தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக நீதிமன்றத்தில் பரோல் வாங்கி வந்தார், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுபேரில் ஒருவரான நளினி. தற்போது அவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சிங்க ராயரின், வேலூர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்.
நளினி இப்போது என்னசெய்கிறார், திருமண ஏற்பாடுகள் எல்லாம் எந்த நிலையில் உள்ளன என்பதுபற்றி நாம் விசாரித்தபோது, “ஜூலை 25-ந்தேதி வேலூர் மத்திய பெண்கள் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே வந்த நளினி, அதன்பிறகு சிங்கராயரின் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. தனது தாயாருக்கு பாசத்துடன் உணவு சமைத்து பரிமாறுகிறார். வீட்டுக்கு வெளியே ஒரு டி.எஸ்.பி. தலைமை யில், துப்பாக்கி ஏந்திய பத்து போலீசார் எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவரை பார்க்கவந்த வி.சி.க. வன்னி யரசு, வழக்கறிஞர் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர். நளினியின் அம்மா பத்மா மற்றும் முருகனின் உற
தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக நீதிமன்றத்தில் பரோல் வாங்கி வந்தார், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுபேரில் ஒருவரான நளினி. தற்போது அவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சிங்க ராயரின், வேலூர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்.
நளினி இப்போது என்னசெய்கிறார், திருமண ஏற்பாடுகள் எல்லாம் எந்த நிலையில் உள்ளன என்பதுபற்றி நாம் விசாரித்தபோது, “ஜூலை 25-ந்தேதி வேலூர் மத்திய பெண்கள் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே வந்த நளினி, அதன்பிறகு சிங்கராயரின் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. தனது தாயாருக்கு பாசத்துடன் உணவு சமைத்து பரிமாறுகிறார். வீட்டுக்கு வெளியே ஒரு டி.எஸ்.பி. தலைமை யில், துப்பாக்கி ஏந்திய பத்து போலீசார் எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவரை பார்க்கவந்த வி.சி.க. வன்னி யரசு, வழக்கறிஞர் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர். நளினியின் அம்மா பத்மா மற்றும் முருகனின் உறவுக்காரப் பெண் மட்டுமே உட னுள்ளனர். நளினியின் சகோதரர்கள், முருகனின் உறவினர் கள் அவ்வப்போது வந்து பேசிவிட்டு செல்கிறார்கள். திருமண ஏற்பாடுகள் பெரியளவில் நடப்பதாக தெரிய வில்லை’’ என்ற தகவலே மிஞ்சியது.
நளினியின் குடும்பத்தாரோடு நெருக்கமாக இருக்கும் அந்த முக்கிய தமிழ் உணர்வாளரிடம் பேசியபோது, ""நளினியின் மகள் அரித்ராவுக்கு 26 வயதாகிறது. கலாநிதி என்கிற முனை வர் பட்டம் பெற்றிருக்கிறார். தொடர்ந்து படித்துவருகிறார். லண்டனில் உள்ள அவரிடம் இருப்பது இலங்கை பாஸ் போர்ட். அதனால், இலங்கை விசா பெறுவதில் பிரச்சனை இல்லை. ஆனால், இந்தியா வருவதற்கு மல்டி விசா வாங்கவேண்டும். அதனை வாங்க மனு செய்தால், இந்திய அரசு இழுத்தடிக்கிறது. இதனால், பரோலில் வந்துள்ள தனது தாயார் நளினியை நேரில் பார்க்க முடியாமல் தவிக்கிறார் அரித்ரா.
முருகனின் குடும்ப உறவில்தான் ஒரு பையனை அரித்ராவுக்கு பார்த்துள் ளார்கள். லண்டனில் தஞ்சமடைந்துள்ள அகதி குடும்பம். பையனும் நன்றாக படித்துள்ளார். சிறுவயதில் முருகன் அந்தப் பையனை பார்த்துள்ளதாகச் சொல்லியுள்ளார். இதனை அடுத்தகட் டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டு மெனில், அரித்ரா பெற்றோரை சந்தித்தாக வேண்டும். அந்தப் பையனை நளினிக்கு பிடிக்கவேண்டும் என பல வேலைகள் உள்ளன. பையனின் உறவினர்கள் நளினியை சந்தித்திருந்தாலும், அரித்ரா வந்தால்தான் எதுவும் முடிவாகும் என்பதால், எல்லாமே தடைப்பட்டுள்ளது.
