நக்கீரன் -பவர்ஃபுல் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம்!

ss

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பையடுத்து சமூக வலைத்தளங்களிலும், நேரிலும், குறுஞ்செய்தியாகவும் நக்கீரனின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்தன. அவற்றிலிருந்து சில...

pollachi

Congratulations on your powerful investigative journalism that broke open the horrible, cruel, and anti-human Pollachi gang rape case and other crimes by boldly releasing a video that demolished the cover-up — and eventually brought all the members of the criminal gang to full justice. Respect and commendation for your intrepid, truth-seeking journalism.

N.Ram, The Hindu

தோழர், வணக்கம். உங்களின் புலனாய்வில் வெளிச்சத்துக்கு வந்ததுதான் வாச்சாத்தி விவகாரம். கண்ணகி-முருகேசன் விவ காரத்தை வெளிக்கொண்டு வந்ததும் தாங்கள்தான். பொள்ளாச்சி விவகாரத்திலும் விஷயத்தை வெளிக்கொண்டு வந்ததுடன் குற்றவாளிகள் ஆயுள்தண்டனை பெறக் காரணமாகியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்!

ரோகிணி, நடிகை

அன்றைய காலகட்டத்தில் உங்களால் வெளிவந்த (பொள்ளாச்சி) வீடியோ கேஸட்டால் தான் முக்கிய திருப்பமாக இன்று கோர்ட்டில் நீதிபதியால் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது. ரொம்ப மகிழ்ச்சி! பாராட்டு! அன்று அதிகமான கஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டீங்க! வாழ்த்துக்கள்! அதிக கொடுமைக்கு ஆளான அத்தனை சகோதரிகளுக்கு நீதி கிடைக்க வழி வகுத்த உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்!

vஅ.அருள்மொழி, திராவிட கழகம்

சார் வணக்கம். பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் கொண்டாடுகிறார்கள்.…அதில் உங்களின் பணியே மூலம், நீங்கள் வெளிக்கொண்டுவந்த ஆதாரங்களே பெரும் காரணம்.…நன்றி சார்.

இயக்குனர் திருச்செல்வம், கோலங்கள்

இந்த தீர்ப்பு உங்கள் உழைப்பு

Pari, industrialist

இந்த வீடியோ பொள்ளாச்சி வழக்கில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. உங்களுக்கு வாழ்த்துக்கள்!

D.Sureshkumar, The Hindu

வாழ்த்துக்கள் அண்ணே! உங்களால் வெளிவந்த குற்றவாளிகள். சரியான தீர்ப்பு. மக்கள் வரவேற்கிறார்கள்.

Rahamatulla, habico sports

சார், இன்று உங்கள் வீடியோக்கள் தான் வழக்கு சரியான பாதையில் போக உதவியது என்று மீடியாக்கள் ஓங்கி ஒலிக்கின்றன. உங்கள் அறப் பணி சிறக்கட்டும்!! ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க எப்போதும் பிரார்த்திக்கிறேன்

Dr.john, hosur

அண்ணா, இதைத்தான் ஆரம்பத்தி லிருந்தே, நீங்கள் உங்கள் குரலை விடாமல், நியாயம் கேட்டு, தைரியமாக, கடும் எதிர்ப்பைத் பதிவிட்டது மட்டுமின்றி, அரசியலாள

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பையடுத்து சமூக வலைத்தளங்களிலும், நேரிலும், குறுஞ்செய்தியாகவும் நக்கீரனின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்தன. அவற்றிலிருந்து சில...

pollachi

Congratulations on your powerful investigative journalism that broke open the horrible, cruel, and anti-human Pollachi gang rape case and other crimes by boldly releasing a video that demolished the cover-up — and eventually brought all the members of the criminal gang to full justice. Respect and commendation for your intrepid, truth-seeking journalism.

N.Ram, The Hindu

தோழர், வணக்கம். உங்களின் புலனாய்வில் வெளிச்சத்துக்கு வந்ததுதான் வாச்சாத்தி விவகாரம். கண்ணகி-முருகேசன் விவ காரத்தை வெளிக்கொண்டு வந்ததும் தாங்கள்தான். பொள்ளாச்சி விவகாரத்திலும் விஷயத்தை வெளிக்கொண்டு வந்ததுடன் குற்றவாளிகள் ஆயுள்தண்டனை பெறக் காரணமாகியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்!

ரோகிணி, நடிகை

அன்றைய காலகட்டத்தில் உங்களால் வெளிவந்த (பொள்ளாச்சி) வீடியோ கேஸட்டால் தான் முக்கிய திருப்பமாக இன்று கோர்ட்டில் நீதிபதியால் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது. ரொம்ப மகிழ்ச்சி! பாராட்டு! அன்று அதிகமான கஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டீங்க! வாழ்த்துக்கள்! அதிக கொடுமைக்கு ஆளான அத்தனை சகோதரிகளுக்கு நீதி கிடைக்க வழி வகுத்த உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்!

vஅ.அருள்மொழி, திராவிட கழகம்

சார் வணக்கம். பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் கொண்டாடுகிறார்கள்.…அதில் உங்களின் பணியே மூலம், நீங்கள் வெளிக்கொண்டுவந்த ஆதாரங்களே பெரும் காரணம்.…நன்றி சார்.

இயக்குனர் திருச்செல்வம், கோலங்கள்

இந்த தீர்ப்பு உங்கள் உழைப்பு

Pari, industrialist

இந்த வீடியோ பொள்ளாச்சி வழக்கில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. உங்களுக்கு வாழ்த்துக்கள்!

D.Sureshkumar, The Hindu

வாழ்த்துக்கள் அண்ணே! உங்களால் வெளிவந்த குற்றவாளிகள். சரியான தீர்ப்பு. மக்கள் வரவேற்கிறார்கள்.

Rahamatulla, habico sports

சார், இன்று உங்கள் வீடியோக்கள் தான் வழக்கு சரியான பாதையில் போக உதவியது என்று மீடியாக்கள் ஓங்கி ஒலிக்கின்றன. உங்கள் அறப் பணி சிறக்கட்டும்!! ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க எப்போதும் பிரார்த்திக்கிறேன்

Dr.john, hosur

அண்ணா, இதைத்தான் ஆரம்பத்தி லிருந்தே, நீங்கள் உங்கள் குரலை விடாமல், நியாயம் கேட்டு, தைரியமாக, கடும் எதிர்ப்பைத் பதிவிட்டது மட்டுமின்றி, அரசியலாளர்கள் மற்றும் துணைபோகிற காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தீர்கள்.

இறுதியாக, பாதிக்கப்பட்ட அவர்களுக்கு, நீதி கிடைக்கவும், உங்கள் பங்கினை ஆற்றியிருப்பதே உங்களின் பெருமை.!!!

Arulselvan, express

அண்ணனின் நோக்கம். தெளிவு தர்மம், என்றைக்கும் வெற்றி பெறும். ரெம்ப ரெம்ப சந்தோசம் அண்ணே. எல்லாம் காமாட்சி அண்ணே.. ஓம் ஓம் காமாட்சி. ஓங்கார காமாட்சி.

Pe.karunakaran, writer

அப்போதே இதைப்பார்த்து முகநூலில் லிங்க் கொடுத்தேன் அண்ணா. நிறைய பாராட் டுகள். இந்தத் தண்டனைக்குப் பின்னணியில் நக்கீரனின் உயிரைப் பணயம் வைத்த கடும் உழைப்பும் உண்டு. நக்கீரன் குடும்பத்துக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அண்ணா!

Pe.karunakaran, writer

தம்பியின் போராட்டத்திற்கு கிடைத்த நீதி! நக்கீரன் குடும்பத்திற்கு தமிழ்நாடே நன்றி பாராட்டுகிறது .

Elango, SiTo Tata -ரவி திருவாரூர்.

இவ்வளவு ஒரு அவமானகரமான இழி செயலை குற்றத்தை மூடி மறைக்க நமது அரசியல் கட்சிகள் சில முயன்றபோது அதை தனி ஒருவராக எதிர்த்து நின்று நீதிக்காக போராடிய எங்களது நண்பர் திரு. நக்கீரன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்

chandrasekaran, covai

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் அரசுத் தரப்பு உறுதியுடன் நின்று குற்றவாளிகளுக் குத் தண்டனை வாங்கித் தந்திருக்கிறது. நிச்சயம் மேல்முறையீட்டுக்கு போவார்கள். உச்ச நீதிமன்றம் கண்ணகி- முருகேசன் வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது போல இந்த வழக்கின் மேல்முறையீடுகளிலும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். இந்த இரண்டு வழக்குகளிலுமே நக்கீரன் இதழ் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கண்ணகி - முருகேசன் படுகொலையை 2003இல் வெளிச்சத் திற்கு கொண்டுவந்தது நக்கீரனே. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ஆணவக் கொலை அது.

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட நக்கீரனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நக்கீரனின் இதழியல் பணி இந்திய வரலாற்றில் வேறு எந்த இதழோடும் ஒப்பிட முடியாது. துணிச்சலாக செயல்பட்ட டெஹல்கா போன்ற இதழ்கள் தாக்குதல்கள்முன் தளர்ந்து போயின. ஆனால் எவ்வளவோ கடும் தாக்குதல்கள்- வழக்குகளைத் தாண்டி நக்கீரன் செய்த பணிகள் இதழியலாளர்கள் பயிலவேண்டிய ஒரு வரலாறு. ஒரு பாடம்.

மனுஷ்யபுத்திரன் முகநூலில்.

பல ருத்ர தாண்டவங்களுக்கு இடையே மெருகேறியது எங்களது அண்ணனின் மீசை..

பல வெற்றிப் பதக்கங்களை பெற்றிருந் தாலும்... நம் உயிர்த் தங்கைகளின் கதறல்களை கண்டு... நீங்கள் ஆடிய ருத்ர தாண்டவத்தில் பொள்ளாச்சி எதிரிகள் வீழ்ந்தனர்.

Senthil, sun tv, bangalore

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூர வீடியோவை பார்த்தவர்கள், சின்னஞ் சிறு பெண் கதறுவதை காது கொடுத்துக் கேட்டவர்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.  கொடூரத்தை அனுபவித்த அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பதை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் தண்டனை வாங்கிக் கொடுத்த நக்கீர னின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. காதல் என்ற பெயரால் சீரழிக்கப்படும் பெண்களுக்கு இது ஒரு விழிப்புணர்வை தரும் செயலாகவும் அமைந்துள்ளது. கொடூர குற்றவாளிகளை தோல் உரித்து காட்டும் நக்கீரன் செயலை பாராட்டுகிறோம். அதிகாரத் திமிரில் அத்துமீறும் யாரையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு வெற்றி நடை போடும் அண்ணனை வணங்குகிறோம்.

Selvakumar, ambatur estate

நக்கீரன் இல்லையென்றால் பொள்ளாச்சி வழக்கு புஸ்வாணமாகப் போயிருக்கும். தனிமனிதனாக பெண்ணினத்தை காப்பாற்றியுள்ளீர்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் ஆத்மாக்கள் உங்களை ஆசீர்வதிக்கும். நன்றி

Kumaraguru, apk

Congrats sir , on the landmark Judgement. All the credit goes to u for bringing this to the knowledge of everyone and briefing the gravity of the crime . You are indeed the unsung hero for bringing the justice to the victims

Prof.Nareshkumar

அண்ணே! வாழ்த்துக்கள்! உங்களின் முயற்சி வீண் போகலை! தமிழர்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள்!

சரவணராஜன், திரைப்பட தயாரிப்பாளர்

அண்ணா... ஒரே ஒரு வார்த்தைதான்.

இதற்காக தங்களை வாழ்த்தவில்லை.. கரம் பற்றி வணங்குகிறேன்.

மேலும் மேலும் தவறுகள் நடக்காமல் இருப்பதற்கும் நடந்த தவறுகளிலிருந்து யாரும் தப்பி விடாமல் இருப்பதற்கும் அனைத்து பெண்பிள்ளைகளுக்குமான தகப்பன்சாமியாகவும் குல சாமியாகவும் இருக்கும் தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நூறாண்டு நூறாண்டு எல்லா வளங்களுடன் வாழ அருள்புரியப் பிரார்த்திக்கிறேன்

புகழேந்தி, சிக்ஸ்த் சென்ஸ்

அநீதிக்கு எதிரான நக்கீரனின் பயணம் என்றென்றும் தொடரட்டும் அண்ணன்!

பாவிகளுக்கு கிடைத்த தண்டனையல்ல இது... பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த நீதி...! இதை செய்தியாய் மட்டுமே பார்த்த ஊடகங்களுக்கு மத்தியில், ஒரு தந்தையாய், அக்கறையோடு, அறத்தோடு, அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களை யெல்லாம் சட்டத்தின் துணையுடன் எதிர்கொண்டு, மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒலித்தது உங்கள் ஒருவரின் குரல் மட்டுமே அண்ணன். நீங்கள் தமிழ் இனத்தின் பெருமை! அண்ணனாய் அடைந்ததற்கு கர்வம் கொள்கிறேன்!

பரமு, சூர்யா நற்பணி மன்றம்

பாதிக்கப்பட்ட பெண்களுக்காக யுத்தம் நடத்திய ஊடகப் போராளி அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு ராயல் சல்யூட்

இட்லி, இனியவன்

The Nakkheeran cover boldly displayed what the state apparatus attempted to blur—the raw and uncomfortable truth of over 275 women being entrapped, blackmailed, and brutalized by a network of young men who weaponized technology, male privilege, and social silence to orchestrate a systemic cycle of abuse. Pollachi remains a tragic anthropological case study of how violence against women is normalized, politicized, and ultimately buried beneath the debris of cultural denial and institutional decay.

-தமிழ் நிலா

இந்தத் தீர்ப்புக்கு பின்னால நக்கீரனுடைய உழைப்பு நான் தொடர்ச்சியா பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல அந்த குரல் ஒரு பெண்ணினுடைய குரல். முகங்கள் தெரியாமல் அந்தக் குரல் வந்து நக்கீரன்ல வந்தப்போ மிகப்பெரிய அதிர்வுகள ஏற்படுத்திச்சி. நமக்கே ஒரு பயத்தையும் தந்தது, கோபத் தையும் தந்தது.. அப்படி ஒரு ஆதங்கம். அந்த ஒரு அதாவது இந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைச்சிராதா அப்படிங்கிற ஆதங்கமும் கோபமும் எல்லாருக்குமே ஏற்படுத்திச்சி. அந்த அதிர்வு ஏதோ ஒரு செய்திய கடந்து போற மாதிரி இல்ல. கிட்டத்தட்ட பல மாதங்கள்... ஏன் சில வருடங்கள் கூட நீடிச்சது. இப்பக் கூட இந்தத் தீர்ப்பு வர்ற நேரத்துல கூட அந்தக் குரல் தான் வந்து நம்ம மனசுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு. அது ஏன் எனக்கு எப்படி இருந்ததுனா காஷ்மீர்ல பாதிக்கப்பட்ட பொண்ணு பேர் ஆசிபா. "அதுல அந்த அப்பாவோட ஒரு குரல். ஒரு ஸ்டேட்மெண்ட் குடுப்பார். "நான் எல்லாப் பக்கமும் தேடுனேன். ஆனா அந்தக் கோயிலுக்குள்ள தேடல. ஏன்னா அந்தக் கோயிலுக்குள்ள அவங்க இருக்க மாட்டாங்க அப்படின்னு நான் நெனச்சிட்டேன்'னு ஒரு வார்த்தைய பதிவு பண்ணுவார். அது இத்தன வருடங்கள் கழிச்சி கூட மனசுல அப்படியே ஆழமா பதிஞ்சிருக்கு. அதுக்குப் பின்னாடி ஒரு உணர்வுப்பூர்வமா நிறைய கேள்விகள, வாதங்கள எழுப்புச்சு. இந்த குற்றவாளி களுக்கு தண்டனை கிடைச்சிராதா அப்படின்னு கோபமும் இருந்துகிட்டே இருந்தது. இந்த தண்டனை இன்னைக்கி கிடைச்சவுடனே அந்த உள்மனதில் இருந்த கோபமும் அந்த ஆனந்தமும் ஒரு முழுமையடைஞ்ச மாதிரி இருந்தது. அதுக்கு முழு முதற்காரணம் நக்கீரன்தான். செய்திய போட்டுட்டு நக்கீரனுடைய ஸ்பெஷலா நான் என்ன பார்க்கிறேன்னா ஒரு செய்திய சுவாரசியத்துக்காக போட்டுட்டு கடந்து போயிராம அடுத்த செய்திய நோக்கி போயிராம, ஒரு செய்திய சொன்னா தொடர்ந்து புலனாய்வு செஞ்சு அந்த செய்தி உண்மைதான் அப்படின்னு நிரூபிக்கிறதுக்காக அது பல விலைகள் கொடுக்குது. வீரியத்தோட அது போராடுது. அத நான் பார்க்கிறேன். தொடர்ந்து நீங்க இந்த சமுக பணிய செஞ்சுக்கிட்டே இருக்கணும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்ணே. நக்கீரனுக்கும் நக்கீரனுடைய குழுவினருக்கும் உங்களுக்கும். நன்றி

