Advertisment

நார்க்கோட்டிக் ஜிகாத்! பிஷப் பேச்சால் கதிகலங்கும் கேரளா!

nn

3 ஆண்டுகளுக்கு முன் கேரள பெண்கள், நிமிஷா, ஆயிஷா இருவரும் கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் பி.டி.எஸ். படித்துகொண்டிருந்தபோது, இவர்களோடு மேலும் 19 இந்து பெண்கள் "லவ் ஜிகாத்'ஆல் மனம் மாற்றப்பட்டு முஸ்லீம் இளைஞர்களைத் திருமணம் செய்து கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ (ISISI) இயக்கத்தில் சேர்ந்து இருப்பதாக கேரளா மட்டுமின்றி நாடு முமுவதும் பெரும் பரபரப்பும், எதிர்ப்புகளும் ஏற்பட்டது.

Advertisment

bishop

சில தினங்களுக்கு முன் கோட்டயம் மாவட்டம் பாலா கத்தோலிக்க டயோசீசன் பிஷப் மார்ஜோஸப் கல்லறங்காட் குருவிலங்காடு சபையில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில், "கேரளாவில் "லவ் ஜிகாத்' போன்று தற்போது "நார்க்கோட்டிக் ஜிகாத்' உருவாகியுள்ளது. இதனால் கிறிஸ்தவப் பெண்களும், இளைஞர்களும் கவனமாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். இந்துக்களை லவ் ஜிகாத் மூலம் மதம் மாற்றி, அவர்களைத் தீவிரவாத இயக்கங்களில் சேர்க்க இயலாதென்பதால், கிறிஸ்தவ இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை மாற்ற இஸ்லாமிய அம

3 ஆண்டுகளுக்கு முன் கேரள பெண்கள், நிமிஷா, ஆயிஷா இருவரும் கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் பி.டி.எஸ். படித்துகொண்டிருந்தபோது, இவர்களோடு மேலும் 19 இந்து பெண்கள் "லவ் ஜிகாத்'ஆல் மனம் மாற்றப்பட்டு முஸ்லீம் இளைஞர்களைத் திருமணம் செய்து கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ (ISISI) இயக்கத்தில் சேர்ந்து இருப்பதாக கேரளா மட்டுமின்றி நாடு முமுவதும் பெரும் பரபரப்பும், எதிர்ப்புகளும் ஏற்பட்டது.

Advertisment

bishop

சில தினங்களுக்கு முன் கோட்டயம் மாவட்டம் பாலா கத்தோலிக்க டயோசீசன் பிஷப் மார்ஜோஸப் கல்லறங்காட் குருவிலங்காடு சபையில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில், "கேரளாவில் "லவ் ஜிகாத்' போன்று தற்போது "நார்க்கோட்டிக் ஜிகாத்' உருவாகியுள்ளது. இதனால் கிறிஸ்தவப் பெண்களும், இளைஞர்களும் கவனமாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். இந்துக்களை லவ் ஜிகாத் மூலம் மதம் மாற்றி, அவர்களைத் தீவிரவாத இயக்கங்களில் சேர்க்க இயலாதென்பதால், கிறிஸ்தவ இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை மாற்ற இஸ்லாமிய அமைப்புகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஓபியம் போதைப்பொருளை பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கும் கொடுத்து, வாழ்க்கையைச் சீரழிப்பதோடு, தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபடுத்த முயல்கிறார்கள்.

தற்போது 2% பேர் நார்கோட்டிக் ஜிகாத்தில் அடிமையாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல் பெண்களுக்கு குழந்தை பிறக்காமல் இருக்க ஆப்கானிஸ்தானிலிருந்து உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், பாதாம் போன்றவற்றில் மருந்துகளை கலந்து இங்குள்ள பெண்களுக்கு சப்ளை செய்கிறார்கள். இதனால் இஸ்லாமியர் களின் கடைகளில் இருந்து பொருட்களை வாங்காதீர்கள்'' என்றெல்லாம் பிஷப் பேசிய பேச்சு கேரளாவில் தீயை விட வேகமாகப் பரவியது.

