தைத்திங்கள் தமிழர் திருநாளில் ஆரம்பித்து தொடர்ந்து மூன்றுமாத காலம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான தமிழ் கலாச்சார வீர விளையாட்டுகள் நடைபெறும். ஜல்லிக்கட்டு, எருதுகட்டு திருவிழா, மஞ்சுவிரட்டு, வடமாடு, ஏறு தழுவுதல் என அந்த நிலப்பரப்புக்கேற்ப, இதுபோன்ற வீர விளையாட்டுகள் காலங்காலமாக தமிழர்களின் கலாச்சாரத்தோடு பிணைந்தவை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பீட்டாவின் தலையீட்டால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டு களுக்கு தடை போடப்பட்டது. தமிழக இளைஞர்களின் வீரம்செறிந்த போராட் டத்தால் மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற வடக்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போல அதிகமாக நடக்கும் வீர விளையாட்டுகளில் ஒன்றான எருதுவிடும் திருவிழா, சில தவறான நிபந்தனைகளால் இந்த நிகழ்ச்சியை நடத்தவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூரைச் சேர்ந்த எருதுகட்டு நல சங்கத் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, "எருதுகட்டு என்றழைக்கப்படும் எருதுவிடும் திருவிழா, தமிழகத்திலுள்ள வடக்கு மாவட்டங்களில் பிரசித்திபெற்றது. குறிப்பிட்ட ஒரு தூரத்தை இலக்காகக் கொண்டு, எருதுகளை ஓடவிடுவார்கள். எந்த எருது குறைந்த நேரத்தில் இலக்கைக் கடக்கின்றதோ அதை கணக்கிட்டு பல பரிசுகள் வழங்கப்படும். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்செல்லும் எருதுகளுக்கு மவுசு அதிகம். இந்த எருதுகள் பாரம்பரிய மரபைச் சார்ந்த எருதுகளாகும். இந்த எருதுகளுடன் நாட்டு மாடு வகையை சேர்ந்த பசுக்களை இனப்பெருக்கத்துக்கு விடும்போது தரமான வீரியம் கொண்ட கன்றுகள் உருவாகும். இத்தகைய எருதுகளின் விலையும் லட்சக்கணக்கில் போகும். பரிசுகளை வெல்லும் எருதுகளை வைத்திருப்பதே ஒரு கவுரவமாக கருதுவார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/jalikattu1-2026-01-14-16-06-40.jpg)
இந்த எருதுகளை பராமரிக்க மாதத்திற்கு சுமார் 30-லிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மேலும் ஒரு எருதுவிடும் திரு விழாவுக்கு எருதை அழைத்துச்சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்துவர சுமார் 20,000ல் இருந்து 50,000 ரூபாயும், பரிசு தொடர்ச்சியாக அடிக்கும் சில எருதுகளுக்கு ஒரு லட்சம் வரைகூட செலவாகும். இந்நிலையில் நிபந்தனைகள், அனுமதி பெறுதல் என்ற பெயரில் இந்த எருது விடும் திருவிழாவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டி ருக்கிறார்கள். தற்போது ஒரு கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நடத்த பல கடும் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் உள்ளன. முதலில் காப்பீடு எடுக்கவேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்பு 28,000 ரூபாயாக இருந்த காப்பீடு தற்போது 1,18,000 முதல் 4 லட்சம் வரை ஆகிறது. இதனால் சின்ன கிராமங்களில் இதுபோன்ற எருதுவிடும் திருவிழாக்களை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. பணப்பற்றாக்குறையால் ஒருமுறை நடத்தத் தவறிவிட்டால் அடுத்த முறை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குவதில்லை. பாதுகாப்பு, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, காவல்துறை, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, தீயணைப்பு துறை என 9 துறைகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும், எருதுவிடும் திருவிழாவன்று இவர்கள் அனைவருக்கும் விழா குழு சார்பிலே அனைத்து ஏற்பாடுகளும் டீ முதல் அசைவ உணவுவரை செய்து தரவேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/jalikattu2-2026-01-14-16-06-52.jpg)
இந்த நடைமுறைகள் மிகவும் சிக்கலாக உள்ளன. இதை அரசு கவனம் செலுத்தி எளிதாக்க வேண் டும். நுழைவுக் கட்டண மாக சில கிராமங்களில் 1000 முதல் 5000 வரை வசூல் செய்யப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் இதை சீர்படுத்த கோரிக்கை வைத்திருக்கிறோம்'' என்றார்.
இவரைத் தொடர்ந்து எருதுகட்டு நலச்சங்க தலைவர் மிட்டூர் சௌந்தர் ராஜன், "மாடுகளை பல லட்சம் செலவுசெய்து நாங்கள் பராமரித்துவரு கிறோம். எருதுகட்டு போட்டி நடக்கும் தெருவை மந்தைவெளி என்பார்கள். ஜல்லிக்கட்டுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த அனுமதி வழங்கும் அரசு, எருதுவிடும் திருவிழாவுக்கு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்குள்ளாக முடித்துவிடவேண்டு மென நிர்பந்திக்கிறது. இதனால் முன்பு மூன்று சுற்று ஐந்து சுற்றுகள் மந்தைவெளியில் ஓடும் எருதுகள், தற்போது ஒரு சுற்றில் முடிக்கும் சூழல் உள்ளது. இதனால் சிறந்த எருது எது என்று தேர்வுசெய்ய முடியாத சூழலும் எழுந்துள்ளது. அரசு தலையிட்டு இந்த நேரக் கட்டுப்பாட்டை சீர் செய்யவேண்டும்'' என்றார்.
இவரைத் தொடர்ந்து எருதுவிடும் திருவிழா நல சங்க கௌரவ தலைவர் ஆர்.ஆர். வாசு, "தென்மாவட்டத்தில் நடக்கும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு முதல்வர், துணை முதல்வர் போன்றவர்கள் தலைமை வகித்து விழாவைத் துவக்குவதுபோல, தமி ழகத்திலுள்ள வடக்கு மாவட்டங்களில் நடக் கும் எருதுவிடும் திரு விழாவுக்கும் முதல்வர், துணை முதல்வர் போன்றவர்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும். இது போன்ற வீர விளையாட்டுகளால் கலப்பின மாடுகள் ஆதிக்கம் குறைந்து வீரியமுள்ள நாட்டு மாடுகளின் வளர்ப்பு பெருகும். இதைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை''” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/jalikattu-2026-01-14-16-06-29.jpg)