மத்திய-மாநில அரசுகளின் உளவுத்துறை கொடுக்கும் கஷ்டம்தான் இதில் முக்கியப் பிரச்சனை. மத்திய உளவுத்துறையான ஐ.பி.யுடன் நேரடித் தொடர்பில் க்யூ பிராஞ்ச் இருப்பதால், அவர்கள் "நளினியை சந்திக்க யாரையும் அனு மதிக்க வேண்டாம்' என்று சொல்கின்றனர். காவல்துறையும் அதை அப்படியே செய்கிறது. அரித்ராவுக்கு விசா கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுவதே ஐ.பி.தான்''’என்றார் விரக்தியுடன்.
"பேரறிவாளன் பரோலில் வெளியில் வந்த போது இந்தளவுக்கு நெருக்கடி கிடையாது. நூற் றுக்கணக்கானோர் சந்திக்க அனுமதித்தீர்களே' என்று, காவல்துறை அதிகாரிகளிடம் சிலர் கேள்வி யாக எழுப்ப... "அரசு என்ன சொல்லுதோ, அதையே நாங்கள் செய்கிறோம்'’ என்கிறிருக்கின்றனர். இது பற்றி காவல்துறை வட்டாரத்தில் நாம் கேட்ட போது, “""பேரறிவாளன் அரசியல் தலைவர்கள் ஆத ரவு பின்னணியில் பரோலில் வெளிவந்தார். ஆட்சி செய்வோரும் ஆதரவாக இருந்தனர். அதனால், அர சியல் கட்சியினர் உட்பட பலரும் சந்திக்க அனுமதித் தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் சந்தித்து மணிக் கணக்கில் பேசிவிட்டு சென்றனர். நளினியோ தன் குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக நீதிமன்ற உத்தர வோடு வந்திருக்கிறார். இதை ரசிக்காத அரசுதான் அதீத கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது''’என்றனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக் காக அற்புதம்மாள் ஓயாமல் போராடி வரும் நிலையில்... அர சியல் தளத்தில் தங்களுக்கென்று மேலும் அழுத்த மாக குரல் கொடுக்க யாருமில்லையே என நளினி, முருகன், ரவிச்சந்திரன், பயாஸ் ஆகியோர் வருந்து வதாக உணர்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவினர்களைத் தாண்டி அரசியல் தளத்தில் இயங்கும் சிலருடன் பேசவேண்டும் என்கிற விருப்பமும் நளினிக்கு இருக்கிறது என்கிறார்கள்.
மகளின் திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக் காமல், அப்படியே கிடப்பது பற்றி ஆகஸ்ட் 13-ந் தேதி வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகனை சந்தித்து கவலையை வெளிப்படுத்தியுள் ளார் நளினி. வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதியோடு நளினிக்கு வழங்கப்பட்ட 30 நாள் பரோல் முடி கிறது. திருமண ஏற்பாடுகள் தொடக்க நிலையி லேயே உள்ளதால், பரோலை நீட்டிக்கவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் நளினி.
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் இது தொடர்பாக பேசியபோது, ""திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அரித்ரா விரை வில் தனது தாயை சந்திக்க வருகிறார். அப்போது மணமகன் பற்றிய விபரம் தெரியவரும்'' என்றவர், ""பரோலை நீட்டிக்க மனு செய்துள்ளோம்''’என்றார்.
28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவருபவர்களை, விடுதலை செய்ய யோசிக்கும் மத்திய-மாநில அரசுகள், அவற்றின் உளவுத்துறைகளை முடுக்கிவிட்டு, அவர்களின் குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி நடைபெறுவதைக்கூட விரும்பாதவைகளாக இருக்கின்றன என்று மனம் குமைகிறார்கள் உணர்வாளர்கள்.
-து.ராஜா