பொன்.வண்ணன், நடிகர், இயக்குநர்

அண்ணா வீடியோ பார்த்தேண்ணா. உண்மையிலேயே என்னுடைய நண்பர்கள் சொன்னது நான் கண்கூடா பார்த்தது, இந்த விஷயத்துல வந்து உங்களோட பங்களிப்பு நியாயத்த கொண்டு வர்றதுக்கு மிகப்பெரிய பங்களிப்புண்ணா. இது வந்து உண்மையிலேயே தமிழக மக்கள் மறக்கவே மாட்டாங்க. மிகப்பெரிய விஷயம் என்னன்னா அன்னைக்கி ஆளுந்தரப்பு எதிர்த்து நிக்கிறதுங்கிறது ஒரு பெரிய... என்ன சொல்றது அது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் மனமார்ந்த வாழ்த்துகள். இதே மாதிரி சிறப்பான பங்களிப்பு அளிக்கணும். வளர வாழ்த்துக்கள் அண்ணா.

சந்துரு, சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி

6 வருட காணொளிகளை மீண்டும் ஒரு முறை பார்த்தபோது உங்களை போன்ற ஒரு பத்திரிகை ஆளுமை இனி வரும் தலைமுறைக்கு கிடைப்பது அரிதிலும் அரிது. பாராட்ட வார்த் தைகள் இல்லை.

சேகுவாரா, youtube

நெஞ்சு படபடக்கிறது இச்சம்பவம். இந்த மிருகங்களை உலகுக்கு உணர்த்தி தண்டனை பெற உறுதுணையாக இருந்த நக்கீரனின் திறமைக்கும் துணிகரம் மிக்க செயல்களுக்கும் பாராட்டுக்கள். இனியும் இந்த மாதிரி குற்றவழக்குகள் நடக்காமல் இருக்க வேண்டும். வாழ்க நக்கீரன் செயல்.

சொக்கலிங்கம், எஸ்.பி.கே.

அண்ணா அடிக்காதீங்க”எனும் அந்த மாணவியின் கதறல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் நக்கீரன் துணிந்து வெளியிட்ட வீடியோக்கள் தான். நக்கீரன் மட்டுமே ஒரு இயக்கத்தை போல, புலனாய்வு அமைப்பை போல, பாதிக்கப்பட்ட குடும்பத்தை போல (victim) ஒவ்வொரு நாளும் செயல்பட்டது. எத்தனையோ அச்சுறுத்தல்கள், வழக்குகள் என அத்தனையும் எதிர்த்து நீதிக்காக நக்கீரன் நின்றது.

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும் யாரும் இம்மாதிரி செய்யக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. நக்கீரன் குழுமத்திற்கும் அறச்சீற்றமாய் சீறிய ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால் அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

- வன்னி அரசு

துணைப்பொதுச்செயலாளர், விடுதலைச்சிறுத்தைகள்

ஒவ்வொரு சமுதாய பிரச்சனைகளிலும் நீதிக்காக களத்தில் நின்று குரல் கொடுக்கும் நக்கீரன் குழுமத்திற்கு என் சிரம் சாய்த்து வாழ்த் தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

- யுவ பிரசாத், டி.எம்.கே.

எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாக - அதுவும் மிகமிகச் சரியாக செயல்பட்டு அனைவரையும் வியக்கச் செய்யும் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்... பயணம் தொடரட்டும், மென்மேலும் சிறக்கட்டும்

Manoharan, lecturer, SBK college

nkn170525
இதையும் படியுங்கள்
Subscribe