Advertisment

போதைக்காளான்... மலைச்சாராயம்! நிறம்மாறும் ஏலகிரி!

ss

பிரபல சுற்றுலாத்தலமான ஏலகிரி யில், பாலியல் தொழிலில் ஈடு பட்ட ஐந்து பெண்கள், புரோக் கர்கள் என 14 பேர் கைதாகி யிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ee

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டங் கூட்டமாக வந்து குவிகின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து சிறியதும், பெரியதுமாக 160க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில், பல்வேறு தங்கும் விடுதிகளில் வெளி மாநில இளம் பெண்களை புரோக்கர்கள் மூலம் அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கூறியுள்ளனர். அந்தத் தகவலின் பேரில் டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான போலீசார், அத்தனாவூர், நிலாவூர், கோட்டூர், மங்கலம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

படகு இல்லம் அருகிலுள்ள பி.எச். மற்றும் ஆர்யா, நிலாவூர் சாலையிலுள்ள சில்வர்வுட

பிரபல சுற்றுலாத்தலமான ஏலகிரி யில், பாலியல் தொழிலில் ஈடு பட்ட ஐந்து பெண்கள், புரோக் கர்கள் என 14 பேர் கைதாகி யிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ee

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டங் கூட்டமாக வந்து குவிகின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து சிறியதும், பெரியதுமாக 160க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில், பல்வேறு தங்கும் விடுதிகளில் வெளி மாநில இளம் பெண்களை புரோக்கர்கள் மூலம் அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கூறியுள்ளனர். அந்தத் தகவலின் பேரில் டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான போலீசார், அத்தனாவூர், நிலாவூர், கோட்டூர், மங்கலம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

படகு இல்லம் அருகிலுள்ள பி.எச். மற்றும் ஆர்யா, நிலாவூர் சாலையிலுள்ள சில்வர்வுட் ஆகிய விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 5 பெண்கள் பிடிபட்ட னர். அவர்களோடு இருந்த ஆண்கள், விடுதி மேலா ளர்கள், புரோக்கர்கள் என 9 பேரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். பாலியல் தொழிலாளிகளாக இருந்த பெண்களை மட்டும் காப்பகத்தில் சேர்த்தனர்.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி மலை, பாலியல் மலை என பெயரெடுக்கும் அளவுக்கு பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது என மலையின் பூர்வகுடிகளே வருத்தத்தோடு தெரிவிக்கிறார்கள். ஏழைகளின் ஊட்டி எனச் சொல்லப்பட்டாலும், வசதியில்லா தவர்கள் இங்குவந்து குடும்பத்தோடு தங்கமுடியாத அளவுக்கு விடுதிகளின் கட்டணம் அதிகமாக வுள்ளது. இரண்டுபேர் மட்டுமே தங்க இரண்டா யிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை அறை வாடகை யிருக்கிறது. இவ்வளவு செல வழித்துத் தங்குமளவுக்கு சுற்றிப்பார்க்குமிடங்கள் இருக்கிறதா என்றால், அவ்வளவாக இல்லை. அரை நாளிலேயே மலையை சுற்றிப் பார்த்துவிட முடியும். இரவில் தங்கி ரசிக்கும்படியான மலையாக இல்லாதபோதும் எப்படி இவ்வளவு கட்டணத்தில் இங்கே தங்குகிறார்கள்?

