2024, அக் 26- 29 நக்கீரன் இதழில், ‘"பயிர்களைத் தாக் கும் அமெரிக்க ராணுவ படைப்புழு. அச்சத்தில் விவசாயிகள்!'’ என்ற தலைப்பில் தென்காசி மாவட்டத்தின் கீழ்க்கோடி பகுதி யான திருவேங்கடம் வட்டம் கரிசல்குளம் பிர்க்கா, சங்கரன் கோவில் வட்டத்தில் பயிரிடப்படுகிற மக்காச்சோளப் பயிர்களில் அடையடையாய் அமெரிக்க ராணுவப் படைப்புழுத் தாக்குதல் பற்றியும், அதனால் அந்தப் பகுதிகளின் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சந்திக்கிற நஷ்டம் பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

நக்கீரனில் இதுகுறித்த கட்டுரை வெளியான உடனேயே தென்காசி மாவட்டத்தின் வேளாண்துறை அதிகாரிகள் படைப்புழுத் தாக்குதல் பற்றி மக்காச்சோளப் பயிர் விளைச்சல் ஏரியாக்களின் விவசாயிகளுக்கு ஆலோசனையும் உரிய அறிவுரைகளும் வழங்கியதோடு வட்டார வேளாண் அதிகாரிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தின் மக்காச்சோள விளைநிலங்களில் படைப்புழுக்களைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு உரிய தடுப்பு வழிமுறைகனை எடுத்துக் கூறிவருகின்றார்கள்.
குறிப்பாக, சங்கரன்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குனரான திருச்செல்வன், மக்காச்சோள விவசாயிகளுக்கு சவாலாக இருக்கிற படைப் புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த விரிவான செயல்முறை விளக்கங்களை வெளியிட்டிருக்கிறார்.
மக்காச்சோளப் பயிர்களைத் தாக்குகிற இப்படைப் புழுக்களின் வால்பகுதியில் நான்கு கரும்புள்ளிகளும், தலைப்பகுதியில் ஆங்கில எழுத்தான ’ஒய்’ வடிவ அறிகுறியும் காணப்படும். இப்படைப்புழுக்கள் பயிரின் இளம் பருவத்தில் இலை, குருத்துப் பகுதியையும், பயிரின் முதிர்ச்சிப் பருவத்தில் பூ, கதிரையும் உண்டு சேதப்படுத்துகின்றன. ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடித்து, தாக்குதலைக் குறைக்கலாம். கோடை உழவு செய்வதன் மூலம் இப்பூச்சிகளின் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். நூறு கிலோ வேப்பம்புண்ணாக் கினை கடைசி உழவின்போது நிலத்தில் இடவேண்டும். ஒரே பருவநேரத்தில் விதைப்பு மேற்கொள்ள வேண்டும். விதைநேர்த்தியாக ஒரு கிலோ விதைக்கு நான்கு மில்லி சையான்டி ரிலினி புரோல், தையோ மீதோசெம் 19.08 சதம் கலந்து மானாவாரியில் விதைக்க லாம்.
மேலும், வரப்புகளில் சுற்றி ஏதாவது ஒரு பயிரைப் பயிரிடு வதால் படைப்பூச்சிகளின் வருகை, தாய்ப்பூச்சிகள் முட்டை யிடுதல், பெருக்கம் என அனைத் தும் வரப்புப் பயிரிலேயே கட்டுப்படுத்தப்பட்டுவிடும். பயிர் பருவத்தில் என்னென்ன வகை விவசாய மருந்துகளைப் பயன் படுத்தவேண்டும் என்று விளை நிலங்களை ஆய்வுசெய்த வேளாண்மைத் துறை அதிகாரி கள் விவசாயிகளிடம் விரிவாக எடுத்துக் கூறிவருகிறார்கள். விவசாயிகள் ஒருங்கிணைந்து மக்காச்சோளப் பயிரின் அமெரிக்க ராணுவ படைப்புழுத் தாக்குதலை உரிய வழிமுறைகளோடு எதிர் கொண்டு வருகிறார்கள்.
-ப.இராம்குமார்