திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில், குறி வைக்கப்பட்ட இலக்கிற்கு வந்து, பெட்ரோல் குண்டு வீசி, கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்துள்ளது மூன்று டூவீலர்களில் ஆறு பேராக வந்த கும்பல். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழக்க, கொடூர காயங்களுடன் ஐவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இதற்கிடையே அதே கும்பல், களக்காடு அருகேயுள்ள மற்றொரு கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை வெட்டியதாகத் தகவல் வெளியாக, இச்சம்பவங்கள் போதையில் நடந்ததா? சாதியால் நடந்ததா? என நெல்லை மாவட்டமே பதற்றத்துக்குள்ளானது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலிருக்கிறது பெரும்பத்து கிராமம். பெரும்பான்மையாக ஒரு சமூகமும், அதற்கடுத்தபடியாக பட்டியலின சமூகமும் இங்கு வாழ்ந்துவருகிறார்கள்.
"இரவு ஏழரை, ஏழே முக்கால் மணி இருக்கும். பஸ் ஸ்டாப்பிற்கு எதிரேயிருக்கும் டீக்கடையில் டீ குடிப்பதற்காக பெருங்கூட்டம் இருக்குறப்பதான், கையில் அரிவாளுடன் மாஸ்க் அணிந்த 6 நபர்கள், மூன்று டூவீலர்களில் வந்து, அங்கிருப்பவர்களை கண்மூடித்தனமாக வெட்ட ஆரம்பித்தனர். மிகுந்த போதையில் இருந்தார்கள். தாக்குதல் தொடங்கியதுமே கூட்டம் ஆங்காங்கே ஓடி ஒளிந்தது. அவர்கள் வெட்டியெறிந்துவிட்டு கிளம்பினால், அங்கே 7க்கும் அதிகமானோர் சுருண்டு விழுந்துகிடந்தனர். இவர்களில், "நான் ஹான்டிகேப், என்னை விட்டுடுங்க' என்று கையெடுத்துக் கும்பிட்ட இந்திரா காலனி ஜான்மார்க் இறந்துகிடந்தார். இங்குள்ள செங்கல்சூளைகளில் பணிபுரிந்த ஒரிசாவை சேர்ந்த திரிநாத்கடாவும் இறந்துகிடந்தார்'' என்கின்றார் சம்பவத்தைக் கண்ட கிராமவாசி ஒருவர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/06/nanguneri1-2026-03-06-15-36-27.jpg)
தகவலறிந்த காவல்துறை, பெரும்பத்து கிராமத்தையே தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கொலையுண்ட இருவர், காயம்பட்ட பெரும்பத்துவை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, வீராங்குளம் கணேசன் மற்றும் புளியங் குளம் சசிகுமார் ஆகியோரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் கணேசன் ஆபத்தான கட்டத்தை கடக்க, நெல் சனின் கை விரல்கள் மட்டும் துண்டிக்கப்பட்டது. முன்னதாக அதே கும்பல் களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை வெட்டியதாக தகவல் வெளியாக, மர்ம கும்பலின் அட்டூழியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் பெரும்பத்து பகுதி மக்கள். இதே வேளையில், அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஏழு நபர்களை பிடித்து, திருக்குறுங்குடியில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை செய்திருக்கிறார்கள். இந்தக் கொலைகளுக்கு திட்டமிட்ட கும்பல் குறித்து தீர விசாரிப்பதுடன், தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த கொடூரச் செயலுக்கு அரசியல் பின்னணி இருக்கிறதா என்பதையும் போலீசார் தீர விசாரித்துவருகிறார்கள்.
இது இப்படியிருக்க, சம்பவம் நடந்தது பெரும்பான்மை சமூகம் அருகிலிருக்கும் இந்திரா காலனியில். ஆனால் தாக்க வந்தவர்கள் குறி வைத்ததோ வேறொரு சமூகத்தை! மேலும், அரிவாளால் வெட்டியவர்கள், "நவீன் வாழ்க' என கோஷம் எழுப்பி சென்றது, சாதிக்காக நடந்த கொலைகள் என்பதுபோல் சித்தரிக்கப்பட்டது. ஆனால், "இந்த சம்பவத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. வேண்டுமென்றே என்னுடைய பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள்'' என வீடியோ ஒன்றில் தன்னிலை விளக்கம் கொடுத்தார் நவீன் என்பவர். மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் நடந்த தீபக்ராஜா கொலையிலும், சென்னையில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலையிலும் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/06/nanguneri2-2026-03-06-15-36-37.jpg)
மாவட்ட தனிப்படை அதிகாரி ஒருவரோ, "இது நன்கு திட்டமிட்டே நடந்த சம்பவம். சம்பவத்தில் சிக்கி இறந்தவர்களில் ஒருவர் பட்டியலின வகுப்பு. மற்றொருவர் வட மாநிலத் தொழிலாளி. காயம்பட்டதில் நால்வர் அந்த ஊரின் பெரும்பான்மை சமூகத்தினர். மற்றொருவர் வேறு சமூகம். ஆனால் குறிப்பிட்ட சமூக மக்கள் அங்கிருந்தும் காயம்படவில்லை. இன்னொன்று, இந்த பெரும்பத்து கிராமத்தின் இடது வலதிலுள்ள கிராமங்கள் மஞ்சங்குளம் மற்றும் மறுகால்குறிச்சி. இது, குறிப்பிட்ட சமூகம் ஆதிக்கம் செலுத்தும் பகுதி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாமித்துரை என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிவாங்கும் எண்ணம் குறிப்பிட்ட சிலரிடம் இருந்தது. இந்த நிலையில் மதுரை சிறைச்சாலையி லிருக்கும் "லெப்ட்' அடைமொழி கொண்ட ஒருவரின் ஆலோசனையின் பேரில் பெண் பெயரை கொண்டவர், முருகன் பெயரை கொண்டவர் மற்றும் புல்லாங்குழல் கடவுளின் பெயரை கொண்டவர்கள் ஒன்றிணைந்து 'சாமித்துரை' கொலைக்கு பழிவாங்கு வது போலும் ஆச்சு! பெரும்பத்து கிராமத்தில் வளர்ந்துவரும் குறிப்பிட்ட சமூகத்து மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மாதிரியும் ஆச்சு என்ற எண்ணத்தில் இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தை நடத்தியுள்ளனர். ஆனால் சிக்கியது வேறு சமூக மக்கள்'' என்கிறார் நம்மிடம்.
இதனிடையே, பெரும்பத்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை யன்றும் சாலை மறியல் ஆர்ப் பாட்டத்தை தொடர்ந்தனர். இந்த வேளையில், நாங்குநேரி இரட்டைக் கொலையில் உயிரிழந்த இந்திரா காலனியை சேர்ந்த ஜானின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக ஆறுதல் தெரிவித்தார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.
தமிழ்ச் சமூகங்கள் இனிமேலும் எத்தனை இழப்புகளை தொடர்ந்து சந் தித்துக்கொண்டே இருக்கப்போகின்றன?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/06/nanguneri-2026-03-06-15-36-15.jpg)