Advertisment

rr

இது, இஸ்லாமிய மதத் தலைவர்களுக்கும், அமைப்புகளுக் கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பாலா பிஷப் இல்லத்தை இஸ்லாமிய அமைப்பு கள் முற்றுகையிட, பிஷப்புக்கு ஆதரவாகக் கிறிஸ்தவ அமைப்புகள் கள மிறங்கி, ஜமாத் முன் போராட்டங்கள் நடத்துவோமென அறிவித்தன. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்த நிலை யில், திடீ ரென்று, நடி கரும் பா.ஜ.க எம்.பியுமான சுரேஷ்கோபி, பாலா பிஷப் இல் லத்துக்குச் சென்று அவருக்கு சால்வை போர்த்தி, அவரின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல் கேரளாவைச் சேர்ந்த மத்திய மந்திரி முரளிதரனும் பிஷப்பிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த தலைவர் சதீஷன், பிஷப்பின் இல்லத்துக்குச் சென்று அவரோடு ஒருமணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு, இஸ்லாமிய அமைப்பான ஸமஸ்தா அலஹாச சுரக்ஷனா சமிதி தலைவர்களையும் சென்று சந்தித்தார். அதன்பின் பேசியவர், "ஒரு மதத்தைக் குறித்து பிஷப் ஏன் பேசினா ரென்று விசாரித்து அப்போதே அதுகுறித்த பதட்டத்தை மாநில அரசு தணித்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு மதங்களுக்கிடையே முட்டல் மோதல்களை பினராய் விஜயன் வேடிக்கை பார்க்கிறார். எனவேதான் காங்கிரஸ் கட்சிrr சமாதானப்படுத்த முனைந்தது'' என்றார்.

இதையடுத்து, கேரள கூட்டுறவுத்துறை மந்திரி வாசவன் திடீரென்று பாலா பிஷப்பை அவரின் இல்லத்தில் சந்தித்தார். ஆனால் இஸ்லாமிய அமைப்பினரை அவர் சந்திக்காததால் அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஸமஸ்தா அலஹாச சுரக்ஷனா சமிதி பொதுச்செயலாளர் நாஸர் ஹைதி கூடத்தாயி, "பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவேண்டிய மந்திரி, வேட்டைக்காரனுக்கு ஜிந்தா பாத் சொல்லுகிறார். பிஷப் பின் பேச்சு, மத விரோதத்தை யும், இஸ்லாமியர்கள் மீது ஒரு பயத்தையும் உருவாக்குகிறது. அடிப்படை ஆதாரமில்லாமல் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தயங்குகிறது?. அவர் குறிப்பிட்டதுபோல் சம்பவம் நடக்கிறது என்றால் அரசு அதற்கான ஆதாரத்தைக் காட்டட்டும்'' என்றார்.

கேரளா காங்கிரஸ் (ஜனபங்ஷம்) தலைவர் பி.சி.ஜார்ஜ், "பிஷப் பேசியதில் உண்மை இருக்கிறது என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. சமீபத்தில் "லவ் ஜிகாத்' மற்றும் "நார்க்கோட்டிக் ஜிகாத்' மூலம் 47 பேரை மாற்றியிருக்கிறார்கள். இதில் 35 பேர் கிறிஸ்தவர்கள், 9 பேர் நாயர் மற்றும் 3 பேர் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து பிஷப் பொதுவெளியில் பேசவில்லை. தங்களுக்கான இடத்தில் பேசி கவனப்படுத்தியிருக்கிறார். இதில் தவறேதுமில்லை. பிறகெப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?'' என்றார்.

முதல்வர் பினராய் விஜயன், "எந்த பிரச்சினை யாக இருந்தாலும் பேசித் தீர்க்கக்கூடிய சமூகம் தான் நம் சமூகம். நார்கோட்டிக் ஜிகாத் என்பது எனக்குத் தெரியாது. போதைக்கு எந்தவொரு மதத்தின் சாயமில்லை, அது சமூக விரோதிகளின் சாயம் தான். மாஃபியா கும்ப லுக்கு மதச்சாயம் பூசுவது சரியல்ல'' என்றார். இவ்விவகா ரத்தை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களின் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். கம்யூ னிஸ்ட்டுக்கும் காங்கிரசுக்கும் இந்துக்கள் ஓட்டை நம்பி பயன் இல்லை. இஸ்லாமிய வாக்குகளும் சில இஸ்லாமிய இயக்கங்களுக்கே செல்கின்றன. எனவே கிறிஸ்தவ வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும் கிறிஸ்தவ பிஷப்பின் பேச்சுக்களை நேரடியாக ஆதரிக்கவோ, மறுக்கவோ இல்லாமல் தங்கள் நிலைப்பாட்டில் குழப்புகின்றன என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

nkn290921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe