ஆள் மாறாட்ட நீட்! ஆல் இண்டியா நெட்வொர்க்! அமைச்சருக்கு வலை!

ff

மிழகத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்ட முறைகேடு ஒரு அகில இந்திய ஆபரேஷன்' என தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "இந்த முறைகேடு மருத்துவப் படிப்பிற்காக மத்திய அரசு கொண்டுவந்த நீட் நுழைவுத் தேர்வு என்கிற தேர்வு முறையையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது' என அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள் இந்த முறைகேடுகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகள்.

neet

""ஐயா, நாங்களெல்லாம் கஷ்டப்பட்டு படித்தோம். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்தோம். மிகக்கடுமையான உழைப்பின் பலனாக நீட் தேர்வில் வெற்றிபெற்றோம். நீட் தேர்வு என்பது மிகக்கடுமையானது. அதில் வெற்றிபெற முடியாமல் தமிழகத்தில் அனிதா போன்று பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் நீட் என்னடா பெரிய நீட்... நீட் தேர்வு எழுதாமலே நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்கிற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. என்னுடன் ஒரு மாணவன் படிக்கிறான். அவன் பெயர் உதித் சூர்யா. அவனது அப்பா வெங்கடேசன். அவர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டாக்டராக இருக்கிறார். அவரும் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனும் நண்பர்கள்.

எங்கள் கல்லூரியில் உதித் சூர்யாதான் ஹீரோபோல எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பான். அவன் சரியாகப் படிக்கமாட்டான். அவனுக்கு கல்லூரி நிர்வாகம் அதிக மரியாதை தந்து உள்ளுரை (ஒய்ற்ங்ழ்ய்ஹப்) மதிப்பெண்ணை தந்துவிடுகிறது. அதில் பல தேர்வுகளுக்கு அவன் வரவேமாட்டான். இதைப்பற்றி அவனிடம் கேட்டால், "இதென்னடா பெரிய விஷயம். எல்லாம் என் ffஅப்பாவின் செல்வாக்கு. அவருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நல்ல பழக்கம். அதனால் அவரைப் பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள். மருத்துவக் கல்லூரி பரீட்சையில் தேர்வு எழுதாமல் மார்க் வாங்குவது பெரிய விஷயமில்லை. நான் நீட் தேர்வே எழுதாமல் எனது அப்பாவின் வகுப்புத் தோழரின் இந்தக் கல்லூரியில் சேர்ந்தேன்' எனச் சொல்கிறான்.

உதித் சூர்யா சென்னை அண்ணா நகரில் உள்ள கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டரில்தான் நீட்டுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டான். அவனுடன் படித்த மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்கள், "உதித்சூர்யா படிப்பில் மகா மட்டமானவன். அ

மிழகத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்ட முறைகேடு ஒரு அகில இந்திய ஆபரேஷன்' என தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "இந்த முறைகேடு மருத்துவப் படிப்பிற்காக மத்திய அரசு கொண்டுவந்த நீட் நுழைவுத் தேர்வு என்கிற தேர்வு முறையையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது' என அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள் இந்த முறைகேடுகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகள்.

neet

""ஐயா, நாங்களெல்லாம் கஷ்டப்பட்டு படித்தோம். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்தோம். மிகக்கடுமையான உழைப்பின் பலனாக நீட் தேர்வில் வெற்றிபெற்றோம். நீட் தேர்வு என்பது மிகக்கடுமையானது. அதில் வெற்றிபெற முடியாமல் தமிழகத்தில் அனிதா போன்று பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் நீட் என்னடா பெரிய நீட்... நீட் தேர்வு எழுதாமலே நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்கிற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. என்னுடன் ஒரு மாணவன் படிக்கிறான். அவன் பெயர் உதித் சூர்யா. அவனது அப்பா வெங்கடேசன். அவர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டாக்டராக இருக்கிறார். அவரும் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனும் நண்பர்கள்.

எங்கள் கல்லூரியில் உதித் சூர்யாதான் ஹீரோபோல எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பான். அவன் சரியாகப் படிக்கமாட்டான். அவனுக்கு கல்லூரி நிர்வாகம் அதிக மரியாதை தந்து உள்ளுரை (ஒய்ற்ங்ழ்ய்ஹப்) மதிப்பெண்ணை தந்துவிடுகிறது. அதில் பல தேர்வுகளுக்கு அவன் வரவேமாட்டான். இதைப்பற்றி அவனிடம் கேட்டால், "இதென்னடா பெரிய விஷயம். எல்லாம் என் ffஅப்பாவின் செல்வாக்கு. அவருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நல்ல பழக்கம். அதனால் அவரைப் பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள். மருத்துவக் கல்லூரி பரீட்சையில் தேர்வு எழுதாமல் மார்க் வாங்குவது பெரிய விஷயமில்லை. நான் நீட் தேர்வே எழுதாமல் எனது அப்பாவின் வகுப்புத் தோழரின் இந்தக் கல்லூரியில் சேர்ந்தேன்' எனச் சொல்கிறான்.

உதித் சூர்யா சென்னை அண்ணா நகரில் உள்ள கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டரில்தான் நீட்டுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டான். அவனுடன் படித்த மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்கள், "உதித்சூர்யா படிப்பில் மகா மட்டமானவன். அவன் நீட்டில் பாஸாகமாட்டான் என அவனுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள் திட்டுவார்கள்' எனச் சொல்வார்கள். அப்படிப்பட்டவன் எப்படி நீட்டில் தேர்வானான் என்பதைச் சொல்லி... அவனே பெருமையாக "நீட்டெல்லாம் ஒரு தேர்வா?' என்கிறான். அவன் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான். அவனையும் அவனது தந்தை யையும், தேனி மருத்துவக் கல்லூரி டீனையும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் விசாரிக்க வேண்டும். உதித்சூர்யா போன்று எத்தனை பேர் ஆள் மாறாட்டம் செய்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றார்கள் என கண்டுபிடிக்க வேண்டும். நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களுக்கும், அரும்பாடுபட்டு நீட் எழுதி வெற்றிபெற்ற என்னைப் போன்ற மாணவர் களுக்கும் கிடைக்கும் நீதியாக அது அமையும்'' என பெயரிடப்படாமல் எழுதப்பட்ட ஒரு கடிதம்தான் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்த விவகாரத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சியது.

மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் பலரால் பதிவு செய்யப்பட்டு, உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசனையும் போலீஸ், கேஸ் என பயணிக்க வைத்து தலைமறை வாக்கியது. அவர்களைக் கைதுசெய்த காவல் துறைக்கு டாக்டர் வெங்கடேசன் அளித்த வாக்குமூலம், அடுத்த அதிர்ச்சியை அளித்தது. ""எனது மகன் உதித் சூர்யா பள்ளியிலேயே சுமாராக படிக்கக்கூடிய மாணவன். இறுதித் தேர்வில் சராசரி மதிப்பெண்கள்தான் வாங்கினான். பள்ளி இறுதித்தேர்வில் சுமாரான மதிப்பெண்கள் பெற்றாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பள்ளி மதிப்பெண்களை விட நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சிபெற்றால் அவனை என்னைப்போல டாக்டராக்கிவிடலாம் என நினைத்தேன். அவனை கிரீன் பார்க் என்கிற கோச்சிங் சென்டரில் சேர்த்தேன். 2017, 2018-ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வுகளில் உதித்சூர்யா தோற்றுப்போனான். மூன்றாவது வருடமும் அங்கேயே படித்துக் கொண் டிருந்த அவனுடன், வாணியம்பாடியைச் சேர்ந்த டாக்டர் முகம்மது சபியின் மகன் இர்பான் படித் தான். அவன் சூர்யாவைவிட மோசமாக இருந் தான். அவது குடும்பத்தில் ஆறுபேர் டாக்டர்கள். இர்பானின் தந்தை அவனது மோசமான படிப்பை பற்றி அதிகம் கவலைப்படவில்லை. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் என பரந்து விரிந்த பணக் கார குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

ff

எனது மகனைப் பார்க்க இர்பான் அடிக்கடி வருவான். நானும் இர்பானின் தந்தையும் நண்பர்களானோம். ஒருநாள் மது விருந்தின்போது நான், "எனது மகன் டாக்டராக வேண்டும், ஆனால் அவன் சரியாகப் படிக்கமாட்டேங்கிறான்' என வருத்தப்பட்டேன். அத்துடன் "நீட் தேர்வு மிகக் கடுமையாக உள்ளது' என்றேன். அதற்கு அவர் "எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறது. நீட்டுக்கும் ஒரு மருந்து உள்ளது' என்றார். ஒருநாள் என்னை பெங்களூருக்கு வரச்சொன்னார். அங்கே ஜோசப் ஜார்ஜ் என்கிற மலையாளியை எனக்கு அறிமுகம் செய்தார். "உங்கள் பையன் நீட் எழுதவேண்டாம். அவனுக்குப் பதில் இன்னொருவர் எழுதுவார். இது இந்தியா முழுக்க நடக்கும் ஒரு நெட்வொர்க்கின் வேலை. இன்று மருத்துவம் படிக்கும் மாணவர்களில் பாதிப் பேருக்கு மேல் இப்படித்தான் படிக்கிறார்கள். எங்கே பரீட்சை எழுதினால் என்ன? நீட்டில் உங்கள் பையன் பாஸ் என ரிசல்ட் வரும். ஆனால் அதற்கு இரண்டு மாணவர்கள் போதாது. குறைந்தது ஐந்து பேராவது வேண்டும். ஆளுக்கு இருபது லட்ச ரூபாய் தரவேண்டும்' என்றார்.

நான் சென்னை வந்து கிரீன் பார்க் பயிற்சி மையத்தில் சூர்யாவுடன் படித்துக் கொண்டிருந்த அபிராமி, ராகுல், பிரவீண் ஆகியோரின் பெற்றோர்களைப் பார்த்துப் பேசினேன். அபிராமியின் தந்தை மாதவன், ராகுலின் தந்தை டேவிட், பிரவீணின் தந்தை சரவணன் ஆகியோர் இர்பானின் தந்தை முகம்மது சபி சொன்ன திட்டத்துக்கு ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் ஐந்துபேரும் ஜோசப் ஜார்ஜை சந்தித்தோம். அவர் "மகாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், டெல்லி ஆகிய இடங்களில் யார் வேண்டுமானாலும் நீட் தேர்வு எழுதலாம். நீட் தேர்வை எழுதுவதற்கென்றே படித்த இளைஞர்கள் பலரை நாங்கள் தயார் செய்து வைத்துள்ளோம். வட இந்தியாவில் பெரிய சோதனைகள் எல்லாம் இல்லை. படித்த இளைஞர்கள் உங்கள் வாரிசுகள் பெயரில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அதை வைத்து நீங்கள் எளிதாக மருத்துவக் கல்லூரிகளில் சீட் பெறலாம்' என விளக்கினார்.

dd

அவரிடம் முதல் சந்திப்பிலேயே ஐந்து மாண வர்களுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்தோம். என் மகன் உட்பட ஐந்து மாணவர்களும் நீட் தேர்வில் தேர்வாகினர். நான் அமைச்சருடன் எனக்கிருந்த நெருக்கத்தினால் எனது மருத்துவக் கல்லூரி வகுப்புத்தோழர் ராஜேந்திரன் முதல்வராக உள்ள தேனி மருத்துவக் கல்லூரியில் உதித்சூர்யாவை சேர்த்தேன். அவனது அடாவடி செயல்களால் நாங்கள் மாட்டிக்கொண்டோம் என விரிவாகவே வாக்குமூலம் அளித்துள்ளார்'' என்கிறது காவல்துறை.

இந்த ஐந்துபேரையும் அவர்களது பெற்றோரையும் கைது செய்த காவல்துறையிடம் மாணவர்களின் பெற்றோர்கள், ""எங்களது பிள்ளைகளுக்காக யார் தேர்வு எழுதி னார்கள் என எங்களுக்குத் தெரியாது. எல்லாம் ஜோசப் ஜார்ஜுக்குத்தான் தெரியும். அவர், "நீங்கள் கொடுத்த பணத்திற்கு நீட் தேர்வில் உங்கள் மகன் பாஸ்' என சான்றிதழ் தந்தார். அது உண்மையான சான்றிதழ். அதை வைத்து மூன்றுபேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கினோம். வெங்கடேசன், உதித்சூர்யாவை அரசாங்க கல்லூரியில் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சேர்த்தார். எல்லோரும் மாட்டிக் கொண்டோம்'' என்கிறார்கள் சோகமாக.

"கோவையில் ஒரு கல்லூரியில் பயின்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்றுபேரின் புகைப்படங்கள் வித்தியாசமாக, சந்தேகப்படும்படி இருக்கிறது என செய்திவர... அவர்களது சான்றிதழ் களை சரிபார்த்த நிர்வாகம், "அது சரியாக உள்ளது' என கண்டுபிடித்து அவர்களை மீடியாக்களை சந்திக்க வைத்தது. இதுபோல ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கிறார்கள். இதில் யார் சரியானவர், யார் போலி என மாணவர்கள் மத்தியில் பெரிய சந்தேகப் போரே நடக்கிறது' என்கிறார்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.

ggg

"மருத்துவக் கல்லூரி ஆள்மாறாட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் ஆகியோருக்கு நெருக்கமான தொடர்பு உள்ளது' என எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன், கவர்னர் அலுவலகம் மூலமாக புகார் ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். அதனால் டென்ஷனான விஜயபாஸ்கர், ""நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்கள் நிலை. நடைபெறும் நீட் தேர்வில் பயோமெட்ரிக் முறை கொண்டுவர வேண்டும்'' என காரசாரமாக நீட்டை எதிர்த்துப் பேசி யுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற "வியாபம்' ஊழல்போல் "நீட்' மோசடிகளும் பூதாகரமாக இருக்கின்றன. அகில இந்திய அளவிலான நெட் வொர்க் மூலம் இந்த மோசடிகள் நடைபெறு வதுடன், மோசடிப் பேர்வழிகள் செல்வாக்குமிக்க இடங்களுடன் தொடர்பில் உள்ளனர். மருத்துவக் கல்விக்கும் சிகிச்சைக்கும் புகழ்பெற்ற தமிழ்நாட்டில் கல்வி முறையை முற்றிலும் சிதைத்து, வெளிமாநில ஆட்களின் மோசடிகளுக்கு இது வழிவகுத் துள்ளது.

இந்தியா முழுக்க தொடர் புடைய இந்த மோசடிப் புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு தள்ளிவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

-தாமோதரன் பிரகாஷ்

படம் : அசோக்

______________

சி.பி.சி.ஐ.டி. குளறுபடி!

"ஆள் மாறாட்டத்தை ஒப்புக்கொண்ட மாணவனின் அப்பா!' என்ற தலைப்பில் கடந்த செப் 28-ம் தேதி நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் கொடுத்த வாக்குமூலத்தில், "நீட் தேர்வு வருவதற்கு முன்பு சென்னை யில் உள்ள பிரிம்ஸ் (டழ்ண்ம்ள்) மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யாவுடன் அபிராமி, ராகுல், பிரவீண், முகமது இர்பான் ஆகிய ஐந்து பேரும் ஒரே வகுப்பில் படித்துவந்ததும், திடீரென இந்த கல்லூரியின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததையும் குறிப் பிட்டிருந்தார்.

ஆள் மாறாட்ட நீட் தேர்வு மூலம் சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த ராகுலையும் திருப்போரூர் ஸ்ரீசத்யசாய் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த அபிராமி யையும் இந்த இருவரின் பெற் றோரையும் சி.பி.சி.ஐ.டி.யினர் தேனிக்கு அழைத்துவந்து விசாரணை செய்தனர். ஆனால் அபிராமியும் அவரது தந்தை மாதவனும் திடீரென விடுதலையாகினர்.

இதுசம்பந்தமாக நாம் விசாரணையில் இறங்கியபோது, அபிராமி மற்றும் பெற்றோர் விசா ரணை செய்யப்பட்டுவந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி மதியம் ஸ்ரீசத்யசாய் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிரேம்நாத் பகிரய்யா சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்து சென்றார். அதன்பிறகே திடீரென அபிராமியும் அவரது பெற்றோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

திடீரென அபிராமியின் நீட் தேர்வு ஹால்டிக்கெட்டில் உள்ள போட்டாவுடன் தற்போதுள்ள போட்டா எப்படி ஒத்துப்போனது? தடயவியல் துறைக்கு அனுப்பி அறிக்கை கேட்டிருப்பதாகவும் அதன் பின்தான் மேல்நடவடிக்கை எடுக் கப்படும் என்று காவல்துறையினர் பல்டியடித்திருக்கிறார்கள்.

இந்த நீட் தேர்வு ஆள்மாறாட் டத்தில் முதலில் சி.பி.சி.ஐ.டி.யினர் காட்டிய வேகம் மாறி, தற்போது சி.பி.சி.ஐ.டி.யினரே குளறுபடி செய்கிறார்களோ... என்றொரு சந்தேகம் பலருக்கும் எழுந்திருக் கிறது.

-சக்தி

nkn041019
இதையும் படியுங்கள்
Subscribe