"அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த்ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா நடித்துள்ள படம் "நெற்றிக்கண்'. ‘"ப்ளைண்ட்'’ என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்தில், அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

nayanthara

முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா முதல் அலை காரணமாக தடைபட்டது. பின், நிலைமை சீரானதும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. தற்போது, கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், படத்தை நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது. இது தொடர்பான ஒப்பந்தம் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் கையெழுத்தானதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘"நெற்றிக்கண்'’ திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... படத்தின் இறுதி வடிவத்தை நடிகை நயன்தாரா சமீபத்தில் பார்த்ததாகவும், அவருக்குப் படம் மிகவும் பிடித்திருந்ததால், இயக்குநர் மிலிந்த் ராவிற்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

__________________

வாட்ஸ்அப் வித் ஜான் கோகென்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு களைப் பெற்றுவருகிறது "சார்பட்டா பரம்பரை' திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்றுள்ள பல கதாபாத்தி ரங்களும் மக்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக் கையில், இப்படத்தில் "வேம்புலி' கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஜான் கோகென், தனது திரைப்பயணம் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

jj

"சார்பட்டா பரம்பரை' குறித்து பேசுகையில், "சார்பட்டா பரம்பரை படத்துக்கு என்ன முதன்முதலா சந்தோஷ்ராமன்தான் ரஞ்சித்துக்கு ரெகமெண்ட் பண்ணினார். அதுக் கப்புறம் ரஞ்சித்தை மீட் பண்ணேன். அவர் என்னோட பிஸிக் பாத்தாரு. "ஒரு ரெண்டு மாசம் உடம்பெல்லாம் ஏத்திட்டு, பாக்சிங் கத்துக்கிட்டு வாங்க, பாக்கலாம்'னு சொன்னார். ரெண்டு மாசம் பயங்கரமா ட்ரெய்னிங் எல்லாம் எடுத்துட்டு, அவரை பார்த்தேன். "பிஸிக் ஓ.கே. ஆனால், பாக்சிங் ஸ்டைல் எப்படி இருக்குன்னு பாக்கணும்' அப்படின்னு சொன்னார். அவர் பாக்சிங் பற்றி நிறைய ஆராய்ச்சி பண்ணியிருந்தார். அவரை ஏமாத்த முடியல. ஹேண்ட் ஒர்க், லெக் ஒர்க் எல்லாம் பார்த்தார். அதுக்கு அப்புறம்தான் அவர் கன்வின்ஸ் ஆனார். பிறகு படம் ஓ.கே. ஆச்சு. டிரெய்னிங் நடந்துச்சு.

நீங்க ஸ்க்ரீன்ல பார்த்த எல்லாமே நிஜமான அடிதான். ரஞ்சித் டைரக்டரா இருந்ததால எங்களால எதுவுமே பண்ண முடியல. "ஃபுல் ஃபோர்ஸ்ல அடி' அப்படின்னு அவர் சொன்னார். அப்படிச் செய்யலன்னா அவர் டேக் ஓ.கே. சொல்லமாட்டார். முதல்ல ஷாட் எடுக்குறப்போ நான் லைட்டாதான் அடிச்சேன். "ஃபுல் ஃபோர்ஸ்ல அடி ஜான், இல்லன்னா ஸ்க்ரீன்ல பார்க்க அசிங்கமா இருக் கும்' அப்படின்னு ரஞ்சித் சொன் னார். ஆர்யாவும் "நீங்க அடிங்க' அப்படின்னு சொன்னார். சரின்னு டேக் எடுக்கும்போது ரெண்டு பேரும் நிஜமாவே அடிச்சிப்போம். அப்புறமா அடிச்சதுக்காக சாரி சொல்லிப்போம். "பஞ்ச்'ல பவர் கம்மியா இருந்தாலும் ரீடேக் சொல்லிடுவார். ரஞ்சித் அடிக் கடி விளையாட்டா, "என்ன ஜான், இன்னொரு ரீடேக் போலாமா?'-ன்னு கிண்டல் பண்ணுவார். ஆர்யாவுக்கு நன்றி சொல்லணும். அவர் ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தார். கடைசி சண்டை இந்த அளவுக்கு நல்லா வந்ததுக்கு அவரோட சப்போர்ட்டும் முக்கியமான காரணம்.

டிரெய்னிங் பண்ணும்போது ஒரிஜினல் பாக்ஸர் நிறைய பேர்கிட்ட அடி வாங்கினேன். ஆர்யா கூட எடுத்த முதல் சண்டையில, ஃபுல் ஃபோர்ஸ்ல அடி வாங்கிட்டு இருந்தேன். அந்த ஷாட் கட் சொன்னதும், மூச்சு விடமுடியாமல் விழுந்துட்டேன். ஹார்ட் அட்டாக் வந்துடுச்சின்னு நினைச்சேன். ஷூட்டிங் ஸ்டாப் பண்ணிட்டாங்க. அப்புறம் ஹாஸ்பிடல் போயிட்டு பார்த்தோம். இந்த அளவுக்கு இனி அடி வாங்க முடியுமான்னு தெரியல. ஆனால், இந்தப் படத்தைப் பார்க்கும்போது, இதுக்காக அடி வாங்கலாம், தப்பில்லைன்னு தோனுச்சு'' என்றார்.

மேலும் அவர், "வீரம் படத்தில் நடிகர் அஜித் உடன் 15 நாட்கள் ஷூட்டிங்கில் இருந்தேன். அவரோட கரியர், ரேஸிங், மூவிஸ், அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டார். அப்போ "ஆக்டிங் கரியர்ல நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் வரும். ஆனால், நம்பிக்கையை விட்டுடா மல், ஃபோக்கஸா இருக்கணும்'னு அறிவுரை சொன்னார். அது என்னை ரொம்ப மோட்டிவேட் பண்ணுச்சு. அதுனாலதான், சார்பட்டா பரம்பரை வந்ததுமே, "இந்த வேம்புலியை அஜித் சார்க்கு சமர்ப்பிக்கிறேன்''-ன்னு சோஷியல் மீடியால போஸ்ட் போட்டேன். அன்னைக்கு நைட்டே அஜித் ஃபோன் பண்ணினார். வாழ்த்துகள் சொன்னார். அது நிஜமாகவே வேற மாதிரி ஃபீலிங்'' என்றார் உற் சாகத்துடன்.