இதுகுறித்து ஏலகிரி பகுதி முக்கியஸ் தர்களிடம் கேட்டபோது, "தொடக்கத்தில் கல்லூரி இளசுகள், ஐ.டி.யில் பணியாற்று பவர்கள் தான் வந்தார்கள். இது ‘ஜாலி செய்ய பாதுகாப்பான இடம் எனப் பலரும் கூட்டம்கூட்டமாக வருகிறார்கள். இங்கு பணக்காரர்கள், பிரபலமான பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் இளசுகள், சென்னை, பெங்களூரு ஐ.டி ஊழியர்கள், பேச்சுலர்ஸ் குழுவினர் தான் அதிகம் வருகிறார்கள், பெரும்பாலும் இவர்களின் நோக்கம், மது, மாது மட்டுமே. அதுபோக, போதைப் பவுடர்களும் புழங்குகிறது. வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இங்கே பலவிதக் கொண்டாட்டங்கள் பெரிய தங்கும் விடுதிகளில் நடக்கிறது. ஜோடியில்லாமல் இங்குவரும் சபலிஸ்ட்டுகளுக்கு விடுதி நடத்துபவர்களே பெண்களை சப்ளை செய்கிறார்கள். இதற்காக ஆந்திரா, பெங்களூரு, சென்னையிலிருந்தும், சினிமாத்துறையிலிருந்தும் அழைத்துவருகிறார்கள். வாட்ஸ்அப், டெலிகிராம் என ஆன்லைனில் புக் செய்தும் அழைத்து வருகிறார்கள்.

தங்கும் அறை எடுப்பவர்களிடம் அடையாள அட்டையை வாங்கச்சொல்லி போலீஸ் சொன் னாலும், பெரும்பாலான விடுதிகளில் அதைக் கடைபிடிப்பதில்லை. தவறு செய்ய வருபவர்கள் தடயம் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். அவர்களிடம் கன்டிஷனாக இருந்தால் அதன்பின் யாரும் வரமாட்டார்கள். இப்போது நடந்த ரெய்டை புதிய அதிகாரிகள் நடத்தியிருக் கிறார்கள், இதிலேயே இத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள். பெரிய ஹோட்டல்கள், விடுதிகளுக்குள் போலீஸ் புகுந்திருந்தால் இன்னும் பலரும் சிக்கியிருப்பார்கள். இங்கே பாலியல் தொழில் முதல் பெரிய டான்களின் கட்டப்பஞ்சாயத்துகள் வரை நடப்பது போலீஸாருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் எதனையும் கண்டுகொள்வதில்லை. காரணம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரமணி, திருப்பத்தூர் அ.ம.மு.க. மா.செ. ஞானசேகரன் உட்பட சில அரசியல் புள்ளி களின் பிரமாண்ட ஹோட்டல்கள் இங்குள் ளன. இங்கெல்லாம் போலீஸால் அதிகாரம் செய்ய முடியாதென்பதால் விதிமீறல்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. இதற்கு பரிசாக மாதாமாதம் கவனிக்கப்படுகிறார்கள்.

பணம் இருப்பவர்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் ரூம் போட்டு ஜாலியாக இருக்கிறார்கள். பணமில்லாத ஆம்பூர், வாணி யம்பாடி, திருப்பத்தூர், பர்கூர், நாட்றாம் பள்ளி பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான இளசுகள் வருகிறார்கள். அவர்களுக்கு இந்த மலையின் மறைவான இடங்கள் அந்தபுர மெத்தைகளாகவுள்ளது. கீழேயிருந்து மேலே வரும் இளைஞர்கள், இங்கே போதைக் காளான் இருக்கிறதா? கஞ்சா எங்கே கிடைக்கும்? மலைச்சாராயம் நல்லா இருக்குமாமே, வாங்கித்தர முடியுமா என உள்ளூர் மக்களிடம் கேட்கிறார்கள்.'' என வருத்தத்துடன் கூறினார்கள்.

கோடிகளில் பணம் புழங்கும் இடத்தில் சட்டவிரோதக் காரியங்கள் சாதாரணமாக நடக்கும். இங்கும் அப்படித்தான் நடக் கிறது. இதனை முற்றிலும் ஒழிக்காவிட்டா லும் பரவாயில்லை, கட்டுப்படுத்தவாவது காவல்துறை முயற்சி செய்யவேண்டும். செய்யுமா?

-கிங்

nkn061124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe