புகார் கொடுக்க அர்ச்சனாவின் தந்தை செய்த சதி அம்பலமாகியது. அதற்குள் அர்ச்சனா படித்து முடித்து டாக்டராகி விட்டார். அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை'' என சுட்டிக்காட்டுகிறார்கள். ""தமிழகத்தில் தற்போது விசாரணையிலிருக்கும் நீட் ஆள் மாறாட்ட மோசடியில் முக்கிய புள்ளியான மலையாளி ஜார்ஜ் ஜோசப் இன்னமும் சிக்கவில்லை. அவனது உண்மையான பெயர் ஜார்ஜ் ஜோசப் தானா? என்பது கூட இதுவரை தெரிய வில்லை'' என்கிறார் சி.பி.சி.ஐ.டி.யின் ஐ.ஜி.யான சங்கர்.
மோசடியில் ஈடுபட்ட இர்பான் என்கிற மாணவன் இரண்டு மோசடிகளை செய்துள்ளான். ஆள்மாறாட்டம் செய்து ஜார்ஜ் ஜோசப் கொடுத்த மார்க்குகள் 210. அதன்மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் சீட்தான் கிடைக்கும். அவனது ஊருக்கு பக்கத்தில் உள்ள தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் சேர 210 என்கிற நீட் மார்க்கை 410 என திருத்தியுள்ளான். அதை வைத்து தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல் லூரியில் உதித்சூர்யா சேர்ந்ததுபோல தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். இதற்கு சூர்யாவின் அப்பா, சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர், மருத்துவ கல்வி இயக்குநர், சுகா தாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் ஆகியோர் உதவியிருக்கிறார்கள். மருத்துவக் கல்வியை முழு மையாகப் படிக்காமல் டாக்டர் ஆன இர்பானின் தந்தை முகமதுசபிக்கு ரபி என்கிற முஸ்லிம் புரோக்கர்தான் உதவியுள்ளார். அவரைப் பிடிக்க கர்நாடகாவுக்கு காவல்துறை பயணம் செய்துள்ளது.
இர்பானுக்கு தர்மபுரி கல்லூரியில் சீட் கிடைக்க உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட தமிழக அதிகாரிகளை தமிழக போலீஸ் விசா ரணைக்குட்படுத்துமா? என கேள்வி கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
"நீட் முறைகேடு வழக்குகளை ஜாபர்சேட் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் உண்மைகள் வெளிவராது' என்கிறார் கள் மருத்துவத்துறையினர். "சி.பி.ஐ. விசாரணை தேவை' என அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இந்திய அளவிலான நெட் வொர்க்கில் நடைபெறும் நீட் மோசடி பிசினஸில் பயிற்சி மையத்தினர், செல்வாக்குமிக்க புரோக்கர் கள், அவர்களுக்கு துணையாக இருக்கும் உயரதி காரிகள், பதவியில் உள்ள அரசியல்வாதிகள் என பவர்ஃபுல் புள்ளிகள் பார்ட்னர்களாக இருக்கிறார்கள்.
2013-ஆம் ஆண்டு தொடங்கிய நீட் தேர்வில் வெளிப்படையாக மோசடி நடக்கிறது. இதில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. மம்தா உட்பட பல தலைவர்கள் நீட் ஒரு மோசடி என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நீட் மோசடி பற்றி ஒரு வழக்கு கூட சி.பி.ஐ.யால் பதிவு செய்யப்பட அனுமதிக்கவில்லை. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தால் "நீட் ஒரு மோசடி தேர்வு அது எங்களுக்கு வேண்டாம்' என்கிற தமிழகம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்துவிடும் என்ப தால் சி.பி.ஐ. விசாரணை நோக்கி மத்திய அரசு நகர மறுக்கிறது. மத்திய அரசின் இந்த தயக்கத்தை எப்படி சமாளிப்பது என மோசடியை விசாரிக்கும் தமிழக போலீசார் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
-தாமோதரன் பிரகாஷ்
_________
டபுள் என்ட்ரி கில்லாடிகள்!
குற்ற மோசடியில் ஈடுபட்ட ஐந்துபேரும் கேளம்பாக்கத்தில் இயங்கிய மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள். அந்த கல்லூரியில் (PRMC) 36 பேர் படித்தார்கள். 36 பேரும் மோசடியில் ஈடுபட்டார்களா என நாங்கள் விசாரிக்கிறோம்" என்கிறது காவல்துறை. "தமிழகத்தில் பலர் தங்கள் பெயரில் வேறொருவரை தேர்வு எழுத வைத்ததுடன், அவர்களும் எழுதியுள்ளனர். இப்படி டபுள் என்ட்ரிகள் யார் எழுதினார்கள் என்கிற விபரத்தை தேசிய டெஸ்டிங் ஏஜென்சி தருவதில் தாமதமாகிறது' என்கிறார் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர்.