Advertisment

நம்மாழ்வார் மக்கள் இயக்கம்! தோழரின் விவசாயப் புரட்சி!

ss

யற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகளை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற அவரது பயணம், இப்போது அவரில்லை என்றா லும் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. "விவசாயம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று அய்யா நம்மாழ்வார் சொல்-யிருக்கிறார்'' என்று பேசும் இளைஞர் கள், தற்போது இயற்கை விவசாயத்திற்கு மாறிக்கொண்டிருக் கிறார்கள். அரசியல் கட்சிகளும் அவரது பெயரைச் சொல்ல மறப்பதில்லை.

Advertisment

இந்நிலையில் தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் டெல்டா மாவட்டத்துக்காரருமான தோழர் சி.மகேந்திரன், நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தை தொடங்கி யிருக்கிறார். அதன் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

Advertisment

இந்த இயக்கத்தின் முதல் கருத்தரங்கை, தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஏப்ரல் 27, 28 ஆகிய இரு நாட்களும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக் கிறார். இந்த கருத்தரங்கில், தமிழ்நா

யற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகளை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற அவரது பயணம், இப்போது அவரில்லை என்றா லும் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. "விவசாயம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று அய்யா நம்மாழ்வார் சொல்-யிருக்கிறார்'' என்று பேசும் இளைஞர் கள், தற்போது இயற்கை விவசாயத்திற்கு மாறிக்கொண்டிருக் கிறார்கள். அரசியல் கட்சிகளும் அவரது பெயரைச் சொல்ல மறப்பதில்லை.

Advertisment

இந்நிலையில் தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் டெல்டா மாவட்டத்துக்காரருமான தோழர் சி.மகேந்திரன், நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தை தொடங்கி யிருக்கிறார். அதன் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

Advertisment

இந்த இயக்கத்தின் முதல் கருத்தரங்கை, தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஏப்ரல் 27, 28 ஆகிய இரு நாட்களும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக் கிறார். இந்த கருத்தரங்கில், தமிழ்நாடு மட்டுமின்றி, தென்னிந்தி யாவிலுள்ள இயற்கை விவசாயிகள் பலரும் கலந்துகொண்ட னர். முதல் நாள் நிகழ்வில், பல்வேறு விவசாயிகளின் உரை களோடு, புதுச்சேரி சக்தி அகாடமி மாணவர்களின் மல்லாட் டம் கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. மலையகத் தொழி லாளர்களுக்காகப் போராடிய செல்வராஜ் பேசுகையில், "எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை கட்டமைத்துள்ளார். இன்றைக்கு வலதுசாரிகள் வீடு வீடாக ஊடுருவியிருக்கிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்கு தோழரின் இந்த முயற்சி தாமதமானது என்றாலும் சிறப்பானது'' என்றார்.

nn

கேரளாவைச்சேர்ந்த வயநாடு பி.டிஜான், "தமிழ்த் தொழிலாளிகளிடம் பேசிப்பேசியே எனக்கு தமிழ் தெரிந்தது. இப்ப தமிழ்நாட்டு வேலைக்கு பெங்காளி தொழிலாளிகள் வந்துட்டாங்க. டெல்லி போராட்டம் எப்படி வந்தது? பிரதமரால் வந்தது. இப்ப 2வது போராட்டமும் வந்தது. 6,534 கிராமங்கள் இணைந்துதான் இந்த போராட்டத்தை முன் னெடுத்தார்கள். இப்பகூட 15 ஆயிரம் பேர் போராட்டக்களத் தில் இருக்கிறார்கள். அங்கே சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை. ஜாதி, மதம், அரசியல் வேறுபாடு இல்லாமல் சமத்துவ மான போராட்டம் நடக்கிறது. விவசாயம் செய்ய விவசாயி களிடம் விதை இல்லை, கம் பெனிகளிடம் தான் இருக்கு. எல்லாரும் சேர்ந்து போரா டலைன்னா எல்லாமே போயிடும். மே 23, டெல்லி போராட்டத்தின் 100வது நாள். பஞ்சாப், ஹரியானா விவசாயி கள் போராடலைன்னா ரேசன் கடையில எதுவும் கிடைக்காது'' என்றார்.

குறிஞ்சி தலைப்பில் பேசிய கோவை சதாசிவம், "தென் னிந்தியாவின் தண்ணீர்த்தொட்டி குறிஞ்சி. அது நிரம்பினால் மருதம் பசுமையாகும், சோறு கொடுக்கும். குறிஞ்சி 2,500 லிட்டர் தண்ணீர் தந்து, 1 கிலோ அரிசி உருவாகிறது. பேட் டரி கார்கள் சூழலுக்கு உகந்தது என்கிறார்கள். நிச்சயம் நிலத்தை பாதிக்கும். லித்தியம் பேராபத்து ஏற்படுத்தும். காடு அழிய அழிய கடைமடை காய்கிறது. உழவர்கள் வேளாண்மையை மாற்றிக்க பழக வேண்டும். இனி ஒற்றைப் பயிர் விளையாது. பாரம்பரிய விதைகள் தான் விளைச்சல் தரும். அனைவரும் பாரம்பரிய உழவுக்கு மாற வேண்டும்'' என்றார்.

முல்லை தலைப்பில் பேசிய பாமயன், "மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதால் கால்நடைகள் மட்டுமல்ல, நிலங்களும் களவாடப்படுகிறது. அதனால் பூமி சூடாகி பருவ நிலை மாறிவிட்டது. தண்ணீரை ஆழத்திலிருந்து எடுக்கக்கூடாது, அள்ள வேண்டும். அதற்கு மேய்ச்சல் பரப்பு அதிகரிக்க வேண்டும்''' என்றார்.

bb

மருதம் தலைப்பில் பேசிய கோசித்தர், "ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர்... இப்ப எந்த நீரும் கிடைக்கவில்லை. வயல் வரப்பில் வளரும் அத்தனை செடிகளும் மருந்து தான். அதைத்தான் உணவே மருந்து என்று சொன்னார்கள். நம் முடைய நீர் மேலாண்மை தான் சிறந்ததாக உள்ளது'' என்றார்.

நெய்தல் தலைப்பில் பேசிய உதயகுமார், "நான் நெய்தல் மக்க ளோடு இருந்தவன். தாது மணல் கொள்ளையால் கடலோரம் அழிந்து கொண்டிருக்கிறது. இன் னும் அனல்மின் திட்டம், அணு மின் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், சாயப்பட்டறைக் கழிவு கள் கலப்பால் கடல் வளம் அழிந்து வருகிறது. பா.ஜ.க. மீண் டும் ஆட்சிக்கு வந்தால் அதானி, அம்பானிகளிடம் இந்த நாடு தாரை வார்க்கப்படும். குமரியில் இயற்கை வளங்களை அழிக்க அடுத்தத் திட்டம் தயாராகிறது. அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார். இரண்டாம் நாள் கருத்தரங்கில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு நடந்தது. இரண்டு நாட்களும் அரங்கில் மக்கள் நிரம்பியிருந்தனர்.

கருத்தரங்கில், "நம்மாழ்வா ருக்கு தஞ்சையில் சிலை வைக்க, மாவட்ட, மாநகர நிர்வாகங்கள் அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட் டில் மராமத்து இல்லாத நீர்நிலை களை நம்மாழ்வார் மக்கள் இயக் கம் மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்கும். சுத்திக்கரிக்கப்பட்ட குடி நீரை தமிழ்நாடு அரசு மக்களுக்கு வழங்க வேண்டும். நஞ்சில்லா இயற்கை விவசாயத்தை ஊக்கப் படுத்த வேண்டும். 100 நாள் வேலையை விவசாயத்திற்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. விவசாயப் புரட்சி வெல்லட்டும்!

nkn080524
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe