Advertisment

நீட்! ஜனாதிபதியிடம் முதல்வர் முறையீடு! பிரதமர் பிடிவாதம்!

ss

நீட் விலக்கு சட்ட மசோதா வுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சந்திப்புக்குப் பிறகு ஏதேனும் நல்லது நடக் குமா? என்கிற எதிர் பார்ப்பு தமிழக மாணவ -மாணவியர் களிடம் எதிரொலித் தபடி இருக்கிறது.

Advertisment

நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றிட வேண்டும் என்று கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக போராடி வருகிறது தி.மு.க. அரசு. இதற்காக முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

Advertisment

neet

சமீபத்தில், "நீட் விலக்கு; நமது இலக்கு' என்கிற முழக்கத்துடன், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைப்பதற்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார் அமைச்சர் உதயநிதி. 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறுவதே இதன் நோக்கம். கையெழுத்துக்கள் பெறப்பட்டு அதனை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.

தமிழ்நாடு மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சியில் ஏற்கனவே உண்ணாவிரதப் போராட் டம், ஆர்ப்பாட்டம், சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றம் என ஜனநாயக ரீதியிலாக வும் சட்டரீதியிலாகவும் அனைத்தையும் எடுத்திருக் கிறது தி.மு.க. அரசு. இதனையடுத்து, நீட் விலக்கு பெறுவதை மக்கள் இயக்கமாக மாற்றிவருகிறது.

இந்த நிலையில்தான், இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 26-ந்தேதி சென்னை வந்தார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. மறுநாள் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின், டெல்லிக்குப் புறப்பட்ட முர்முவை சென்னை விமான நிலையத் தில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்,

நீட் விலக்கு சட்ட மசோதா வுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சந்திப்புக்குப் பிறகு ஏதேனும் நல்லது நடக் குமா? என்கிற எதிர் பார்ப்பு தமிழக மாணவ -மாணவியர் களிடம் எதிரொலித் தபடி இருக்கிறது.

Advertisment

நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றிட வேண்டும் என்று கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக போராடி வருகிறது தி.மு.க. அரசு. இதற்காக முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

Advertisment

neet

சமீபத்தில், "நீட் விலக்கு; நமது இலக்கு' என்கிற முழக்கத்துடன், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைப்பதற்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார் அமைச்சர் உதயநிதி. 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறுவதே இதன் நோக்கம். கையெழுத்துக்கள் பெறப்பட்டு அதனை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.

தமிழ்நாடு மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சியில் ஏற்கனவே உண்ணாவிரதப் போராட் டம், ஆர்ப்பாட்டம், சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றம் என ஜனநாயக ரீதியிலாக வும் சட்டரீதியிலாகவும் அனைத்தையும் எடுத்திருக் கிறது தி.மு.க. அரசு. இதனையடுத்து, நீட் விலக்கு பெறுவதை மக்கள் இயக்கமாக மாற்றிவருகிறது.

இந்த நிலையில்தான், இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 26-ந்தேதி சென்னை வந்தார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. மறுநாள் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின், டெல்லிக்குப் புறப்பட்ட முர்முவை சென்னை விமான நிலையத் தில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், உங்களின் ஒப்புதலுக்காக ஓராண்டிற் கும் மேலாக தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்டமசோதா காத்துக்கிடக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்ட முதல்வரின் கோரிக்கைக் கடிதத்தில், தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ படிப்புகளுக்காக நடைபெற்ற மாணவர் சேர்க்கை நல்ல பலன்களை அளித்து வந்தது. ஆனால், ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதால் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

neet

இதன் பாதிப்புகளை ஆராய்ந்து மாற்றுவழி களை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜன் தலைமையிலான குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்களிக் கும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் திருப்பியனுப்பிய நிலையில், மீண்டும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டமுன்வடிவு நிறை வேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த சட்ட முன் வடிவை குடியரசு தலை வரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசின் உள் துறை அமைச்சகத் துக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருக்கும் நிலை யில், அந்த சட்ட மசோதா உங்களின் ஒப்புதலுக்காக நிலுவை யில் இருக்கிறது. ஒப்புத லளிப்பதில் ஏற்படும் அதீத கால தாமதம், பல தகுதி வாய்ந்த மாணவர்களின் மருத் துவ சேர்க்கையை பறித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் சட்டமன்றம், அரசியல், சமூகம் ஆகியவற்றின் ஒருமித்த கருத்தின் நோக்கத்தை செயல்படுத்திட இயலாமல் முடக்கப்பட்டுள்ளது. உணர்வுப்பூர்வ மான இந்த பிரச்சனையில் தலையிட்டு, நீட் விலக்கு மசோதா வுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்”என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மேலும், நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், ஒன்றிய உயர்கல்வித்துறை, ஒன்றிய அரசின் ஆயூஷ் அமைச்சகம் உள்பட பல்வேறு அமைச்ச கங்கள் கேட்ட விளக்கங் களுக்கு உரிய பதிலை அந்தந்த காலகட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப் படுத்தியிருக்கிறோம். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போதிய விளக்கங்கள் அளித்த பிறகும் இந்த விசயத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத தையும் குடியரசு தலைவர் முர்முவிடம் அழுத்த மாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா தொடர் பாக குடியரசு தலைவர் முர்முவையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் முயற்சித்தது. அவர்களை சந்திக்க மறுத்தார் குடியரசு தலைவர். இதனால், குடியரசு மாளிகையில் தங்களின் கோரிக்கையை கொடுத்து விட்டுத் திரும்பினார். அதேபோல், அமைச்சர் அமித்ஷாவும் தமிழக எம்.பி.க்கள் குழுவினரை சந்திக்க மறுத்தார். நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் நேர்மை இருந்தால், தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கை களை செவி மடுத்து, இயலும், இயலாது என்பதை தெளிவுப்படுத்தவேண்டிய கடமை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இருக்கிறது. ஆனால், தி.மு.க. அரசை அரசியல்ரீதியாக பழி வாங்க, நீட் விவகாரத்தில் தமிழ்நாடு மாணவர் களின் மருத்துவ கனவுகளோடு அரசியல் செய்து கொண்டிருக்கிறது பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு” என்கிறார்கள் தமிழக கல்வியாளர்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் குடியரசு தலைவர் முர்முவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரின் அழுத்தமான இந்த கோரிக்கை மூலம் ஏதேனும் நல்லது நடக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தமிழக மாணவர் சமூகத்தினரிடம் எதிரொலிக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ”முதல்வர் வைத்த கோரிக்கைக்கு பாசிட்டிவ்வான எந்த சிக்ன லையும் குடியரசு தலைவர் தந்ததாகத் தெரிய வில்லை. கல்வி என்பது மத்திய அரசின் பட்டியலில் இருக்கிறது. நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒன்றிய அரசு இயற்றியுள்ள சட்டம். ஆக, ஒன்றிய அரசு நிறைவேற்றிய சட் டத்தை நீக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. அத னால்தான் நீட் தேர்வுக்கு விலக்களியுங்கள் என்கிற சட்ட மசோதாவை நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு. இந்த மசோதாவுக்கு ஒப்புதலளிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். இரண்டையும் செய் யாமல் ஒன்றிய அரசு கிடப்பில் வைத்திருக்கிறது.

இதற்கு காரணம், மசோதா நிராகரிக்கப்பட் டால் அதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு அரசு செல்லக்கூடிய வாய்ப்பு அதிகம். இதற்கு நீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பு வரலாம். அப்படி தீர்ப்பு வந்தால், நீட் தேர்வை விலக்க அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்தோம்; ஆனால், நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இது ஒன்றிய அரசு செய்த சதி என்று தி.மு.க. அரசு பிரச்சாரம் மேற்கொள்ளும். இப்படிப்பட்ட சூழல்கள் உருவாகிவிடக்கூடாது என்றுதான் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா மீது முடி வெடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளது ஒன்றிய அரசு. அதனால், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதற்கும், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒன்றிய அரசு விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தை தி.மு.க. அணுக வேண்டும்''’ என்று விவரிக்கிறார்கள்.

________

இறுதிச் சுற்று!

nn

nn

சுதந்திரப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராம-ங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு, அக்டோபர் 30, திங்கட் கிழமையன்று, பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா-ன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிறை பிடிக்கப்பட் டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீனவர்கள் கைது தொடர்பாக உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பு கிறோம். மீனவர்கள் பிரச்சனைகளை பேச மீனவ பிரதிநிதிகளோடு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு டெல்லி சென்றார். கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. கவர்னர் மாளிகையி-ருந்து திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் பரப்பப்படுகிறது. "இன்னார்க்கு இதுதான் என்பது ஆரியம்; எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிடம்'. இந்த வித்தியாசத்தை தயவுசெய்து கவர்னர் புரிந்துகொள்ள வேண்டும். கவர்னர் பாரதிய ஜனதா கட்சியாக மாறி விட்டார். விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்க வேண்டியது குறித்து தொடர்ந்து மத்திய அரசிடம் வ-யுறுத்தி வருகிறோம்'' என்றார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பசும்பொன் முத்துராம-ங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திய பின் பத்திரிகையாளர்களிடம், "இது முக்கியமான நன்னாள். தெய்வ மண்ணில், வழிபாட்டிற்கு வந்த இடத்தில் அரசியல் பேசுவது பொருத்தமல்ல'' எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

-நாகேந்திரன்

படம்: விவேக்

nkn011123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe