தமிழ்நாடு அரசு முத்திரை, தலைமை செயலாளர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கையெ ழுத்துக்களை போலியாகப் பயன்படுத்தி, கிராமங் களில் படித்த இளைஞர்கள், இளம்பெண் களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் கடந்த 5ஆம் தேதி புகார் கொடுத்துள் ளார். அவருடன் பாதிக்கப்பட்ட 11 பேரும் சேர்ந்து சென்று புகாரளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அனகாபுதூர், திம்மசமுத்திரம் திவ்யா நகரைச் சேர்ந்த ஆரோன் மகன் பிரான்சிஸ் ஜெரால்டு (எ) சசிக்குமார் என்ற நபர், தமிழ்நாடு முழுவதும் இப்படி போலி பணி ஆணைகள் வழங்கி பண வசூல் வேட்டை நடத்தியுள்ளார். புதுக் கோட்டை மாவட்டத்தில், புதுக் கோட்டை, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி ஆகிய பகுதிகளில், படித்து மு
தமிழ்நாடு அரசு முத்திரை, தலைமை செயலாளர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கையெ ழுத்துக்களை போலியாகப் பயன்படுத்தி, கிராமங் களில் படித்த இளைஞர்கள், இளம்பெண் களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் கடந்த 5ஆம் தேதி புகார் கொடுத்துள் ளார். அவருடன் பாதிக்கப்பட்ட 11 பேரும் சேர்ந்து சென்று புகாரளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அனகாபுதூர், திம்மசமுத்திரம் திவ்யா நகரைச் சேர்ந்த ஆரோன் மகன் பிரான்சிஸ் ஜெரால்டு (எ) சசிக்குமார் என்ற நபர், தமிழ்நாடு முழுவதும் இப்படி போலி பணி ஆணைகள் வழங்கி பண வசூல் வேட்டை நடத்தியுள்ளார். புதுக் கோட்டை மாவட்டத்தில், புதுக் கோட்டை, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி ஆகிய பகுதிகளில், படித்து முடித்து வேலைக்காக காத்திருக் கும் வறுமையில் வாடும் குடும்ப இளைஞர்கள், இளம்பெண் களிடம், “"நான் தலைமைச் செய லகத்தில் வேலை செய்கிறேன், எனக்கு தலைமை செயலாளரைத் தெரியும். பணம் கொடுத்தால் வேலை ஆர்டர் வாங்கித் தரு கிறேன்''’எனக்கூறி, போலி அடை யாள அட்டைகளைக் காட்டி நம்ப வைத்து பணம் வாங்கிக் கொண்டு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., அமுதா ஐ.ஏ.எஸ்., உமாமகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., மகிழ்மதி ஐ.ஏ.எஸ்., ஜெயந்தி ஐ.ஏ.எஸ்., அகிலாண்டேஸ்வரி ஐ.ஏ.எஸ். எனப் பலரது கையெழுத்துகளுடன் தமிழ்நாடு அரசு முத்தி ரையைப் பயன்படுத்தி போலி பணி ஆணை வழங்கி ஏமாற்றியுள்ளார்.
இந்த ஆணை போலி என்பது தெரிய வந்ததும் பிரான்சிஸ் ஜெரால்டிடம் பாதிக்கப்பட்டோர் கேட்டபோது, பாதிக்கப்பட்டவர்களின் மீதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டின் உயர் அதி காரிகளின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தி பணி ஆணை வழங்கிய மோசடி நபர் மீது நட வடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே நடவடிக்கை எடுப்பதா? என்று பாதிக்கப்பட்டவர் கள் தரப்பில் பொங்கியெழ, அந்த புகார் அப்படியே நின்றது.
இந்நிலையில் தான் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்து 12 நாட்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை என்பதால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத் தனர். நிலவரம் மோசமாவதைப் புரிந்துகொண்டு, அவசர அவசரமாக மோசடி நபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்து போராட்டம்வரை சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் நம்மிடம், "களபம் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற இளைஞரிடம் வெளியூரில் வேலைக்குச் சென்ற இடத்தில் பழக்கமான பிரான்சிஸ் ஜெரால்டு (எ) சசிக்குமார், "நான் தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறேன். தலைமைச் செயலாளர் எனக்கு ரொம்ப வேண்டி யவர். அதனால உனக்கு அரசு வாகன ஓட்டுநர் வேலை வாங்கித் தருகிறேன்' எனக்கூறி, பணம் வாங்கிக்கொண்டு முதலில் தனது கார் டிரைவராக வைத்துக் கொண்டதுடன், "இதேபோல பல வேலைகள் உள்ளது. உங்கள் உறவினர்கள் இருந்தால் பணம் வாங்கிக் கொடு, வேலை உத்தரவு வாங்கித் தருகிறேன்' என்று சொல்லி கலைச்செல்வனுக்கு போலியான ஒரு வேலை உத்தரவை கொடுத்திருக்கிறார்.
அதனை நம்பிய கலைச்செல்வன், தனது உறவினர்கள் பலரிடமும் பணம் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னவருக்கு, கலைச்செல்வனின் சித்தி மகளையே திருமணமும் செய்து வைத் துள்ளனர். வறுமையில் வாடும் குடும்பங்களைக் குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் ஒரு கோடி வரை பணம் வசூல் செய்து, தமிழ்நாடு அரசு முத்திரையுடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கையெழுத்துகளையும் பதிவு செய்து அரசு வேலை கிடைத்திருப்பதாக போலி பணி ஆணையை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக 5ஆம் தேதி ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தா லும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்த பிறகு உடனே மோசடி நபரைக் கைது செய்திருக்கிறார்கள். தற்போது எங்களிடம் உள்ள ஆதாரங்களையும், பாதிக்கப்பட்ட நபர்களை வைத்தே வேலைவாய்ப்பு முகாம் நடத்திய வீடியோ பதிவுகளையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறோம். விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும். இதுபோல தமிழ்நாடு முழுவதும் மோசடி செய்திருப்பதாக தெரிய வருகிறது. அத னால் முழுமையாக விசாரித்து அரசு உயர் அதிகாரி களின் கையெழுத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். ஏமாற்றுப் பேர்வழிக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை பாய்ந்தால் நல்லது.